என் மலர்
தொழில்நுட்பம்
- நெட்ஃப்ளிக்ஸ் ஸ்டிரீமிங் தளத்தின் சந்தா கட்டணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
- விலை மாற்றம் மட்டுமின்றி நெட்ஃப்ளிக்ஸ் புதிய சந்தா தொகுப்புகளை அறிவித்து இருக்கிறது.
உலகளவில் முன்னணி ஒடிடி தளமாக இருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் தனது விலையை 50 சதவீதம் வரை குறைத்து விட்டது. உலகின் சுமார் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு வட அமெரிக்காவில் சந்தா விலையை உயர்த்திய நிலையில், தற்போது விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கிற்கு பிந்தைய மக்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்கும் விதம் மாறி இருக்கிறது. இதற்கு ஏற்ப வருவாய் மற்றும் சந்தாதாரர் வளர்ச்சியை நெட்ஃப்ளிக்ஸ் அதிகப்படுத்த பல்வேறு வழிகளை பரிசோதனை செய்து வருகிறது.
தற்போதைய விலை குறைப்பு மத்திய கிழக்கு, துணை சகாரா ஆப்ரிக்க பகுதிகள், ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் அமலுக்கு வந்துள்ளது. விலை குறைப்பு மட்டுமின்றி 12 நாடுகளில் குறைந்த விலை சந்தா திட்டங்களை நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் டிஸ்னி பிளஸ், ஹூலூ மற்றும் ஸ்லிங் டிவி உள்ளிட்டவை தங்களின் சேவை கட்டணங்களை உயர்த்திய நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் தற்போது விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.
விலை குறைப்பு மட்டுமின்றி நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் தங்களின் லாக்-இன் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோருக்கு புதிய மாதாந்திர கட்டணத்தை அறிவித்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் IP முகவரிகள், டிவைஸ் ஐடி மற்றும் அக்கவுண்ட் ஆக்டிவிட்டி உள்ளிட்டவைகளை டிராக் செய்து கடவுச்சொல் பகிரப்படுவதை தடுக்க முயற்சித்து வருகிறது. நெட்ஃப்ளிக்ஸ் விதிகளின் படி ஒரே கடவுச்சொல்லை பலர் பயன்படுத்தும் வசதியை அந்நிறுவனம் நீண்ட காலமாக வழங்கி வந்தது.
புதிய கட்டண முறை லத்தீன் அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்டு வந்ததை அடுத்து கனடா, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் வெளியிடப்பட்டு வருகிறது. புதிய கட்டணம் கனடா மற்றும் நியூசிலாந்தில் 8 டாலர்கள், போர்ச்சுகலில் 4 டாலர்கள், ஸ்பெயினில் 6 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய கட்டணங்கள் அமெரிக்காவில் இந்த ஆண்டே அமலுக்கு வர இருக்கிறது.
- மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கிறது.
- புதிய மோட்டோரோலா ரேசர் 2023 விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
மோட்டோரோலா நிறுவனம் புதிய ரேசர் 2023 ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. புதிய மோட்டோரோலா ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில், புதிய மோட்டோரோலா ரேசர் 2023 மாடல் டிசைன் விவரங்களை டிப்ஸ்டரான சமீபத்தில் தான் எவான் பிளாஸ் வெளியிட்டு இருந்தார்.
தற்போது இதே டிப்ஸ்டர் புதிய ரேசர் 2023 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை தெரிவித்து இருக்கிறார். அதன்படி புதிய மோட்டோரோலா ரேசர் 2023 ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 வெளியீட்டுக்கு முன்பே அறிமுகம் செய்யப்படும் என எவான் பிளாஸ் தெரிவித்து இருக்கிறார். சாம்சங் தனது அடுத்த தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம்.

மோட்டோரோலா "Juno Announcement Reveal + Event Activation Launch" தேதி ஜூன் 1 என தகவல் வெளியாகி உள்ளது. ஜூனே என்பது ரேசர் 2023 மாடலின் குறியீட்டு பெயர் ஆகும். வரும் மாதங்களில் புதிய ரேசர் 2023 ஸ்மார்ட்போனின் வெளியீடு நடைபெற இருக்கிறது. அறிமுக நிகழ்வுக்கு முன் புதிய ரேசர் மாடலின் அம்சங்களை படிப்படியாக அம்பலப்படுத்தும் டீசர்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
புதிய மோட்டோரோலா ரேசர் 2023 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி இதுவரை அதிக தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 144Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இதே அம்சங்கள் ரேசர் 2022 மாடலிலும் வழங்கப்பட்டு இருப்பதால், புதிய மாடல் சிறு அப்டேட் ஆக இருக்கும் என்றே தெரிகிறது.
ரேசர் தவிர மோட்டோரோலா நிறுவனம் மற்றொரு கிளாம்ஷெல் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாகவும் எவான் பிளாஸ் தெரிவித்து இருக்கிறார். இந்த மாடல் "வீனஸ்" எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் அம்சங்கள் மர்மமாக இருக்கும் நிலையில், இதில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என்றும் இது உண்மையான ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
டிசைனை பொருத்தவரை புதிய ஸ்மார்ட்போன் ரேசர் 2022 மாடலை போன்ற டிசைன் கொண்டிருக்கும் என்றும் இதில் 6.7 இன்ச் மடிக்கக்கூடிய OLED பேனல், பன்ச் ஹோல் டிசைன், கவர் டிஸ்ப்ளேவில் சிறு மாற்றம் செய்யப்பட்டு 3.5 இன்ச் அளவில் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட இருக்கிறது.
Photo Courtesy: Evan Blass
- ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் மாடல்களில் பயன்படுத்த இருக்கும் புதிய வகை பேண்ட் விவரங்கள் வெளியாகி உள்ளது.
- தற்போதைய வாட்ச்களில் பேண்ட் நிறத்தை மாற்ற, அதனை கழற்றிவிட்டு வேறு நிறம் கொண்ட பேண்ட்-ஐ இணைக்க வேண்டும்.
ஆப்பிள் நிறுவனம் விசேஷ எலெக்ட்ரோக்ரோமிக் அம்சம் கொண்ட ஆப்பிள் வாட்ச் பேண்ட்-க்கு ஆப்பிள் நிறுவனம் காப்புரிமை பெற்று இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் பேண்ட் நிறத்தை மூன்று வழிகளில் அட்ஜஸ்ட் செய்து அதன் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம். பேண்ட் நிறத்தை மூன்று விதங்களில் மாற்றிக் கொள்ளலாம் என்பதோடு, இதற்கு பயனர்கள் பேண்ட்-ஐ கழற்றி மாற்ற வேண்டிய அவசியத்தை நீக்கி இருக்கிறது.
பயனர்கள் தங்களின் வாட்ச் பேண்ட்களை அடிக்கடி கஸ்டமைஸ் செய்து அதன் ஸ்டைல் மற்றும் நிறத்தை வித்தியாசப்படுத்த நினைப்பர், புதிய தொழில்நுட்பம் இதற்கான தீர்வை வழங்கி விட்டது. வழக்கமான வாட்ச்களில் பேண்ட் நிறத்தை மாற்ற, ஒவ்வொரு முறையும் வேறு நிறம் கொண்ட பேண்ட்களை பயன்படுத்த வேண்டிய சூழல் நிலவி வருகிறது.

புதிய தொழில்நுட்பம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கலர் கண்ட்ரோல் மூலம் பல்வேறு நிறங்கள் மற்றும் நிற காம்பினேஷன்களை ஒற்றை பேண்ட்-இல் வெளிப்படுத்துகிறது. பயனர் அல்லது கண்ட்ரோல் சிஸ்டம் பேண்ட்-இல் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறங்களை கண்ட்ரோல் செய்து மாற்றுகிறது. இவ்வாறு செய்யும் போது பல்வேறு பேண்ட்களை மாற்றாமலேயே பேண்ட்-இல் பல நிறங்கள் அல்லத நிற காம்பினேஷன்களை மாற்ற முடியும்.
அட்ஜஸ்ட் செய்யக்கூடிய நிறங்களை கொண்டு பயனர்கள் தகவல் பரிமாற்றத்தையும் செய்ய முடியும் என காப்புரிமை விவரங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கலர் அட்ஜஸ்ட் செய்யும் கூறுகளை ஒருங்கிணைக்கவோ அல்லது தனித்தனியாக கண்ட்ரோல் செய்து குறிப்பிடத்தக்க ஐகான், வடிவம் அல்லது எழுத்துக்களை வெளிப்படுத்த முடியும். இந்த வாட்ச் பேண்ட் ஆடை மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

விசேஷமாக உருவாக்கப்பட்டு இருக்கும் ஆடையில் நூல் வடிவில் மென்கம்பிகள் புகுத்தப்பட்டு உள்ளன. சில அல்லது அனைத்து மென்கம்பிகளில் எலெக்ட்ரோக்ரோமிக் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. எலெக்ட்ரோ-க்ரோமிசம் என்பது எலெக்ட்ரிக் ஃபீல்டு அல்லது கரண்ட் பாய்ச்சும் போது ஆடையில் ஏற்படும் நிற மாற்றம் ஆகும். ஐயன் இன்சர்ஷன் பொருட்கள் கண்டக்டர்களில் புகுத்தப்படுகிறது. இவற்றில் ஐயன்களை வேகமாகவும், தலைகீழாக செருகி எலெக்ட்ரோக்ரோமிக் பாகங்களாக பயன்படுத்த முடியும்.
வாட்ச் பேண்ட் கண்டக்டரில் ஆப்ஷனாக ஷேப் மெமரி அலாய் வழங்கப்படுகிறது. இது கண்டக்டரில் வோல்டேஜ் செலுத்தும் போது வடிவத்தை மாற்றும். நிற மாற்றத்திற்கு தேவையான அதே அளவு வோல்டேஜ்-ஐ கண்டக்டரிலும் செலுத்தலாம். இவ்வாறு வடிவம் மாறுவது பயனருக்கு ஹேப்டிக் ஃபீட்பேக் வழங்குகிறது. பயன்பாட்டுக்கு வரும் போது இந்த தொழில்நுட்பம் வழக்கமான வாட்ச் பேண்ட்களுக்கு வித்தியாசமான, புதுமை மிக்க மாற்றாக அமையும்.
Photo Courtesy: Patently Apple
- ஒன்பிளஸ் நிறுவனம் நார்ட் பிராண்டிங்கில் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது.
- நார்ட் பிராண்டிங்கில் புதிய ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என தகவல்.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்ட் 2 ஸ்மார்ட்போனினை 2021 வாக்கில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் நார்ட் 2T கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நார்ட் 3 ஸ்மார்ட்போன் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. மேலும் ஒன்பிளஸ் நார்ட் 3 மாடலில் 150வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், டிமென்சிட்டி 8100 பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் நார்ட் 3 ஸ்மார்ட்போன் டிமென்சிட்டி 9000 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக ஒன்பிளஸ் அறிமுகம் செய்த நார்ட் 2T மாடலில் டிமென்சிட்டி 1300 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. @OnLeaks வெளியிட்டு இருக்கும் தகவல்களில் நார்ட் 3 ஸ்மார்ட்போன் 80 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் நார்ட் 2 - கோப்புப்படம்
ஒன்பிளஸ் நார்ட் 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
6.72 இன்ச் FHD+ ஃபுளூயிட் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் டிமென்சிட்டி 9000 பிராசஸர்
மாலி G710 10-கோர் GPU
8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
80 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய ஒன்பிளஸ் நார்ட் 3 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது அல்லது மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
- ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.
- ஐபோன் 14 பிளஸ் மாடலுக்கு தற்போது அதிரடி சலுகை மற்றும் பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஜியோமார்ட் வலைத்தளத்தில் மொபைல்ஸ் அண்ட் எலெக்டிரானிக்ஸ் ஃபெஸ்ட் சேல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இன்று துவங்கிய இந்த சிறப்பு விற்பனை பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் விற்பனை திருவிழாவில் முன்னணி சாதனங்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் அதிகபட்சம் 80 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இவைதவிர வங்கிகளுடன் கூட்டணி அமைத்து அதிபட்சம் பத்து சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் பேங்க் ஆஃப் பரோடா, ஃபெடரல் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்போர் பயன்பெற முடியும். இந்த விற்பனையில் குறிப்பிடத்தக்க சலுகை ஐபோன் 14 பிளஸ் மாடலுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் 128 ஜிபி மாடல் விலை ரூ. 89 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இந்த விற்பனையில் ஐபோன் 14 பிளஸ் மாடலுக்கு 12 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஜியோமார்ட் வலைத்தளத்தில் ஐபோன் 14 பிளஸ் ரூ. 78 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது.
ஐபோன் 14 பிளஸ் 256 ஜிபி விலை ரூ. 88 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 99 ஆயிரத்து 990 ஆகும். ஐபோன் 13 (128 ஜிபி) மாடலுக்கு 12 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டு தற்போது ரூ. 61 ஆயிரத்து 490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று ஐமேக்புக் ஏர் M1 8 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 99 ஆயிரத்து 900-இல் இருந்து தற்போது ரூ. 81 ஆயிரத்து 490 என மாறி இருக்கிறது. புதிய மேக்புக் ஏர் M2 சிப்செட் கொண்ட வேரியண்ட் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900-இல் இருந்து தற்போது ரூ. 1 லட்சத்து 04 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது.
ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ முதல் தலைமுறை மாடலுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி இதன் விலை தற்போது ரூ. 19 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது.
- ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 15 விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
- புதிய ஐபோன் 15 மாடலில் யுஎஸ்பி சி போர்ட், டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படுகிறது.
ஐபோன் 15 ப்ரோ ரெண்டர்களை தொடர்ந்து ஐபோன் 15 ரெண்டர்கள் தற்போத இணையத்தில் வெளியாகி உள்ளது. 9to5mac வெளியிட்டு இருக்கும் புதிய 3D CAD ஃபைல் ரெண்டர்களில் ஐபோன் 15 விவரங்கள் தெரியவந்துள்ளது.
கேஸ் உற்பத்தியாளர் மற்றும் 3D நிபுணர் இயன் செல்போ 9to5mac இடம் CAD மாடலை வழங்கி இருக்கிறது. அதில் ஐபோன் 15 மாடல் நாட்ச் ரக டிஸ்ப்ளேவுக்கு மாற்றாக டைனமிக் ஐலேண்ட் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக இந்த அம்சம் ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது.
இது ஸ்கிரீனின் மேல்புறத்தில் ஒவல் வடிவ கட்-அவுட் கொண்டுள்ளது. இதில் செல்ஃபி கேமரா, ஃபேஸ் ஐடி சென்சார் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் ஐபோன் 15 மாடலில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என CAD ஃபைல் விவரங்களில் தெரியவந்துள்ளது. ஸ்கிரீன் தவிர இந்த மாடலின் ரெசல்யூஷன், ரிப்ரெஷ் ரேட் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன.

புதிய ரெண்டர்களின் படி ஆப்பிள் டைனமிக் ஐலேண்ட் புதிய ஐபோன் மாடல்கள் அனைத்திலும் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் மாடல்களில் பழைய தொழில்நுட்பங்கள் இடம்பெறாது என்பதால் ஆப்பிள் இந்த முடிவை எடுக்கும் என கூறப்படுகிறது.
ஸ்டாண்டர்டு ஐபோன் மாடல்களில் டூயல் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. மூன்றாவது கேமரா மற்றும் LiDAR உள்ளிட்டவை ப்ரோ மாடல்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. இவைதவிர ஐபோன் 15 மாடலில் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது. இது ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் அதிவேக டேட்டா பரிமாற்றத்தை வழங்குகிறது.
Photo Courtesy: 9to5mac
- உலகம் முழுக்க தகவல் பரிமாற்றத்தில் ChatGPT பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் ChatGPT பயனர்கள் கேள்விக்கு அசத்தலாக பதில் அளித்து வருகிறது.
வாட்ஸ்அப் உலகின் அதிக பிரபலமான குறுந்தகவல் செயலியாக இருக்கும் போதிலும், பெரும்பாலானோர் டெக்ஸ்ட் செய்வதை அதிகம் விரும்புவதில்லை. இவ்வாறு டெக்ஸ்ட் செய்ய பிடிக்காதவர்களுக்கு ChatGPT இனி உதவும். வாட்ஸ்அப்-இல் பயனர்கள் கிட்ஹப் மூலம் ChatGPT பயன்படுத்த முடியும். வாட்ஸ்அப்-இல் கிட்ஹப் இண்டகிரேட் செய்த பின் ChatGPT வாட்ஸ்அப் குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க துவங்கி விடும்.
ChatGPT-இன் உரையாடல் திறன், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பயனர் கேல்விகளுக்கு பதில் அளிப்பதில் கூகுள் செய்யாததை கூட ChatGPT செய்து அசத்துகிறது. இதே போன்று இந்த ஏஐ டூல் குறுந்தகவல்களை கையாளுகிறது. ChatGPT அளிக்கும் பதில்கள் மனிதர்கள் அனுப்புவதை போன்றே இருப்பதால், யார் பதில் அனுப்புகின்றனர் என்தை கண்டறிவது வித்தியாசமான விஷயம் ஆகும்.
வாட்ஸ்-இல் ChatGPT-ஐ இண்டகிரேட் செய்ய டேனியல் கிராஸ் எனும் டெவலப்பர் பைத்தான் ஸ்க்ரிப்ட்-ஐ உருவாக்கி இருக்கிறார். இந்த ஸ்க்ரிப்ட் கொண்டு நண்பர்களுக்கு வாட்ஸ்அப்-இல் பதில் அனுப்ப ChatGPT-ஐ பயன்படுத்தலாம். பைத்தான் ஸ்க்ரிப்ட்-ஐ பயன்படுத்த பயனர்கள் வலைத்தளத்தில் தேவையான ஃபைல்கள் அடங்கிய language library-ஐ டவுன்லோட் செய்ய வேண்டும்.
டவுன்லோட் செய்தபின் "WhatsApp-gpt-main" ஃபைலை திறந்து "server.py" டாக்குமெண்ட்-ஐ இயக்க வேண்டும். இவ்வாறு செய்த பின் வாட்ஸ்அப் செயலியில் ChatGPT செட்டப் செய்யப்பட்டு விடும். சர்வர் ரன் ஆகும் போது "Is" என டைப் செய்து எண்டர் க்ளிக் செய்து, "python.server.py"-யை க்ளிக் செய்ய வேண்டும்.
இது பயனரின் மொபைல் நம்பரை OpenAI சாட் பக்கத்தில் செட்டப் செய்து விடும். இதைத் தொடர்ந்து பயனர் தான் மனிதன் என்பதை உறுதிப்படுத்த "Confirm I am a human" பாக்ஸ்-ஐ க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தபின், வாட்ஸ்அப் அக்கவுண்டில் OpenAI ChatGPT இடம்பெற்று இருப்பதை பார்க்கலாம். இனி ChatGPT மூலம் சாட் செய்ய துவங்கலாம்.
- லாவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.
- லாயா யுவா 2 ப்ரோ மாடலில் மீடியாடெக் ஹிலியோ G37 பிராசஸர், 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
லாவா நிறுவனம் இந்திய சந்தையில் யுவா 2 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லாவா யுவா 2 ப்ரோ மாடலில் 6.5 இன்ச் HD+ டிஸப்ளே, மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர், 4 ஜிபி ரேம், 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் லாவா யுவா 2 ப்ரோ 13MP பிரைமரி கேமரா, விஜிஏ டெப்த் கேமரா, மற்றொரு விஜிஏ கேமரா, 5MP செல்ஃபி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

லாவா யுவா 2 ப்ரோ அம்சங்கள்:
6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர்
IMG PowerVR GE8320 GPU
4 ஜிபி ரேம்
64 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12
டூயல் சிம் ஸ்லாட்
13MP பிரைமரி கேமரா
விஜிஏ டெப்த் கேமரா, விஜிஏ கேமரா, எல்இடி ஃபிளாஷ்
5MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
10 வாட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
லாவா யுவா 2 ப்ரோ மாடலில் கிளாஸ் வைட், கிளாஸ் கிரீன் மற்றும் கிளாஸ் லாவெண்டர் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை லாவா வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.
- இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் 7 மாடல் பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.
- 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் ஸ்மார்ட் 7 மற்றும் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 7 மாடலில் 6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ், யுனிசாக் SC9863A பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 3 ஜிபி வரை கூடுதல் ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி, 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், 5MP செல்ஃபி கேமரா உள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், பிரீமியம் அனுபவத்தை வழங்கும் பேட்டன் டிசைன், சில்வர் ஐயன் ஸ்பிரே, 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

இன்ஃபின்க்ஸ் ஸ்மார்ட் 7 அம்சங்கள்:
6.6 இன்ச் 1612x720 பிக்சல் HD+ ரெசல்யூஷன்
ஆக்டா கோர் யுனிசாக் SC9863A1 பிராசஸர்
IMG8322 GPU
4 ஜிபி LPDD4X ரேம்
64 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 12
டூயல் சிம் ஸ்லாட்
13MP பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், டூயல் எல்இடி ஃபிளாஷ்
5MP செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
பின்புறம் கைரேகை சென்சார்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
யுஎஸ்பி டைப் சி
6000 எம்ஏஹெச் பேட்டரி
10 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 7 ஸ்மார்ட்போன் அஸ்யூர் புளூ, எமரால்டு கிரீன் மற்றும் நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 7 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை பிப்ரவரி 27 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
- சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 FE ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- புதிய கேலக்ஸி S23 FE மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி S21 FE மாடல் எதிர்பார்த்த வரவேற்பை சந்தையில் பெறவில்லை. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் தொடர்ந்து கேலக்ஸி FE ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கேலக்ஸி S23 FE மாடல் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து டுவிட்டரில் தகவல் வெளியிட்டு இருக்கும் OreXDA புதிய கேலக்ஸி S23 FE ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் விலையை குறைவாக நிர்ணயிக்க சாம்சங் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முடிவு சற்றே பின்னடைவாக தெரிந்தாலும், இதில் உள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் ஃபிளாக்ஷிப் அனுபவத்தை வழங்கும்.

பழைய பிராசஸர்களை பயன்படுத்தும் போது, ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மாடலின் விலையை குறைவாக நிர்ணயம் செய்ய முடியும். இது ஸ்மார்ட்போனின் விற்பனையை கணிசமாக அதிகப்படுத்தும். இதுதவிர புதிய கேலக்ஸி S23 FE மாடலில் 120Hz AMOLED ஸ்கிரீன், கேலக்ஸி S23 சீரிசில் உள்ள கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம்.
சாம்சங்-இன் FE சீரிஸ் சந்தையில் வரவேற்பை பெறுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எனினும், குவால்காம் நிறுவனத்தின் டாப் எண்ட் பிராசஸருடன் அறிமுகமாகும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் கேலக்ஸி S23 FE மாடல் இந்த ஆண்டின் மூன்று அல்லது நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.
புதிய சாம்சங் கேலக்ஸி S23 FE மாடல் பல்வேறு போட்டி நிறுவனங்களின் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும். அறிமுகமாகும் பட்சத்தில் சாம்சங் கேலக்ஸி S23 FE எது மாதிரியான வரவேற்பை பெறும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
- மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ரேசர் 2023 ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி உள்ளது.
- தற்போதைய தகவல்களில் புதிய மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போன் பெரிய கவர் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மோட்டோரோலா ரேசர் 2023 ஸ்மார்ட்போன் விவரங்களை டெக்அவுட்லுக் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி புதிய மோட்டோரோலா ரேசர் 2023 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட பெரிய கவர் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் மாடலில் 2.7 இன்ச் ஸ்கிரீன் உள்ள நிலையில், புதிய மாடல் 3.6 இன்ச் அல்லது இதை விட பெரிய ஸ்கிரீன் வழங்கப்படலாம்.
புதிய மோட்டோரோலா ரேசர் 2023 ஸ்மார்ட்போன் "ஜூனோ" குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக தற்போதைய தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2022 வெர்ஷனுடன் ஒப்பிடும் போது, புதிய மாடலில் வித்தியாசமான ரியர் டிசைன் உள்ளது. இந்த பேனல் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் தனித்துவ டிசைன் கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் மேட் வெல்வட் AG கிளாஸ், மோட்டோரோலா மற்றும் ரேசர் லோகோ இடம்பெற்று இருக்கிறது. மேல்புறத்தில் கிளாசி கிளாஸ், பெரும்பாலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது.
மோட்டோரோலா ரேசர் 2022 மாடலில் 2.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ 2 ஃப்ளிப் மாடலில் பெரிய கவர் டிஸ்ப்ளே அதாவது 3.26 இன்ச் அளவில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மோட்டோரோலா புதிய மாடலில் சற்றே பெரிய கவர் டிஸ்ப்ளே வழங்கஇருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய மாடலின் பின்புறத்தில் உயர்த்தப்பட்ட கேமரா ஐலேண்ட், இரண்டு கேமரா சென்சார்கள், எல்இடி ஃபிளாஷ் இடம்பெற்று இருக்கிறது. எனினும், புதிய 2023 மோட்டோரோலா ரேசர் மாடலில் இது சற்றே வித்தியாசமாக உள்ளது. மோட்டோரோலா ரேசர் 2023 மாடலில் கேமரா ஐலேண்ட் வழங்கப்படவில்லை.
மோட்டோரோலா ரேசர் 2023 மாடலில் அதன் முந்தைய வெர்ஷனில் இருப்பதை போன்ற டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இதன் நான்கு புறங்களிலும் மெல்லிய பெசல்கள், எளிதில் கண்டறிய முடியாத கிரீஸ்கள் உள்ளன. ஸ்மார்ட்போனின் ரெண்டர்களில் செல்ஃபி கேமரா இடம்பெறவில்லை, எனினும், இதில் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.
Photo Courtesy: TechOutlook
- பிடிரான் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
- ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி மற்றும் காலிங், பிடிரான் வாட்ச் மியூசிக், கேமரா கண்ட்ரோல் வசதியை கொண்டிருக்கிறது.
ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடல் அறிமுகமானதில் இருந்து அதன் டிசைன் மற்றும் அம்சங்களுக்கு மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. பல்வேறு ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியாளர்களும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா தோற்றத்தில் புது மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில், தற்போது பிடிரான் ஃபோர்ஸ் X12N மாடல் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை புதிய பிடிரான் ஃபோர்ஸ் X12N மாடலில் 1.85 இன்ச் பெரிய HD டச் ஸ்கிரீன் மற்றும் 580 நிட்ஸ் டிஸ்ப்ளே பிரைட்னஸ், ஃபுளூயிட், கிளீன் இண்டர்ஃபேஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் பில்ட்-இன் கேம்ஸ், 130-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள், ஹார்ட் மாணிட்டர், ஸ்லீப், ஆக்டிவிட்டி டிராகிங் போன்ற வசதிகள் இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ளன.

ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் பிடிரான் ஃபோர்ஸ் X12N முழுமையான காலிங் வசதி, கால் அலெர்ட்கள், டெக்ஸ்ட் மெசேஜ் அலர்ட்கள், சமூக வலைத்தள அலெர்ட்கள், விருப்பமான காண்டாக்ட்களை சேமித்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மியூசிக், கேமரா கண்ட்ரோல், ஐந்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வசதியை வழங்குகிறது.
பிடிரான் ஃபோர்ஸ் X12N ஸ்மார்ட்வாட்ச்-ஐ இயக்க பிடிரான் ஃபிட் பிளஸ் ஆப் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளத்தில் கிடைக்கிறது. இது உடல்நல விவரங்களை பிரத்யேக யூசர் இண்டர்ஃபேசில் அனிமேஷன் வடிவில் வழங்குகிறது.
இந்திய சந்தையில் புதிய பிடிரான் ஃபோர்ஸ் X12N மாடலின் விலை ரூ. 1,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இது ரூ. 1199 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை பிடிரான் வலைத்தளம் மற்றும் அமேசானில் நடைபெறுகிறது. புதிய பிடிரான் ஃபோர்ஸ் X12N மாடலுக்கு ஒரு வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது.






