search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்தால் இயர்பட்ஸ் இலவசம் - ஒன்பிளஸ் அசத்தல் சலுகை அறிவிப்பு
    X

    ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்தால் இயர்பட்ஸ் இலவசம் - ஒன்பிளஸ் அசத்தல் சலுகை அறிவிப்பு

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.
    • புதிய ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்வோருக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 11R 5ஜி மாடலை இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்தது. புதிய ஒன்பிளஸ் 11R 5ஜி மாடலின் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு இன்றும் (பிப்ரவரி 21) விற்பனை பிப்ரவரி 28 ஆம் தேதியும் துவங்கும் என ஒன்பிளஸ் ஏற்கனவே அறிவித்துவிட்டது.

    ஒன்பிளஸ் 11R 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான், ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் ஆஃப்லைனில் நடைபெற இருக்கிறது. ஒன்பிளஸ் 11R 5ஜி மாடலின் முன்பதிவு இன்று துவங்குவதை அடுத்து ஒன்பிளஸ் நிறுவனம் அசத்தலான முன்பதிவு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    அதன்படி புதிய ஒன்பிளஸ் 11R 5ஜி மாடலை முன்பதிவு செய்வோருக்கு ஒன்பிளஸ் பட்ஸ் Z2 இயர்பட்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது. மேலும் இந்த சலுகை ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும்.

    முன்பதிவு விவரங்கள் மற்றும் இதர சலுகைகள்:

    ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் மாத தவணை முறையில் ஒன்பிளஸ் 11R வாங்குவோருக்கு ரூ. 1000 உடனடி தள்ளுபடி

    ஒன்பிளஸ் 11R 5ஜி மாடலை வாங்கும் சிட்டி வங்கி பயனர்களும் ரூ. 1000 தள்ளுபடி பெறலாம்

    முன்னணி கிரெடிட் கார்டு மூலம் ஒன்பிளஸ் வலைத்தளம், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மற்றும் அமேசானில் ஒன்பிளஸ் 11 வாங்குவோருக்கு அதிகபட்சம் ஒன்பது மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது

    ஒன்பிளஸ் ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்கள் தங்களது சாதனங்களில் இருந்தபடி ஒன்பிளஸ் வலைத்தளம் அல்லது ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் மூலம் வாங்கும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது

    Next Story
    ×