என் மலர்
தொழில்நுட்பம்
- ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா பணிநீக்கம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
- கடந்த ஆண்டு இறுதியில் மெட்டா நிறுவனம் தனது மொத்த ஊழியர்களில் சுமார் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மெட்டா நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றி வருவோரில் பலரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் மட்டும் சுமார் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்த நிலையில், மெட்டா நிறுவனம் மேலும் 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. பணிநீக்கம் பற்றிய அறிவிப்பு வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
பணிநீக்க அறிவிப்புடன், புதிய முடிவு குறித்து மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் ஏப்ரல் மாத இறுதியில் தொழில்நுட்ப குழுக்களில் பணிநீக்கம் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் துவங்கும் என மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார். இந்த நடவடிக்கை காரணமாக மே மாத வாக்கில் பிஸ்னஸ் குழுக்கள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
"அடுத்த சில மாதங்களில், org தலைவர்கள் மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவர். இதில் குறைந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள், புதிய ஊழியர்களை பணியில் சேர்த்தல் உள்ளிட்டவைகளை குறைக்கப்பட உள்ளன. குறைந்த பணியாளர்களை பணியமர்த்துவதன் மூலம் எங்களின் பணியமர்த்தும் குழுவை குறைப்பது என்ற கடின முடிவை எடுத்திருக்கிறோம். பணியமர்த்தும் குழு உறுப்பினர்களிடம், அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பற்றி நாளை அறிவிக்க இருக்கிறோம்," என மெட்டா நிறுவனம் சார்பில் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வரும் மாதங்களில் 5 ஆயிரம் ஓபன் ரோல்களை நீக்க மெட்டா முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதி வரை பணிநீக்க நடவடிக்கைகள் தொடரும் என மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார். பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு இழப்பீடு அளிப்பது பற்றி மெட்டா தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.
- ரியல்மி நிறுவனத்தின் புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.
- புதிய ரியல்மி C55 ஸ்மார்ட்போன் கடந்த வாரம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி C55 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் மார்ச் 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என உறுதிப்படுத்தி இருக்கிறது. கடந்த வாரம் இந்தோன்சியாவில் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து புதிய ரியல்மி C55 தற்போது இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
புதிய ரியல்மி ஸ்மா்ட்போன் பொழுதுபோக்கிற்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதை அந்நிறுவனம் சூசகமாக தெரிவித்து இருக்கிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போன் முடிவில்லா பொழுதுபோக்கை வழங்கி, திணறடிக்க செய்யும் என ரியல்மி தெரிவித்துள்ளது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை ரியல்மி C55 ஸ்மார்ட்போன் 64MP பிரைமரி கேமரா, போர்டிரெயிட் மோட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 8 ஜிபி ரேம், 8 ஜிபி கூடுதலாக ரேம் எக்ஸ்பான்ஷன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அளவில் 7.89mm மெல்லிய பாடி கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் FHD+ 90Hz LCD ஸ்கிரீன், பன்ச் ஹோலில் 8MP செல்ஃபி கேமரா, மினி கேப்சியுல், ஹீலியோ ஜி88 பிராசஸர் வழங்கப்படுகிறது.
ரியல்மி C55 அம்சங்கள்:
6.72 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ IPS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர்
ARM மாலி-G52 2EEMC2 GPU
6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
8 ஜிபி ரேம், 256 ஜபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ரியல்மி 4.0
64MP பிரைமரி கேமரா
2MP டெப்த் சென்சார், எல்இடி ஃபிளாஷ்
8MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்திய சந்தையில் ரியல்மி C55 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைத்தளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் அடுத்த வாரம் தெரியவரும்.
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- புதிய ஜியோ போஸ்ட்பெயிட் சலுகைகளை பயனர்கள் ஒரு மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்தி பார்க்க முடியும் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய போஸ்ட்பெயிட் சலுகைகளை- ஜியோபிளஸ் பெயரில் அறிவித்து இருக்கிறது. புதிய சலுகைகள் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய பலன்களை வழங்குகிறது. இத்துடன் புதிய சேவையில் இணையும் பட்சத்தில் ஒருமாத காலத்திற்கு சலுகைகளை இலவசமாக பயன்படுத்தி பார்க்கலாம் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
இந்த சலுகைகள் ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ், அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டாவை வழங்குகின்றன. இந்த சலுகைகள் ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ் அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா வழங்குகின்றன. ஒற்றை கட்டணத்தில் டேட்டா ஷேரிங், பிரமீயம் தரவுகளை வழங்கும் செயலிக்கான சந்தா உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது.
ஒருவேளை இந்த பலன்கள் பிடிக்காத பட்சத்தில் பயனர்கள் எப்போது வேண்டுமானாலும், போஸ்ட்பெயிட் இணைப்பை துண்டித்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது பயனர்களிடம் எவ்வித கேள்வியும் கேட்கப்படாது என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்து இருக்கிறது.
ஜியோபிளஸ் போஸ்ட்பெயிட் சலுகை பலன்கள்:
ரூ. 399 மாத கட்டணத்தில் துவங்குகிறது
கூடுதலாக ரூ. 99 கட்டணத்தில் மூன்று இணைப்புகளை பெறும் வசதி
4 பேர் அடங்கிய குடும்பத்திற்கு மாதம் ரூ. 696 கட்டணம்
ஒரு சிம் இணைப்பிற்கு சராசரியாக மாத கட்டணம் ரூ. 174
டேட்டாவை குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளும் வசதி
தினசரி டேட்டா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை
ஜியோ ட்ரூ 5ஜி வெல்கம் ஆஃபரின் கீழ் அன்லிமிடெட் இலவச 5ஜி டேட்டா
நீங்கள் விரும்பும் மொபைல் நம்பர்
நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், ஜியோடிவி மற்றும் ஜியோசினிமா சந்தா
வெளிநாட்டு பயணங்களின் போது விமானத்தினுள் கனெக்டிவிட்டி
சர்வதேச ரோமிங்கின் போது வைபை காலிங் கட்டணம் நிமிடத்திற்கு ரூ. 1
129 நாடுகளுக்கு ஒரு சர்வதேச ரோமிங் சலுகை
ஜியோஃபைபர் பயனர்கள், கார்ப்பரேட் ஊழியர்கள், மற்ற நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்கள், ஆக்சிஸ், ஹெச்டிஎப்சி மற்றும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு பாதுகாப்பு முன்பணம் இல்லை.
ஒரே க்ளிக்-இல் கால்-பேக் சேவை
டவுன்டைம் இன்றி ஜியோ நம்பருக்கு மாறும் வசதி
- ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களை எல்லோ நிறத்தில் அறிமுகம் செய்தது.
- புதிய ஐபோன் 14, 14 பிளஸ் மாடல்களின் எல்லோ நிற வேரியண்ட் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் 14, ஐபோன் 14 எல்லோ நிற வேரியண்டை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. புதிய எல்லோ நிற வேரியண்ட் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மிட்நைட், ஸ்டார்லைட், பிராடக்ட் ரெட், புளூ மற்றும் பர்பில் நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. புதிய எல்லோ நிற ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் முன்பதிவு மார்ச் 10 ஆம் தேதி துவங்கிய நிலையில், இதன் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் ஐபோன் 14 (128 ஜிபி) மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என்றும் 256 ஜபி ஐபோன் 14 விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 14 (512 ஜிபி) விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ப்ளிப்கார்ட் தளத்தில் இதன் 128 ஜிபி மாடல் விலை ரூ. 72 ஆயிரத்து 999 என்றும் 256 ஜிபி விலை ரூ. 82 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஐபோன் 14 பிளஸ் 128 ஜிபி மாடல் விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்றும் 256 ஜிபி ஐபோன் 14 பிளஸ் விலை ரூ. 99 ஆயிரத்து 900 என்றும் 512 ஜிபி விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதே மாடல்களின் விலை ப்ளிப்கார்ட் தளத்தில் முறையே ரூ. 82 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 91 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ப்ளிப்கார்ட் தளத்தில் இரு மாடல்களின் 512 ஜிபி விலை குறிப்பிடப்படவில்லை. எல்லோ நிற ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்கலின் விலை அதன் மற்ற நிற வேரியண்ட்களை போன்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆப்பிள் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட ஐபோன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 57 ஆயிரத்து 800 வரை தள்ளுபடி வழங்குகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.
ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் இரு மாடல்களுக்கும் அதிகபட்சம் 8 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 20 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்குகிறது. அமெரிக்கன் எக்ஸ்பிரல் கிரெடிட் கார்டு மூலம் மாத தவணை முறையை பயன்படுத்தும் போது அதிகபட்சம் 10 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்டு பயன்படுத்தும் போது 5 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
- ரெட்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல் அமேசான் ஃபயர் ஒஎஸ் 7 கொண்டிருக்கிறது.
- இதில் ஃபயர் டிவி ஆப் ஸ்டோரில் இருந்து சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிக ஆப்களை வழங்குகிறது.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ஃபயர் டிவி ஒஎஸ் கொண்ட தனது முதல் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. அமேசான் ஃபயர் டிவி ஒஎஸ் கொண்டிருக்கும் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி அமேசான் ஃபயர் ஒஎஸ் மூலம் இயங்குகிறது. இதனுடன் அலெக்சா வாய்ஸ் சப்போர்ட் கொண்ட ரிமோட் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் குரல் மூலமாகவே டிவியை இயக்கலாம்.
புதிய ஸ்மார்ட் டிவியில் 32 இன்ச் HD ரெடி டில்ப்ளே, விவிட் பிக்ச்சர் என்ஜின் தொழில்நுட்பம், 20 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, DTS-HD மற்றும் DTS: விர்ச்சுவல் X தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள அமேசான் ஃபயர் ஒஎஸ் 7 ஃபயர் டிவி ஆப் மூலம் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிக ஆப்களில் இருந்து பொழுதுபோக்கு தரவுகளை வழங்குகிறது.

இவை தவிர பிரைம் வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, சோனிலிவ், யூடியூப் போன்ற முன்னணி தளங்களும் இந்த டிவியில் இயங்குகின்றன. அமேசான் மினிடிவியை ஸ்டிரீம் செய்வதோடு, 70-க்கும் அதிக லைவ் சேனல்களை கண்டுகளிக்கும் வசதி கொண்டிருக்கிறது.
ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 32 இன்ச் அம்சங்கள்:
32 இன்ச் 1366x768 பிக்சல் HD ரெடி டிஸ்ப்ளே
விவிட் பிக்ச்சர் என்ஜின், ஆட்டோ லோ லேடன்சி மோட்
1.5GHz குவாட்கோர் கார்டெக்ஸ் A35 பிராசஸர்
மாலி G31 MP2 GPU
1 ஜிபி ரேம்
8 ஜிபி மெமரி
ஃபயர் ஒஎஸ்
ரெட்மி வாய்ஸ் ரிமோட்
வைபை, 2x யுஎஸ்பி, 3.5mm ஆடியோ ஜாக்
2x10 வாட் ஸ்பீக்கர்கள்
டால்பி ஆடியோ, DTS-HD, DTS விர்ச்சுவல் X
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 32 இன்ச் மாடலின் விலை ரூ. 13 ஆயிரத்து 999 ஆகும். அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட் டிவி ரூ. 11 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் அமேசான் மற்றும் Mi வலைத்தளங்களில் இந்த ஸ்மார்ட் டிவி வாங்குவோருக்கு ரூ. 1000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது குறுகிய காலத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது. புதிய ரெட்மி டிவி விற்பனை மார்ச் 21 ஆம் தேதி துவங்குகிறது.
- போக்கோ நிறுவனத்தின் புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது.
- புதிய போக்கோ X5 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13 வழங்கப்பட்டு இருக்கிறது.
போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய போக்கோ X5 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய போக்கோ X5 5ஜி மாடலில் 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பன்ச் ஹோலில் 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13 ஒஎஸ் கொண்டிருக்கும் போக்கோ X5 5ஜி மாடலில் புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

போக்கோ X5 5ஜி அம்சங்கள்:
6.67 இன்ச் FHD + 1080x2400 பிக்சல், சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
அட்ரினோ 619L GPU
6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13
ஹைப்ரிட் டூயல் சிம்
48MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ கேமரா
13MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக்
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
போக்கோ X5 5ஜி ஸ்மார்ட்போன் ஜாகுவார் பிளாக், வைல்ட்கேட் புளூ மற்றும் சூப்பர்நோவா கிரீன் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அறிமுக சலுகையாக போக்கோ X5 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.
- மெட்டா நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுமார் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.
- சமீபத்தில் தான் மெட்டா நிறுவனத்தில் இருந்து சுமார் 12 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கிவிட்டன. இதன் காரணமாக உலகளவில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்தனர். சந்தை நிலையை கருத்தில் கொண்டு மேலும் சில நிறுவனங்கள் இரண்டாவது கட்டமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்வது பற்றி பரிசீலனை செய்து வருகின்றன.
இந்த வரிசையில் மார்க் ஜூக்கர்பர்க் மெட்டா பிரிவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் முறை எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனரோ, அதே எண்ணிக்கையில் மீண்டும் பணிநீக்கம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக விரைவில் சுமார் 11 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய பணி நீக்க நடவடிக்கைகள் விரைவில் துவங்கும் என்றும் மார்க் ஜூக்கர்பர்க் தனது மூன்றாவது குழந்தை பிறக்க இருப்பதை அடுத்து மகப்பேறு விடுப்புக்கு செல்லும் முன் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் மார்க் ஜூக்கர்பர்க் 2023 ஆண்டு நிறுவனத்திற்கு சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்து இருந்தார்.
ஏற்கனவே ஒட்டுமொத்த ஊழியர்களில் சுமார் 13 சதவீதம், கிட்டத்தட்ட 11 ஆயிரம் ஊழியர்களை கடந்த ஆண்டு மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்து இருந்தது. இவர்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பணியாற்றி வந்தனர். நிதி நெருக்கடி மற்றும் வருவாய் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- ரியல்மி நிறுவனத்தின் புதிய 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் டிமென்சிட்டி 810 பிராசஸர் கொண்டிருக்கிறது.
- புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்க இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 10 சீரிசில் ரியல்மி 10 ப்ரோ 5ஜி, ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் ரியல்மி 10 ப்ரோ 5ஜி கோகோ கோலா எடிஷன் போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வரிசையில் ரியல்மி 10T ஸ்மார்ட்போன் இணைய இருப்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
அதன்படி ரியல்மி 10T 5ஜி ஸ்மார்ட்போன் மார்ச் 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ரியல்மி 10T 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், அதிகபட்சம் 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. 90Hz ரிப்ரெஷ் ரேட், புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா போன்ற அம்சங்கள் இதில் வழங்கப்படுகிறது.

இவைதவிர புதிய ரியல்மி 10T 5ஜி ஸ்மார்ட்போன் பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. ரியல்மி 10T 5ஜி ஸ்மார்ட்போன் RMX3612 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதே மாடல் நம்பர் ரியல்மி 9i 5ஜி மாடலுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் ரியல்மி 9i 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தோற்றத்தில் ரியல்மி 10T 5ஜி ஸ்மார்ட்போன் ரியல்மி 9i 5ஜி போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. அந்த வகையில், ரியல்மி 10T ஸ்மார்ட்போன் ரியல்மி 95 மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.
அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 9i 5ஜி மாடலில் 6.6 இன்ச் IPS LCD FHD+ 90Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், ரியல்மி யுஐ 3.0 வழங்கப்படுகிறது.
- சியோமி நிறுவனத்தின் 11 லைட் NE 5ஜி ஸ்மார்ட்போன் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் திடீரென வெடிக்க என்ன காரணம் என்பது மர்மமாகவே உள்ளது.
ஸ்மார்ட்போன்கள் வெடித்துச் சிதறும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. கடந்த காலங்களில் சியோமி, ஒன்பிளஸ், சாம்சங் என பல்வேறு பிராண்டு ஸ்மார்ட்போன்கள் வெடித்து சிதறியுள்ளன. அந்த வகையில், தற்போது சியோமி 11 லைட் NE 5ஜி ஸ்மார்ட்போன் வெடித்து இருக்கிறது. பீகார் மாநிலத்தின் சஞ்சீவ் ராஜா என்பவர் பயன்படுத்தி வந்த ஸ்மார்ட்போன் திடீரென வெடித்து, அதில் இருந்து புகை வெளியேறி இருக்கிறது.

சார்ஜர் எதிலும் இணைக்கப்படாத நிலையில், ஸ்மார்ட்போன் வெடித்ததாக கூறி அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சஞ்சீவ் ராஜா தனியார் செய்தி நிறுவனத்துடன் பகிர்ந்து இருக்கிறார். ஸ்மார்ட்போன் வெடித்ததற்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. ஸ்மார்ட்போன் வெடிக்கும் போது கட்டிலில் வைக்கப்பட்டு இருந்ததால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தற்போது வெடித்துச் சிதறிய சியோமி 11 லைட் NE 5ஜி ஸ்மார்ட்போன் 2021 டிசம்பர் மாத வாக்கில் வாங்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போன் வெடித்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்க்கும் போது பேட்டரியில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்றே தெரிகிறது. ஸ்மார்ட்போன் வெடித்த சம்பவம் குறித்து சியோமி தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
Source: 91Mobiles
- நோக்கியா C12 ஸ்மார்ட்போன் மெல்லிய நார்டிக் டிசைன் மற்றும் 3000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.
- இத்துடன் 6.3 இன்ச் HD+ ஸ்கிரீன், யுனிசாக் 9863A1 பிராசஸர் போன்ற அம்சங்கள் உள்ளன.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய நோக்கியா C12 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. முன்னதாக ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய நோக்கியா C12 மாடலில் 6.3 இன்ச் HD+ ஸ்கிரீன், யுனிசாக் 9863A1 பிராசஸர், 2 ஜிபி ரேம், 2 ஜிபி கூடுதல் மெமரி எக்ஸ்பான்ஷன் வசதி உள்ளது.
ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஒஎஸ் கொண்டிருக்கும் நோக்கியா C12 இரண்டு ஆண்டுகளுக்கு காலாண்டு முறையில் செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் மெல்லிய நார்டிக் டிசைன் மற்றும் 3000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

நோக்கியா C12 அம்சங்கள்:
6.3 இன்ச் 1600x720 பிக்சல் HD+V நாட்ச் டிஸ்ப்ளே
ஆக்டா கோர் யுனிசாக் SC9836A பிராசஸர்
IMG 8322 GPU
2 ஜிபி ரேம்
64 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன்
டூயல் சிம்
8MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
5MP செல்ஃபி கேமரா
3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
3000 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
நோக்கியா C12 ஸ்மார்ட்போன் டார்க் சியான், சார்கோல் மற்றும் லைட் மிண்ட் நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 5 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை அமேசான் வலைத்தளத்தில் மார்ச் 17 ஆம் தேதி துவங்குகிறது.
- ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விலையை அறிவித்தது.
- ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கிறது.
ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது ஃபைண்ட் N2 ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விலையை அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரிசையில் தான், தற்போது ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் இந்திய விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடல் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃப்ளிப் 4 போன்றே காட்சியளிக்கிறது. சாம்சங் மற்றும் ஒப்போ என இரு நிறுவன ஃப்ளிப் ஸ்மார்ட்போன்களும் கிளாம்ஷெல் போன்ற டிசைன் கொண்டிருக்கின்றன. ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலில் 3.26 இன்ச் கவர் டிஸ்ப்ளே, AMOLED ஸ்கிரீன், செல்ஃபி மிரர் போன்ற அம்சங்கள் உள்ளன.

விலை விவரங்கள்:
ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஒப்போ இந்தியா ஸ்டோரில் நடைபெற இருக்கிறது. ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் பர்பில் மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் புதிய ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் விற்பனை மார்ச் 17 ஆம் தேதி துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோர் எஸ் வங்கி, ஐசிஐசிஐ, கோடக் வங்கி, எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி மற்றும் முன்னணி வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இத்துடன் அதிகபட்சம் 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இவைதவிர ஒப்போ வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக எக்சேன்ஜ் அல்லது லாயல்டி போனஸ் ரூ. 5 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் அம்சங்கள்:
6.8 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
3.26 இன்ச் கவர் AMOLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர்
8 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
50MP பிரைமரி கேமரா
இரண்டாவது கேமரா லென்ஸ்
32MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
4ஜி, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி போர்ட்
4300 எம்ஏஹெச் பேட்டரி
44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா, 5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கும் என தகவல்.
- புதிய பிக்சல் 7a மாடலில் 6.1 இன்ச் FHD+ 90Hz OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 7a குறைந்த விலை ஸ்மார்ட்போனினை 2023 கூகுள் IO நிகழ்வில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. விரைவில் வெளியீடு நடைபெற இருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
புதிய பிக்சல் மிட் ரேன்ஜ் மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. பிக்சல் 7a மாடலில் 6.1 இன்ச் FHC+ 90Hz OLED டிஸ்ப்ளே, டென்சார் G2 சிப்செட், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 12MP இரண்டாவது லென்ஸ், 10.8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கும் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் 5 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.
சமீபத்தில் தான் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கூகுள் IO 2023 நிகழ்வு மே 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருந்தார். இந்த முறை கூகுள் IO நிகழ்வு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள மவுண்டெயின் வியூ, கூகுள் தலைமையகத்தின் ஷோர்லைன் ஆம்ஃபிதியேட்டரில் நடைபெற இருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்முறையாக கூகுள் IO நிகழ்வு பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட இருக்கிறது. நிகழ்வுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் இதனை ஆன்லைனில் நேரலையில் பார்க்க முடியும்.
Photo Courtesy: @Onleaks






