search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் நத்திங் ஸ்மார்ட்போன்
    X

    புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் நத்திங் ஸ்மார்ட்போன்

    • நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் பெறுகிறது.
    • அடுத்த சில நாட்களில் அனைத்து நத்திங் போன் 1 மாடல்களிலும் இந்த அப்டேட் வழங்கப்பட்டு விடும்.

    நத்திங் போன் (1) மாடலுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் ஒருவழியாக வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 உடன் நத்திங் ஒஎஸ் 5.1 வழங்கப்படுகிறது. கார்ல் பெய் துவங்கிய நத்திங் நிறுவனம் கடந்த ஆண்டு தனது முதல் ஸ்மார்ட்போன் நத்திங் போன் (1) அறிமுகம் செய்தது. நத்திங் ஒஎஸ் 1.5 அப்டேட் விவரங்கள் ரெடிட் தளத்தில் வெளியாகி இருந்தது.

    நத்திங் வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் நத்திங் நிறுவனம் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த நத்திங் ஒஎஸ் 1.5 அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய அப்டேட் ஸ்மார்ட்போனில் ஆப் இண்டர்ஃபேஸ் மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் புதிய வெதர் ஆப், கேமரா இண்டர்ஃபேஸ் மாற்றப்பட்டு இருக்கிறது.

    கஸ்டமைசேஷன்களை பொருத்தவரை புதிய க்ளிஃப் பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ரிங்டோன்கள், புதிய லாக்ஸ்கிரீன் ஷாட்க்ட் மற்றும் மெட்டீரியல் யு கஸ்டம் கலர் தீம் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. யுஐ மாற்றங்களில் டூயல் சிம் மோடில் டேட்டா ஸ்விட்ச் செய்வது எளிமையாக்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் புதிய கியூஆர் ஸ்கேனர் ஷாட்கட் குயிக் செட்டிங்ஸ் மெனுவில் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர புதிய மீடியா கண்ட்ரோல் இண்டர்ஃபேஸ், வால்யூம் கண்ட்ரோல்கள் மற்றும் லைவ் கேப்ஷன்கள், பிரைவில் மற்றும் இதர அப்கிரேடுகள் வழங்கப்பட்டுள்ளன.

    நத்திங் போன் (1) ஆண்ட்ராய்டு 13 அப்டேட் செய்வது எப்படி?

    நத்திங் போன் (1) மாடலில் ஆண்ட்ராய்டு 13 செய்ய போனின் செட்டிங்ஸ் -- சாஃப்ட்வேர் அப்டேட் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும். இனி திரையில் தோன்றும் டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.

    Next Story
    ×