search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    அசத்தல் அம்சங்களுடன் புதிய Foldable ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த ஹானர்
    X

    அசத்தல் அம்சங்களுடன் புதிய Foldable ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த ஹானர்

    • ஹானர் பிராண்டின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய ஹானர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் மேஜிக் Vs மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் 7.9 இன்ச் FHD+ 90Hz OLED மடிக்கக்கூடிய உள்புற ஸ்கிரீன், வெளிப்புறம் 6.45 இன்ச் FHD+ 120Hz AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.

    இதில் உள்ள டைமிக் டிம்மிங், சர்கடியன் நைட் டிஸ்ப்ளே புளூ லைட் பாதிப்புகளை சிறப்பாக எதிர்கொள்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் இரண்டு ஸ்கிரீன்களிலும் 1920Hz PWM டிம்மிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்கிரீன் ஃப்ளிக்கர் ஆவதை குறைக்கிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு சார்ந்த மேஜிக்ஒஎஸ் 7.1 வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹானர் மேஜிக் Vs அம்சங்கள்:

    7.9 இன்ச் 2272x1984 பிக்சல் FHD+ OLED 10.3:9 டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    6.45 இன்ச் 2560x1080 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்

    அட்ரினோ நெக்ஸ்ட் ஜென் GPU

    12 ஜிபி ரேம்

    512 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக் யுஐ 7.1

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    50MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன்

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி 3.1 டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை விவரங்கள்:

    ஹானர் மேஜிக் Vs மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சியான் மற்றும் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1599 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 865 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    Next Story
    ×