விவோ நிறுவனத்தின் புதிய TWS ஏர் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய V சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பபிள் வைட் மற்றும் பெபில் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
விவோ நிறுவனத்தின் புதிய TWS ஏர் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்
Published on

விவோ நிறுவனம் புதிய விவோ TWS ஏர் ஏர் இயர்பட்ஸ்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.2, AAC கோடெக், 14.2mm டைனமிக் டிரைவர்கள், 117ms லோ லேடன்சி கேமிங் வசதியை கொண்டிருக்கிறது. இதில் உள்ள டீப்X 2.0 விவோ கோல்டன் இயர் அகௌஸ்டிக்ஸ் லேப்- இல் டியூன் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 25 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இதில் உள்ள டூயல் மைக்ரோபோன்கள் AI கால் நாய்ஸ் ரிடக்ஷன் அல்காரிதம், L வடிவ ஆண்டி-விண்ட் நாய்ஸ் டக்ட்கள் காற்றின் சத்ததையும் கண்டறிந்து தடுக்கிறது.

விவோ TWS ஏர் இயர்பட்ஸ் அம்சங்கள்:

கூகுள் ஃபாஸ்ட் பேர் மற்றும் AAC கோடெக் சாதனங்களுடன் கன்கெட் ஆக ப்ளூடூத் 5.2

கஸ்டம் 14.2mm டைனமிக் டிரைவர்கள், பயோ கார்பன் ஃபைபர் கம்போசிட் டயஃப்ராம்

117ms லோ லேடன்சி கேமிங்

டூயல் மைக்ரோபோன்கள், AI கால் நாய்ஸ் ரிடக்ஷன் அல்காரிதம்

L வடிவ ஆண்டி விண்ட் டக்ட்கள்

வாட்டர் ரெசிஸ்டண்ட் IP54

இயர்பட்களில் 29 எம்ஏஹெச் பேட்டரி - அதிகபட்சம் 4.8 மணி நேர பிளேபேக்

430 எம்ஏஹெச் பேட்டரி - அதிகபட்சம் 25 மணி நேர பிளேபேக்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

புதிய விவோ TWS ஏர் இயர்போன் பபுள் வைட் மற்றும் பபுள் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை விவோ ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com