search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் சிப்செட் உடன் அறிமுகமாகும் நத்திங் போன் (2)
    X

    ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் சிப்செட் உடன் அறிமுகமாகும் நத்திங் போன் (2)

    • நத்திங் நிறுவனம் கடந்த ஆண்டு தனது முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
    • இந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என உறுதியாகி இருக்கிறது.

    நத்திங் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்கி வருவதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் தெரிவித்து இருக்கிறார். மேலும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நத்திங் போன் (1) மாடலை விட பிரீமியம் அம்சங்களை கொண்டிருக்கும் என அவர் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் நத்திங் போன் (2) மாடல் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கும் என கார்ல் பெய் தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. நத்திங் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நத்திங் போன் (1) மாடலில் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் வழங்கப்பட்டது.

    நத்திங் போன் (2) மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1, ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 2 பிராசஸர் அல்லது முற்றிலும் புதிய 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். எனினும், 8 சீரிஸ் பிராசஸர் என்பதால் நத்திங் போன் (2) மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    நத்திங் போன் (2) எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    நத்திங் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், சமீபத்தில் இணையத்தில் லீக் ஆன தகவல்களில் நத்திங் போன் A065 மாடல் நம்பர் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம், விர்ச்சுவல் ரேம், 256 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 120Hz AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.

    புதிய நத்திங் போன் (2) மாடல் இந்த ஆண்டு மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து இந்த ஆண்டில் இருந்து அமெரிக்க சந்தையில் கவனம் செலுத்த நத்திங் திட்டமிட்டுள்ளதாக கார்ல் பெய் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    Next Story
    ×