என் மலர்
தொழில்நுட்பம்
- விங்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 38 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.
- இதில் உள்ள டச் இண்டர்ஃபேஸ் மூலம் வால்யும் அட்ஜஸ்ட், அழைப்புகளை ஏற்க முடியும்.
விங்ஸ் வேடர் 350 மாடலை தொடர்ந்து ஃபேண்டம் 700 கேமிங் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய விங்ஸ் ஃபேண்டம் 700 இயர்பட்ஸ் கேமர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏராளமான புதிய அம்சங்கள் மற்றும் அழகிய டிசைன் உள்ளது.
ஃபேண்டம் 700 மாடலில் நீண்ட நேர பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள டச் இண்டர்ஃபேஸ் கொண்டு வால்யூம் அட்ஜஸ்ட், அழைப்புகளுக்கு பதில் அளித்தல், பாடல்களை மாற்றுவது, வாய்ஸ் அசிஸ்டண்ட் இயக்குவது மற்றும் கேமிங் மோடிற்கு ஸ்விட்ச் செய்வது உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம்.

இதனுடன் வரும் சார்ஜிங் கேஸ் அழகிய ஆர்ஜிபி லைட்களை கொண்டிருக்கிறது. மேலும் இது IPX5 தரச்சான்று பெற்ற ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இதை கொண்டு உடற்பயிற்சிகளை எவ்வித தயக்கமும் இன்றி மேற்கொள்ளலாம். விங்ஸ் ஃபேண்டம் 700 மாடலில் ப்ளூடூத் 5.3, 40ms அல்ட்ரா லோ லேடன்சி ஆடியோ உள்ளது.
இதில் உள்ள 13mm ஹை-ஃபிடிலிட்டி கம்போசிட் டிரைவர்கள் AAC கோடெக் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இவை தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதில் உள்ள SNS மைக் தேவைற்ற வெளிப்புற சத்தத்தை தடுத்து, கேமிங்கின் போது தெளிவான தகவல் பரிமாற்றத்திற்கு வழி செய்கிறது. இதில் உள்ள இயர்பட் ஒவ்வொன்றும் முழு சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.

சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் இது 38 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருப்பதால், 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு கேமிங் செய்யலாம். இதில் உள்ள புல்லட் சார்ஜ் தொழில்நுட்பம் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் இயர்பட்ஸ்-க்கு அசத்தலான சார்ஜிங் தீர்வை வழங்குகிறது.
விங்ஸ் ஃபேண்டம் 700 அம்சங்கள்:
ஆர்ஜிபி எல்இடி லைட்கள்
13mm ஹை-ஃபிடிலிட்டி கம்போசிட் டிரைவர்
போல்ட் பேஸ் தொழில்நுட்பம்
பிரத்யேக கேம் மோட் மற்றும் 40ms அல்ட்ரா லோ லேடன்சி
SNS - சரவுண்டிங் நாய்ஸ் சப்ரெஷன் மைக்
டச் கண்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட்
ப்ளூடூத் 5.3
38 மணி நேரத்திற்கு பேக்கப்
டைப் சி புல்லட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
IPX5 வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட்
விங்ஸ் சின்க் ஆப் சப்போர்ட்
ஒரு வருட வாரண்டி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
விங்ஸ் ஃபேண்டம் 700 மாடல் குறுகிய காலத்திற்கு ரூ. 899 எனும் அறிமுக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பிளாக் நிறத்தில் கிடைக்கும் விங்ஸ் ஃபேண்டம் 700 விற்பனை விங்ஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைத்தளங்களில் நடைபெறுகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்றே புதிய ஒன்பிளஸ் 11 கான்செப்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
- சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் புதுவித கூலிங் வசதி கொண்ட ஒன்பிளஸ் 11 கான்செப்ட் அறிமுகமாகி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஆக்டிவ் கூலிங் தொழில்நுட்பம் - ஆக்டிவ் க்ரியோஃபிளக்ஸ் கொண்ட ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போனை அறிமுகம் செய்து இருக்கிறது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் புதிய கான்செப்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஒன்பிளஸ் 11 கான்செப்ட் மாடலில் ஆக்டிவ் க்ரியோஃபிளக்ஸ் உள்ளது. இந்த தொழில்நுட்பம் அதிகபட்சம் 2.1 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பத்தை குறைக்கும் திறன் கொண்டிருக்கிறது. கேம்பிளே-வின் போது ஃபிரேம் ரேட்களை இது 3 முதல் 4 fps வரை மேம்படுத்துகிறது. ஆக்டிவ் க்ரியோஃபிளக்ஸ் சார்ஜிங்கின் போது வெப்பநிலையை 1.6 டிகிரி வரை குறைக்கிறது. இதன் மூலம் சார்ஜிங் நேரம் 30 முதல் 45 நொடிகள் வரை குறையும்.

ஆக்டிவ் க்ரியோஃபிளக்ஸ் தொழில்நுட்பத்தின் மத்தியில் தொழில்துறை கிரேடு செராமிக் பெய்சோஎலெக்ட்ரிக் மைக்ரோபம்ப்களை கொண்டுள்ளது. இத்துடன் பைப்லைன்கள் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ள்ள மைக்ரோபம்ப்கள் ஸ்மார்ட்போனின் எடை மற்றும் தடிமன் அளவுகளை பாதிக்காமல், வட்டப்பாதையில் லிக்விட் பாயச் செய்கிறது.
புதிய கூலிங் தொழில்நுட்பம் தவிர ஒன்பிளஸ் நிறுவனம் 45 வாட் லிக்விட் கூலர் ஒன்றையும் அறிமுகம் செய்து இருக்கிறது. இது செமிகண்டக்டர் சார்ந்த தெர்மோ எலெக்ட்ரிக் கூலர் ஆகும். இது மேம்பட்ட கூலிங் அனுபவத்தை வழங்கும். புதுமை மிக்க செமிகண்டக்டர் வாட்டர்-கூலிங் ஆர்கிடெக்ச்சர் மூலம் ஒன்பிளஸ் 45 வாட் லிக்விட் கூலர் சாதனத்தின் வெப்பநிலையை 20 டிகிரி வரை குறைக்கும்.
- டுவிட்டர் நிறுவனத்தில் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையை எலான் மஸ்க் மேற்கொண்டுள்ளார்.
- இந்த முறை டுவிட்டர் ஊழியர்களில் பத்து சதவீதம் பேர் வேலையை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
டுவிட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு விலைக்கு வாங்கியதில் இருந்து எலான் மஸ்க் நிறுவனத்தில் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் பலமுறை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எலான் மஸ்க் தலைமை பொறுப்பை ஏற்கும் முன் டுவிட்டர் நிறுவனத்தில் சுமார் 7 ஆயிரத்து 500 பேர் பணியாற்றி வந்தனர்.
எனினும், எலான் மஸ்க் பதவியேற்றதும், ஊழியர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 300 ஆக குறைந்துள்ளது. இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தில் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறை எலான் மஸ்க் பத்து சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறார். இந்த நடவடிக்கையில் சுமார் 200 பேர் பணியை இழந்துள்ளனர்.

இது குறித்து நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், டுவிட்டர் நிறுவனம் பிராடக்ட் மேலாளர்கள், டேட்டா ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறது. பணிநீக்க நடவடிக்கை வார இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைனில் டுவிட்டரின் பல்வேறு அம்சங்களை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மானிடைசேஷன் உள்கட்டமைப்பு குழுவில் பணியாற்றி வந்து 30 ஊழியர்கள் எண்ணிக்கை தற்போது 8 ஆக குறைந்துள்ளது. எலான் மஸ்க்-இன் டுவிட்டர் 2.0 திட்டத்தில் பணியாற்றி வந்தவர்களும் பணிநீக்க நடவடிக்கையில் சிக்கியுள்ளனர்.
- விவோ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 8 இன்ச் டிஸ்ப்ளே, இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என தகவல்.
- விவோ X ஃபோல்டு 2 மாடலின் டிஸ்ப்ளே 2K ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
விவோ நிறுவனத்தின் அடுத்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவோ X ஃபோல்டு 2 என அழைக்கப்பட இருக்கிறது. கடந்த வாரம் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி மற்றும் சார்ஜிங் விவரங்களை டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் எனும் டிப்ஸ்டர் வெளியிட்டு இருந்தது. தற்போது இதே டிப்ஸ்டர் புதிய விவோ X ஃபோல்டு 2 விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி விவோ X ஃபோல்டு 2 மாடலில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன், 2K ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 8 இன்ச் டிஸ்ப்ளே, இதன் கவர் டிஸ்ப்ளேவில் உள்புற ஸ்கிரீன், அல்ட்ராசோனிக் இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. விவோ X ஃபோல்டு 2 உலகின் முதல் முறையாக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்ட முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது.

இந்த பிராசஸருடன் 16 ஜிபி ரேம், 512 ஜிபி அல்லது 1 டிபி மெமரி வழங்கப்படுகிறது. விவோ X ஃபோல்டு 2 மாடலில் 4800 எம்ஏஹெச் டூயல் செல் பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒரிஜின் ஒஎஸ் 3.0 வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. புகைப்படங்களை எடுக்க விவோ X ஃபோல்டு 2 மாடலில் 50MP சோனி IMX866 பிரைமரி கேமரா, OIS வசதி வழங்கப்படுகிறது.
இத்துடன் 12MP சோனி IMX663 சென்சார் அல்ட்ரா வைடு மற்றும் டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. விவோ X ஃபோல்டு 2 மாடல் இந்த ஆஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் விவோ X ஃப்ளிப் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது.
- நோக்கியா நிறுவனம் மற்ற வியாபாரங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் பிரிவில் அதிக முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறது.
- புதிய லோகோ ஐந்து வெவ்வேறு வடிவங்கள் இணைந்து நோக்கியா எனும் வார்த்தையை பிரதிபலிக்கிறது.
நோக்கியா நிறுவனத்தின் 60 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக தனது பிராண்டு அடையாளத்தை மாற்ற முடிவு செய்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து நோக்கியாவின் புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டெலிகாம் உபகரணங்கள் உற்பத்தியாளர் பிரிவில் தொடர் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில், நோக்கியா இந்த முடிவை எடுத்துள்ளது.
புதிய லோகோ ஐந்து வெவ்வேறு வடிவங்கள் இணைந்து நோக்கியா எனும் வார்த்தையை பிரதிபலிக்கிறது. பாரம்பரியம் மிக்க புளூ நிற பழைய லோகோவுக்கு மாற்றாக புதிய லோகோவில் தேவைக்கு ஏற்ப அதிக நிறங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. "ஸ்மார்ட்போன்களிடம் அதிக ஒருங்கிணைப்பு இருந்து வந்தது, எனினும், தற்போதைய காலக்கட்டத்தில் நாங்கள் வியாபார தொழில்நுட்ப நிறுவனம்," என தலைமை அதிகாரி பெக்கா லுண்ட்மார்க் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 (MWC) நிகழ்வை ஒட்டி பெக்கா லுண்ட்மார்க் இந்த தகவலை தெரிவித்தார். 2020 ஆண்டு வாக்கில் தடுமாற்றத்தில் இருந்துவந்த நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்ட லுண்ட்மார்க் ரிசெட், அக்செல்லரேட் மற்றும் ஸ்கேல் என மூன்று நிலைகள் அடங்கிய வியூகத்தை வகுத்து நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார்.
இவற்றில் ரிசெட் நிலை முடிவுக்கு வருவதை அடுத்து, இரண்டாம் கட்ட பணிகள் துவங்கி இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார். தற்போது சேவை வழங்கும் வியாபார பிரிவில் டெலிகாம் நிறுவனங்களுக்கு உபகரணங்களை வினியோகம் செய்து வரும் நோக்கியா, தொடர்ந்து வியாபாரங்களுக்கு உபகரணங்களை விற்பனை செய்வதில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
- சியோமி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கிறது.
- சர்வதேச சந்தையை தொடர்ந்து சியோமி 13 ப்ரோ இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சியோமி நிறுவனம் சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. சியோமி 13 மாடலில் 6.36 இன்ச் FHD+ ஃபிளெக்சிபில் E6 AMOLED ஸ்கிரீன், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. சியோமி 13 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் 2K ஃபிளெக்சிபில் E6 AMOLED LTPO ஸ்கிரீன், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இரு ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், பெரிய VC லிக்விட் கூலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. சியோமி 13 ப்ரோ மாடலில் 50MP பிரைமரி கேமராவுன் மூன்று சென்சார்கள், லெய்கா ஆப்டிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சியோமி 13 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 10MP டெலிபோட்டோ கேமரா உள்ளது.

சியோமி 13 அம்சங்கள்:
6.36 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ E6 AMOLED, 120Hz டிஸ்ப்ளே
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்
அட்ரினோ 740 GPU
8 ஜிபி, 12 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
டூயல் சிம்
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14
50MP பிரைமரி கேமரா
12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
10MP டெலிபோட்டோ கேமரா
32MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
4500 எம்ஏஹெச் பேட்டரி
67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங்

சியோமி 13 ப்ரோ அம்சங்கள்:
6.73 இன்ச் 3200x1440 பிக்சல் QHD+ E6 AMOLED, 120Hz டிஸ்ப்ளே
டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்
அட்ரினோ 740 GPU
12 ஜிபி ரேம்
256 ஜிபி, 512 ஜிபி மெமரி
டூயல் சிம்
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14
50MP பிரைமரி கேமரா
50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
50MP டெலிபோட்டோ கேமரா
32MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
4820 எம்ஏஹெச் பேட்டரி
120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சியோமி 13 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் ஃபுளோரா கிரீன் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. சியோமி 13 ப்ரோ மாடல் செராமிக் பிளாக் மற்றும் செராமிக் வைட் நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் சியோமி 13 விலை 1056 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 87 ஆயிரத்து 585 என துவங்குகிறது. சியோமி 13 ப்ரோ விலை 1373 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 890 என துவங்குகிறது.
இந்திய சந்தையில் சியோமி 13 ப்ரோ விலை விவரங்கள் நாளை (பிப்ரவரி 28) அறிவிக்கப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து விற்பனை அமேசான் ஆன்லைன் வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெற இருக்கும் நிலையில், தேதி பற்றிய விவரங்களும் நாளை வெளியாகும்.
- விவோ நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய விவோ V சீரிஸ் ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது.
விவோ V27 ப்ரோ ஸ்மார்ட்போன் விவோ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய விவோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அந்நிறுவன வலைத்தளத்தின் மூலம் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. அதன்படி விவோ V27 இந்தியாவில் மார்ச் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இதன் டிசைன் மற்றும் முக்கிய அம்சங்களை அம்பலப்படுத்தும் V27 ப்ரோ டீசர் ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், புதிய விவோ V27 ப்ரோ இந்திய விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி விவோ V27 ப்ரோ ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

புதிய விவோ ஸ்மார்ட்போன் விலை விவரங்கள் குறித்து 91arena வெளியிட்டு இருக்கும் தகவல்களில் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடல் விலை ரூ. 37 ஆயிரத்து 999 என்றும், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 42 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் வெளியான டீசர்களின் படி விவோ V27 ப்ரோ மாடலில் 3D வளைந்த டிஸ்ப்ளே, அல்ட்ரா ஸ்லிம் டிசைன், 7.4mm தடிமன் அளவு, 120Hz ரிப்ரெஷ் ரேட், நிறம் மாறும் கிளாஸ் பேக், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், ரிங் எல்இடி ஃபிளாஷ், 50MP பிரைமரி கேமரா, OIS வசதி கொண்டிருக்கிறது.
புதிய விவோ V27 ப்ரோ ஸ்மார்ட்போன் மேஜிக் புளூ மற்றும் நோபில் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. முன்னதாக கீக்பென்ச் வலைத்தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் விவோ V2230 மாடல் நம்பர் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோர் டெஸ்டிங்கில் 1003 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டில் 3936 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. கீக்பென்ச் லிஸ்டிங்கின் படி விவோ V27 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 8200 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் பிரீமியம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- ஆன்லைன் வலைத்தளங்களில் பிக்சல் 7 ப்ரோ வாங்குவோருக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன்களில் தலைசிறந்த கேமரா மற்றும் டாப் எண்ட் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ மாடல்களின் விலை பிரீமியம் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
தற்போது பிக்சல் 7 ப்ரோ மாடலுக்கு ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் அதிகபட்சம் ரூ. 22 ஆயிரம் வரை தள்ளுபடி பெற முடியும்.
ப்ளிப்கார்ட் தளத்தில் பிக்சல் 7 ப்ரோ 12 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி, எக்சேன்ஜ் மற்றும் வங்கி சலுகைகள் வழங்கப்படுகின்றன. ரூ. 84 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படும் பிக்சல் 7 ப்ரோ மாடலுக்கு 4 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தள்ளுபடியை தொடர்ந்து பிக்சல் 7 ப்ரோ விலை ரூ. 81 ஆயிரத்து 199 என மாறி இருக்கிறது.
தள்ளுபடி மட்டுமின்றி பிக்சல் 7 ப்ரோ வாங்குவோருக்கு எக்சேன்ஜ் சலுகை மற்றும் வங்கி சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதற்கு பயனர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போனினை எக்சேன்ஜ் செய்ய வேண்டும்.
பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது அதிகபட்சம் ரூ. 22 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். அதன்படி பிக்சல் 7 ப்ரோ விலை ரூ. 59 ஆயிரத்து 199 என மாறி விடும். இத்துடன் வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது.
அமேசான் தளத்தில் பிக்சல் 7 ப்ரோ 12 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 71 ஆயிரத்து 420 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமேசான் தளத்தில் பிக்சல் 7 ப்ரோ வாங்குவோருக்கு எக்சேன்ஜ் சலுகை எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக வங்கி சலுகை மட்டும் வழங்கப்படுகிறது.
பிக்சல் 7 ப்ரோ அப்சிடியன் நிற வேரியண்ட் விலை ரூ. 71 ஆயிரத்து 420 என்றும் ஹசெல் நிற வேரியண்ட் ரூ. 73 ஆயிரத்து 080 என்றும் ஸ்னோ நிற வேரியண்ட் விலை ரூ. 73 ஆயிரத்து 250 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய Z சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புதிய ஐகூ Z சீரிஸ் ஸ்மார்ட்போன் OIS வசதி கொண்ட பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என உறுதியாகி இருக்கிறது.
புதிய ஐகூ Z சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஐகூ இந்தியா தலைமை செயல் அதிகாரி நிபுன் மர்யா புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் அடங்கிய டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டீசரில் புதிய ஐகூ ஸ்மார்ட்போன் பெயர் விவரங்கள் இடம்பெறவில்லை. எனினும், படத்தில் உள்ள ஸ்மார்ட்போனின் பின்புறம் Z7 என எழுதப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ Z6 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் இது என்பது உறுதியாகி இருக்கிறது. தற்போது நிபுன் மர்யா வெளியிட்டு இருக்கும் டீசர் புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் பின்புற பேனல் டிசைன் தெரியவந்துள்ளது. இது தோற்றத்தில் கிட்டத்தட்ட விவோ T1x போன்றே காட்சியளிக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் செவ்வக வடிவம் கொண்ட கேமரா மாட்யுல், இரண்டு கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் OIS வசதி வழங்கப்படுவதும் உறுதியாகி இருக்கிறது. கேமரா சென்சாரை தொடர்ந்து எல்இடி ஃபிளாஷ் அருகில் "Photography High Definition" என எழுதப்பட்டு இருக்கிறது. பேக் பேனலின் கீழ்புறத்தில் ஐகூ பிராண்டிங் இடம்பெற்று இருக்கிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் டியல் நிறம் கொண்டிருப்பது தற்போதைய டீசரில் தெரியவந்துள்ளது. புதிய ஐகூ Z7 ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். முந்தைய ஐகூ Z சீரிஸ் மாடல்கள் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தன. அந்த வரிசையில் புதிய ஸ்மார்ட்போனும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வெளியான தகவல்களில் ஐகூ Z7 சீரிசில் ஐகூ Z7 5ஜி மற்றும் Z7 ப்ரோ 5ஜி என இரு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்பட்டது. மேலும் இவை I2207 மற்றும் I2213 எனும் மாடல் நம்பர்களை கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இதுபற்றிய தகவல்கள் மற்றும் இரு மாடல்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்ற விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படலாம்.
- ட்ரூக் நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் ANC வசதி, 48 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.
- இந்த இயர்பட்ஸ்-இல் மூன்று EQ மோட்கள்: டைனமிக் ஆடியோ, பேஸ் பூஸ்ட் மோட் மற்றும் மூவி மோட் உள்ளது.
ட்ரூக் BTG பீட்டா இயர்பட்ஸ்-ஐ தொடர்ந்து ட்ரூக் நிறுவனத்தின் புதிய பட்ஸ் A1 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ட்ரூக் பட்ஸ் A1 மாடலில் ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, அதிகபட்சம் 30db வரை நாய்ஸ் கேன்சலேஷன் வழங்குகிறது. இத்துடன் குவாட் மைக் ENC மூலம் அழைப்புகளின் போது தெளிவான ஆடியோ கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
இதில் உள்ள 10mm ரியல் டைட்டானியம் ஸ்பீக்கர் டிரைவர்கள் அதிகளவில் சினிமா தர மியூசிக் அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் டைனமிக் ஆடியோ, பேஸ் பூஸ்ட் மோட் மற்றும் மூவி மோட் என மூன்றுவிதமான EQ மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒன் ஸ்டெப் பேரிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருப்பதால், இந்த இயர்பட்ஸ் அதிவேக இணைப்பு, சிறந்த ஸ்டேபிலிட்டியை வழங்குகிறது. இவற்றை ப்ளூடூத் 5.3 உறுதிப்படுத்துகிறது.

இந்த இயர்பட்ஸ்-இல் உள்ள பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 48 மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்குகிறது. இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் இயர்பட்ஸ்-ஐ பத்து மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். இதனுடன் வரும் சார்ஜிங் கேஸ் 300 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது. புதிய ட்ரூக் பட்ஸ் A1 மாடல் அல்ட்ரா லோ லேடன்சியை 50ms வரை சப்போர்ட் செய்கிறது. இது கேமர்களுக்கு தலைசிறந்த அம்சமாக இருக்கும். இந்த இயர்பட்ஸ் ஒரு வருட வாரண்டியுடன் வழங்கப்படுகிறது.
ட்ரூக் பட்ஸ் A1 அம்சங்கள்:
10mm டைட்டானியம் டிரைவர்கள்
50ms அல்ட்ரா லோ லேடன்சி, கேம் மோட்
ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்
டைனமிக் ஆடியோ, பேஸ் பூஸ்ட், மூவி மோட்
ப்ளூடூத் 5.3, SBC/AAC கோடெக் சப்போர்ட்
இயர்பட்ஸ்-இல் 40 எம்ஏஹெச் பேட்டரி
சார்ஜிங் கேஸ்-இல் 300 எம்ஏஹெச் பேட்டரி
48 மணி நேர பிளேபேக்
யுஎஸ்பி டைப் சி
ஃபாஸ்ட் சார்ஜிங்
குவாட் மைக் ENC மற்றும் பேசிவ் நாய்ஸ் கேன்சலேஷன்
டச் கண்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி
IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ட்ரூக் பட்ஸ் A1 மாடலின் விலை ரூ. 1499 ஆகும். இதற்கான முன்பதிவு அமேசான் தளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை மார்ச் 3 ஆம் தேதி துவங்குகிறது. அறிமுக சலுகையாக ட்ரூக் பட்ஸ் A1 விலை ரூ. 1299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பட்ஸ் A1 மாடல் புளூ மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
- ரியல்மி நிறுவனத்தின் புதிய GT 3 ஸ்மார்ட்போன் இருவித வேரியண்ட்களில் அறிமுகமாகும் என தெரிகிறது.
- ரியல்மி GT 3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ரியல்மி நிறுவனம் தனது புதிய GT சீரிஸ் ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 (MWC 2023) நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற இருக்கும் மொபைல் காங்கிரஸ் விழாவில் ரியல்மி தனது GT 2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனான ரியல்மி GT 3 மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ரியல்மி GT 3 மாடல் அதிவேக 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கும் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எனினும், ரியல்மி சார்பில் இதுபற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. பென்ச்மார்கிங் வலைத்தள விவரங்களின் படி ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என குறிப்பிடுப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து மை ஸ்மார்ட் பிரைஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் புதிய ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் RMX3709 எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோர் டெஸ்டிங்கில் 1265 புள்ளிகளையும், மல்டி-கோர் டெஸ்டிங்கில் 3885 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. கீக்பென்ச் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் பிராசஸர் மற்றும் அட்ரினோ 730 GPU கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் உள்ள பிராசஸர் 3.00 GHz பீக் ஃபிரீக்வன்சியில் கிளாக் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒஎஸ் வழங்கப்பட இருக்கிறது. கீக்பென்ச் மட்டுமின்றி ரியல்மி GT 3 விவரங்கள் ப்ளூடூத் SIG மற்றும் EEC சான்றளிக்கும் வலைத்தளங்களில் லீக் ஆகி இருந்தது. இதில் EEC வலைத்தளத்தில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 240 வாட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய ரியல்மி GT3 மாடல் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரியல்மி GT2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். ரியல்மி GT2 மாடலில் 6.62 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 50MP பிரைமரி கேமரா, OIS, வைடு ஆங்கில் கேமரா, மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் குறைந்த விலையில் நோக்கியா ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
- புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் மெல்லிய நார்டிக் டிசைன், 5MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா C02 பட்ஜெட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய நோக்கியா C02 மாடலில் 5.45 இன்ச் FWVGA பிளஸ் ஸ்கிரீன், குவாட் கோர் யுனிசாக் பிராசஸர், 2 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன், 5MP பிரைமரி கேமரா, 2MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. மெல்லிய நார்டிக் டிசைன் கொண்டிருக்கும் நோக்கியா C02 மாடலில் 3000 எம்ஏஹெச் பேட்டரி, 5 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

நோக்கியா C02 அம்சங்கள்:
5.45 இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 டிஸ்ப்ளே
1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் யுனிசாக் பிராசஸர்
2 ஜிபி ரேம்
32 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன்
டூயல் சிம்
5MP பிரைமரி கேமரா
2MP செல்ஃபி கேமரா
3.5mm ஜாக், எஃப்எம் ரேடியோ
ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் IP52
4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
மைக்ரோ யுஎஸ்பி
3000 எம்ஏஹெச் பேட்டரி
5 வாட் சார்ஜிங்
புதிய நோக்கியா C02 ஸ்மார்ட்போன் டார்க் சியான் மற்றும் சார்கோல் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இந்த ஸ்மார்ட்போனின் வலைப்பக்கம் நோக்கியா இந்தியா வலைதளத்தில் துவங்கப்பட்டு விட்டது.






