என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் அமோக விற்பனையை பதிவு செய்கின்றன.
    • கவுண்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் 2022 ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

    2022 ஆண்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு தலைசிறந்த ஒன்றாக அமைந்து இருந்ததாக ஆய்வு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் கணிசமான பங்குகளை பெற்று இருக்கிறது.

    உலகளவில் அதிகம் விற்பனையாகும் டாப் 10 ஸ்மார்ட்போன்களில் எட்டு மாடல்கள் ஐபோன் ஆகும். 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் ஆக இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் அடுத்தடுத்த இடங்களை பிடித்து இருக்கின்றன.

    இந்த பட்டியலில் ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 12, ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் SE 2022 உள்ளிட்ட மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் சாம்சங் நிறுவனத்தின் இரண்டு எண்ட்ரி லெவல் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இடம்பிடித்துள்ளன. கவுண்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக ஐபோன் 13 உள்ளது.

     

    2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் A15 பயோனிக் சிப் உள்ளது. ஒட்டுமொத்த ஐபோன் விற்பனையில் 28 சதவீதம் ஐபோன் 13 மாடல் ஆகும். ஐபோன் 14 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து ஐபோன் 13 மாடலுக்கு அறிவிக்கப்பட்ட விலை குறைப்பு காரணமாக இதன் விற்பனை அதிகரித்து இருக்கும் என தெரிகிறது.

    சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஐபோன் 13 அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் ஆக இருந்துள்ளது. இந்த பட்டியலில் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன. 2022 ஆண்டு ப்ரோ மேக்ஸ் சீரிஸ் விற்பனை ப்ரோ மற்றும் பேஸ் வேரியண்ட்களை விட அதிகமாக இருந்துள்ளது.

    சாம்சங்கின் கேலக்ஸி A13 மாடல் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் நான்காவது இடத்திலும், ஐபோன் 13 ப்ரோ மாடல் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஐபோன் 12 மாடல் ஆறாவது இடம், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ மாடல்கள் முறையே ஏழு மற்றும் எட்டாவது இடங்களை பிடித்துள்ளன.

    ஐபோன் SE 2022 மாடல் ஒன்பதாவது இடமும், சாம்சங் கேலக்ஸி A03 மாடல் பத்தாவது இடத்தை பிடித்துள்ளன. அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன் மாடல்களில் எட்டு இடங்களை பிடித்திருக்கும் முதல் நிறுவனமாக ஆப்பிள் உள்ளது.

    • ஒப்போ நிறுவனம் சமீபத்தில் தனது ஃபைண்ட் N2 ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
    • சர்வதேச சந்தையில் ஃபைண்ட் N2 ஃப்ளிப் விலை இந்திய மதிப்பில் ரூ. 84 ஆயிரத்து 350 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஒப்போ தனது ஃபைண்ட் N2 ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்திய விலையை மார்ச் 13 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் ஒரே நாளில் அறிமுகம் செய்யப்பட்டது. கிளாம்ஷெல் ஃப்ளிப் டிசைன் கொண்டிருக்கும் ஃபைண்ட் N2 ஃப்ளிப் தோற்றத்தில் சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 4 போன்றே காட்சியளிக்கிறது.

    ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலில் இரண்டாவது டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர், ஹசெல்பிலாட் கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது. இத்துடன் மேம்பட்ட ஹின்ஜ் சிஸ்டம், 44 வாட் சூப்பர்வூக் ஃபிளாஷ் சார்ஜிங் வசதி வங்கப்பட்டுள்ளது.

     

    அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மார்ச் 13 ஆம் தேதி அன்ஃபோல்டு செய்யப்படும் என ஒப்போ தெரிவித்து இருக்கிறது. அதன்படி இதே நாளில் ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் இந்திய விலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் அம்சங்கள்:

    6.8 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    3.26 இன்ச் கவர் AMOLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

    மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர்

    8 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    50MP பிரைமரி கேமரா

    இரண்டாவது கேமரா லென்ஸ்

    32MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    4ஜி, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி போர்ட்

    4300 எம்ஏஹெச் பேட்டரி

    44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    • கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களிடம் மேஜைகளை பகிர்ந்து கொள்ள வலியுறுத்தி வருகிறது.
    • சமீபத்தில் கூகுள் நிறுவனம் உலகளவில் சுமார் 12 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    கூகுள் நிறுவனம் நிதி சிக்கலில் சிக்கித் தவிப்பதாக தெரிகிறது. ஊழியர்களிடம் மேஜைகளை சக பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள கூகுள் வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் நிறுவனம் காசை மிச்சப்படுத்த முடியும் என சுந்தர் பிச்சை தெரிவித்து இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக இந்தியா உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் சுமார் 12 ஆயரம் பேரை பணி நீக்கம் செய்த நிலையில், கூகுள் இந்த நடவடிக்கை மூலம் செலவீனங்களை குறைக்க முயற்சிக்கிறது.

    கடந்த வாரம் நடைபெற்ற ஆல்-ஹேண்ட்ஸ் சந்திப்பில் பேசிய சுந்தர் பிச்சை, "என்னை பொருத்தவரை அவர்கள் ஒத்துழைப்பு வழங்கி பணத்தை மிச்சப்படுத்த முயற்சிக்கின்றனர். அதே சமயம் சிலவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிலர் எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பர், எப்போதும் மேஜைகள் காலியாகவே உள்ளது. இதை பார்க்க பேய் நகரம் போன்று காட்சியளிக்கும். இது நல்ல அனுபவம் இல்லை," என்று தெரிவித்து இருக்கிறார்.

     

    சில வாரங்களுக்கு முன்பு தான், அமெரிக்காவின் நியூ யார்க், சான் ஃபிரான்சிஸ்கோ போன்ற பகுதிகளில் கூகுள் கிளவுட் பிரிவில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்களின் சக பணியாளர்களுடன் அலுவலகம் மற்றும் மேஜைகளை பகிர்ந்து கொள்ள வலியுறுத்தப்பட்டனர். தற்போது மேஜைகளை பகிர்ந்து கொள்வது கிளவுட் பிரிவுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், மற்ற குழுக்களை சேர்ந்தவர்களும் இதனை முயற்சிக்கலாம் என கூகுள் சிஇஒ தெரிவித்து இருக்கிறார்.

    மேஜை பகிர்வதோடு மட்டுமின்றி ஊழியர்கள் செலவீனங்களில் கவனமாக இருக்கவும், தேவையின்றி பணம் மற்றும் பொருட்களை செலவிட வேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். "நிதி தேவைகளை கையாள்வதில் நாம் சிறப்பாக செயலாற்ற வேண்டும். நமக்கான ரியல் எஸ்டேட் செலவீனங்கள் அதிகம் ஆகும். இவை 30 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படும் எனில், இந்த விஷயத்தில் நாம் சரி செய்வது எப்படி என யோசிக்க வேண்டும்," என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
    • ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே ஐபோன் 14, 14 பிளஸ் மாடல்கள் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களை புதிதாக மஞ்சள் (Yellow) நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக மிட்நைட், ஸ்டார்லைட், பிராடக்ட் ரெட், புளூ மற்றும் பர்பில் போன்ற நிறங்களில் ஐபோன் 14 சீரிஸ் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    ஐபோன் 14 ப்ரோ மாடல்களுக்கு எவ்வித புதிய நிறங்களும் அறிமுகம் செய்யப்படவில்லை. முன்னதாக ஐபோன் 13 ப்ரோ சீரிஸ் ஆல்பைன் கிரீன் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களின் விலை முறையே ரூ. 69 ஆயிரத்து 999, ரூ. 79 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 89 ஆயிரத்து 999 என மற்ற நிற வேரியண்ட்களை போன்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் மஞ்சள் நிற ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களின் முன்பதிவு மார்ச் 10 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை மார்ச் 14 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் சிலிகான் கேஸ்கள்: கேனரி எள்லோ, ஒலிவ், ஸ்கை மற்றும் ஐரிஸ் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

    • கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு தினத்திற்கும் டூடுல் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
    • சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு தினத்திற்கும் டூடுல் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாசாரத்தைச் சேர்ந்த பெண்களைக் குறிப்பிடும் வகையில் இந்த சிறப்பு டூடுல் அமைந்துள்ளது.

    மருத்துவம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பெண்களை குறிக்கும் வகையிலான காட்சிகள் இந்த டூடுலில் இடம்பெற்றுள்ளன.

    • உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார்.
    • வீடு, அலுவலகம் என எலான் மஸ்க்-க்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    உலகளவில் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராக எலான் மஸ்க் இருக்கிறார். இவரது பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் மெய்க்காப்பாளர், தனியார் பாதுகாவலர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய எஸ்கார்ட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவரின் பாதுகாவலர் எலான் மஸ்க் எங்கு சென்றாலும், அவருடன் செல்கின்றனர். "எங்கு சென்றாலும்" என்பதில் கழிவறையும் அடங்கும்.

    இதுகுறித்து டுவிட்டரில் பணியாற்றி வரும் பொறியாளர் ஒருவர் கூறும் போது, எலான் மஸ்க்-ஐ சுற்றி எப்போதும் பாதுகாவலர்கள் உள்ளனர். டுவிட்டர் அலுவலகத்தில் அவரை சுற்றி எப்போதும் குறைந்தபட்சம் இரண்டு காவலர்கள் உள்ளனர். "அலுவலகத்தில் அவர் எங்கு சென்றாலும், அவருடன் இரண்டு பாதுகாவலர்கள் உடன் செல்கின்றனர்.

     

    பாதுகாவலர்கள் பிரமாண்டமாகவும், ஹாலிவுட் படங்களில் வருவதை போன்று காட்சியளிக்கின்றனர். அவர் கழிவறைக்கு சென்றாலும் இவர்கள் பின்தொடர்கின்றனர்" என தெரிவித்துள்ளார். சான் பிரான்டிஸ்கோவில் உள்ள டுவிட்டர் தலைமையகத்தில் மஸ்க்-ஐ சுற்றி பாதுகாவலர்கள் இருப்பதை பார்க்கும் போது, அவருக்கு நிறுவன ஊழியர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றே தெரிகிறது.

    டுவிட்டர் அலுவலகத்தை சுற்றிலும் ஊழியர்கள் மீது நம்பிக்கை வைத்து உயிரை பணயம் வைக்க எலான் மஸ்க் விரும்பவில்லை என்பதை அவரின் செயல்பாடுகள் காட்டுகின்றன. பெரும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது புதிதான காரியம் இல்லை,மேலும் அவர்கள் எப்போதும் அவர்களுடனேயே செல்வர். ஆனால், எலான் மஸ்க்-க்கு பாதுகாப்பு ஒருமடங்கு அதிகமாகவே வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    • சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
    • புதிய சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சியோமி 13 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சியோமி 13 ப்ரோ Early Access விற்பனை இந்தியாவில் நேற்று நடைபெற்றது. இந்த ஸ்மர்ட்போன் Mi வலைத்தளம், Mi ஹோம் மற்றும் Mi ஸ்டூடியோக்களில் விற்பனை செய்யப்பட்டது. நேற்று விற்பனை துவங்கிய நிலையில், புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வாங்க பலர் ஆர்வம் செலுத்தியதை அடுத்து நல்ல வரவேற்பு கிடைத்ததாக சியோமி தெரிவித்து இருக்கிறது.

    மேலும் தற்போது சியோமி 13 ப்ரோ ஸ்டாக்குகள் அனைத்து விற்றுத் தீர்ந்து விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. எனினும், நேற்றைய விற்பனையில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன என்ற விவரங்களை சியோமி இதுவரை அறிவிக்கவில்லை. சியோமி 13 ப்ரோ மாடலுக்கான அடுத்த விற்பனை மார்ச் 10 ஆம் தேதி துவங்குகிறது.

     

    அடுத்த விற்பனை சியோமி வலைத்தளங்கள் மற்றும் ஸ்டோர்களில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுமா அல்லது மூன்றாம் தரப்பு ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு கிடைக்குமா என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. மார்ச் 10 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு சியோமி 13 ப்ரோ மாடலுக்கான அடுத்த விற்பனை நடைபெறுகிறது.

    சியோமி 13 ப்ரோ அம்சங்கள்:

    6.73 இன்ச் 3200x1440 பிக்சல் QHD+ E6 AMOLED, 120Hz டிஸ்ப்ளே டால்பி விஷன்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் அட்ரினோ 740 GPU

    12 ஜிபி ரேம் 256 ஜிபி, 512 ஜிபி

    மெமரி டூயல் சிம்

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14

    50MP பிரைமரி கேமரா

    50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்

    50MP டெலிபோட்டோ கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    4820 எம்ஏஹெச் பேட்டரி

    120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங்

    விலை விவரங்கள்:

    சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் மாத தவணை பரிவர்த்தனைகளுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ஹெச்டிஎப்சி வங்கி கார்டு வைத்திருப்போர் ரூ. 8 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். சியோமி 13 ப்ரோ மாடலுக்கு எக்சேன்ஜ் சலுகை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

    • ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் SE பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
    • புதிய ஐபோன் SE 4 மாடலில் OLED ஸ்கிரீன், 5ஜி சிப் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE 4 மாடலை ரத்து செய்துவிட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆப்பிளின் சொந்த 5ஜி சிப் சார்ந்த பிரச்சினை காரணமாக ஐபோன் SE 4 ரத்தாகி இருக்கும் என கூறப்பட்டது. இந்த நிலையில், ஆய்வாளர் மிங் சி கியூ வெளியிட்டு இருக்கும் புதிய தகவல்களில் OLED டிஸ்ப்ளே மற்றும் பிரத்யேக 5ஜி சிப் கொண்ட 6.1 இன்ச் ஐபோன் SE மாடல் உருவாக்கப்படுவதாக தெரிவித்து இருக்கிறார்.

    கொரியாவை சேர்ந்த தி எலெக் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், புதிய ஐபோன் SE மாடல் சீனாவின் BOE உற்பத்தி செய்யும் என கூறப்படுகிறது. தற்போது ஆப்பிள் விற்பனை செய்து வரும் OLED டிஸ்ப்ளே கொண்ட ஐபோன்களில் சாம்சங் மற்றும் எல்ஜி டிஸ்ப்ளேக்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2023 ஐபோன் மாடல்களுக்கு BOE நிறுவனம் OLED பேனல்களை வினியோகம் செய்யும் என கூறப்பட்டது.

     

    ஐபோன் SE 4 மாடலில் வழங்கப்பட இருக்கும் LTPS OLED 6.1 இன்ச் டிஸ்ப்ளே பேனல் விலை 40 டாலர்கள் வரை இருக்கும். இது ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் உள்ள 6.7 இன்ச் LTPO OLED பேனலின் விலையை விட குறைவு ஆகும். சாம்சங் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களுக்கான OLED பேனல்களை வினியோகம் செய்ய இருக்கிறது. எல்ஜி டிஸ்ப்ளே LTPO மாடல்களில் கவனம் செலுத்த இருக்கிறது.

    ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களிலும் 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட OLED டிஸ்ப்ளேக்கள் தான் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் 120Hz LTPO பேனல்கள் வழங்கப்பட உள்ளன. முந்தைய தகவல்களின் படி புதிய ஐபோன் சீரிசில் அனைத்து மாடல்களும் டைனமிக் ஐலேண்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஐபோன் SE 4 மாடலில் புதிய OLED ஸ்கிரீன், மெல்லிய பெசல்கள், ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த 5ஜி மோடெம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய குறைந்த விலை ஐபோன் SE 4 அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    Photo Courtesy: Jon Prosser

    • நத்திங் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • முன்னதாக கடந்த 2021 வாக்கில் நத்திங் இயர் (1) அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய இயர் ஸ்டிக் அறிமுகம் செய்யப்படுகறது.

    நத்திங் நிறுவனம் தனது இயர் (2) ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் மார்ச் 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் இயர் (ஸ்டிக்) மற்றும் 2021 வாக்கில் அறிமுகமான நத்திங் இயர் (1) மாடல்களின் வரிசையில் இணைய இருக்கிறது.

    புதிய இயர்பட்ஸ் நத்திங் நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன், எலைட் என்ஜினியரிங் மற்றும் தனித்துவம் மிக்க சவுண்ட் அனுபவத்தை வழங்குகிறது. தற்போதைய டீசரில் இந்த இயர்பட்ஸ் ஒரே மாதிரியான டிரான்ஸ்பேரண்ட் கேஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

     

    ஏற்கனவே வெளியான தகவல்களின் படி புதிய இயர்பட்ஸ் தனித்துவம் மிக்க ANC வசதியை வழங்கும் என கூறப்பட்டது. இது வேற லெவல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்குகிறது. இதில் டூயல் டூயல் அல்லது மல்டிபாயிண்ட் கனெக்டிவிட்டி வசதி மூலம் ஒரே சமயத்தில் இயர்பட்ஸ்-ஐ இரு சாதனங்களில் கனெக்ட் செய்ய முடியும்.

    நத்திங் நிறுவனம் புதிய இயர்பட்ஸ்-இல் மேம்பட்ட EQ மற்றும் கஸ்டம் செட்டிங்ஸ், ஃபைண்ட் இயர்பட்ஸ் போன்ற வசதிகளை வழங்கும் என கூறப்படுகிறது. நத்திங் இயர் (2) அறிமுக நிகழ்வு மார்ச் 22 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு துவங்குகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் புதிய இயர்பட்ஸ்-க்கான டீசர் இடம்பெற்று இருக்கிறது.

    சர்வதேச வெளியீட்டின் போதே புதிய இயர்பட்ஸ் இந்தியாவிலும் அறிமுகமாகும் என தெரிகிறது. இதுபற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    • வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் 24 இன்ச் ஸ்கிரீன் கொண்டுள்ளன.
    • புதிய ஸ்மார்ட் டிவிக்கள் குவாண்டம் சீரிஸ் மற்றும் Pi சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

    அமெரிக்காவை சேர்ந்த நுகர்வோர் மின்சாதன நிறுவனமான வெஸ்டிங்ஹவுஸ் இந்திய சந்தையில் புதிதாக குவாண்டம் சீரிஸ் மற்றும் Pi சீரிஸ் பெயரில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றில் குவாண்டம் சீரிஸ் 55 இன்ச் மாடலும், Pi சீரிசில் 24 இன்ச் மற்றும் 40 இன்ச் மாடல்களும் இடம்பெற்றுள்ளன.

    வெஸ்டிங்ஹவுஸ் டிவி Pi சீரிஸ் (24 இன்ச் HD டிவி மற்றும் 40 இன்ச் FHD டிவி)

    புதிய Pi சீரிஸ் 24 இன்ச் HD 1366x768 பிக்சல், 40 இன்ச் FHD 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே, லினக்ஸ் ஒஎஸ் கொண்டிருக்கின்றன. இத்துடன் இரு மாடல்களிலும் 512MB ரேம், 4 ஜிபி ரோம், 2 HDMI கனெக்டர்கள், 2 யுஎஸ்பி போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இத்துடன் 24 இன்ச் மாடலில் டைப் 2 ஸ்பீக்கர்கள், 20 வாட் திறன் கொண்டுள்ளன. 40 இன்ச் மாடலில் 30 வாட் ஸ்பீக்கர்கள், டிஜிட்டல் ஆடியோ அவுட்புட் மற்றும் டிஜிட்டல் நாய்ஸ் ஃபில்ட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் A35x4 பிராசஸர், A+ பேனல், 300 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட் HD ரெடி டிவி மாடலில் ஏராளமான செயலிகள் மற்றும் கேம்ஸ் உள்ளது.

    வெஸ்டிங்ஹவுஸ் டிவி Pi சீரிஸ் அம்சங்கள்:

    24 இன்ச் 1366x768 பிக்சல் HD, 40 இன்ச் 1920x1080 பிக்சல் FHD

    A+ பேனல், 300 நிட்ஸ் பிரைட்னஸ்

    2x HDMI, யுஎஸ்பி

    24 இன்ச் மாடலில் 20 வாட் ஸ்பீக்கர்கள்

    40 இன்ச் மாடலில் 30 வாட் ஸ்பீக்கர்கள்

    டிஜிட்டல் ஆடியோ அவுட்புட்

    டிஜிட்டல் நாய்ஸ் ஃபில்ட்டர்

    A35*4 பிராசஸர்

    கூகுள் பிளே ஸ்டோர் ஆப்ஸ்

     

    வெஸ்டிங்ஹவுஸ் டிவி குவாண்டம் 55 இன்ச் 4K UHD டிவி

    55 இன்ச் UHD 840x2160 பிக்சல் DLED ஸ்கிரீன்

    8 ஜிபி ரோம், 2 ஜிபி ரேம்

    3x HDMI, 2x யுஎஸ்பி

    40 வாட் ஸ்பீக்கர், டால்பி டிஜிட்டல் பிளஸ், டால்பி MS12

    DTS ட்ரூ-சரவுண்ட்

    டிஜிட்டல் ஆடியோ அவுட்புட்

    டிஜிட்டல் நாய்ஸ் ஃபில்ட்டர்

    A35*4 பிராசஸர்

    கூகுள் பிளே ஸ்டோர் ஆப்ஸ்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    வெஸ்டிங்ஹவுஸ் டிவி Pi சீரிஸ் 24 இன்ச் HD ரூ. 6 ஆயிரத்து 999

    வெஸ்டிங்ஹவுஸ் டிவி Pi சீரிஸ் 40 இன்ச் FHD ரூ. 13 ஆயிரத்து 499

    வெஸ்டிங்ஹவுஸ் டிவி குவாண்டம் 55 இன்ச் UHD ரூ. 29 ஆயிரத்து 999

    புதிய வெஸ்டிங்ஹவுஸ் ஸ்மார்ட் டிவி மாடல்களின் விற்பனை நாளை துவங்குகிறது. இவற்றின் விற்பனை அமேசான் வலைத்தளத்தில் நடைபெற இருக்கிறது.

    • சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம்.
    • சமீபத்தில் சாம்சங் தனது ஃபிளாக்ஷிப் கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது.

    சாம்சங் நிறுவனம் ஃபிளாக்ஷிப் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து புதிய மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை கேலக்ஸி A சீரிசில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன்படி புதிய கேலக்ஸி A54 மற்றும் கேலக்ஸி A34 5ஜி ஸ்மார்ட்போன்கள் மார்ச் 15 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது. டிப்ஸ்டர் தெபாயன் ராய் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கேலக்ஸி A54 மற்றும் கேலக்ஸி A34 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மார்ச் மாத இறுதியில் அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறார்.

     

    கேலக்ஸி A54 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    புதிய சாம்சங் கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் sAMOLED FHD டிஸ்ப்ளே, 2340x1080 பிக்சல் ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், சாம்சங் எக்சைனோஸ் 1380 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 5MP மேக்ரோ லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், டூயல் சிம் ஸ்லாட், 3.5mm ஹெட்போன் ஜாக், ஒன் யுஐ 5.0, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி A34 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    சாம்சங் கேலக்ஸி A34 5ஜி மாடலில் 6.6 இன்ச் FHD+ sAMOLED 2340x1080 பிக்சல் ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 5MP மேக்ரோ லென்ஸ், 13MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5.0, IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், பக்கவாட்டில் கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்படுகிறது.

    • வாட்ஸ்அப் செயலியில் தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
    • ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் புதிய அம்சங்கள் வழங்குவதை வாட்ஸ்அப் வாடிக்கையாக கொண்டுள்ளது.

    வாட்ஸ்அப் செயலியில் உங்களுக்கு அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் தொந்தரவாக இருக்கின்றதா? விரைவில், வாட்ஸ்அப் இந்த தொந்தரவை சரிசெய்யும் வசதியை வழங்க இருக்கிறது. உங்களது வாட்ஸ்அப் காண்டாக்ட்-இல் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

    மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் "Silence Unknown Callers" எனும் பெயரில் புதிய அம்சத்தை வழங்க இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தெரியாத அல்லது மொபைலில் சேமிக்காத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்யலாம். இதுகுறித்து wabetainfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     

    விரைவில், இது டெஸ்டிங்-கிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த அம்சம் வெளியாகும் பட்சத்தில், பயனர்கள் தங்களுக்கு அறிமுகமில்லா எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்து அவற்றை தவிர்க்க முடியும். எனினும், மியூட் செய்த பின்பும் அழைப்பு வந்ததை தெரிவிக்கும் நோட்டிபிகேஷன் இடம்பெற்று இருக்கும். புதிய அம்சம் மூலம் பயனர்கள் Spam அழைப்புகளை தவிர்க்க வாட்ஸ்அப் கால் நோட்டிபிகேஷன் அனைத்தையும் மியூட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

    இதுதவிர வாட்ஸ்அப் செயலியில் ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சமும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதை கொண்டு பயனர்கள் ஸ்கிரீனை இரண்டாக பிரித்து, ஒன்றில் சாட் விண்டோ மற்றொன்றில் ஸ்டேட்ஸ் பார், கால்ஸ் என இதர வாட்ஸ்அப் அம்சங்களை ஒரே சமயத்தில் பயன்படுத்தலாம். இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியின் டேப்லெட் வெர்ஷனில் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Photo Courtesy: wabetainfo

    ×