என் மலர்
தொழில்நுட்பம்
- போக்கோ நிறுவனம் தனது புதிய C55 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்தது.
- கடந்த மாதம் போக்கோ C5 ஸ்மார்ட்போன் அறிமுகமான நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகமாகிறது.
பல்வேறு டீசர்களை தொடர்ந்து போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ C55 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. பட்ஜெட் பிரிவில் விற்பனைக்கு வர இருக்கும் போக்கோ C55 இந்திய சந்தையில் பிப்ரவரி 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.
கடந்த மாதம் போக்கோ C5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றி எந்த விவரமும் வெளியாகவில்லை. எனினும், புதிய போக்கோ C55 ஸ்மார்ட்போன் லெதர் போன்ற பின்புறம், டூயல் கேமரா சென்சார்கள், பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களின் படி போக்கோ C55 ஸ்மார்ட்போன் ரிபிராண்டு செய்யப்பட்ட ரெட்மி 12C மாடலாக இருக்கும் என தெரிகிறது. இதன் பின்புறம் வித்தியாசமான பேனல் இடம்பெற்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கைரேகை சென்சார், கேமரா மாட்யுலில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ரெட்மி 12C ஸ்மார்ட்போனில் 6.71 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI13 ஸ்கின் கொண்டிருக்கும் ரெட்மி 12C ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் அடாப்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
கனெக்டிவிட்டிக்கு 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1 மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க போக்கோ C55 ஸ்மார்ட்போனில் டூயல் கேமராக்கள் வழங்கப்படுகின்றன. இவை 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா என கூறப்படுகிறது. இத்துடன் 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
- ஜூக் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் 220 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.
- ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் வழங்கப்பட்டுள்ளன.
ஜூக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்வாட்ச் ஜூக் ஆக்டிவ் என அழைக்கப்படுகிறது. இதில் 1.9 இன்ச் டிஸ்ப்ளே, 240x280 பிக்சல் ரெசல்யூஷன், வளைந்த செவ்வக டயல், மெட்டல் கேசிங், உயர் ரக மென்மையான சிலிகான் ஸ்டிராப், 200-க்கு் அதிக வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன.
புதிய ஜூக் ஆக்விட் மாடலில் 220 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது அதிகபட்சமாக 7 நாட்களுக்கான பேட்டரி லைஃப் வழங்குகிறது. இத்துடன் ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டண்ட் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் ஜூக் ஆக்டிவ் பாஸ்வேர்டு பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டிருக்கிறது.

இதில் உள்ள மல்டி-ஸ்போர்ட்ஸ் மோட் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இத்துடன் SPO2 மாணிட்டரிங், ஹார்ட் ரேட் மாணிட்டரிங் மற்றும் ஸ்லீப் டிராக்கிங் போன்ற வசதிகளும் இதில் வழங்கப்பட்டுள்ளன.
ஜூக் ஆக்டிவ் அம்சங்கள்:
1.91 இன்ச் HD 240x280 பிக்சல் IPS டிஸ்ப்ளே, 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
ப்ளூடூத் காலிங் - ப்ளூடூத் 5.0
இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்
220 எம்ஏஹெச் பேட்டரி
அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு பேட்டரி லைஃப்
பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள்
வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட்
ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு கனெக்டிவிட்டி
ஹார்ட் ரேட், SpO2
IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட்
ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய ஜூக் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் புளூ, ஸ்பேஸ் கிரே மற்றும் சில்வர் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.
- விவோ நிறுவனத்தின் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய விவோ Y56 ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம், 50MP பிரைமரி கேமரா உள்ளது.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய Y56 ஸ்மார்ட்போனினை மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்தது. புதிய விவோ Y56 மாடலில் 6.58 இன்ச் FHD+ ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
அல்ட்ரா ஸ்லிம் 8.15mm பாடி கொண்டிருக்கும் விவோ Y56 ஸ்மார்ட்போன் 2.5D ஃபிளாட் ஃபிராம், கிளாசிக் ஜியோமெட்ரிக் ஏஸ்தடிக், மினிமலிஸ்ட் டிசைன், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

விவோ Y56 5ஜி அம்சங்கள்:
6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
மாலி G-57 MC2 GPU
8 ஜிபி LPDDR4x ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13
50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
2MP டெப்த் கேமரா
16MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போன் ஆரஞ்சு ஷிம்மர் மற்றும் பிளாக் என்ஜின் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் புதிய விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை விவோ அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.
- யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்ட ஐபோன் 15 ப்ரோ ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
- ரெண்டர்களில் உள்ள புதிய ஐபோன் 15 ப்ரோ மாடலில் மெல்லிய பெசல்கள் இடம்பெற்று இருக்கின்றன.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் புதிய ஐபோன் 15 ப்ரோ மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், 9டு5மேக் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் CAD மாடலில் ஐபோன் 15 ப்ரோ எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது. புதிய ரெண்டர் நம்பத்தகுந்த கேஸ் உற்பத்தியாளர் மற்றும் 3D நிபுணர் இயன் செல்போ மற்றும் 9டு5மேக் இணைந்து உருவாக்கி இருக்கிறது.
தற்போதைய ரெண்டரில் ஐபோன் 15 ப்ரோ எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது. ரெண்டர் உருவாக்குவதற்கான CAD ஃபைல்கள் ஆப்பிள் சார்பில் உற்பத்தி ஆலைகளுக்கு அனுப்பப்படும். இவற்றை கொண்டு போன் கேஸ்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானதும், கேஸ்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவதை இது தடுக்கும்.

ஏற்கனவே வெளியான தகவல்களை போன்றே புதிய ஐபோன் 15 ப்ரோ யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் கிளாஸ் மற்றும் மெட்டல் ஃபிரேம் ஓரங்கள் வளைக்கப்பட்டு இருக்கின்றன. இவை ஸ்மார்ட்போனை கையில் வைத்திருப்பதை மேலும் சவுகரியமானதாக மாற்றும். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் உள்ள கேமரா பம்ப் தற்போதைய மாடலில் இருப்பதை விட தடிமனாக இருக்கிறது.
இதன் மூலம் ஆப்பிள் புதிய ஐபோனின் சென்சார்களை மாற்றி இருக்கலாம் என தெரிகிறது. சமீபத்திய ஐபோன் 14 ப்ரோ போன்றே புதிய மாடலிலும் மூன்று கேமரா சென்சார்கள், LiDAR சென்சார் சதுரங்க வடிவம் கொண்ட மாட்யுலில் இடம்பெற்று இருக்கிறது. கேமரா சென்சார்கள் அதிக தடிமனாக இருப்பதால், இவை அளவில் பெரியதாக இருக்கும் என தெரிகிறது.
இதே போன்று வால்யும் ராக்கர் மற்றும் மியூட் ஸ்விட்ச்களில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. வால்யூம் ராக்கர்கள் கேபாசிடிவ் பட்டன்களை போன்று காட்சியளிக்கிறது. இதில் உள்ள மியூட் ஸ்விட்ச் ரிடிசைன் செய்யப்பட்டு, அளவில் சிறியதாகவும், சற்றே வட்ட வடிவமும் கொண்டுள்ளன. புதிய ஐபோன் 15 ப்ரோ ரெசல்யுஷன் 14 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே இருக்கும் என தெரிகிறது.
புதிய ஐபோன் 15 ப்ரோ அளவில் சிறியதாகவும், மெல்லிய பெசல்களையும் கொண்டிருக்கிறது. இந்த மாடலிலும் ஐபோன் 14 ப்ரோ போன்றே டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படுகிறது. தற்போதைய ரெண்டர்கள் CAD ரெண்டர்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில், ஸ்மார்ட்போனின் இறுதி வடிவம் இதே போன்று இருக்கும் வாய்ப்புகள் குறைவு தான்.
Photo Courtesy: 9to5Mac
- மேக் சாதனங்களில் விண்டோஸ் ஒஎஸ் பயன்படுத்த விரும்புவோருக்கு இது சிறந்த வாய்ப்பாக இருக்கிறது.
- சாதனம் சீராக இயங்க விண்டோஸ் 11 ARM டிரைவர்கள் அவசியம் தேவைப்படும்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ARM-சார்ந்த மேக் மாடல்களில் விண்டோஸ் 11 ஒஎஸ் பயன்படுத்த புதிய வழிமுறையை அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய விவரங்கள் மைக்ரோசாஃப்ட் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பேரலல்ஸ் டெஸ்க்டாப் 18 கொண்டு விண்டோஸ் 11 ப்ரோ மற்றும் எண்டர்பிரைஸ் ஒஎஸ்-களின் ARM வெர்ஷனை M1 மற்றும் M2 சார்ந்த மேக் சாதனங்களில் பயன்படுத்த அனுமதிக்கிறது.
பணி சூழல் காரணமாக மேக் சாதனங்களில் விண்டோஸ் ஒஎஸ் பயன்படுத்த விரும்புவோருக்கு இது சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. எனினும், இதில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து விதமான ARM விண்டோஸ் பில்டுகளிலும் 32-பிட் மென்பொருள்களின் பயன்பாட்டை மைக்ரோசாஃப்ட் நிறுத்தி வருகிறது. இதனால் 32-பிட் ARM செயலிகளை பயன்படுத்த முடியாது.

மேலும் சாதனம் சீராக இயங்க விண்டோஸ் 11 ARM டிரைவர்கள் அவசியம் தேவைப்படும். இத்துடன் ஆண்ட்ராய்டு செயலிகள், லினக்ஸ் சப்-சிஸ்டம் மற்றும் விண்டோஸ் சாண்ட்பாக்ஸ் என மற்றொரு லேயர் விர்ச்சுவலைசேஷன் தேவைப்படும் எதையும் பயன்படுத்த முடியாது. இறுதியில் DirectX 12 அல்லது OpenGL 3.3 கேட்கும் கேம்கள் எதும் வேலை செய்யாது.
முன்னதாக 2021 வாக்கில் ARM மேக் மாடல்களில் விண்டோஸ் 11 பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. எனினும், இதற்கு பயனர்கள் ஒஎஸ்-இன் இன்சைடர் பிரீவியூவை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்து வந்தது. தற்போதைய அறிவிப்பின் மூலம் பயனர்கள் விண்டோஸ் 11-ஐ பேரலல்ஸ் டெஸ்க்டாப் 18 மூலம் டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
புதிய மாற்றங்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு எவ்வாறு பாதிப்பாக இருக்கும் என்பது தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. ஆப்பிள் பூட் கேம்ப் மூலம் இண்டெல் சார்ந்த மேக் மாடல்களில் இருந்ததை போன்ற விண்டோஸ் சப்போர்ட் எதிர்பார்ப்போருக்கு புதிய நடவடிக்கை பயனற்றதாகவே இருக்கும்.
- டுவிட்டர் நிறுவனம் இந்திய அலுவலகங்களில் வேலை பார்த்து வந்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியதாக தகவல்.
- சர்வதேச அளவில் டுவிட்டர் நிறுவன செலவீனங்களை குறைக்கும் முயற்சியாக எலான் மஸ்க் இப்படி செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் செயல்பட்டு வந்த மூன்று டுவிட்டர் நிறுவன அலுவலகங்களில் இரண்டு மூடப்பட்டு விட்டதாகவும், அதில் பணியாற்றி வந்தவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் வீட்டில் இருந்தபடி பணியற்றலாம் என டுவிட்டர் தெரிவித்து இருப்பதாக தெரிகிறது. தற்போது சரிவில் சிக்கிக் கொண்டுள்ள நிறுவனத்தை மீட்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக இந்தியாவில் பணியாற்றி வந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்களை டுவிட்டர் நிறுவனம் அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டு இருந்தது. இது டுவிட்டர் இந்தியா ஊழியர்களில் சுமார் 90 சதவீதம் ஆகும். இந்த வரிசையில் தான், தற்போது புது டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் செயல்பட்டு வந்த டுவிட்டர் அலவலகங்கள் மூடப்பட்டு இருக்கின்றன.

இரு நிறுவனங்கள் மூடப்பட்டதை அடுத்து இந்தியாவில் டுவிட்டர் நிறுவன அலுவலகம் தற்போது பெங்களூருவில் மட்டுமே இயங்கி வருகிறது. இரண்டு இந்திய அலுவலகங்கள் மூடப்பட்ட விவகாரம் குறித்து டுவிட்டர் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. உலகம் முழுக்க டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம், அலுவலங்கள் மூடல் போன்ற நடவடிக்கைகளை எலான் மஸ்க் தொடர்ந்து எடுத்து வருகிறார்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனம் 2023 வாக்கில் நிதி நிலையில் மேம்பட்டு இருக்கும் என தெரிவித்து இருக்கிறார். அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியா இதுவரை மிகமுக்கிய சந்தையாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில், எலான் மஸ்க் இந்திய டுவிட்டர் அலுவலகங்களை மூடும் நடவடிக்கையை எடுத்து இருக்கிறார்.
இது தற்போதைய சூழலில் டுவிட்டர் நிறுவனத்திற்கு இந்திய சந்தைய அத்ததைய முக்கியத்தம் கொண்டிருக்கவில்லை என்பதையே குறிக்கிறது. கடந்த காலங்களில் டுவிட்டர் நிறுவனத்திற்கு இந்திய சந்தை மிக முக்கியமான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பட்ஸ் ப்ரோ 2R இந்திய விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளது.
- இம்மாத துவக்கத்தில் நடைபெற்ற கிளவுட் 11 நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனம் ஏராளமான சாதனங்களை அறிமுகம் செய்தது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது கிளவுட் 11 நிகழ்வில் ஒன்பிளஸ் 11, ஒன்பிளஸ் 11R, ஒன்பிளஸ் ப்ரோ 2 வரிசையில் ஏராளமான சாதனங்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இந்திய பயனர்களுக்காக ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2R மாடல் பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டது. ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலுடன் ஒப்பிடும் போது 2R மாடலில் வயர்லெஸ் சார்ஜிங், ஹெட் டிராகிங் போன்ற வசதிகள் வழங்கப்படவில்லை.
மேலும் பட்ஸ் ப்ரோ 2 மாடலை விட 2R விலை ரூ. 2 ஆயிரம் வரை குறைவு ஆகும். விலை மற்றும் அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், பட்ஸ் ப்ரோ 2R மைக்ரோசைட் அமேசான் இந்தியா வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி புதிய ஒன்பிளஸ் இயர்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலில் 48db டெப்த் மற்றும் 4000Hz விட்த் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் 54ms லோ லேடன்சி, மெலோடிபூஸ்ட் டூயல் டிரைவர்கள் 11mm வூஃபர், 6mm டுவீட்டர், டைனாடியோ, டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2R அம்சங்கள்:
ப்ளூடூத் 5.3 (LHDC 5.0/AAC/SBC/LC3)
டால்பி அட்மோஸ்
ஸ்பேஷியல் ஆடியோ
ஒன்பிளஸ் ஆடியோ ID 2.0
தனித்துவம் மிக்க ஆடியோ
11mm டைனமிக் டிரைவர் + 6mm டைஃப்ரம் டிரைவர்
பிரெஷர் சென்சிடிவ் கண்ட்ரோல்
டூயல் மைக்ரோபோன்
54ms லோ-லேடன்சி கேமிங்
இயர்போனுக்கு வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP55), கேஸ்-க்கு IPX4 ரெசிஸ்டண்ட்
டூயல் கனெக்ஷன்
இயர்பட்களில் 60 எம்ஏஹெச் பேட்டரி கேசில் 520 எம்ஏஹெச் பேட்டரி
விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2R விலை ரூ. 9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மார்ச் மாத வாக்கில் துவங்க இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2R - அப்சிடியன் பிளாக் மற்றும் மிஸ்டி வைட் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- போக்கோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
- புதிய போக்கோ C55 ஸ்மார்ட்போன் ரிபிராண்டு செய்யப்பட்ட ரெட்மி 12C மாடலாக இருக்கும் என தெரிகிறது.
போக்கோ நிறுவனம் விரைவில் குறைந்த விலை C சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் போக்கோ இந்தியா அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்று இருக்கிறது. மற்ற C சீரிஸ் மாடல்களை போன்றே புதிய போக்கோ C55 ஸ்மார்ட்போனும் பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகும் என தெரிகிறது.
புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டு இருக்கும் போக்கோ, அதன் பெயர் மற்றும் டிசைன் தவிர வேறு எந்த தகவலும் இல்லை. அதன்படி புதிய போக்கோ ஸ்மார்ட்போனின் டிசைன் ரெட்மி 12C மாடலை போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில் போக்கோ C55 அம்சங்கள் பெரும்பாலும் ரெட்மி 12C மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம்.
ரெட்மி 12C ஸ்மார்ட்போனில் 6.71 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க போக்கோ C55 ஸ்மார்ட்போனில் டூயல் கேமராக்கள் வழங்கப்படுகின்றன. இவை 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா என கூறப்படுகிறது. இத்துடன் 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI13 ஸ்கின் கொண்டிருக்கும் ரெட்மி 12C ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் அடாப்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1 மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
- ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா X சீரிஸ் ஸ்மார்ட்போன் விலையை அறிவித்து இருக்கிறது.
- புதிய நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை அடுத்த வாரம் துவங்குகிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டு இருக்கிறது. புதிய நோக்கியா X30 5ஜி மாடலில் 6.43 இன்ச் FHD+ 90Hz AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 12, 4230 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

புதிய நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போன் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் மற்றும் 65 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூலம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
நோக்கியா X30 5ஜி அம்சங்கள்:
6.43 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
அட்ரினோ 619L GPU
8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 12
50MP பிரைமரி கேமரா, OIS, எல்இடி ஃபிளாஷ்
13MP அல்ட்ரா வைடு கேமரா, கார்னிங் கொரில்லா கிளாஸ் DX+ கேமரா கிளாஸ் பாதுகாப்பு
16MP செல்ஃபி கேமரா
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
வாட்டர் ரெசிஸ்டண்ட் IP67
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
4200 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

விலை மற்றும் சலுகை விவரங்கள்:
இந்திய சந்தையில் புதிய நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போன் ஐஸ் வைட் மற்றும் கிளவுடி புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 48 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு நோக்கியா, அமேசான் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் துவங்கி இருக்கிறது. விற்பனை பிப்ரவரி 20 ஆம் தேதி துவங்குகிறது.
நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ரூ. 1000 தள்ளுபடி
ரூ. 2 ஆயிரத்து 799 மதிப்புள்ள நோக்கியா கம்ஃபர்ட் இயர்பட்ஸ் இலவசம்
ரூ. 2 ஆயிரத்து 999 மதிப்புள்ள 33 வாட் சார்ஜர் இலவசம்
அமேசான் வலைதளத்தில் ரூ. 4 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் சலுகை
- பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் 4ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
- 4ஜி சேவைகளை வெளியிட டிசிஎஸ் உடன் இணைந்து உள்நாட்டு உபகரணங்களை பிஎஸ்என்எல் பயன்படுத்த இருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் டிசிஎஸ் உடன் இணைந்து நாடு முழுக்க சுமார் ஒரு லட்சம் பகுதிகளில் 4ஜி சேவையை வெளியிட இருக்கிறது. ஒரு லட்சம் பகுதிகளில் டிசிஎஸ் உபரணங்களை பயன்படுத்த பிஎஸ்என்எல் நிறுவனம் அனுமதி பெற்று இருக்கிறது. டிசிஎஸ் நிறுவனம் நீண்ட காலமாகவே பிஎஸ்என்எல் உடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
இரு நிறுவனங்கள் கூட்டணியில் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க்குகளை பயன்படுத்த இருக்கிறது. தனியார் டெலிகாம் நிறுவனங்கள் எதுவும் 4ஜி வெளியீட்டிற்கு இவ்வாறு செய்யவில்லை. தற்போது நிர்வாக குழு ஒப்புதல் அளித்துவிட்ட போதிலும், 4ஜி நெட்வொர்க் வெளியீட்டுக்கு மேலும் சில காலம் ஆகும்.
டிசிஎஸ் உபகரணங்களை ஒரு லட்சம் பகுதிகளில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து, கொள்முதல் ஆணை வழங்குவதற்கு மேலும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. பிஎஸ்என்எல் நிர்வாக குழுவின் முடிவு குறித்து மத்திய தொலைதொடர்பு துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மத்திய டெலிகாம் துறை சார்பில் மத்திய மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை மார்ச் மாத வாக்கில் டிசிஎஸ் நிறுவனத்திற்கு கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்படும் என தெரிகிறது. இரு நிறுவனங்கள் இடையேயான ஒப்பந்தத்தின் படி டிசிஎஸ் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உபகரணங்களை ஒரு லட்சம் பகுதிகளில் வழங்க இருக்கிறது. இதற்கான மொத்த தொகை ரூ. 24 ஆயிரத்து 556.37 கோடி ஆகும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் டிசிஎஸ் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவன நெட்வொர்க்குகளை பத்து ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும். இதற்காக டிசிஎல் சார்பில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ. 13 ஆயிரம் கோடி மதிப்பிலான நெட்வொர்க் உபகரணங்களை வழங்குகிறது. இதில் சில மூன்றாம் தரப்பு பொருட்களும் இடம்பெற்று இருக்கும்.
- சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி புக் 3 அல்ட்ரா இந்திய விலை ரூ. 2 லட்சத்து 81 ஆயிரத்து 990 ஆகும்.
- இந்திய சந்தையில் கேலக்ஸி புக் 3 அல்ட்ரா விற்பனை மார்ச் மாத வாக்கில் துவங்குகிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி புக் 3 அல்ட்ரா மாடலுக்கான முன்பதிவு துவங்கியது. முன்பதிவை தொடர்ந்து கேலக்ஸி புக் 3 அல்ட்ரா விற்பனை மார்ச் 15 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்திய சந்தையில் கேலக்ஸி புக் 3 அல்ட்ரா விலை ரூ. 2 லட்சத்து 81 ஆயிரத்து 990 ஆகும். புதிய கேலக்ஸி புக் 3 அல்ட்ரா வாங்குவோருக்கு வங்கி கேஷ்பேக் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இத்துடன் அதிகபட்சம் 24 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது. முன்பதிவு சலுகைகளின் கீழ் கேலக்ஸி புக் 3 அல்ட்ரா வாங்குவோர் ரூ. 50 ஆயிரத்து 099 மதிப்புள்ள M8 ஸ்மார்ட் மாணிட்டரை ரூ. 1,999 விலையில் வாங்கிட முடியும்.
கேலக்ஸி புக் 3 அல்ட்ரா மாடலில் அதிநவீன இண்டெல் கோர் i9 பிராசஸர், NVIDIA GeForce RTX 4070 GPU, 3K 2880x1800 பிக்சல் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே, அடாப்டிவ் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. 1.79 கிலோ எடை கொண்டிருக்கும் கேலக்ஸி புக் 3 அல்ட்ரா, 16.5 மில்லிமீட்டர் அளவு தடிமனாக இருக்கிறது. இத்துடன் மெல்லிய, அலுமினியம் ஃபிரேம் உள்ளது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் மாணிட்டர் E 24 மாடல் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய ஒன்பிளஸ் மாணிட்டர் 75Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, யுஎஸ்பி டைப் சி கொண்டிருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் 2K 165Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்ட ஒன்பிளஸ் மாணிட்டர் X 27 மாடலை அறிமுகம் செய்தது. இத்துடன் ஒன்பிளஸ் மாணிட்டர் E 24 மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் FHD 75Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே உள்ளது. தற்போது ஒன்பிளஸ் மாணிட்டர் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் மாணிட்டர் E 24 மாடலில் அடாப்டிவ் சின்க் தொழில்நுட்பம், TUV ரெயின்லாந்து சான்று, லோ புளூ லைட் மற்றும் தடங்கல் இல்லா விஷூவல்களை வெளிப்படுத்துகிறது. மெல்லிய டிசைன் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் மாணிட்டர் 8mm அளவு தடிமனாக உள்ளது. இத்துடன் மெட்டல் ஸ்டாண்ட் வழங்கப்படுகிறது.

மூன்று புறங்களில் பெசல் லெஸ் டிசைன் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டாண்ட் ஆங்கில் கொண்டிருக்கிறது. ஒன்பிளஸ் மாணிட்டர் E 24 மாடலில் பில்ட்-இன் கேபிள் மேனேஜ்மெண்ட் வழங்குகிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி போர்ட் கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் மாணிட்டர் E 24 அம்சங்கள்
24 இன்ச் 1920x1080 பிக்சல் FHD IPS டிஸ்ப்ளே, 75Hz ரிப்ரெஷ் ரேட்
8mm அளவில் மூன்று புறங்களில் பெசல்-லெஸ் டிசைன்
மெட்டல் ஸ்டாண்ட் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஆங்கில்
1x யுஎஸ்பி சி (18 வாட் பவர்), 1x HDMI v1.4
1x VGA, 1x ஹெட்போன் ஜாக்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒன்பிளஸ் மாணிட்டர் E 24 மாடலின் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஒன்பிளஸ், ப்ளிப்கார்ட், அமேசான் வலைதளங்கள், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ்ஸ்டோர் மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப்-இல் விற்பனைக்கு கிடைக்கிறது. இத்துடன் ஒன்பிளஸ் மாணிட்டர் X 27 மாடலும் விற்பனைக்கு வருகிறது.






