என் மலர்
தொழில்நுட்பம்
- போக்கோ நிறுவனத்தின் புதிய F5 சீரிஸ் ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- புதிய F5 சீரிசில் போக்கோ F5 5ஜி மற்றும் F5 ப்ரோ 5ஜி என இரு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது.
போக்கோ நிறுவனம் சர்வதேச சந்தையில் போக்கோ F5 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய போக்கோ F5 சீரிசில் போக்கோ F5 5ஜி மற்றும் போக்கோ F5 ப்ரோ 5ஜி என இரு மாடல்கள் இடம்பெற்று இருக்கிறது. இரு மாடல்களும் இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.
அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பாகவே போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் FCC சான்றளிக்கும் வலைத்தளத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதில் புதிய ஸ்மார்ட்போன் தகவல்கள் இடம்பெற்று இருக்கின்றன. FCC வலைத்தள விவரங்களின் படி போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போன் 23049PCD8G எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

சான்று பெற்று இருப்பதை அடுத்து புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். FCC வலைத்தள விவரங்களின் படி போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போன் மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இத்துடன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் டாப் எண்ட் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. புதிய போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14, என்எஃப்சி, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத், டூயல் சிம், ஏழு 5ஜி பேண்ட்கள், IR பிளாஸ்டர் வழங்கப்படுகிறது.

போக்கோ F5 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போன், விரைவில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ரெட்மி நோட் 12 டர்போ மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் என கூறப்படுகிறது. இதில் 6.67 இன்ச் FHD+ AMOLED பேனல், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் பிராசஸர், 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP+2MP லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
- ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மேக்புக் ஏர் விவரங்கள் வெளியாகி உள்ளது.
- புதிய 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலில் ஆப்பிள் M3 சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய மேக்புக் ஏர் மாடலை இருவித அளவுகளில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. புதிய மாடல் 13 இன்ச் மற்றும் 15 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் என தெரிகிறது. இரு மாடல்களிலும் முற்றிலும் புதிய M3 சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
பிரபல ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மன், குறைந்தபட்சம் புதிய 13 இன்ச் மேக்புக் ஏர் மாடலில் இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கும் M3 சிப்செட் வழங்கப்படலாம் என தெரிவித்து இருக்கிறது. புதிய M3 சிப்செட் TSMC-யின் அதிநவீன 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

13 இன்ச் போன்றே புதிய 15 இன்ச் மாடலிலும் M3 சிப்செட் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த ஆண்டு கோடை கால வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய 15 இன்ச் மாடலில் M2 சிப்செட் வழங்கப்படும் என்றும் இது விசேஷமாக இருக்கும் என மார்க் குர்மன் தெரிவித்து இருக்கிறார். டிஸ்ப்ளே பிரிவு வல்லுனரான ராஸ் யங் சமீபத்தில் வெளியிட்ட தகவல்களில் ஆப்பிள் வினியோக பிரிவு சார்பில் புதிய 15.5 இன்ச் மேக்புக் ஏர் மாடலுக்கான டிஸ்ப்ளே உற்பத்தி துவங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதுதவிர ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களை புதிதாக மஞ்சள் நிறத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக 201 வாக்கில் வெளியிடப்பட்ட ஐபோன் 11 மற்றும் 2018 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் XR போன்ற மாடல்கள் மஞ்சள் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.
- விவோ நிறுவனத்தின் சமீபத்திய விவோ V27 ப்ரோ ஸ்மார்ட்போன் மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- புதிய ஸ்மார்ட்போனின் விற்பனைக்கு முன் இதற்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வந்தது.
விவோ நிறுவனம் இந்த மாதத்தின் முதல் நாளன்று விவோ V27 மற்றும் V27 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விவோ V27 மாடலின் விற்பனை மார்ச் 23 ஆம் தேதி துவங்கும் என விவோ ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில், விவோ V27 ப்ரோ இந்திய விற்பனை துவங்கி இருக்கிறது.
புதிய விவோ V27 ப்ரோ ப்ளிப்கார்ட், விவோ இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது. 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் விவோ V27 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 37 ஆயிரத்து 999 என துவங்குகிறது.

விலை மற்றும் சலுகை விவரங்கள்:
விவோ V27 ப்ரோ 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 37 ஆயிரத்து 999
விவோ V27 ப்ரோ 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 39 ஆயிரத்து 999
விவோ V27 ப்ரோ 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 42 ஆயிரத்து 999
புதிய விவோ V27 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு மார்ச் 1 ஆம் தேதி துவங்கிய நிலையில், இதன் விற்பனை தற்போது துவங்கி இருக்கிறது. விவோ V27 ப்ரோ ஸ்மார்ட்போன் நோபிள் பிளாக் மற்றும் மேஜிக் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. ஆன்லைனில் விவோ V27 ப்ரோ வாங்குவோர் ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இத்துடன் ஆஃப்லைனில் விவோ V27 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐசிஐசிஐ, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஹெச்டிபி நிதி சேவைகளை பயன்படுத்தும் பட்சத்தில் ரூ. 3 ஆயிரத்து 500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

விவோ V27 ப்ரோ அம்சங்கள்:
6.78 இன்ச் 2400x1080 பிக்சல் FHD AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் டிமென்சிட்டி 8200 பிராசஸர், மாலி G610 MC6 GPU
8 ஜிபி ரேம், 128 ஜிபி, 256 ஜிபி மெமரி
12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ கேமரா
50MP ஆட்டோஃபோக்கஸ் செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
4600 எம்ஏஹெச் பேட்டரி
66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- இன்ஃபினிகஸ் நிறுவனம் 260 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை தண்டர் சார்ஜ் என இன்ஃபினிக்ஸ் அழைக்கிறது.
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது ரியல்மி GT3 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்-ஐ விட அதிவேகமானது ஆகும். இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது 260 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை மார்ச் 9 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.
புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்படுமா அல்லது ஏற்கனவே அந்நிறுவனம் அறிமுகம் செய்த இன்ஃபினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா மாடலின் மாடிஃபைடு வெர்ஷனில் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், இந்த ஆண்டு இறுதிக்குள் இன்ஃபினிக்ஸ் நிறுவனம் 260 வாட் சார்ஜர் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து விடும் என்றே தெரிகிறது.

இதுதவிர இன்ஃபினிக்ஸ் நிறுவனம் 100 வாட் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் உருவாக்கி வருகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் அருகில் சார்ஜர் இடம்பெற்று இருக்கிறது. இதில் உள்ள ஸ்மார்ட்போன் 180 வாட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமான இன்ஃபினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய 260 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் சிஸ்டத்தில் நான்கு-வழி 100 வாட் சார்ஜ் பம்ப் மற்றும் AHB சர்கியூட் ஆர்கிடெக்ச்சர் மற்றும் சேஃப் சார்ஜிங் கண்ட்ரோல் இடம்பெற்று இருக்கும்.
புதிய தொழில்நுட்பம் பற்றிய இதர விவரங்கள் மார்ச் 9 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. மேலும் இந்த வசதி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இதுதவிர இன்ஃபினிக்ஸ் உருவாக்கி வருவதாக கூறப்படும் 100 வாட் வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டத்தில் கஸ்டம் காயில் டிசைன் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது.
Photo Courtesy: GSMArena
- போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் HD ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் கொண்டிருக்கிறது.
- இதில் உள்ள ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், உடல்நல விவரங்களை அறிந்து கொள்ளவும் உதவும்.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக வேவ் ஃப்ளெக்ஸ் கனெக்ட் பெயரில் ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் அழகிய மெட்டாலிக் டிசைன், மென்மையான, சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத சிலிகான் ஸ்டிராப்களை கொண்டிருக்கிறது. மேலும் இதன் சிலிகான் ஸ்டிராப்கள் பல்வேறு நிறங்களில் கிடைக்கின்றன.
இத்துடன் 1.83 இன்ச் 2.5D HD 240x280 பிக்சல் டிஸ்ப்ளே, 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட புதிய போட் ஃப்ளெக்ஸ் கனெக்ட் HD ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் கொண்டுள்ளது. இதில் அதிகபட்சம் பத்து காண்டாக்ட்களை ஸ்டோர் செய்து கொள்ள முடியும். முழு சார்ஜ் செய்தால் இந்த ஸ்மார்ட்வாட்ச் பத்து நாட்களுக்கு தேவையான பேக்கப் வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச்-ஐ இரண்டு மணி நேரங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். இத்துடன் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இதில் ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள செய்வதோடு, உடல்நல விவரங்களையும் அறிந்து கொள்ள செய்கிறது. இத்துடன் கிரிக்கெட் ஸ்கோர், வானிலை விவரங்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
போட் வேவ் ஃப்ளெக்ஸ் கனெக்ட் அம்சங்கள்:
1.83 இன்ச் HD 2.5D வளைந்த டிஸ்ப்ளே
பிரீமியம் மெட்டல் டிசைன்
சருமத்திற்கு உகந்த சிலிகான் ஸ்டிராப்கள்
பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர்
பில்ட்-இன் வாட்ச் ஃபேஸ், 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்
10-க்கும் அதிக ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் மோட்கள்
ஹார்ட் ரேட், SpO2, ஆக்டிவிட்டி டிராக்கர்
ஸ்லீப் மற்றும் செடண்டரி அலெர்ட்கள்
IP68 டஸ்ட், ஸ்வெட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
240 எம்ஏஹெச் பேட்டரி, பத்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப்
ஸ்மார்ட் அலெர்ட்கள்
ஒரு வருட வாரண்டி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய போட் வேவ் ஃப்ளெக்ஸ் கனெக்ட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுக சலுகையாக ரூ. 1499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை போட் மற்றும் ப்ளிப்கார்ட் வலைத்தளங்களில் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆக்டிவ் பிளாக், செர்ரி பிளாசம் மற்றும் டீப் புளூ என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
- ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டு முழுக்க ரூ. 10 ஆயிரத்தில் துவங்கி ரூ. 30 ஆயிரம் பட்ஜெட் பிரிவில் கவனம் செலுத்த இருக்கிறது.
- சமீபத்தில் ரியல்மி நிறுவனம் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருந்தது.
ரியல்மி நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் அதிவேக சார்ஜிங் வசதி கொண்ட சாதனத்தை அறிமுகம் செய்தது. ரியல்மியின் புதிய GT3 ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டிருந்தது. இது ஸ்மார்ட்போனினை 9 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.
சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வை ஒட்டி ரியல்மி இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் 2023 ஆண்டிற்கான ரியல்மி நிறுவனத்தின் திட்டங்கள், மடிக்கக்கூடிய சாதனங்கள், க்ரோம்புக் மற்றும் கேமிங் போன்கள் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான திட்டமிடல் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த மாதவ் சேத், இந்திய சந்தையில் ரூ. 10 ஆயிரம் துவங்கி அதிகபட்சம் ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பிரிவில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்தார்.
"ரூ. 10 ஆயிரம் துவங்கி ரூ. 30 ஆயிரம் விலையில் கிடைக்கும் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்மார்ட்போன்களை மாற்றும் வழக்கம் பல்வேறு காரணங்களால் உயர்ந்து வருகிறது. மேலும் அனைவராலும் வாங்கும் நிலை தற்போது அதிகரித்து இருக்கிறது. பலரும் வாங்கும் நிலைக்கு வந்திருப்பதால், பெரும்பாலான இளைஞர்கள் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை வாங்க நினைக்கின்றனர். இதன் காரணமாக இந்த பிரிவு ஸ்மார்ட்போன்களை மாற்றும் வழக்கம் 14-இல் இருந்து 15 மாதங்கள் வரை உயர்ந்து இருக்கிறது," என மாதவ் சேத் தெரிவித்து இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த மாதவ் சேத், "மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு மிகவும் குறைவு, நான் சில ப்ரோடோடைப்களை முயற்சித்து இருக்கிறேன். பயன்பாடு மிகவும் குறைவு என்பதால் பெரும்பாலும் நான் அவற்றை திறந்ததே இல்லை. ஏனெனில் அது நமக்கு தேவையில்லை.
இது உண்மையில் வித்தியாசமான ஒன்று தான், கையில் வைத்திருக்கவும் நன்றாக இருக்கிறது, நண்பர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தும் சாதனமாக இருக்கிறது, ஆனாலும் இது உண்மையில் பயன்படுத்த நன்றாக இருக்கிறதா? இல்லை," என தெரிவித்தார்.
"மக்கள் ஃப்ளிப் ரக மாடல்களை பயன்படுத்தவே விரும்புவர், இது ஒருவித பழமையான அனுபவத்தை நினைவூட்டுகிறது. நான் இதுகுறித்து பலரிடம் பேசியிருக்கிறேன். பெரும்பாலானோர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் வித்தியாசப்படுத்தும் சாதனம் என்றே கருதுகின்றனர்," என்று அவர் மேலும் தெரிவித்தார். இதுதவிர ரியல்மி சிஇஒ மேலும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
Source: Techlusive
- சியோமி நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்கள் மிக்ஸ் ஃபோல்டூ சீரிஸ் பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன.
- சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய சியோமி 13 அல்ட்ரா அந்நிறுவனத்தின் டாப் எண்ட் ஸ்மார்ட்போனாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் சர்வதேச சந்தையிலும் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சியோமி நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 2023 ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் சியோமி நிறுவனம் தனது சியோமி மிக்ஸ் ஃபோல்டு 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருந்தது. தற்போது டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் மிக்ஸ் ஃபோல்டு 3 ஸ்மார்ட்போன் வெளியீடு அதன் முந்தைய வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்ட மாதத்திலேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே பிப்ரவரி மாத வாக்கில் வெளியான தகவல்களின் படி சியோமியின் அடுத்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் யுஎஸ்பி 3.2 போர்ட் கொண்டிருக்கும் என்றும் இதில் அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5X ரேம், 512 ஜிபி அல்லது 1 டிபி UFS 4.0 மெமரி வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் உண்மையில் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகமாகும் பட்சத்தில் இது பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகும்.
சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மிக்ஸ் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனில் 8.02 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 1914x2160 பிக்சல், 120Hz ரிப்ரெஷ் ரேட், வெளிப்புறம் 6.56 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 1080x2520 பிக்சல், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 12 ஜிபி ரேம், அதிகபட்சம் 1 டிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
4500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மிக்ஸ் ஃபோல்டு 2 மாடலில் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 13MP அல்ட்ரா வைடு லென்ஸ், 8MP டெலிபோட்டோ லென்ஸ், 20MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
- மோட்டோரோலா நிறுவனம் 2023 ரேசர் ஸ்மார்ட்போன் உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்தி இருக்கிறது.
- புதிய மோட்டோ ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் அதன் முந்தைய மாடலை விட சிறப்பானதாக இருக்கும்.
2023 மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்படுவதை லெனோனோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்களுடன், சிறப்பாக உருவாக்கப்பட்டு இருக்கும். மோட்டோரோலா இதுபோன்ற மாடலை உருவாக்கி வருவதாக ஏற்கனவே பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது.
அந்த வரிசையில் தற்போது இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் லீக் ஆகி இருக்கிறது. இதுதுவிர புதிய மாடல் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற விவரங்களும் வெளியாகி உள்ளது. 2023 மோட்டோரோலா ரேசர் அம்சங்கள், டிசைன், வெளியீட்டு விவரம் பற்றி லெனோவோ சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷன்களை விட சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறது.

மற்ற சிறப்பம்சங்களை விட புதிய மாடலின் ஹின்ஜ் மற்றும் மடிக்கக்கூடிய டிசைனில் அதிகளவு மேம்படுத்தல்கள் இருக்கும் என கூறப்படுகிறது. விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால், 2022 மோட்டோரோலா ரேசர் மாடல் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்படுவது சந்தேகத்திற்குரிய விஷயம் தான் எனலாம். மேலும் 2023 ரேசர் மாடல் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலை விட சிறப்பானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய மாடலில் மற்றொரு முக்கிய அப்கிரேடு அதன் கவர் ஸ்கிரீன். 2023 ரேசர் மாடலில் 2.7 இன்ச் AMOLED பேனல் கொண்ட கவர் ஸ்கிரீன் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. ரேசர் மாடல் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் நிலையிலும், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் முன்னணியில் உள்ளது.
- சியோமி நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
- புதிய சியோமி ஸ்மார்ட் டிவி ஃபயர் டிவி ஒஎஸ் கொண்டிருக்கும் என டீசரில் தெரியவந்துள்ளது.
சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு F2-ஃபயர் டிவி மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இதுவரை சியோமி விற்பனை செய்தவைகளில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்டு டிவி மாடல்கள் ஆகும். இந்த நிலையில் சியோமி நிறுவனம் ஃபயர் டிவி மாடலை இந்திய சந்தையில் மார்ச் 14 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
புதிய ஸ்மார்ட் டிவி ஃபயர் ஒஎஸ் கொண்டிருக்கும் என சியோமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், ஸ்மார்ட் டிவி டீசரின் படி புதிய மாடல் ஃபயர் ஒஎஸ் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. சியோமியின் புதிய ஸ்மார்ட் டிவி அமேசான் மற்றும் சியோமி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

டீசரின் படி ஸ்மார்ட் டிவி-யின் யுஐ அமேசான் ஃபயர் ஸ்டிக் மற்றும் ஃபயர் ஸ்டிக் 4K-இல் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இவைதவிர புதிய ஸ்மார்ட் டிவி பற்றி சியோமி எந்த தகவலும் வழங்கவில்லை. வரும் நாட்களில் இதுபற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் மற்றொரு டீசரில் புதிய ஸ்மார்ட் டிவி மெல்லிய பெசல்கள், அதிக ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது.
ஃபயர் ஒஎஸ் டிவியை அறிமுகம் செய்தன் மூலம் சியோமி நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய அதிக ஆப்ஷன்களை வழங்க இருக்கிறது. ஏற்கனவே ஒனிடா, க்ரோமா, AKAI மற்றும் அமேசான் டிவிக்களில் ஃபயர் ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.
- விங்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 40 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.
- இந்த இயர்பட்ஸ் ENC, கேம் மோட், டச் கண்ட்ரோல் மற்றம் IPX5 சான்று பெற்றுள்ளது.
விங்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஃபேண்டம் 315 இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது. காதுகளில் சவுகரியத்தை ஏற்படுத்தும் டிசைன் கொண்ட பட்ஸ், நான்கு அழகிய நிறங்கள், நீண்ட பேக்கப் கொண்டிருக்கிறது. முன்னதாக ஃபேண்டம் 700 மாடல் இந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து புதிய ஃபேண்டம் 315 தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஃபேண்டம் 315 மாடல் எர்கோனோமிக் டிசைன், பிரீமியம் ஃபினிஷ் மற்றும் IPX5 ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இதில் உள்ள டச் இண்டர்ஃபேஸ் கொண்டு வால்யூம் மாற்றுவது, அழைப்புகளை மேற்கொள்வது, பாடல்களை மாற்றுவது, வாய்ஸ் அசிஸ்டண்ட் அழைப்புகள் மற்றும் கேம் மோடில் மேற்கொள்ள முடியும்.

புதிய இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் பத்து மணி நேர பேக்கப் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் உடன் சேர்க்கும் போது 40 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கும். இத்துடன் ஸ்பீடு சின்க், ஒபன் அண்ட் ஆன் கொண்ட ப்ளூடூத் 5.3, கேம் மோட், அல்ட்ரா லோ லேடன்சி ஆடியோ, 13mm ஹை ஃபிடிலிட்டி கம்போசிட் டிரைவர்கள், ENC மைக்குகளை கொண்டுள்ளன.
விங்ஸ் ஃபேண்டம் 315:
எர்கோனோமிக் டிசைன்
13mm ஹை ஃபிடிலிட்டி கம்போசிட் டிரைவர்
போல்டு பேஸ் தொழில்நுட்பம்
பிரத்யேக கேம் மோட்
ENC
டச் கண்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்டண்ட்
ப்ளூடூத் 5.3
40 மணி நேர பேக்கப்
டைப் சி புல்லட் ஃபாஸ்ட் சார்ஜ் வசதி
IPX5 வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட்
விங்ஸ் சின்க் ஆப் சப்போர்ட்
ஒரு வருட வாரண்டி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
விங்ஸ் ஃபேண்டம் 315 மாடல் குறுகிய காலக்கட்டத்திற்கு ரூ. 899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் கிரீன், ஆரஞ்சு, வைட் மற்றும் பிளாக் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை விங்ஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் நடைபெறுகிறது.
- மோட்டோரோலா நிறுவனத்தன் புதிய மோட்டோ G73 5ஜி ஸ்மார்ட்போன் டிமென்சிட்டி 930 பிராசஸர் கொண்டிருக்கிறது.
- டூயல் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட மோட்டோ G73 5ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
மோட்டோரோலா நிருவனத்தின் மோட்டோ G73 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் இதுவரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் மீடியாடெக் டிமென்சிட்டி 930 பிராசஸருடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ G63 5ஜி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய G73 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ப்ளிப்கார்ட் தளத்தில் உள்ள லேண்டிங் பேஜ் விவரங்களின் படி புதிய மோட்டோ G73 5ஜி ஸ்மார்ட்போன் அதன் சர்வதேச வேரியண்ட் போன்றே காட்சியளிக்கிறது. இந்தியாவில் மீடியாடெக் டிமென்சிட்டி 930 பிராசஸர் உடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் இது என லேண்டிங் தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டிமென்சிட்டி 930 பிராசஸர் எம்எம்வேவ் திறன் கொண்டுள்ளது. இது 6 நானோமீட்டர் முறையில் ஃபேப்ரிகேஷன் செய்யப்பட்ட பிராசஸர் ஆகும். இது அதிகபட்சம் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் கிளாக் வேகம் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
ப்ளிப்கார்ட் லேண்டிங் பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா சென்சார்கள் பற்றி அதிக விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி இந்த மாடலில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 6.5 இன்ச் FHD+ LCD பேனல், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் சப்போர்ட் உள்ளது.
- ஜியோ மற்றும் ஏர்டெல் சேவைகளின் எல்டிஇ வேகம் கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
- மீடியா டவுன்லோட் வேகம் 13.87Mbps-இல் இருந்து 29.85Mbps ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மீடியன் மொபைல் டவுன்லோட் வேகம் 115 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவைகள் வெளியீட்டை தொடர்ந்து மொபைல் டவுன்லோட் வேகம் திடீரென அதிகரிக்க துவங்கி இருக்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13.87Mbps ஆக இருந்த மொபைல் டவுன்லோட் வேகம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 29.85Mbps ஆக அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் மொபைல் டவுன்லோட் வேகம் பற்றிய தகவல்களை ஊக்லா ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் நெட்வொர்க் இண்டெலிஜன்ஸ் மற்றும் கனெக்டிவிட்டி பற்றி அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.
இதன் காரணமாக சர்வதேச ஸ்பீடு-டெஸ்ட் இண்டெக்ஸ்-இல் இந்தியா 49 இடங்கள் முன்னேறி தற்போது 69 ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 118 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 69 ஆவது இடத்திற்கு முன்னேரி இருக்கிறது. சர்வதேச ஸ்பீடு-டெஸ்ட் இண்டெக்ஸ்-இல் இந்தியாவின் வளர்ச்சி சில ஜி20 நாடுகளான மெக்சிகோ, ரஷ்யா மற்றும் அர்ஜெண்டினாவை விட அதிகரித்து இருக்கிறது.

ஆய்வு அறிக்கையின் படி 5ஜி சேவை வெளியீட்டை தொடர்ந்து ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் எல்டிஇ வேகம் வளர்ச்சி அடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. இரு நிறுவனங்கள் புதிய நெட்வொர்க் கட்டமைப்புக்கு மேற்கொண்டு இருக்கும் முதலீடுகள் தற்போது பலன் அளிக்க துவங்கி இருக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி முதன் முதலில் வெளியிடப்படும் போது, 5ஜி நெட்வொர்க் திறன் பற்றி பயனர்களுக்கு முரணான கருத்துக்கள் இருந்து வந்தது. மீடியன் 5ஜி டவுன்லோடே வேகங்கள் குஜராத்தில் 512.57Mbps ஆகவும், மேற்கு உத்திரபிரேதச மாநிலத்தில் 19.23Mbps ஆக இருந்தது. தற்போது. ஒன்பது டெலிகாம் வட்டாரங்கள்: ஆந்திர பிரதேசம், கொல்கத்தா, வடகிழக்கு, ஹரியானா, ராஜஸ்தான், பீகார், பஞ்சாப், கேரளா மற்றும் உத்திர பிரதேசம் மேற்கு பகுதிகளில் டெஸ்டிங் காரணமாக மீடியன் 5ஜி டவுன்லோட் வேகம் 100Mbps-க்கும் குறைவாகவே இருந்து வந்தது.
நான்கு மாதங்களுக்கு பின், 5ஜி மீடியன் டவுன்லோட் வேகம் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் அதிகரித்து இருக்கிறது. தற்போது ஜம்மு காஷ்மீர் தவிர இதர பகுதிகலில் 200Mbps வேகம் சீராக கிடைக்கிறது. கொல்கத்தாவில் 500Mbps வரையிலான டேட்டா வேகம் கிடைக்கிறது.






