என் மலர்
புதிய கேஜெட்டுகள்

யுஎஸ்பி சி போர்ட், டைனமிக் ஐலேண்ட் உடன் உருவாகும் ஐபோன் 15
- ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 15 விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
- புதிய ஐபோன் 15 மாடலில் யுஎஸ்பி சி போர்ட், டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படுகிறது.
ஐபோன் 15 ப்ரோ ரெண்டர்களை தொடர்ந்து ஐபோன் 15 ரெண்டர்கள் தற்போத இணையத்தில் வெளியாகி உள்ளது. 9to5mac வெளியிட்டு இருக்கும் புதிய 3D CAD ஃபைல் ரெண்டர்களில் ஐபோன் 15 விவரங்கள் தெரியவந்துள்ளது.
கேஸ் உற்பத்தியாளர் மற்றும் 3D நிபுணர் இயன் செல்போ 9to5mac இடம் CAD மாடலை வழங்கி இருக்கிறது. அதில் ஐபோன் 15 மாடல் நாட்ச் ரக டிஸ்ப்ளேவுக்கு மாற்றாக டைனமிக் ஐலேண்ட் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக இந்த அம்சம் ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது.
இது ஸ்கிரீனின் மேல்புறத்தில் ஒவல் வடிவ கட்-அவுட் கொண்டுள்ளது. இதில் செல்ஃபி கேமரா, ஃபேஸ் ஐடி சென்சார் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் ஐபோன் 15 மாடலில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என CAD ஃபைல் விவரங்களில் தெரியவந்துள்ளது. ஸ்கிரீன் தவிர இந்த மாடலின் ரெசல்யூஷன், ரிப்ரெஷ் ரேட் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன.
புதிய ரெண்டர்களின் படி ஆப்பிள் டைனமிக் ஐலேண்ட் புதிய ஐபோன் மாடல்கள் அனைத்திலும் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் மாடல்களில் பழைய தொழில்நுட்பங்கள் இடம்பெறாது என்பதால் ஆப்பிள் இந்த முடிவை எடுக்கும் என கூறப்படுகிறது.
ஸ்டாண்டர்டு ஐபோன் மாடல்களில் டூயல் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. மூன்றாவது கேமரா மற்றும் LiDAR உள்ளிட்டவை ப்ரோ மாடல்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. இவைதவிர ஐபோன் 15 மாடலில் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது. இது ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் அதிவேக டேட்டா பரிமாற்றத்தை வழங்குகிறது.
Photo Courtesy: 9to5mac






