search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    விரைவில் இந்தியா வரும் போக்கோ ஸ்மார்ட்போன் - அசத்தல் டீசர் வெளியீடு
    X

    விரைவில் இந்தியா வரும் போக்கோ ஸ்மார்ட்போன் - அசத்தல் டீசர் வெளியீடு

    • போக்கோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
    • புதிய போக்கோ C55 ஸ்மார்ட்போன் ரிபிராண்டு செய்யப்பட்ட ரெட்மி 12C மாடலாக இருக்கும் என தெரிகிறது.

    போக்கோ நிறுவனம் விரைவில் குறைந்த விலை C சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் போக்கோ இந்தியா அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்று இருக்கிறது. மற்ற C சீரிஸ் மாடல்களை போன்றே புதிய போக்கோ C55 ஸ்மார்ட்போனும் பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டு இருக்கும் போக்கோ, அதன் பெயர் மற்றும் டிசைன் தவிர வேறு எந்த தகவலும் இல்லை. அதன்படி புதிய போக்கோ ஸ்மார்ட்போனின் டிசைன் ரெட்மி 12C மாடலை போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில் போக்கோ C55 அம்சங்கள் பெரும்பாலும் ரெட்மி 12C மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம்.

    ரெட்மி 12C ஸ்மார்ட்போனில் 6.71 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க போக்கோ C55 ஸ்மார்ட்போனில் டூயல் கேமராக்கள் வழங்கப்படுகின்றன. இவை 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா என கூறப்படுகிறது. இத்துடன் 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI13 ஸ்கின் கொண்டிருக்கும் ரெட்மி 12C ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் அடாப்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1 மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×