search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்ட நோக்கியா X30 5ஜி - இந்திய விலை அறிவிப்பு
    X

    ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்ட நோக்கியா X30 5ஜி - இந்திய விலை அறிவிப்பு

    • ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா X சீரிஸ் ஸ்மார்ட்போன் விலையை அறிவித்து இருக்கிறது.
    • புதிய நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை அடுத்த வாரம் துவங்குகிறது.

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டு இருக்கிறது. புதிய நோக்கியா X30 5ஜி மாடலில் 6.43 இன்ச் FHD+ 90Hz AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 12, 4230 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    புதிய நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போன் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் மற்றும் 65 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூலம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    நோக்கியா X30 5ஜி அம்சங்கள்:

    6.43 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619L GPU

    8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 12

    50MP பிரைமரி கேமரா, OIS, எல்இடி ஃபிளாஷ்

    13MP அல்ட்ரா வைடு கேமரா, கார்னிங் கொரில்லா கிளாஸ் DX+ கேமரா கிளாஸ் பாதுகாப்பு

    16MP செல்ஃபி கேமரா

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    வாட்டர் ரெசிஸ்டண்ட் IP67

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    4200 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    விலை மற்றும் சலுகை விவரங்கள்:

    இந்திய சந்தையில் புதிய நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போன் ஐஸ் வைட் மற்றும் கிளவுடி புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 48 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு நோக்கியா, அமேசான் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் துவங்கி இருக்கிறது. விற்பனை பிப்ரவரி 20 ஆம் தேதி துவங்குகிறது.

    நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ரூ. 1000 தள்ளுபடி

    ரூ. 2 ஆயிரத்து 799 மதிப்புள்ள நோக்கியா கம்ஃபர்ட் இயர்பட்ஸ் இலவசம்

    ரூ. 2 ஆயிரத்து 999 மதிப்புள்ள 33 வாட் சார்ஜர் இலவசம்

    அமேசான் வலைதளத்தில் ரூ. 4 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் சலுகை

    Next Story
    ×