என் மலர்
தொழில்நுட்பம்
- நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் பெறுகிறது.
- அடுத்த சில நாட்களில் அனைத்து நத்திங் போன் 1 மாடல்களிலும் இந்த அப்டேட் வழங்கப்பட்டு விடும்.
நத்திங் போன் (1) மாடலுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் ஒருவழியாக வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 உடன் நத்திங் ஒஎஸ் 5.1 வழங்கப்படுகிறது. கார்ல் பெய் துவங்கிய நத்திங் நிறுவனம் கடந்த ஆண்டு தனது முதல் ஸ்மார்ட்போன் நத்திங் போன் (1) அறிமுகம் செய்தது. நத்திங் ஒஎஸ் 1.5 அப்டேட் விவரங்கள் ரெடிட் தளத்தில் வெளியாகி இருந்தது.
நத்திங் வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் நத்திங் நிறுவனம் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த நத்திங் ஒஎஸ் 1.5 அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய அப்டேட் ஸ்மார்ட்போனில் ஆப் இண்டர்ஃபேஸ் மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் புதிய வெதர் ஆப், கேமரா இண்டர்ஃபேஸ் மாற்றப்பட்டு இருக்கிறது.

கஸ்டமைசேஷன்களை பொருத்தவரை புதிய க்ளிஃப் பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ரிங்டோன்கள், புதிய லாக்ஸ்கிரீன் ஷாட்க்ட் மற்றும் மெட்டீரியல் யு கஸ்டம் கலர் தீம் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. யுஐ மாற்றங்களில் டூயல் சிம் மோடில் டேட்டா ஸ்விட்ச் செய்வது எளிமையாக்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் புதிய கியூஆர் ஸ்கேனர் ஷாட்கட் குயிக் செட்டிங்ஸ் மெனுவில் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர புதிய மீடியா கண்ட்ரோல் இண்டர்ஃபேஸ், வால்யூம் கண்ட்ரோல்கள் மற்றும் லைவ் கேப்ஷன்கள், பிரைவில் மற்றும் இதர அப்கிரேடுகள் வழங்கப்பட்டுள்ளன.
நத்திங் போன் (1) ஆண்ட்ராய்டு 13 அப்டேட் செய்வது எப்படி?
நத்திங் போன் (1) மாடலில் ஆண்ட்ராய்டு 13 செய்ய போனின் செட்டிங்ஸ் -- சாஃப்ட்வேர் அப்டேட் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும். இனி திரையில் தோன்றும் டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.
- போக்கோ நிறுவனத்தின் புதிய C55 ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.
- புதிய போக்கோ C55 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய போக்கோ C55 மாடலில் 6.71 இன்ச் HD+ ஸ்கிரீன், 5MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 5 ஜிபி வரை ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி, 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் கொண்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI13 ஒஎஸ் கொண்டிருக்கும் போக்கோ C55 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், லெதர் போன்ற பேக் ஃபினிஷ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி உள்ளது.

போக்கோ C55 அம்சங்கள்:
6.71 இன்ச் 1650x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே, பாண்டா கிளாஸ் பாதுகாப்பு
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர்
ARM மாலி-G52 2EEMC2 GPU
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
2MP டெப்த் கேமரா
5MP செல்ஃபி கேமரா
பின்புறம் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
5000 எம்ஏஹெச் பேட்டரி
10 வாட் சார்ஜிங்

விலை, விற்பனை மற்றும் சலுகை விவரங்கள்:
போக்கோ C55 ஸ்மார்ட்போன் ஃபாரஸ்ட் கிரீன், பவர் பிளாக் மற்றும் கூல் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 499 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை பிப்ரவரி 28 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது.
விற்பனை துவங்கும் முதல் நாளில் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மாடலுக்கு ரூ. 500 தள்ளுபடி
ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ கார்டுகளை பயன்படுத்துவோருக்கு அதிகபட்சம் ரூ. 1000 தள்ளுபடி
- ரியல்மி நிறுவனம் தனது அதிவேக 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வீடியோவை வெளியிட்டு உள்ளது.
- வீடியோவின் படி ஸ்மார்ட்போன் 9 நிமிடங்கள் 37 நொடிகளில் முழு சார்ஜ் ஆகிவிடுகிறது.
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி GT 3 ஸ்மார்ட்போனை MWC 2023 நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற இருக்கும் MWC 2023 நிகழ்வில் அறிமுகமாகும் ரியல்மி GT 3 மாடல் அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்த ரியல்மி GT நியோ 5 மாடலின் சர்வதேச வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.
புதிய ஸ்மார்ட்போனிற்காக ரியல்மி விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ரியல்மி GT 3 மாடலில் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனினை 1 இல் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய பத்து நிமிடங்களுக்கும் குறைவாக எடுத்துக் கொள்வது அம்பலமாகி இருக்கிறது.
ஆய்வக சூழலில் ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் 1 இல் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் ஆக வெறும் 9 நிமிடங்கள் 37 நொடிகளை எடுத்துக் கொள்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 20 சதவீதம் வரை சார்ஜ் ஆக 80 நொடிகளையே எடுத்துக் கொள்கிறது. நான்கு நிமிடங்களில் பேட்டரி 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும். ரியல்மி GT 3 மாடலில் 240 வாட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. எனினும், ரியல்மி GT நியோ 5 மாடலில் 150 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி GT 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரியல்மி GT 3 மாடலில் 6.74 இன்ச் 1.5K 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது இத்துடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0 வழங்கப்படும் என தெரிகிறது.
புகைப்படங்களை எடுக்க ரியல்மி GT 3 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த் கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. புதிய ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் - 4500 எம்ஏஹெச் பேட்டரி, 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி என இரண்டு வித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
- ஹெச்டிசி நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
- புதிய ஹெச்டிசி டேப்லெட் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கிறது.
அலுவல் பணிகளை மேற்கொள்வது, படிப்படி என பலதரப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய பலரும் டேப்லெட்களை பயன்படுத்த துவங்கி உள்ளனர். இந்த டிரெண்ட் காரணமாக டேப்லெட் சந்தை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. அந்த வரிசையில், ஹெச்டிசி A102 பெயரில் புதிய டேப்லெட் அறிமுகமாக இருக்கிறது.
கூகுள் SMS சான்றளிக்கும் தளத்தில் புதிய ஹெச்டிசி A102 டேப்லெட் விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி புதிய ஹெச்டிசி டேப்லெட் தற்போது டெஸ்டிங் கட்டத்தில் உள்ளது. மேலும் இது பிப்ரவரி மாதத்திலேயே அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஹெச்டிசி A102 டேப்லெட் மிட்-ரேன்ஜ் அல்லது பட்ஜெட் பிரிவில் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹெச்டிசி A102 மாடலில் 4ஜி வைபை வசதி, 11.0 இன்ச் 2K டிஸ்ப்ளே, 2000x1200 பிக்சல் ரெசல்யூஷன், மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், Arm கார்டெக்ஸ் A75 மற்றும் Arm கார்டெக்ஸ் A55 கோர்கள் முறையே 2GHz மற்றும் 1.8GHz இயங்குகின்றன. இத்துடன் 20MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
புதிய ஹெச்டிசி A102 டேப்லெட் ஃபேஸ் டிடெக்ஷன் மற்றும் ஏஐ ஃபேஸ் அன்லாக் வசதி, ஆண்டராய்டு 12, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட் 8000 எம்ஏஹெச் பேட்டரி, ப்ளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைபை வசதி, யுஎஸ்பி டைப் சி 3.0 போர்ட், OTG சப்போர்ட் கொண்டிருக்கும் என தெரிகிறது.
தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு மற்றும் அலுவல் ரீதியிலான பயன்பாடுகளுக்கு ஏற்ற பட்ஜெட் பிரிவில் புதிய டேப்லெட் வாங்க நினைப்போருக்கு ஏற்ற மாடலாக இது இருக்கும் என தெரிகிறது. புதிய ஹெச்டிசி A102 மாடல் முதற்கட்டமாக ஆப்ரிக்க சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பின் மற்ற நாடுகளில் அறிமுகமாக இருக்கிறது.
Photo Courtesy: Gizmochina
- பெபில் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்தது.
- புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் ப்ளூடூத் காலிங் வசதியுடன் சுழலும் கிரவுன், வளைந்த கிளாஸ் எட்ஜ்கள் உள்ளன.
பெபில் நிறுவனம் இந்தியாவில்- பெபில் ஸ்பெக்ட்ரா ப்ரோ மற்றும் விஷன் என இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய ஸ்பெக்ட்ரா ப்ரோ மாடலில் வட்ட வடிவம் கொண்ட டயல், பிரீமியம் மெட்டாலிக் கேசிங், சுழலும் கிரவுன் உள்ளது. பெபில் விஷன் மாடலில் சதுரங்க வடிவம் கொண்ட டயல், மெட்டல் அலாய் கேசிங், சுழலும் கிரவுன் மற்றும் வளைந்த கிளாஸ் எட்ஜ்கள் உள்ளன.
இரு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களிலும் இன்பில்ட் ஸ்பீக்கர் மூலம் ப்ளூடூத் காலிங் வசதி, குயிக் கீபேட் ஷாட்கட்கள், ரிசெண்ட் லாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்பெக்ட்ரா ப்ரோ மாடலில் உள்ள வட்ட வடிவம் கொண்ட டயல் 1.43 இன்ச் அளவில் ஆல்வேஸ் ஆன் AMOLED ஸ்கிரீன், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. பெபில் விஷன் மாடலில் 2.05 இன்ச் HD ஸ்கிரீன், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன.

புதிய ஸ்மார்ட்வாட்ச்களில் SpO2 சென்சார், ஹார்ட் ரேட் மாணிட்டர், ஸ்டிரெஸ் மாணிட்டர், ஸ்லீப் மாணிட்டர் என மேம்பட்ட ஹெல்த் மாணிட்டரிங் அம்சங்கள் மற்றும் பெபில் ஜென் மோட் உள்ளது. இத்துடன் மல்டி-ஸ்போர்ட்ஸ் மோட்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட், அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு பேட்டரி லைஃப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
பெபில் ஸ்பெக்ட்ரா ப்ரோ மற்றும் விஷன் அம்சங்கள்:
ஸ்பெக்ட்ரா ப்ரோ: 1.43 இன்ச் AMOLED வட்ட வடிவ டிஸ்ப்ளே, 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே
ஸ்பெக்ட்ரா விஷன்: 2.05 இன்ச் HD LCD ஸ்கிரீன், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்
ப்ளூடூத் காலிங், கால் ஹிஸ்ட்ரி, குயிக் டயல் பேட்
இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்
ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப்
100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட்
ஹெல்த் மாணிட்டரிங்
IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட்
ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
இன்பில்ட் கேம்ஸ், கேலண்டர், ஸ்மார்ட் கால்குலேட்டர்
டார்ச், ஸ்டாப்வாட்ச், ரைஸ் டு வேக், போன் டயல்
மியூசிக், வானிலை, காண்டாக்ட், வாய்ஸ் அசிஸ்டண்ட்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
பெபில் ஸ்பெக்ட்ரா ப்ரோ மாடல் மிட்நைட் கோல்டு, ஈவ்னிங் கிரே, ஜெட் பிளாக் மற்றும் மூன்லைட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. பெபில் விஷன் மாடல் ஜெட் பிளாக், ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் ஈவ்னிங் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
புதிய பெபில் ஸ்பெக்ட்ரா ப்ரோ மாடலின் விலை ரூ. 4 ஆயிரத்து 999 என்றும் பெபில் விஷன் மாடலின் விலை ரூ. 3 ஆயிரத்து 599 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களின் விற்பனை பெபில் வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.
- புதிய ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்வோருக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 11R 5ஜி மாடலை இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்தது. புதிய ஒன்பிளஸ் 11R 5ஜி மாடலின் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு இன்றும் (பிப்ரவரி 21) விற்பனை பிப்ரவரி 28 ஆம் தேதியும் துவங்கும் என ஒன்பிளஸ் ஏற்கனவே அறிவித்துவிட்டது.
ஒன்பிளஸ் 11R 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான், ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் ஆஃப்லைனில் நடைபெற இருக்கிறது. ஒன்பிளஸ் 11R 5ஜி மாடலின் முன்பதிவு இன்று துவங்குவதை அடுத்து ஒன்பிளஸ் நிறுவனம் அசத்தலான முன்பதிவு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

அதன்படி புதிய ஒன்பிளஸ் 11R 5ஜி மாடலை முன்பதிவு செய்வோருக்கு ஒன்பிளஸ் பட்ஸ் Z2 இயர்பட்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது. மேலும் இந்த சலுகை ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும்.
முன்பதிவு விவரங்கள் மற்றும் இதர சலுகைகள்:
ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் மாத தவணை முறையில் ஒன்பிளஸ் 11R வாங்குவோருக்கு ரூ. 1000 உடனடி தள்ளுபடி
ஒன்பிளஸ் 11R 5ஜி மாடலை வாங்கும் சிட்டி வங்கி பயனர்களும் ரூ. 1000 தள்ளுபடி பெறலாம்
முன்னணி கிரெடிட் கார்டு மூலம் ஒன்பிளஸ் வலைத்தளம், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மற்றும் அமேசானில் ஒன்பிளஸ் 11 வாங்குவோருக்கு அதிகபட்சம் ஒன்பது மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது
ஒன்பிளஸ் ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்கள் தங்களது சாதனங்களில் இருந்தபடி ஒன்பிளஸ் வலைத்தளம் அல்லது ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் மூலம் வாங்கும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது
- போக்கோ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி உள்ளது.
- முன்னதாக போக்கோ X5 5ஜி மற்றும் X5 ப்ரோ மாடல்களை போக்கோ நிறுவனம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.
போக்கோ X5 5ஜி மற்றும் போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டு போக்கோ X5 GT மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய போக்கோ ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள் ஏற்கனவே TKDN மற்றும் BIS வலைத்தளங்களில் இடம்பெற்று விட்டது. இந்த வரிசையில், தற்போது இதே ஸ்மார்ட்போன் IMDA சான்றையும் பெற்றுவிட்டது. IMDA வலைத்தளத்தில் போக்கோ X5 GT ஸ்மார்ட்போன் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், இந்த ஸ்மார்ட்போன் 23049PCD8G எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி, வைபை, ப்ளூடூத் மற்றும் NFC சப்போர்ட் வழங்கப்பட இருக்கிறது. இவைதவிர புதிய போக்கோ X5 GT ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் எதுவும் இந்த வலைத்தளத்தில் இடம்பெறவில்லை. எனினும், முந்தைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 12 டர்போ மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் என கூறப்பட்டது.
ரெட்மி நோட் 12 டர்போ மாடல் சீன சந்தையில் மட்டும் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் இதே ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் போக்கோ பிராண்டிங்கில் அறிமுகமாகிறது.
போக்கோ X5 GT எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி போக்கோ X5 GT ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் OLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க ரெட்மி நோட் 12 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 5500 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
- போட் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் மேம்பட்ட க்ரிஸ்டல் பயோனிக் சவுண்ட், ஹைபை DSP அம்சங்களை கொண்டிருக்கிறது.
- இந்த நெக்பேண்ட் இயர்போன் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 150 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக போட் ராக்கர்ஸ் டிரினிட்டி வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போனினை அறிமுகம் செய்தது. புதிய நெக்பேண்ட் இயர்போன் ஹைபை DSP மற்றும் க்ரிஸ்டல் பயோனிக் சவுண்ட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. போட் ராக்கர்ஸ் அபெக்ஸ் மாடலை தொடர்ந்து புதிய இயர்போன் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய போட் நெக்பேண்ட் இயர்போன் சிக்னேச்சர் சவுண்ட் மோட், ஃபிலெக்சிபில், குறைந்த எடை கொண்டிருக்கிறது. இத்துடன் முழு சார்ஜ் செய்தால் 150 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 24 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.

இதில் உள்ள ENX தொழில்நுட்பம் அழைப்புகளின் போது க்ளியர் ஆடியோவை வெளிப்படுத்துகிறது. மேலும் லோ லேடன்சி BEAST மோட் ஆடியோ அனுபவத்தை கேமிங்கின் போது மேம்படுத்துகிறது.
போட் ராக்கர்ஸ் டிரினிட்டி இயர்போன் அமச்ங்கள்:
ஹைபை DSP சார்ந்த க்ரிஸ்டல் பயோனிக் சவுண்ட்
போட் சிக்னேச்சர் சவுண்ட்
10mm டிரைவர்கள்
ப்ளூடூத் 5.2, டூயல் பேரிங்
பீஸ்ட் மோட், லோ லேடன்சி
ENx தொழில்நுட்பம்
பட்டன் கண்ட்ரோல்
IPX சான்று
220 எம்ஏஹெச் பேட்டரி
அதிகபட்சம் 150 மணி நேர பிளேபேக்
ASAP சார்ஜ்
டைப் சி சார்ஜிங்
ஒரு வருட வாரண்டி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
போட் ராக்கர்ஸ் டிரினிட்டி நெக்பேண்ட் இயர்போன் காஸ்மிக் பிளாக், ஜஸ்ட் புளூ மற்றும் கட்ச் வைட் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் போட் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் நடைபெறுகிறது.
- நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போன் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
- புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இன்று புதிய நோக்கியா X30 5ஜி விற்பனை துவங்கி இருக்கிறது. நோக்கியா X30 5ஜி விற்பனை நோக்கியா இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசான் இந்தியாவில் நடைபெறுகிறது.
அம்சங்களை பொருத்தவரை நோக்கியா X30 5ஜி மாடலில் 6.43 இன்ச் FHD+ 90Hz AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், 4230 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் சலுகை விவரங்கள்:
புதிய நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போன் ஐஸ் வைட் மற்றும் கிளவுடி புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 48 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரூ. 2 ஆயிரத்து 799 மதிப்புள்ள நோக்கியா கம்ஃபர்ட் இயர்பட்ஸ் இலவசம்
ரூ. 2 ஆயிரத்து 999 மதிப்புள்ள 33 வாட் சார்ஜர் இலவசம்
அமேசான் வலைதளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ. 2 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி

நோக்கியா X30 5ஜி அம்சங்கள்:
6.43 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
அட்ரினோ 619L GPU
8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 12
50MP பிரைமரி கேமரா, OIS, எல்இடி ஃபிளாஷ்
13MP அல்ட்ரா வைடு கேமரா, கார்னிங் கொரில்லா கிளாஸ் DX+ கேமரா கிளாஸ் பாதுகாப்பு
16MP செல்ஃபி கேமரா
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
வாட்டர் ரெசிஸ்டண்ட் IP67
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
4200 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- டுவிட்டர் நிறுவனத்தை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் பிரீமியம் சேவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- முதற்கட்டமாக கட்டண முறை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அறிமுகமாக இருக்கிறது.
டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் டுவிட்டர் புளூ சந்தா முறையை அறிவித்தது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. புதிய டுவிட்டர் புளூ சந்தாவில் வெரிஃபிகேஷன் புளூ டிக் மற்றும் தேடல்களில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதுதவிர ஏராளமான சேவைகள் டுவிட்டர் புளூ சந்தாவின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில், தற்போது இன்ஸ்டாகிராம் இணைந்து இருக்கிறது. இன்ஸ்டாவின் தாய் நிறுவனமான மெட்டா புதிய கட்டண முறையை அறிவித்து இருக்கிறது. இந்த சந்தா மெட்டா வெரிஃபைடு என அழைக்கப்படுகிறது. புதிய மெட்டா வெரிஃபைடு மூலம், மெட்டா நிறுவனம் போலி அக்கவுண்ட்கள் மற்றும் ஆள்மாறாட்டத்தை குறைக்க செய்வது மற்றும் இதர பலன்களை வழங்குகிறது.
மெட்டா தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பர்க் இன்ஸ்டாகிராம் கட்டண முறையை அறிவித்தது. மெட்டா வெரிஃபைடு கட்டண முறை வலைத்தளத்திற்கு மாதம் 11.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 990 என்றும் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வலைத்தளங்களில் மாதம் 14.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,240 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய கட்டண முறையின் கீழ் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிற்கு வெரிஃபைடு டிக் வழங்கப்படுகிறது. புதிய முறை மெட்டா சேவைகளின் கீழ் தனித்துவம் மற்றும் செக்யுரிட்டியை வழங்கும் என மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார். முதற்கட்டமாக மெட்டா வெரிஃபைடு சேவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இந்த வாரம் வழங்கப்படுகிறது.
இதை் தொடர்ந்து விரைவில் மற்ற நாடுகளில் மெட்டா வெரிஃபைடு சேவை வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது. மெட்டா வெரிஃபைடு சந்தாதாரர்களுக்கு வெரிஃபைடு பேட்ஜ், கூடுதல் செக்யுரிட்டி மற்றும் நேரடி வாடிக்கையாளர் சேவை மைய வசதி வழங்கப்படும் என மெட்டா தெரிவித்து இருக்கிறது.
- விவோ நிறுவனத்தின் புதிய V27 சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- புதிய V27 சீரிசில் விவோ V27 மற்றும் V27 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்கள் இடம்பெறுகின்றன.
விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் விவோ V27 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது. ப்ளிப்கார்ட் சார்பில் வெளியிடப்பட்ட கூகுள் ஆட்ஸ்-இல் விவோ V27 மற்றும் V27 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி தவறுதலாக அம்பலமாகி விட்டது. அதன்படி புதிய விவோ V27 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வைத்து சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.
விவோ V27 சீரிஸ் மாடல்கள் மார்ச் 1 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என ப்ளிப்கார்ட் வழங்கும் கூகுள் விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள், விவரங்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. மேலும் புதிய விவோ V27 சீரிஸ் மாடல் விவரங்கள் பென்ச்மார்க்கிங் வலைதளங்களில் இடம்பெற்று இருந்தது.

விவோ V27 மற்றும் V27 ப்ரோ அம்சங்கள்:
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி V27 ப்ரோ மாடலில் வளைந்த டிஸ்ப்ளே டிசைன், பன்ச் ஹோல் ஸ்கிரீன், பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட இருக்கிறது. இவற்றில் சோனி IMX 766V கேமரா சென்சார் மற்றும் OIS வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய விவோ ஸ்மார்ட்போன் 120Hz 3D டிஸ்ப்ளே, 60-டிகிரி ஸ்கிரீன் கர்வேச்சர், நிறம் மாறும் கிளாஸ் டிசைன் கொண்டிருக்கும்.
முன்னதாக விவோ V27 ப்ரோ இந்திய விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. அதில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 41 ஆயிரத்து 999 வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்பட்டது. எனினும், இதன் உண்மையான விற்பனை விலை ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம். இத்துடன் அறிமுக சலுகைகள் மற்றும் கார்டு தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
- டுவிட்டர் நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் தனது டுவிட்டர் புளூ கட்டண சேவையை அறிவித்தது.
- டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்பவர்கள் கூடுதல் வசதிகள், புதிய அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தலாம்.
எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதில் இருந்து அந்த நிறுவனத்தில் ஏராளமான மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. ஊழியர்கள் பணிநீக்கத்தில் துவங்கி, அம்சங்களில் மாற்றம் என தொடர்ந்து பல்வேறு அதிரடிகள் டுவிட்டரில் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில், தற்போது கட்டணம் செலுத்துவோர் மட்டுமே டுவிட்டர் தளத்தில் டூ-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் வசதியை கொண்டு தங்களின் அக்கவுண்ட்களை பாதுகாக்க முடியும்.
"மார்ச் 20 ஆம் தேதிக்கு பின் டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்போர் மட்டுமே டு-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் முறையில் குறுந்தகவல்களை பெற முடியும்," என அந்நிறுவனம் டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறது. டு-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் முறையை கொண்டு பயனர்கள் தங்களின் அக்கவுண்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

டு-ஃபேக்டர் முறையை தேர்வு செய்யும் போது, பயனர்கள் வழக்கமான கடவுச்சொல் மட்டுமின்றி கூடுதலாக குறுந்தகவல், ஆதெண்டிகேஷன் ஆப் அல்லது செக்யுரிட்டி கீ என மூன்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது பயனர் அக்கவுண்ட் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த நிலையில், டுவிட்டரில் டு-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் முறையை சிலர் தவறாக கையாள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் என டுவிட்டர் தனது வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்த பயனர் கேள்விக்கு எலான் மஸ்க் டுவிட்டர் தளத்திலேயே பதில் அளித்து இருக்கிறார்.
எலான் மஸ்க் அளித்த பதிலில், "டெலிகாம் நிறுவனங்கள் பாட் அக்கவுண்ட்களை கொண்டு டு-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் எஸ்எம்எஸ்-ஐ அனுப்புகின்றனர். இதன் காரணமாக நிறுவனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் மோசடி குறுந்தகவல்களால் 60 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது," என தெரிவித்துள்ளார்.






