search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bendable Phone"

    • வசதிகள் காரணமாக பென்டபில் எனும் புது வகையில் இணைந்துள்ளது.
    • இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக கஸ்டமைஸ் செய்ய முடியும்.

    2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் மோட்டோரோலா நிறுவனம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் புதிய வகை ஸ்மார்ட்போன் கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் அதன் டிசைன் மற்றும் அது வழங்கும் வசதிகள் காரணமாக பென்டபில் எனும் புது வகையில் இணைந்துள்ளது.

    பென்டபில் போன் என்ற வகையில் இந்த ஸ்மார்ட்போன் கேட்பதற்கு கற்பனை போன்றிருக்கும் பல செயல்களில் அசாத்தியமாக செய்து நம்மை ஆச்சரியப்படுத்தும். அந்த வகையில் இந்த கான்செப்ட் மாடல் பயனர்கள் தங்களின் போனினை இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக கஸ்டமைஸ் செய்ய அனுமதிக்கிறது.

     


    இதனை வழக்கமான ஸ்மார்ட்போன் போன்றும் பயன்படுத்தலாம், அல்லது வேறு வடிவத்திற்கு மாற்றியும் பயன்படுத்தலாம். இதில் உள்ள அதிநவீன வளையும் தன்மை கொண்ட டிஸ்ப்ளே ஸ்மார்ட்போனை மணிக்கட்டில் பொருந்திக் கொள்ளும் வகையில் வளைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போனில் இருந்து 6.9 இன்ச் அளவில் ஸ்மார்ட்வாட்ச் ஆக இந்த சாதனம் மாறிவிடும்.

    இதுதவிர இதில் உள்ள "டென்ட் மோட்" மூலம் கேமிங் செய்வது, ஸ்மார்ட்போனின் மேல்புறத்தை சற்றே வளைத்து ஸ்டாண்ட் மோடில் வைப்பது என பலவித பயன்பாடுகளை புதிய மோட்டோ பென்டபில் கான்செப்ட் அசாத்தியமாக கையாள்கிறது. ஸ்மார்ட்போன் பல வடிவங்களில் வளைக்க முடியும் என்பதால், எந்த வடிவத்தில் இருக்கும் போதும் செயலிகள் சீராக இயங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் இதனை மோட்டோரோலா வடிவமைத்துள்ளது.

     


    புதிய கான்செப்ட் மாடலின் பின்புறம் ஆரஞ்சு நிறத்தில் ஃபேப்ரிக் போன்ற பேனல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சக்திவாய்ந்த காந்தம் அடங்கிய மெக்கானிசம், ஸ்மார்ட்போன் கையில் வாட்ச் போன்று அணிந்திருக்கும் போது, கையில் இருந்து நழுவாமல் பார்த்துக் கொள்கிறது. ரிஸ்ட் மோடில் இந்த சாதனம் எதிர்காலத்தில் இருப்பது போன்ற அனுபவத்தை வழங்கும்.

    இத்தனை வசதிகள் மற்றும் பல்வேறு வடிவங்களில் வளைக்கும் திறன் கொண்ட கான்செப்ட் மாடல் எவ்வளவு காலம் உழைக்கும், தொடர்ச்சியான பயன்பாடுகளை இந்த சாதனம் எந்தளவுக்கு எதிர்கொள்ளும், இதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை எப்படி சரி செய்வது என்ற விஷயங்களுக்கு தற்போதைக்கு பதில் இல்லை. மேலும், இத்தகைய சாதனத்திற்கு அதிகளவு பேட்டரி தேவைப்படும், பேட்டரி அடிக்கடி தீர்ந்து போகும் வாய்ப்பும் அதிகம் தான்.

     


    நல்லபடியாக இது கான்செப்ட் வடிவில் இருப்பதால், மோட்டோரோலா இந்த சாதனம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில், இதனை தொடர்ச்சியாக மேம்படுத்தும் என்று தெரிகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த நிறுவனங்களுக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. அந்த வகையில், இந்த சாதனத்தை பொது வெளியில் அனைவருக்கும் ஏற்ற வகையில் அறிமுகப்படுத்த மோட்டோரோலா மேலும் சில காலம் எடுத்துக் கொள்ளும் என்றே தெரிகிறது.

    • லெனோவோ டெக் வொர்ல்டு 2023 நிகழ்வில் மோட்டோரோலா கான்செப்ட் போன் அறிமுகம்.
    • மணிக்கட்டில் வாட்ச் அல்லது ரிஸ்ட்பேண்ட் போன்று அணிந்து கொள்ளலாம்.

    மடிக்கக்கூடிய சாதனங்களின் விற்பனை மெல்ல வளர்ந்து வரும் நிலையில், மோட்டோரோலா இதனை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. மோட்டோரோலா அறிமுகம் செய்திருக்கும் புதிய கான்செப்ட் போன் இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற லெனோவோ டெக் வொர்ல்டு 2023 நிகழ்வில் மோட்டோரோலாவின் ஃபிளெக்சிபில் pOLED டிஸ்ப்ளே கான்செப்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த ஸ்மார்ட்போனில் FHD + pOLED ஸ்கிரீன் உள்ளது. இதனை பின்புறமாக மடித்து மணிக்கட்டில் வாட்ச் அல்லது ரிஸ்ட்பேண்ட் போன்று அணிந்து கொள்ளலாம். இந்த அதிநவீன அடாப்டிவ் டிஸ்ப்ளே கான்செப்ட் பல்வேறு நிலைகளில் வைத்துக் கொள்ளலாம். அடாப்டிவ் டிஸ்ப்ளேவினை வழக்கமான ஆண்ட்ராய்டு போன் போன்றும் பயன்படுத்தலாம், அல்லது மணிக்கட்டில் அணிந்த படியும் பயன்படுத்தலாம்.

     

    மடிக்கப்படாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் அளவில் முழுமையான ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்குகிறது. மடிக்கப்பட்ட நிலையில், இது 4.6 இன்ச் அளவில் மாறிவிடும். மடிக்கப்பட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை மோட்டோரோலா ரேசர் பிளஸ் மாடலின் கவர் ஸ்கிரீன் போன்று பயன்படுத்தலாம்.

    மோட்டோரோலாவின் புதிய வகை கான்செப்ட் போன் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக இந்த கான்செப்ட் போனிற்கான முன்னோட்டம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் காண்பிக்கப்பட்டது.

    மோட்டோரோலா மட்டுமின்றி விவோ, டிரான்சிஷன் ஹோல்டிங்ஸ் மற்றும் டி.சி.எல். போன்ற நிறுவனங்களும் புதிய வகை ரோலபில் டிஸ்ப்ளேவினை உருவாக்கி வருகின்றன. இவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    ×