என் மலர்
தொழில்நுட்பம்
- ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மாடல்களில் ஐஒஎஸ் 16-ஐ வெளியிட்டு வருகிறது.
- ஐபோன் பயனர்கள் மத்தியில் Live Wallpaper அம்சம் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.
ஐஒஎஸ் 16 லாக் ஸ்கிரீனில் அனிமேட் செய்யப்பட்ட லைவ் வால்பேப்பர்களை (Live Wallpaper) வைத்துக் கொள்ளும் வசதி நீக்கப்பட்டு விட்டது அனைவரும் அறிந்ததே. ஐபோன் பயனர்கள் மத்தியில் லைவ் வால்பேப்பர் அம்சம் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது. எனினும், ஐஒஎஸ் 16-இல் இது நீக்கப்பட்டு விட்டது. திடீரென எதற்காக லைவ் வால்பேப்பர் அம்சம் நீக்கப்பட்டது என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த கேள்விக்கு யூடியூபர் கிரெக் யாட் பதில் அளித்து இருக்கிறார். அதில் லாக் ஸ்கிரீனில் வால்பேப்பரை கொண்டு செல்வதற்கான ஜெஸ்ட்யூர் சார்ந்தது என அவர் தெரிவித்து இருக்கிறார். மேலும் இதுபற்றி தகவல்களை அவர் வழங்கி இருக்கிறார்.

ஆப்பிள் நிறுவனம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஐஒஎஸ் 11-இல் முதல் முறையாக லைவ் வால்பேப்பர் அம்சத்தை கொண்டு வந்தது. தற்போது ஐஒஎஸ் 16-இல் அதனை நீக்கி இருக்கிறது. இதில் லைவ் வால்பேப்பர் உடன் டைனமிக் வால்பேப்பர்களும் இடம்பெற்று இருந்தது.
பயனர்கள் டிஸ்ப்ளேவை அழுத்திப் பிடித்து லைவ் வால்பேப்பரை பார்க்க வேண்டிய நிலை இருந்து வந்தது. எனினும், ஆப்பிள் கஸ்டமைஸ் செய்யக்கூடிய லாக் ஸ்கிரீனை வழங்க முடிவு செய்த போது இது பிரச்சினையாக உருவானது. ஏற்கனவே இதே போன்ற அம்சம் ஆப்பிள் வாட்ச்-இல் வழங்கப்பட்டு இருந்தது. இதிலும் அழுத்திப் பிடித்தால் தான் லைவ் வால்பேப்பர் ஆக்டிவேட் ஆகும்.
ஐபோனில் கஸ்டம் லாக் ஸ்கிரீனை ஆக்டிவேட் செய்யவோ அல்லது முழுமையாக நீக்கவோ ஆப்பிள் புதிய ஜெஸ்ட்யூர் ஒன்றை சேர்க்க வேண்டும். இதன் மூலம் அழுத்தி பிடிக்கும் போது லாக் ஸ்கிரீன் இண்டர்ஃபேஸ் செயல்படுத்தப்படும். பல்வேறு அம்சங்களிடையே ஆப்பிள் நிறுவனம் சீராக இயங்குவதற்கு மதிப்பு கொடுக்கும். அந்த வகையில், லைவ் வால்பேப்பர் அம்சத்தை அழிக்கும் முன் இந்த அனுபவத்தை ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்களில் வழங்கியது.
ஆப்பிள் மேற்கொண்ட ஆய்வில், பலர் லைவ் அல்லது டைனமிக் வால்பேப்பர் அம்சங்களை கடந்த சில ஆண்டுகளாகவே பயனர்கள் பயன்படுத்தவில்லை என யூடியூபர் தெரிவித்து இருக்கிறார். இதன் காரணமாக இந்த அம்சம் நீக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.
- விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய V சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது.
- புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பபிள் வைட் மற்றும் பெபில் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
விவோ நிறுவனம் புதிய விவோ TWS ஏர் ஏர் இயர்பட்ஸ்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.2, AAC கோடெக், 14.2mm டைனமிக் டிரைவர்கள், 117ms லோ லேடன்சி கேமிங் வசதியை கொண்டிருக்கிறது. இதில் உள்ள டீப்X 2.0 விவோ கோல்டன் இயர் அகௌஸ்டிக்ஸ் லேப்- இல் டியூன் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 25 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இதில் உள்ள டூயல் மைக்ரோபோன்கள் AI கால் நாய்ஸ் ரிடக்ஷன் அல்காரிதம், L வடிவ ஆண்டி-விண்ட் நாய்ஸ் டக்ட்கள் காற்றின் சத்ததையும் கண்டறிந்து தடுக்கிறது.

விவோ TWS ஏர் இயர்பட்ஸ் அம்சங்கள்:
கூகுள் ஃபாஸ்ட் பேர் மற்றும் AAC கோடெக் சாதனங்களுடன் கன்கெட் ஆக ப்ளூடூத் 5.2
கஸ்டம் 14.2mm டைனமிக் டிரைவர்கள், பயோ கார்பன் ஃபைபர் கம்போசிட் டயஃப்ராம்
117ms லோ லேடன்சி கேமிங்
டூயல் மைக்ரோபோன்கள், AI கால் நாய்ஸ் ரிடக்ஷன் அல்காரிதம்
L வடிவ ஆண்டி விண்ட் டக்ட்கள்
வாட்டர் ரெசிஸ்டண்ட் IP54
இயர்பட்களில் 29 எம்ஏஹெச் பேட்டரி - அதிகபட்சம் 4.8 மணி நேர பிளேபேக்
430 எம்ஏஹெச் பேட்டரி - அதிகபட்சம் 25 மணி நேர பிளேபேக்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய விவோ TWS ஏர் இயர்போன் பபுள் வைட் மற்றும் பபுள் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை விவோ ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.
- ரெட்மி பிராண்டின் புதிய அதிவேக சார்ஜர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
- ரெட்மியின் புதிய ஃபாஸ்ட் சார்ஜர் ஸ்மார்ட்போனை ஐந்து நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடுகிறது.
210 வாட் சார்ஜரை அடுத்து ரெட்மி பிராண்டு 300 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிவித்து இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனை ஐந்து நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டு ரெட்மி புகதிய சார்ஜப் ஸ்மார்ட்போனினை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாகவே எடுத்துக் கொள்கிறது.
300 வாட் இம்மார்டல் செகண்ட் சார்ஜர் என அழைக்கப்படும் புதிய தொழில்நுட்பத்தை ரெட்மி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. எனினும், இந்த சார்ஜரின் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

ரெட்மி பிராண்டு 4100 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட மாடிஃபை செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 டிஸ்கவரி ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யப்படும் வீடியோவினை வெளியிட்டு உள்ளது. இதற்காக ரெட்மி பிராண்டு 4300 எம்ஏஹெச் பேட்டரிக்கு மாற்றாக 4100 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ரெட்மி நோட் 12 டிஸ்கவரி எடிஷன் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி இருக்கிறது.
வீடியோவில் ஸ்மார்ட்போன் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆக வெறும் 2 நிமிடங்கள் 11 நொடிகளையே எடுத்துக் கொள்கிறது. புதிய அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் பற்றிய இதர விவரங்களை ரெட்மி பின்னர் வெளியிடுவதாக அறிவித்து இருந்தது. இதுகுறித்த வெய்போ பதிவில், "நோட் 12 ப்ரோ பிளஸ் மேஜிக் வெர்ஷனில் 300 வாட் சார்ஜிங் டெஸ்ட் இது, " என குறிப்பிடப்பட்டு உள்ளது.
சீன சந்தையில் விற்பனை செய்யப்படும் ரெட்மி நோட் 12 டிஸ்கவரி எடிஷன் ரெட்மி பிராண்டின் அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கிறது. இதனுடன் இணைக்கப்பட்டு இருக்கும் வீடியோவில் ரெட்மி போன் 300 வாட் வயர்டு சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இது ஸ்மார்ட்போனினை 10 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 43 நொடிகளையே எடுத்துக் கொள்கிறது. இந்த சார்ஜருடன் வரும் அடாப்டரில் இரண்சு GaN தொழில்நுட்பங்கள் உள்ளன. மேலும் இதில் 50-க்கும் அதிக பாதுகாப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாக ரெட்மி தெரிவித்து இருக்கிறது. 300 வாட் சார்ஜர் என்ற போதிலும், வீடியோவில் இது அதிகபட்சமாக 290 வாட் அளவையே எட்டி இருக்கிறது.
புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் ரியல்மி சமீபத்தில் அறிமுகம் செய்த ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. 240வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ரியல்மி GT3 ஸ்மார்ட்போன் பத்து நிமிடங்களுக்குள் முழு சார்ஜ் ஆகிவிடும்.
- ரியல்மி நிறுவனம் தனது புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டை அதிகாரப்பூர்வாக உறுதிப்படுத்தி இருக்கிறது.
- புதிய ரியல்மி C55 ஸ்மார்ட்போன் 256 ஜிபி மெமரி, மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர் கொண்டிருக்கிறது.
ரியல்மி C55 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும். இது ஐபோன் 14 போன்ற டைனமிக் ஐலேண்ட் அம்சம் கொண்டிருக்கும் முதல் ரியல்மி ஸ்மார்ட்போன் ஆகும். சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போனின் அன்பாக்சிங் வீடியோ இணையத்தில் வெளியாகி இருந்தது. அதில் ஸ்மார்ட்போனின் முழு டிசைன் மற்றும் அம்சங்கள் தெரியவந்தது.
இந்த நிலையில், ரியல்மி C55 ஸ்மார்ட்போன் டீசர் அந்நிறுவன சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு இருக்கிறது. ரியல்மி C55 முதல் டீசரை ரியல்மி துணை தலைவர் பகிர்ந்து இருந்தார். இதில் ஸ்மார்ட்போன் சன்ஷவர் நிறம் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுதவிர டிப்ஸ்டர் பரஸ் குக்லானி வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ரியல்மி C55 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மார்ச் 7 ஆம் தேதி அறிமுகமாகும் என்றும் விற்பனை மார்ச் 8 ஆம் தேதி துவங்கும் என்றும் தெரிவித்து இருந்தார். அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
ரியல்மி C55 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
ரியல்மி C55 ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் FHD+ IPS LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வேரியண்டும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 4ஜி, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.
- விவோ நிறுவனத்தின் புதிய V சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்.
- புதிய V சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு அசத்தலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது V27, V27 ப்ரோ என இரண்டு புதிய V சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. புதிய V27 மற்றும் V27 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் 6.78 இன்ச் FHD+ 120Hz வளைந்த AMOLED ஸ்கிரீன், 50MP ஆட்டோஃபோக்கஸ் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக விவோ V27 இருக்கிறது. இதன் ப்ரோ வெர்ஷன் டிமென்சிட்டி 8200 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் மேஜிக் புளூ நித்தில் போட்டோக்ரோமிக் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது நிறத்தை டார்க் புளுவாக மாற்றுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 19 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும்.
விவோ V27 மற்றும் V27 ப்ரோ அம்சங்கள்:
6.78 இன்ச் 2400x1080 பிக்சல் FHD AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
விவோ V27 - மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர், மாலி G610 MC4 GPU
விவோ V27 ப்ரோ - மீடியாடெக் டிமென்சிட்டி 8200 பிராசஸர், மாலி G610 MC6 GPU
8 ஜிபி ரேம், 128 ஜிபி, 256 ஜிபி மெமரி
12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ கேமரா
50MP ஆட்டோஃபோக்கஸ் செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
4600 எம்ஏஹெச் பேட்டரி
66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
விவோ V27 மற்றும் V27 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் நோபில் பிளாக் மற்றும் மேஜிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் விவோ V27 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 36 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மார்ச் 23 ஆம் தேதி துவங்குகிறது.
விவோ V27 ப்ரோ 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 37 ஆயிரத்து 999 எ்றும், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 42 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை மார்ச் 6 ஆம் தேதி துவங்குகிறது.
அறிமுக சலுகை விவரங்கள்:
ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, கோடக் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ஆன்லைனில் ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி, ஆஃப்லைனில் ரூ. 3 ஆயிரத்து 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
பழைய ஸ்மார்ட்போன்களை விவோ இ ஸ்டோரில் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 2 ஆயிரத்து 500 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஆஃப்லைனில் V ஷீல்டு டிவைஸ் ப்ரோடெக்ஷன் வாங்கும் போது அதிகபட்சம் 40 சதவீதம் வரை தள்ளுபடி.
விவோ V27 ப்ரோ மாடலை ஆஃப்லைனில் வாங்குவோர் விவோ ட்ரூ வயர்லெஸ் ஏர் மாடலை வாங்கும் போது ரூ. 1000 தள்ளுபடி கிடைக்கும்.
- நத்திங் நிறுவனம் கடந்த ஆண்டு தனது முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
- இந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என உறுதியாகி இருக்கிறது.
நத்திங் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்கி வருவதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் தெரிவித்து இருக்கிறார். மேலும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நத்திங் போன் (1) மாடலை விட பிரீமியம் அம்சங்களை கொண்டிருக்கும் என அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் நத்திங் போன் (2) மாடல் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கும் என கார்ல் பெய் தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. நத்திங் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நத்திங் போன் (1) மாடலில் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் வழங்கப்பட்டது.

நத்திங் போன் (2) மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1, ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 2 பிராசஸர் அல்லது முற்றிலும் புதிய 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். எனினும், 8 சீரிஸ் பிராசஸர் என்பதால் நத்திங் போன் (2) மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
நத்திங் போன் (2) எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
நத்திங் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், சமீபத்தில் இணையத்தில் லீக் ஆன தகவல்களில் நத்திங் போன் A065 மாடல் நம்பர் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம், விர்ச்சுவல் ரேம், 256 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 120Hz AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.
புதிய நத்திங் போன் (2) மாடல் இந்த ஆண்டு மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து இந்த ஆண்டில் இருந்து அமெரிக்க சந்தையில் கவனம் செலுத்த நத்திங் திட்டமிட்டுள்ளதாக கார்ல் பெய் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
- ரியல்மி நிறுவனத்தின் புதிய GT3 ஸ்மார்ட்போன் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
- ரியல்மி GT3 மாடலில் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.
ரியல்மி நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி GT3 ஸ்மார்ட்போனினை GT சீரிசில் புதிய ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் அறிமுகம் செய்தது. புதிய ரியல்மி GT3 மாடலில் 6.7 இன்ச் 144Hz 1.5K ஃபிளாட் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் இதில் பல்ஸ் இண்டர்ஃபேஸ் ஆர்ஜிபி சிஸ்டம், டிரான்ஸ்பேரண்ட் டிசைன், 25 நிறஙகள், 2 ரிதம், 5 ஸ்பீடு மாடல்கள், நோட்டிஃபிகேஷன்களுக்கு கஸ்டம் செட்டிங்ஸ், லோ பேட்டரி மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் மேட் ஏஜி கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, டர்போ ரா லாஸ்லெஸ் இமேஜ் அல்காரிதம், ஸ்டிரீட் ஷூட்டிங் மோட் 3.0, மைக்ரோஸ்கோப் லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ரா வைடு கேமரா கொண்டுள்ளது. 4600 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரியல்மி GT3 ஸ்மார்ட்போன் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
ரியல்மி GT3 அம்சங்கள்:
6.74 இன்ச் 2772x1240 பிக்சல் 40Hz-144Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 பிராசஸர்
அட்ரினோ நெக்ஸ்ட் ஜென் GPU
8 ஜிபி, 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம்
128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி மெமரி
ஆண்ட்ரய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, OIS
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP பெரிஸ்கோப் லென்ஸ்
16MP செல்ஃபி கேமரா
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.2
யுஎஸ்பி டைப் சி
4600 எம்ஏஹெச் பேட்டரி
240 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரியல்மி GT3 ஸ்மார்ட்போன் பூஸ்டர் பிளாக் மற்றும் பல்ஸ் வைட் நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை இந்கிய மதிப்பில் ரூ. 53 ஆயிரத்து 605 என துவங்குகிறது.
- போல்ட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது.
- புதிய போல்ட் ஸ்மார்ட்வாட்ச்-இல் 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள், சிலிகான் ஸ்டிராப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
போல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச்- போல்ட் ஸ்டிரைக்கர் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போல்ட் ஸ்டிரைக்கர் மாடலில் 1.3 இன்ச் HD டிஸ்ப்ளே, வட்ட வடிவ டயல், சிலிகான் ஸ்டிராப் மற்றும் 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன.
முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் போல்ட் ஸ்டிரைக்கர் ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டண்ட், பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் 100-க்கும் அதிக வொர்க் அவுட் மோட்கள், 24x7 இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டரிங், ரத்த அழுத்தத்தை மாணிட்டர் செய்யும் வசதி என ஏராளமான அம்சங்கள் உள்ளன.

போல்ட் ஸ்டிரைக்கர் அம்சங்கள்:
1.3 இன்ச் HD IPS LCD ஸ்கிரீன்
150-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள்
ப்ளூடூத் 5.1
ப்ளூடூத் காலிங்
பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர்
100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
ஹெல்த் மாணிட்டரிங்
IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
போல்ட் ஸ்டிரைக்கர் ஸ்மார்ட்வாட்ச் கிரீம், புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை போல்ட் அதிகாரப்பூர்வ வலைத்தளம், ஃப்ளிப்கார்ட்-இல் நடைபெறுகிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 1499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- டெக்னோ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 7.85 இன்ச் 2K+ ஃபோல்டபில் ஸ்கிரீன் கொண்டுள்ளது.
- இதில் 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP டெலிபோட்டோ கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்- டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு மாடலில் 7.85 இன்ச் 2K+ ஃபோல்டபில் 10-120Hz LTPO AMOLED ஸ்கிரீன் மற்றும் 6.42 இன்ச் 1080p 120Hz-10-120Hz LTPO AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதல் ஏரோஸ்பேஸ் தர புதுமைமிக்க டிராப்-வடிவ ஹின்ஜ் மற்றும் பிரத்யேகமாக ஃபிக்சட் ஆக்சிஸ் ரோடேட் மற்றும் ஸ்லைடு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ரிவர்ஸ் ஸ்னாப் ஸ்டிரக்ச்சர் மடிக்கும் அனுபவத்தை சிரமம் அற்றதாகவும், கிரீஸ் அற்றதாகவும் மாற்றுகிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் தரம் சுமார் இரண்டு லட்சம் முறைக்கும் அதிகமாக பரிசோதனை செய்யப்பட்டதாக டெக்னோ அறிவித்துள்ளது.

இதில் உள்ள மைக்ரோ-கர்வ்டு இரண்டாவது ஸ்கிரீன் ஸ்மார்ட்போனினை வைத்துக்கொள்ள எளிமையாக்குகிறது. இதன் பிளாக் நிறம் சருமத்திற்கு எந்தவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாத லெதர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள வைட் நிறம் மறுசுழற்சி செய்யப்பட்ட பசுமை சிலிகான் லெசர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000+ பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஹை ஒஎஸ்- ஃபோல்டு மற்றும் ஸ்ப்லிட் ஸ்கிரீன், பேரலல் விண்டோஸ் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்கிரீனுக்கு ஏற்ப ஆப்டிமைஸ் செய்யப்பட்டு இருக்கிறது.
டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு 5ஜி அம்சங்கள்:
7.65 இன்ச் 2296x2000 பிக்சல் 2K+ 10-120Hz LTPO AMOLED மடிக்கக்கூடிய ஸ்கிரீன்
6.42 இன்ச் 1080x2550 ிக்சல் FHD+ 10-120Hz LTPO AMOLED வெளிப்புற டிஸ்ப்ளே
3.2GHz ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர்
மாலி G710 MC10 GPU
8 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஹை ஒஎஸ் 13 ஃபோல்டு
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
13MP அல்ட்ரா வைடு கேமரா
50MP போர்டிரெயிட் டெலிபோட்டோ கேமரா
32MP வெளிப்புற / 16 MP உள்புற செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு 5ஜி மாடல் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 99 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் துவங்குகிறது.
- பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளை அதிரடியாக மாற்றியமைத்து இருக்கிறது.
- இந்திய சந்தையில் 4ஜி சேவையை வெளியிடும் பணிகளில் பிஎஸ்என்எல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் தனியார் நிறுவனங்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் பிஎஸ்என்எல் தனது சலுகை பலன்களை மாற்றியமைத்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 71, ரூ. 104, ரூ. 135 மற்றும் ரூ. 395 விலை சலுகைகளை நீக்கி இருக்கிறது. அதிக பிரபலமாக இல்லாதது மற்றும் எதிர்பார்த்த பலன் கிடைக்காத காரணத்தால் நான்கு சலுகைகளும் நீக்கப்பட்டுள்ளன.
நீக்கப்பட்ட சலுகைகளுக்கு மாற்றாக புதிய திட்டங்களை விரைவில் பிஎஸ்என்எல் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம். பிஎஸ்என்எல் நிறுவனம் இந்திய சந்தையில் 4ஜி சேவையை இந்த ஆண்டும், 5ஜி சேவையை அடுத்த ஆண்டும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. புதிய நெட்வொர்க் அறிமுகம் செய்யப்படும் போது இவ்வாறு செய்வது சிறப்பானதாக இருக்கும்.

பிஎஸ்என்எல் ரூ. 269 மற்றும் ரூ. 768 சலுகை விவரங்கள்:
பிஎஸ்என்எல் புதிய ரூ. 269 மற்றும் ரூ. 769 சலுகைகள் ஃபெஸ்டிவல் தமாகா ஆஃபரின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பிஎஸ்என்எல் ரூ. 269 சலுகையில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் டியூன்ஸ், சிங் ஆப் சந்தா, இரோஸ் நௌ சந்தா மற்றும் பல்வேறு பலன்கள் வழங்கப்படுகின்றன.
பிஎஸ்என்எல் ரூ. 769 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, பிஎஸ்என்எல் டியூன்ஸ், தினமும் 100 எஸ்எம்எஸ், லாக்துன் செயலிக்கான சந்தா, சிங் ஆப் சந்தா, இரோஸ் நௌ சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த சலகையின் வேலிடிட்டு 90 நாட்கள் ஆகும்.
- ஹானர் பிராண்டின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய ஹானர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் மேஜிக் Vs மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் 7.9 இன்ச் FHD+ 90Hz OLED மடிக்கக்கூடிய உள்புற ஸ்கிரீன், வெளிப்புறம் 6.45 இன்ச் FHD+ 120Hz AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.
இதில் உள்ள டைமிக் டிம்மிங், சர்கடியன் நைட் டிஸ்ப்ளே புளூ லைட் பாதிப்புகளை சிறப்பாக எதிர்கொள்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் இரண்டு ஸ்கிரீன்களிலும் 1920Hz PWM டிம்மிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்கிரீன் ஃப்ளிக்கர் ஆவதை குறைக்கிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு சார்ந்த மேஜிக்ஒஎஸ் 7.1 வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹானர் மேஜிக் Vs அம்சங்கள்:
7.9 இன்ச் 2272x1984 பிக்சல் FHD+ OLED 10.3:9 டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
6.45 இன்ச் 2560x1080 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்
அட்ரினோ நெக்ஸ்ட் ஜென் GPU
12 ஜிபி ரேம்
512 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக் யுஐ 7.1
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
50MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன்
16MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
யுஎஸ்பி 3.1 டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை விவரங்கள்:
ஹானர் மேஜிக் Vs மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சியான் மற்றும் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1599 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 865 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- சியோமி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.
- சர்வதேச சந்தையில் சியோமி 13 ப்ரோ விலை இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 13 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய சியோமி 13 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய சியோமி 13 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் 2K ஃபிளெக்சிபில் E6 AMOLED LTPO ஸ்கிரீன், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், பெரிய VC லிக்விட் கூலிங் வசதி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 50MP டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள கேமரா சிஸ்டம் லெய்கா ஆப்டிக்ஸ் பிராண்டிங் கொண்டுள்ளன.

4820 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் சியோமி 13 ப்ரோ 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
சியோமி 13 ப்ரோ அம்சங்கள்:
6.73 இன்ச் 3200x1440 பிக்சல் QHD+ E6 AMOLED, 120Hz டிஸ்ப்ளே டால்பி விஷன்
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் அட்ரினோ 740 GPU
12 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி
டூயல் சிம்
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14
50MP பிரைமரி கேமரா
50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
50MP டெலிபோட்டோ கேமரா
32MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
4820 எம்ஏஹெச் பேட்டரி
120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
இந்திய சந்தையில் சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய சியோமி 13 ப்ரோ வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ. 23 ஆயிரம் வரை எக்சேன்ஜ் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் கூடுதல் எக்சேன்ஜ் போனஸ் ரூ. 8 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் சியோமி 13 ப்ரோ முதல் விற்பனை மார்ச் 10 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. இதே ஸ்மார்ட்போனிற்கு விசேஷ விற்பனை மார்ச் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. சியோமி பயனர்களுக்கு புதிய சியோமி 13 ப்ரோ வாங்கும் போது அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் ரோது ரூ. 10 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விலை அறிவித்ததோடு சியோமி நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் சியோமி 12 ப்ரோ 5ஜி மாடலுக்கு விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. விலை குறைப்பின்படி சியோமி 12 ப்ரோ 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 52 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 56 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.






