search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    விவோ V27 ப்ரோ இந்திய விற்பனை துவக்கம் -  சிறப்பு சலுகைகள் அறிவிப்பு!
    X

    விவோ V27 ப்ரோ இந்திய விற்பனை துவக்கம் - சிறப்பு சலுகைகள் அறிவிப்பு!

    • விவோ நிறுவனத்தின் சமீபத்திய விவோ V27 ப்ரோ ஸ்மார்ட்போன் மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • புதிய ஸ்மார்ட்போனின் விற்பனைக்கு முன் இதற்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வந்தது.

    விவோ நிறுவனம் இந்த மாதத்தின் முதல் நாளன்று விவோ V27 மற்றும் V27 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விவோ V27 மாடலின் விற்பனை மார்ச் 23 ஆம் தேதி துவங்கும் என விவோ ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில், விவோ V27 ப்ரோ இந்திய விற்பனை துவங்கி இருக்கிறது.

    புதிய விவோ V27 ப்ரோ ப்ளிப்கார்ட், விவோ இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது. 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் விவோ V27 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 37 ஆயிரத்து 999 என துவங்குகிறது.

    விலை மற்றும் சலுகை விவரங்கள்:

    விவோ V27 ப்ரோ 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 37 ஆயிரத்து 999

    விவோ V27 ப்ரோ 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 39 ஆயிரத்து 999

    விவோ V27 ப்ரோ 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 42 ஆயிரத்து 999

    புதிய விவோ V27 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு மார்ச் 1 ஆம் தேதி துவங்கிய நிலையில், இதன் விற்பனை தற்போது துவங்கி இருக்கிறது. விவோ V27 ப்ரோ ஸ்மார்ட்போன் நோபிள் பிளாக் மற்றும் மேஜிக் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. ஆன்லைனில் விவோ V27 ப்ரோ வாங்குவோர் ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இத்துடன் ஆஃப்லைனில் விவோ V27 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐசிஐசிஐ, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஹெச்டிபி நிதி சேவைகளை பயன்படுத்தும் பட்சத்தில் ரூ. 3 ஆயிரத்து 500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    விவோ V27 ப்ரோ அம்சங்கள்:

    6.78 இன்ச் 2400x1080 பிக்சல் FHD AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் டிமென்சிட்டி 8200 பிராசஸர், மாலி G610 MC6 GPU

    8 ஜிபி ரேம், 128 ஜிபி, 256 ஜிபி மெமரி

    12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    50MP ஆட்டோஃபோக்கஸ் செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    4600 எம்ஏஹெச் பேட்டரி

    66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    Next Story
    ×