search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    இணையத்தில் லீக் ஆன போக்கோ X5 GT - வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    இணையத்தில் லீக் ஆன போக்கோ X5 GT - வெளியீடு எப்போ தெரியுமா?

    • போக்கோ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • முன்னதாக போக்கோ X5 5ஜி மற்றும் X5 ப்ரோ மாடல்களை போக்கோ நிறுவனம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.

    போக்கோ X5 5ஜி மற்றும் போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டு போக்கோ X5 GT மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய போக்கோ ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள் ஏற்கனவே TKDN மற்றும் BIS வலைத்தளங்களில் இடம்பெற்று விட்டது. இந்த வரிசையில், தற்போது இதே ஸ்மார்ட்போன் IMDA சான்றையும் பெற்றுவிட்டது. IMDA வலைத்தளத்தில் போக்கோ X5 GT ஸ்மார்ட்போன் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், இந்த ஸ்மார்ட்போன் 23049PCD8G எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி, வைபை, ப்ளூடூத் மற்றும் NFC சப்போர்ட் வழங்கப்பட இருக்கிறது. இவைதவிர புதிய போக்கோ X5 GT ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் எதுவும் இந்த வலைத்தளத்தில் இடம்பெறவில்லை. எனினும், முந்தைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 12 டர்போ மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் என கூறப்பட்டது.

    ரெட்மி நோட் 12 டர்போ மாடல் சீன சந்தையில் மட்டும் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் இதே ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் போக்கோ பிராண்டிங்கில் அறிமுகமாகிறது.

    போக்கோ X5 GT எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி போக்கோ X5 GT ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் OLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க ரெட்மி நோட் 12 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 5500 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×