என் மலர்
தொழில்நுட்பம்
- ஃபயர் போல்ட் நிறுவனத்தின் புதிய எடர்னோ ஸ்மார்ட்வாட்ச் பில்ட்-இன் மைக்ரோபோன், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
- 120 வொர்க் அவுட் மோட்கள், ஸ்மார்ட் நோட்டிபிகேஷன், IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற வசதிகள் இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ளது.
ஃபயர் போல்ட் நிறுவனம் இந்திய சந்தையல் புதிய ஸ்மார்ட்வாட்ச்-ஐ ப்ளூடூத் காலிங் வசதியுடன் அறிமுகம் செய்தது. ஃபயர் போல்ட் எடர்னோ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் சதுரங்க வடிவம் கொண்ட டயல், மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. ஃபயர் போல்ட் எடர்னோ மாடலில் 1.99 இன்ச் HD டிஸ்ப்ளே, 240x283 பிக்சல் ரெசல்யூஷன் உள்ளது.
முழு சார்ஜ் செய்தால் ஐந்து நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப் வழங்கும் ஃபயர் போல்ட் எடர்னோ ஸ்மார்ட்வாட்ச் இன்-பில்ட் மைக்ரோபோன், ஸ்பீக்கர், ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 120-க்கும் அதிக வொர்க்அவுட் மோட்கள், SpO2 மாணிட்டரிங், ஹார்ட் ரேட் மாணிட்டரிங் மற்றும் ஸ்லீப் டிராக்கிங் போன்ற வசதிகள் இதில் உள்ளன.

ஃபயர் போல்ட் எடர்னோ அம்சங்கள்:
1.99 இன்ச் HD 240x283 பிக்சல் LCD ஸ்கிரீன்
ப்ளூடூத் காலிங், கால் ஹிஸ்ட்ரி
குயிக் டயல் பேட், சின்க் காண்டாக்ட்ஸ்
120+ ஸ்போர்ட்ஸ் மோட்கள்
ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட்
ஹெல்த் மாணிட்டரிங்
IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட்
ஸ்மார்ட் நோட்டிபிகேஷன்
இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்
இன்பில்ட் கேம்ஸ்
280 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஃபயர் போல்ட் எடர்னோ ஸ்மார்ட்வாட்ச் புளூ, பிளாக், பெய்க், சில்வர் கிரீன், பிளாக் சில்வர் மற்றும் கோல்டு பின்க் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் மற்றும் ஃபயர் போல்ட் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் நடைபெறுகிறது.
- சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 FE வெளியீடு பற்றி தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- சமீபத்தில் தான் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S23, S23 பிளஸ் மற்றும் S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருந்தது.
உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான சாம்சங், இந்த ஆண்டிற்கான ஃபிளாக்ஷிப் S சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதில் கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளன. சாம்சங் நிறுவன வழக்கப்படி இதே சீரிசில் கேலக்ஸி S23 FE மாடலும் அறிமுகம் செய்யப்பட வேண்டும்.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியானதோடு, ஆகஸ்ட் மாத வாக்கில் கேலக்ஸி S23 FE அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் S23 FE ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யாது என கூறப்படுகிறது.
இந்த ஆண்டு கேலக்ஸி S சீரிஸ் ஃபேன் எடிஷன் (FE) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படாது என கூறப்படுகிறது. இந்த முறை கேலக்ஸி S23 FE அறிமுகம் செய்யப்படாது என்பதை தவிர வேறு எந்த தகவல்களும் வெளியாகவில்லை. கேலக்ஸி S23 FE அறிமுகம் செய்யப்படவில்லை என்ற பட்சத்தில் இது ரத்து செய்யப்படுகிறதா அல்லது ஒத்திவைக்கப்படுகிறதா என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய S சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பதால், கேலக்ஸி S23 FE வெளியீடு ஒத்திவைக்கப்படும் வாய்ப்புகள் குறைவே. அந்த வகையில், கேலக்ஸி S23 FE இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட வேண்டும் அல்லது சந்தையில் அறிமுகம் செய்யப்படாமல் ரத்து செய்யப்பட வேண்டும்.
- ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தனது ஊழியர்களில் பெரும்பாலானோரை சமீபத்தில் பணிநீக்கம் செய்தது.
- நான்கு மாதங்களுக்கு முன்பு தான் மெட்டா நிறுவனம் சுமார் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்து இருந்தது.
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா அடுத்த சில மாதங்களில் மேலும் பலரை பணிநீக்கம் செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை முழுமைபடுத்தும் என வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்து இருக்கிறது.
நான்கு மாதங்களுக்கு முன்பு தான் மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அந்த வரிசையில், தற்போதைய தகவல் உண்மையாகும் பட்சத்தில் இரண்டாவது முறையாக பெரும்பாலானோரை பணிநீக்கம் செய்யும் முதலாவது பெரிய டெக் நிறுவனமாக இருக்கும். இதுபற்றிய அறிவிப்புகள் அடுத்த வாரத்தில் வெளியாகும் என்றும் கூறப்டுகிறது.
இந்தமுறை பொறியியல் அல்லாத பிரிவுகளை சேர்ந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பணிநீக்கம் மட்டுமின்றி மெட்டா நிறுவனம் சில திட்டங்கள் மற்றும் குழுக்களை நிறுத்தவும் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. இதுபற்றிய செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு மெட்டா பதில் அளிக்கவில்லை.
- கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனை ஒருவர் பொதுவெளியில் பயன்படுத்துவது அம்பலமாகி இருக்கிறது.
- தோற்றத்தில் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஒப்போ ஃபைண்ட் N2 போன்றே காட்சியளிக்கிறது.
கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் பொது வெளியில் ஒருவர் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. புதிய பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் IO 2023 நிகழ்வில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் நியூ யார்க் வீதிகளில் ஒருவர் பயன்படுத்தி வருவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
புதிய புகைப்படங்களில் கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் கவர் ஸ்கிரீன், பிளாக் பெசல்கள் தெளிவாக காட்சியளிக்கின்றன. இதில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் கவர் ஸ்கிரீன் மட்டுமே காணப்படுகிறது. ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் இருக்கும் படம் வெளியாகவில்லை. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஒப்போ ஃபைண்ட் N2 போன்றே காட்சியளிக்கிறது.
பிக்சல் ஃபோல்டு லைவ் படங்களில் அதனை பயன்படுத்தி வருபவர் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறார். தற்போது பிக்சல் ஃபோல்டு லைவ் படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இதே போன்ற மேலும் சில புகைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களின் படி பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் 7.57 இன்ச் மடிக்கக்கூடிய ஸ்கிரீன், 5.78 இன்ச் கவர் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 4700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், பேக் பேனலில் ரியர் கேமரா கொண்டிருக்கும் என தெரிகிறது.
புதிய பிக்சல் ஃபோல்டு மாடலில் டென்சார் G2 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே பிராசஸர் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் பிக்சல் 7 ப்ரோ மாடலில் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. பிக்சல் ஃபோல்டு மாடலின் விலை 1800 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Soruce: 91Mobiles
- போலட் ஆடியோ நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
- புதிய இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3, பிரீமியம் டச் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் அம்சங்களை கொண்டுள்ளது.
போல்ட் ஆடியோ நிறுவனத்தின் புதிய ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்பட்ஸ்- கர்வ் ANC பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய போல்ட் கர்வ் ANC நெக்பேண்ட் மாடல் மெல்லிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதில் 12mm டிரைவர்கள், பூம் எக்ஸ் ரிச் பேஸ் தொழில்நுட்பம் உள்ளது. இத்துடன் ப்ளூடூத் 5.3, ப்ளின்க் அண்ட் பேர் தொழில்நுட்பம், பிரீமியம் டச் கண்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்டண்ட், IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் மேக்னடிக் டிரைவர்கள் உள்ளன.
ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கும் போல்ட் ஆடியோ கர்வ் ANC மாடலில் 40 மணி நேரத்திற்கான பிளேடைம், ANC ஆன் செய்யப்பட்ட நிலையில், 30 மணி நேரத்திற்கான பிளேடைம் கொண்டிருக்கிறது. டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட போல்ட் ஆடியோ கர்வ் ANC பத்து நிமிட சார்ஜ் செய்தால் 15 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது.

கர்வ் ANC மாடலில் தலைசிறந்த காலிங் அனுபவம், அதிகபட்சம் 25db ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 60ms அல்ட்ரா லோ லேடன்சி காம்பட் கேமிங் மோட் உள்ளது. இது கேமிங்கின் போது சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. டூயல் பேரிங் வசதி இருப்பதால், இதை கொண்டு ஒரே சமயத்தில் அழைப்புகளை பேசுவது மற்றும் கேமிங் செய்ய முடியும்.
போல்ட் ஆடியோ கர்வ் ANC அம்சங்கள்:
12mm பூம் எக்ஸ் டிரைவர்கள்
ஜென் டெக் ENC
ANC மற்றும் பிரத்யேக மைக்
60ms அல்ட்ரா லோ லேடன்சி
இன்-லைன் கண்ட்ரோல்
அதிகபட்சம் 40 மணி நேர பிளேடைம்
டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங்
ப்ளூடூத் 5.3
வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட்
IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
போல்ட் ஆடியோ கர்வ் ANC வயர்லெஸ் நெக்பேண்ட் மாடலின் விலை ரூ. 1,299 ஆகும். இது பிளாக் மற்றும் கிரீன் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை போல்ட் ஆடியோ வலைத்தளம், ப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் துவங்கி நடைபெற்று வருகிறது.
- சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
- கேலக்ஸி S23 ஃபிளாக்ஷிப் மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் இந்தியா நிறுவனம் தனது சமீபத்திய ஃபிளாக்ஷிப்: கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமான ஒரே மாதத்தில் விளம்பர நோக்கில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 200MP பிரைமரி கேமரா, டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் மற்றும் பல்வேறு டாப் எண்ட் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
சலுகை விவரங்கள்:
சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 18 ஆயிரம் வரையிலான பலன்களை வழங்குகிறது. இத்துடன் 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியை வழங்குகிறது. கேலக்ஸி S23 ஸ்மார்ட்போனை பயனர்கள் மாதம் ரூ. 5 ஆயிரத்து 209 விலையில் வாங்கிட (24 மாதங்கள்) முடியும். இத்துடன் அப்கிரேடு போனஸ் ரூ. 10 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

இதேபோன்று கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலகஸி S23 ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ரூ. 13 ஆயிரம் வரையிலான பலன்கள், 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இந்த மாடல்களை மாதம் ரூ. 3 ஆயிரத்து 125 கட்டணத்தில் வாங்கிட முடியும். இவற்றுக்கு ரூ. 8 ஆயிரம் வரை அப்கிரேடு போனஸ் வழங்கப்படுகிறது.
இவைதவிர பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 47 ஆயிரம் வரை தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் வரை அப்கிரேடு போனஸ், ரூ. 8 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இவை அனைத்தையும் சேர்க்கும் பட்சத்தில் கேலக்ஸி S23 அல்ட்ரா விலை ரூ. 59 ஆயிரத்து 999-க்கு வாங்கிட முடியும். இந்த சலுகைகள் சாம்சங் வலைத்தளம் மற்றும் சாம்சங் ஸ்டோர்களில் கிடைக்கிறது.
- மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G ஸ்மார்ட்போன் டூயல் கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது.
- புதிய மோட்டோ G மாடல் 30 வாட் டர்போ சார்ஜிங் வசதியுடன், 13 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் இந்தய சந்தையில் தனது புதிய மோட்டோ G73 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய மோட்டோ G73 5ஜி மாடலில் 6.5 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 930 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டிமென்சிட்டி 930 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை மோட்டோ G73 5ஜி பெற்று இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ G73 5ஜி ஆண்ட்ராய்டு 14+ அப்டேட், மூன்று ஆண்டுகள் ஆண்ட்ராய்டு செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு ஆட்டோஃபோக்கஸ் கேமரா, 16MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.
5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மோட்டோ G73 5ஜி மாடலில் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 30 வாட் டர்போசார்ஜிங் வசதி, அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

மோட்டோ G73 5ஜி அம்சங்கள்:
6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 930 பிராசஸர்
IMG BXM 8 - 256 GU
8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13
ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு கேமரா
16MP செல்ஃபி கேமரா
3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
30 வாட் டர்போ பவர் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
மோட்டோ G73 5ஜி ஸ்மா்ட்போன் மிட்நைட் புளூ மற்றும் லுசெண்ட் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை மார்ச் 16 ஆம் தேதி ஃப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
அறிமுக சலுகைகள்:
கிரெடிட் கார்டு மற்றும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி அல்லது உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியை பெறலாம்.
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ. 5 ஆயிரத்து 050 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்பட்ட ரிசார்ஜ்கள், மிந்த்ரா மற்றும் ஜூம்இன் சேர்த்து ரூ. 1050 வரையிலான கேஷ்பேக், ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான கேஷ்பேக் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு உள்ளன.
- இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் விவரங்களை அறிவித்து இருக்கிறது.
- புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பேட்டரியை ஒரே நிமிடத்தில் 25% வரை சார்ஜ் ஏற்றிவிடும்.
இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய 260 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 110 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட்சார்ஜ் வசதியையும் அறிவித்து இருக்கிறது. இவற்றை "ஆல்-ரவுண்ட் ஃபாஸ்ட்சார்ஜ்" என இன்ஃபினிக்ஸ் அழைக்கிறது. பயனர்களுக்கு இது பாதுகாப்பான மற்றும் ஸ்மார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் அனுபவத்தை வழங்குகிறது.
4400 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனினை 260வாட் ஆல்-ரவுண்ட் ஃபாஸ்ட்சார்ஜ் 7.5 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். மேலும் ஒரே நிமிடத்தில் 25 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றிவிடும்.
புதிய ஃபாஸ்ட்சார்ஜ் தொழில்நுட்பத்தில் உள்ள சார்ஜிங் ஆர்கிடெக்ச்சர் 4-பம்ப் இண்டெலிஜண்ட் சர்கியுட் டிசைன் கொண்டிருக்கிறது. இது மின் தேவையை கண்டறிந்து அதற்கு எத்தனை பம்ப்கள் தேவை என்பதை பொருத்து சார்ஜ் பம்ப்களை இயக்க செய்கிறது.

இதில் உள்ள மேம்பட்ட 12C ஹை ரேட், 4400 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் மல்டி-எலெக்ட்ரோட் லக் கட்டமைப்பு அதிகபட்சம் 98.5 சதவீத சார்ஜிங்கை செயல்படுத்துவதோடு, பேட்டரி திறனை அதிகரிக்கிறது. ஆயிரம் முறை பேட்டரியை சார்ஜ் செய்த பின்பும் 90 சதவீத திறன் அப்படியே இருக்கும் என இன்ஃபினிக்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த சார்ஜரில் மூன்று GaN மெட்டீரியல் PFC + AHB சர்கியூட் ஆர்கிடெக்ச்சர் உள்ளது. இது அதிக திறன், சிறிய அளவில், சேஃப் சார்ஜிங் கண்ட்ரோல் கொண்டிருக்கிறது. இதன் சார்ஜிங் கேபிளில் புதிய இண்டர்ஃபேஸ் ஸ்டிரக்ச்சர் டிசைன் உடன் இமார்கர் ஐடெண்டிஃபிகேஷன் சிப் கொண்டுள்ளது. இது அதிகபட்சம் 13A வரையிலான கரண்ட்-ஐ கடத்தும்.
இதில் இன்ஃபினிக்ஸ் நிறுவனத்துடன் பிரத்யேக ஃபாஸ்ட் சார்ஜிங் ப்ரோடோகால் கொண்டிருக்கிறது. இது 260 வாட் அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங்கை சாத்தியப்படுத்துகிறது. இதனுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் 110 வாட் வயர்லெஸ் ஆல்-ரவுண்ட் ஃபாஸ்ட்சார்ஜ் 16 நிமிடங்களில் சாதனத்தை முழுமையாக சார்ஜ் செய்கிறது.

இதில் பிரத்யேக அளவில் சிறிய சென்சிடிவ் காயில்கள் உள்ளன. வழக்கமான காயில்களில் உள்ளதை விட குறைந்த காயில்கள், ஒரே அளவில் அகலமான காயில்களை கொண்டிருக்கின்றன. இந்த சார்ஜ் ஸ்டேஷனில் சைலண்ட் ஏர் கூலிங் வழங்கும் ஃபேன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஆல்-ரவுண்ட் ஃபாஸ்ட்சார்ஜ் வயர்டு மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்குகிறது. இத்துடன் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், பைபாஸ் சார்ஜிங், மல்டி-ப்ரோடோால் சார்ஜிங் வசதியும் உள்ளது. வயர்டு மற்றும் வயர்லெஸ் டூயல் ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் இது தலைசிறந்த சார்ஜிங் அனுபவத்தை வழங்குகிறது.
புதிய ஆல்-ரவுண்ட் ஃபாஸ்ட்சார்ஜ் தொழில்நுட்பம் இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கிறது. புதிய இன்ஃபினிக்ஸ் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
- சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போன் டீசர் வெளியாகி இருக்கிறது.
- புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றிய தகவல் டீசரில் இடம்பெற்று இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போனின் டீசரை வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போன் வெளியீடு, அம்சங்கள் மற்றும் சலுகை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள பயனர்கள் வலைத்தளத்திற்கு சைன்-அப் செய்ய சாம்சங் கோரிக்கை விடுக்கிறது. எனினும், இந்த வலைப்பக்கம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை.
புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களை அறிவிக்காமல், அதன் அம்சங்களை ஒவ்வொன்றையும் தகவல்களாக அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
க்ரிஸ்ப் டீடெயில், க்ளியர் டிஸ்ப்ளே - சாம்சங் கேலக்ஸி A54 5ஜி மாடலில் ஃபுளூயிட் டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது.

இதில் வழங்கப்பட இருக்கும் கேமரா சென்சார்கள்- ஸ்னாப் க்ளியர், சிங்கில் டேக், OIS, லோ லைட் என பல்வேறு மோட்களில் சிறப்பான புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கும்.
சக்திவாய்ந்த கேமரா ஸ்மார்ட்போனை எப்போதும் தயார்நிலையில் வைத்திருக்கும்.
தலைசிறந்த 5ஜி கனெக்டிவிட்டி மூலம் கேம்கள், வீடியோக்களை எவ்வித இடையூறும் இன்றி சீராக அனுபவிக்க முடியும்.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய சாம்சங் A54 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இரு நாடுகளை போன்றே இந்தியாவிலும் இதன் விலை அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது.
புதிய கேலக்ஸி A54 5ஜி மாடலுடன் கேலக்ஸி A34 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய சாம்சங் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மார்ச் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம்.
Photo Courtesy: AH
- கூகுள் நிறுவனம் விரைவில் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- புதிய பிக்சல் டேப்லெட் கூகுள் நிறுவனத்தின் சொந்த டென்சார் சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனம் தனது முதல் டேப்லெட் எப்படி இருக்கும் என்பதை கூகுள் 2022 IO நிகழ்வில் காட்சிப்படுத்தி இருந்தது. அப்போது கூகுள் தனது முதல் பிக்சல் டேப்லெட் 2023 வாக்கில் விற்பனைக்கு வரும் என அறிவித்து இருந்தது. எனினும், சரியான வெளியீட்டு தேதியை அப்போது கூகுள் நிறுவனம் அறிவிக்கவில்லை.
சில நாட்களுக்கு முன் தான், கூகுள் நிறுவனம் 2023 கூகுள் IO நிகழ்வு மே 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருந்தது. அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெறும் கூகுள் IO நிகழ்வில் கூகுள் தனது முதல் பிக்சல் டேப்லெட்-ஐ அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுபற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.
ஒருவேளை கூகுள் IO நிகழ்வில் அறிவிக்கப்படவில்லை எனில், பிக்சல் டேப்லெட் வெளியீட்டு தேதி இதில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 கூகுள் IO நிகழ்வில் பிக்சல் டேப்லெட் மாடலில் கூகுள் டென்சார் சிப்செட் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது. மேலும் இதில் ஆண்ட்ராய்டு 12L அல்லது ஆண்ட்ராய்டு 13L ஒஎஸ் வழங்கப்படும் என தெரிகிறது.
இந்த ஆண்ட்ராய்டு ஒஎஸ் டேப்லெட் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் டேப்லெட் மாடலில் ஒற்றை பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட் தடிமனான பெசல்கள், தவறுதலாக ஏற்படும் டச்களை தவிர்க்க செய்கிறது. இதன் அதிகாரப்பூர்வ போஸ்டரில் பிக்சல் டேப்லெட் கிரீன் நிறம் கொண்டிருக்கிறது.
- ஐடெல் நிறுவனத்தின் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார், 5MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.
- மூன்றுவித நிறங்களில் கிடைக்கும் புதிய ஐடெல் A60 ஸ்மார்ட்போன் ஆஃப்லைனிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய A60 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஐடெல் A60 மாடல் இந்த பிரிவில் பல்வேறு முதல் முறை அம்சங்களை கொண்டிருக்கிறது. 6.6 இன்ச் HD+ வாட்டர் டிராப் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, கைரேகை சென்சார், ஃபேஸ் ரெகக்னீஷன் தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கிறது.
நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் ஐடெல் A60 புகைப்படங்களை எடுக்க டூயல் 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இத்துடன் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, SC9832E பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஒஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஐடெல் A60 அம்சங்கள்:
6.6 இன்ச் HD டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச்
SC9832E பிராசஸர்
2 ஜிபி ரேம்
32 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
கைரேகை சென்சார்
ஃபேஸ் ஐடி
8MP பிரைமரி கேமரா
விஜிஏ இரண்டாவது கேமரா, ஃபிளாஷ்
5MP செல்ஃபி கேமரா
ஒடிஜி சப்போர்ட், ஏஐ பவர் மாஸ்டர்
5000 எம்ஏஹெச் பேட்டரி
ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய ஐடெல் A60 ஸ்மார்ட்போன் டான் புளூ, வெர்ட் மென்த் மற்றும் சஃபையர் பிளாக் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது. விலை ரூ. 5 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ப்ளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் டே சிறப்பு விற்பனை தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- சிறப்பு விற்பனையில் வழங்கப்பட இருக்கும் சலுகை விவரங்கள் டீசர்களாக வெளியாகி உள்ளன.
ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் மற்றும் ஓர் சிறப்பு விற்பனை "பிக் சேவிங்ஸ் டேஸ் சேல்" பெயரில் நடைபெற இருக்கிறது. மார்ச் 11 ஆம் தேதி துவங்க இருக்கும் சிறப்பு விற்பனை மார்ச் 15 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. எனினும், ப்ளிப்கார்ட் பிளஸ் பயனர்கள் மார்ச் 10 ஆம் தேதியை சிறப்பு விற்பனையில் பொருட்களை வாங்கிட முடியும்.
சிறப்பு விற்பனையில் வழங்கப்பட இருக்கும் முழு சலுகை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், எந்தெந்த மாடல்களுக்கு சலுகைகள் வழங்கப்பட உள்ளது என்ற டீசர் வெளியாகி இருக்கிறது. அதில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்கள் ரூ. 70 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சில மாடல்களுக்கும் அசத்தலான சலுகைகள் வழங்கப்பட உள்ளன. புதிதாக ஐபோன் வாங்க திட்டமிடுவோர் இந்த சிறப்பு விற்பனையை பயன்படுத்திக் கொள்ளலாம். ஐபோன் மட்டுமின்றி பிக்சல் 6a ஸ்மார்ட்போன் ரூ. 26 ஆயிரத்து 999 விலையிலும், பிக்சல் 7 ப்ரோ மற்றும் பிக்சல் 7 மாடல்கள் முறையே ரூ. 67 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 46 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
முன்னதாக பிக்சல் 7 ப்ரோ மற்றும் பிக்சல் 7 ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ. 84 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 59 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நத்திங் போன் (1) மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 25 ஆயிரத்து விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதே போன்று ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கும்.






