என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • டுவிட்டரை தொடர்ந்து மெட்டா நிறுவனமும் கட்டண முறையில் வெரிஃபைடு சேவையை வழங்க துவங்கியது.
    • டுவிட்டர் மட்டுமின்றி டெலிகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற தளங்களிலும் இதே போன்ற கட்டண முறை அமலில் இருந்துவருகிறது.

    மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் தனது கட்டண சந்தா முறையை அறிவித்து இருக்கிறது. புதிய கட்டண சந்தா முறையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் பணம் கொடுத்து வெரிஃபிகேஷன் பெற முடியும். முன்னதாக இதே போன்ற சேவையை எலான் மஸ்க்-இன் டுவிட்டர் அறிமுகம் செய்தது.

    மெட்டா வெரிஃபைடு சேவை பயனர்களுக்கு புளூ பேட்ஜ் மூலம் அக்கவுண்ட்களை அரசு அடையாள அட்டை மூலம் வெரிஃபை செய்கிறது. இதற்கான கட்டணம் வெப் வெர்ஷனில் மாதம் 11.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 990 என்றும் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டில் மாத கட்டணம் 14.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,240 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     

    பிப்ரவரி மாத வாக்கில் இந்த சேவைக்கான டெஸ்டிங் துவங்கிய நிலையில், தற்போது வெளியாகி இருக்கிறது. முன்னதாக ஸ்னாப்சாட் மற்றும் டெலிகிராம் போன்ற சேவைகளிலும் இதேபோன்ற சேவை அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சேவையின் மூலம் சமூக வலைத்தள நிறுவனங்கள் வருவாய் ஈட்ட துவங்கி இருக்கின்றன.

    ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் மெட்டா வெரிஃபைடு சேவை அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து தற்போது அமெரிக்கா மற்றும் மேலும் சில நாடுகளில் அறிமுகமாகி இருக்கிறது. முறையான அரசு அடையாள அட்டையுடன் மாத சந்தா செலுத்தும் பட்சத்தில் வெரிஃபைடு வசதி வழங்கப்படும்.

    • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
    • புதிய பிக்சல் ஃபோல்டு மாடல் மே மாதம் நடைபெற இருக்கும் கூகுள் IO நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்.

    கூகுள் நிறுவனம் தனது சொந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் வெளியாகியுள்ளது.

    பிரபல டிப்ஸ்டரான யோகேஷ் பிரர் வெளியிட்டு இருக்கும் புதிய தகவல்களின் படி பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் விலை 1300-இல் தொடங்கி 1500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 07 ஆயிரத்து 421 முதல் ரூ. 1 லட்சத்து 23 ஆயிரத்து 947) வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

     

    இந்த தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விலை சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 4 விலையை விட 500 டாலர்கள் வரை குறைவாகவே இருக்கும். கேலக்ஸி Z ஃபோல்டு 4 ஸ்மார்ட்போன் சாம்சங் அறிமுகம் செய்த கடைசி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் முன்னணி நிறுவனமாக இருக்கிறது.

    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனுடன் மிட் ரேன்ஜ் பிக்சல் 7a ஸ்மார்ட்போனினை கூகுள் IO 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி வருகிறது. 2023 கூகுள் IO நிகழ்வு இந்த ஆண்டு மே மாத வாக்கில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் பிக்சல் ஃபோல்டு மற்றும் பிக்சல் 7a ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது.

    புதிய பிக்சல் 7a ஸ்மார்ட்போனின் விலை 450 டாலர்களில் துவங்கி 500 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 37 ஆயிரத்து 188 என துவங்கி அதிகபட்சம் ரூ. 41 ஆயிரத்து 320 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 6a மாடலின் விலையும் இதேபோன்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Photo Courtesy: How to I Solve | Steve Hemmerstoffer

    • ஏர்டெல் நிறுவனம் நாடு முழுக்க 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • பயனர்களுக்கு வழங்கி வரும் சலுகை பலன்களை ஏர்டெல் அடிக்கடி மாற்றியமைத்து வருகிறது.

    ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில், ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு இலவச 5ஜி டேட்டாவை அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் அனுபவிப்பதை ஊக்குவிக்க முடியும் என ஏர்டெல் தெரிவித்து உள்ளது.

    இலவச அன்லிமிடெட் 5ஜி டேட்டா பெறுவது எப்படி?

    ரூ. 239 மற்றும் இதை விட அதிக தொகை கொண்ட பிரீபெயிட் சலுகை பயன்படுத்துவோர் மற்றும் அனைத்து போஸ்ட்பெயிட் பயனர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். தகுதியுடைய பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் ஆப் (Airtel Thanks App) சென்று இந்த சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.

    பயனர்கள் இனி அதிவேக, பாதுகாப்பு நிறைந்த 5ஜி பிளஸ் சேவையை அனுபவிக்க முடியும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அனைத்து சலுகைகளிலும் டேட்டா கட்டுப்பாடு நீக்கப்பட்டுவிட்டதால், பயனர்கள் டேட்டா தீர்ந்துவிடுமோ என்ற அச்சம் இன்றி பயன்படுத்தலாம்.

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி F14 ஸ்மார்ட்போன் மார்ச் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சமீபத்தில் புதிய கேலக்ஸி A சீரிஸ் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், தற்போது F சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    புதிய ஸ்மார்ட்போனிற்காக பிரத்யேக வலைப்பக்கத்தை ப்ளிப்கார்ட் தளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதில் புதிய ஸ்மார்ட்போன் மார்ச் 24 ஆம் தேதி மதியம் 12 மணி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் புதிய ஸ்மார்ட்போனிற்கான டிசைன் மற்றும் அம்சங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

     

    டிசைனை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி F14 மாடலில் ஃபிளாட் பேக், வளைந்த எட்ஜ்களை கொண்டிருக்கிறது. இதன் டூயல் கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளன. பவர் மற்றும் வால்யும் ராக்கர் ஸ்மார்ட்போனின் வலதுபுறத்திலும், இடதுபுறத்தில் சிம் டிரே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் 13 5ஜி பேண்ட்களை கொண்டிருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.0 ஒஎஸ் கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி F14 5ஜி மாடலில் இரண்டு முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், நான்கு செக்யுரிட்டி அப்டேட்களை பெற இருக்கிறது. போஸ்டரில் இந்த ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 1330 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும், இது 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய சாம்சங் கேலக்ஸி F14 5ஜி மாடலில் 6.6 இன்ச் LCD ஸ்கிரீன், FHD+ 90Hz ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமரா, 13MP செல்ஃபி கேமரா, கைரேகை சென்சார், ஒன் யுஐ கோர் 5 ஒஎஸ், ஆண்ட்ராய்டு 13, 6000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.

    • ஃபாஸ்டிராக் நிறுவனத்தின் புதிய ரெவோல்ட் சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச் அல்ட்ராவியு டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்வாட்ச் 200-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள், 110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது.

    ஃபாஸ்டிராக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ரெவோல்ட் சீரிஸ் ஸ்மார்வாட்ச்-ஐ ப்ளிப்கார்ட் உடன் இணைந்து வெளியிட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் புதிய தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஜனவரி மாத வாக்கில் ஃபாஸ்டிராக் ரிஃப்ளெக்ஸ் பீட் பிளஸ் மாடலை அறிமுகம் செய்த நிலையில், தற்போது இந்த ரெவோல்ட் FS1 அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய ஃபாஸ்டிராக் ரெவோல்ட் FS1 மாடலில் 1.83 இன்ச் அல்ட்ராவியு டிஸ்ப்ளே, 2.5x நைட்ரோஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த பிரிவில் இத்தகைய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் மாடலாக இது இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சீரான கனெக்டிவிட்டி, அதிவேக செயல்திறன் வழங்கும் வகையில் மேம்பட்ட சிப்செட் கொண்டிருக்கிறது.

     

    இத்துடன் 200-க்கும் அதிக வாட்ச ஃபேஸ்கள், 110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. மேம்பட்ட உடல்நல மாணிட்டரிங் அம்சங்கள், ஸ்டிரெஸ் மாணிட்டரிங், ஆட்டோ ஸ்லீப் டிராக்கிங், 24x7 ஹார்ட் ரேட் மாணிட்டரிங் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இவைதவிர ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்கள், ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் இதில் உள்ளது.

    ஃபாஸ்டிராக் ரெவோல்ட் FS1 அம்சங்கள்:

    1.83 இன்ச் அல்ட்ராவியு டிஸ்ப்ளே

    ப்ளூடூத் காலிங்

    200-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்

    110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    2.5X நைட்ரோஃபாஸ்ட் சார்ஜிங்

    24x7 ஹார்ட் ரேட் மாணிட்டரிங்

    ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட்

    ஸ்மார்ட் நோட்டிபிகேஷன்ஸ்

    ஃபாஸ்டிராக் ரிஃப்ளெக்ஸ்வொர்ல்டு ஆப்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஃபாஸ்டிராக் ரெவோல்ட் FS1 மாடல் ரூ. 1695 எனும் அறிமுக விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை மார்ச் 22 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஃபாஸ்டிராக் வலைத்தளங்களில் நடைபெற இருக்கிறது.

    • ஐடெல் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.
    • இதில் உள்ள மெமரி ஃபியுஷன் தொழில்நுட்பம் ரேம்-ஐ 7 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ள செய்கிறது.

    ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஐடெல் P40 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஐடெல் P40 மாடலில் 6.6 இன்ச் HD டிஸ்ப்ளே, ஆக்டாகோர் SC9863A பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, QVGA சென்சார், டூயல் ஃபிளாஷ், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 6000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஐடெல் P40 ஸ்மார்ட்போன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. 

     

    ஐடெல் P40 அம்சங்கள்:

    6.6 இன்ச் HD டிஸ்ப்ளே, 1612x720 பிக்சல் ரெசல்யுஷன்

    4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    6 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி

    7 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆக்டாகோர் SC9863A பிராசஸர்

    13MP பிரைமரி கேமரா

    QVGA கேமரா, ஃபிளாஷ்

    5MP செல்ஃபி கேமரா

    ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன்

    6000 எம்ஏஹெச் பேட்டரி

    18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஐடெல் P40 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 7 ஆயிரத்து 699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஃபோர்ஸ் பிளாக், டிரீமி புளூ மற்றும் லக்சரியஸ் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    • அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் புதிய GTR மினி ஸ்மார்ட்வாட்ச் வட்ட வடிவ டயல், AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
    • புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அமேஸ்ஃபிட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது அணியக்கூடிய சாதனத்தை அறிமுகம் செய்தது. புதிய அமேஸ்ஃபிட் GTR மினி மாடலில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. மிட்-ரேன்ஜ் பிரிவில் களமிறங்கி இருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச்-இல் காம்பேக்ட் டிசைன், வட்ட வடிவம் கொண்டிருக்கிறது. இத்துடன் 1.28 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, பேனல், HD ரெசல்யூஷன், வளைந்த கிளாஸ் பாதுகாப்பு உள்ளது.

    ஸ்மார்ட்வாட்ச்-இன் வலதுபுறம் இருக்கும் வட்ட வடிவ டயல் கொண்டு மெனு மற்றும் இதர ஆப்ஷன்களை இயக்க முடியும். மிட்-ரேன்ஜ் மாடல் என்ற போதிலும், பிரீமியம் அனுபவத்தை வழங்கும் வகையில், இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபிரேம் கொண்டிருக்கிறது.

     

    புதிய அமேஸ்ஃபிட் GTR மினி மாடல் முழுமையாக சார்ஜ் செய்து பேட்டரி சேவிங் மோடில் அதிகபட்சம் 20 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. வழக்கமான பயன்பாடுகளின் போது, இந்த ஸ்மார்ட்வாட்ச் அதிகபட்சம் 14 நாட்களுக்கு பேக்கப் வழங்கும். இத்துடன் 120-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இவைதவிர, ஹார்ட் ரேட் மாணிட்டரிங், ஸ்டிரெஸ் லெவல் மேப்பிங், SpO2 மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்திய சந்தையில் புதிய அமேஸ்ஃபிட் GTR மினி மாடலின் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைத்தளத்தில் நடைபெறுகிறது. புதிய அமேஸ்ஃபிட் GTR மினி மாடல் மிட்நைட் பிளாக், மிஸ்டி பின்க் மற்றும் ஓசன் புளூ என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

    • சாம்சங் நிறுவனம் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய ஸ்மார்ட்போன்களில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி A54 மற்றும் கேலக்ஸி A34 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. கேலக்ஸி A54 மாடலில் முற்றிலும் புதிய எக்சைனோஸ் 1380 பிராசஸரும், கேலக்ஸி A34 மாடலில் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கேலக்ஸி A54 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 5MP மேக்ரோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி A34 மாடலில் 48MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5MP மேக்ரோ கேமரா, 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் OIS, வீடியோ டிஜிட்டல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் போன்ற அம்சங்கள் உள்ளன.

    இரு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒன்யுஐ 5.1 வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் நான்கு ஒஎஸ் அப்கிரேடுகள், ஐந்து ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை இரு மாடல்களும் பெற இருக்கின்றன. வாய்ஸ் ஃபோக்கஸ், நாக்ஸ் செக்யுரிட்டி, பிரைவசி டேஷ்போர்டு, பிரைவேட் ஷேர் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

     

    சாம்சங் கேலக்ஸி A54 5ஜி அம்சங்கள்:

    6.4 இன்ச் FHD+ 1080x2340 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி- ஒ HDR டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

    ஆக்டா கோர் எக்சைனோஸ் 1380 பிராசஸர்

    மாலி G68 MP5 GPU

    8 ஜிபி ரேம்

    128 ஜிபி, 256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் சாம்சங் ஒன் யுஐ 5.1

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS

    12MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா

    5MP டெப்த் சென்சார், f/2.4, எல்இடி ஃபிளாஷ்

    32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

     

    சாம்சங் கேலக்ஸி A34 5ஜி அம்சங்கள்:

    6.4 இன்ச் FHD+ 1080x2340 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி- யு டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர்

    மாலி G68 MC4 GPU

    8 ஜிபி ரேம்

    128 ஜிபி, 256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் சாம்சங் ஒன் யுஐ 5.1

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    48MP பிரைமரி கேமரா, OIS

    8MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா

    5MP மேக்ரோ சென்சார், f/2.4, எல்இடி ஃபிளாஷ்

    13MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சாம்சங் கேலக்ஸி A54 ஸ்மார்ட்போன் ஆசம் லைம், ஆசம் கிராஃபைட் மற்றும் ஆசம் வைலட் போன்ற நிறங்களிலும், கேலக்ஸி A34 ஸ்மார்ட்போன் ஆசம் லைன், ஆசம் கிராஃபைட் மற்றும் ஆசம் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது.

    கேலக்ஸி A34 (8ஜிபி+128ஜிபி) விலை ரூ. 30 ஆயிரத்து 999

    கேலக்ஸி A34 (8ஜிபி+256ஜிபி) விலை ரூ. 32 ஆயிரத்து 999

    கேலக்லி A54 (8ஜிபி+128ஜிபி) விலை ரூ. 38 ஆயிரத்து 999

    கேலக்ஸி A54 (8ஜிபி+256ஜிபி) விலை ரூ. 40 ஆயிரத்து 999

    இரு ஸ்மார்ட்போன்களும் சாம்சங் ஸ்டோர் மற்றும் பார்ட்னர் ஸ்டோர், சாம்சங் வலைத்தளம், இதர ஆன்லைன் தளங்களில் மார்ச் 28 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. முன்பதிவு இன்று (மார்ச் 16) துவங்கி மார்ச் 27 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    அறிமுக சலுகைகள்:

    புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் ரூ. 3 ஆயிரம் கேஷ்பேக், ரூ. 2 ஆயிரத்து 500 சாம்சங் அப்கிரேடு போனஸ், முன்பதிவு செய்வோர் பட்ஸ் லைவ் மாடலினை ரூ. 999-க்கு வாங்கிட முடியும். இத்துடன் எளிய மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

    • நத்திங் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் 2 மாடல் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய இயர்பட்ஸ் LHDC ஆடியோ 5.0, IP54 சான்று பெற்று இருக்கிறது.

    நத்திங் நிறுவனம் தனது முதல் இரண்டாம் தலைமுறை சாதனம்- நத்திங் இயர் (2) மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய நத்திங் இயர் (2) மாடல் மார்ச் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தோற்றத்தில் புதிய இயர்பட்ஸ் நத்திங் இயர் (1) போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய மாடலில் மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இந்த நிலையில், நத்திங் இயர் (2) மாடலின் அம்சங்கள் அடங்கிய டீசர்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி நத்திங் இயர் (2) மாடலில் IP54 சான்று, LHDC ஆடியோ 5.0 வசதி வழங்கப்படுகிறது. டுவிட்டரில் வெளியாகி இருக்கும் புதிய டீசர்களில் நத்திங் இயர் (2) அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது. நத்திங் இயர் (2) மாடலில் IP54 சான்று, LHDC ஆடியோ 5.0 சப்போர்ட் வழங்கப்படுகிறது.

    இது ப்ளூடூத் ஸ்டிரீமிங் மூலம் அதிக தரமுற்ற ஆடியோ வசதியை வழங்குகிறது. நத்திங் நிறுவனர் கார்ல் பெய் ஸ்பாடிஃபை-ஐ தொடர்பு கொண்டு அதன் லைப்ரரியை LHDC-க்கு அப்டேட் செய்ய கோரிக்கை விடுத்திருக்கிறார். இவற்றை கொண்டே புதிய நத்திங் இயர் (2) மாடலில் ஹை-ரெஸ் ஆடியோ வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நத்திங் இயர் (2) மாடல் அதிக காம்பேக்ட் டிசைன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் ANC, டிரான்ஸ்பேரன்சி மோட் உள்ளிட்டவை வழங்கப்படலாம். நத்திங் இயர்பட்ஸ் மற்றும் கேஸ் டிரான்ஸ்பேரண்ட் டிசைன் கொண்டிருக்கிறது. நத்திங் இயர் (2) மாடல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    • ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபைண்ட் X6 மற்றும் பேட் 2 மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய ஒப்போ சாதனங்கள் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஒப்போ நிறுவனம் தனது ஃபைண்ட் X6 சீரிஸ் ஸ்மார்ட்போன் மார்ச் 21 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு ஒப்போ அறிமுகம் செய்த ஃபைண்ட் X5 சீரிஸ்-இன் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். டீசர் மூலம் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஃபைண்ட் X5 சீரிஸ் லெதர் பேக், டெலிபோட்டோ கேமரா, மரிசிலிகான் X NPU மற்றும் ஹேசில்பிலாட் டியூனிங் செய்யப்பட்டு இருக்கும் என தெரியவந்துள்ளது.

    புதிய ஸ்மார்ட்போன் 1X, 3X மற்றும் 6X ஜூம் வசதி கொண்டிருக்கும் என ஒப்போ வெளியிட்டு இருக்கும் டீசர் வீடியோவில் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கொண்டு நிலவின் தெளிவான புகைப்படங்களையும், நிலவின் கீழ் மனிதர்களின் தெளிவான புகைப்படங்களையும் எடுக்க முடியும் என ஒப்போ தெரிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்-டைம் ஏஐ நாய்ஸ் ரிடக்ஷன் வசதியை வழங்குகிறது.

     

    ஒப்போ ஃபைண்ட் X6 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    6.74 இன்ச் 2772x1240 பிக்சல் 1.5K 120Hz LTPO AMOLED ஸ்கிரீன்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்

    அட்ரினோ 740 GPU

    12 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் கலர் ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS

    10-பிட் 50MP அல்ட்ரா வைடு கேமரா

    50MP டெலிபோட்டோ கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்

    5ஜி, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    4800 எம்ஏஹெச் பேட்டரி

    80 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங்

    புதிய ஃபைண்ட் X6 சீரிஸ் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஒப்போ பேட் 2 மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஒப்போ டேப்லெட் மாடலில் கிட்டத்தட்ட அதன் முந்தைய வெர்ஷனில் இருந்ததை போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் பேட் மாடஸ் லைட் ஃபெதர் கோல்டு மற்றும் நெபுளா கிரே என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    ஒப்போ பேட் 2 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    11.6 இன்ச் 2800x2000 பிக்சல் LCD 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், 144Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் டிமென்சிட்டி 9000 பிராசஸர்

    மாலி 710 10-கோர் GPU

    8 ஜிபி, 12 ஜிபி ரேம்

    256 ஜிபி, 512 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் கலர் ஒஎஸ் 13

    13MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    8MP செல்ஃபி கேமரா

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி

    9500 எம்ஏஹெச் பேட்டரி

    67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    • வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஐபோனில் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
    • வாட்ஸ்அப் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வசதி ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வசதியை கடந்த மாதம் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்கியது. புதிய அப்டேட் மூலம் பயனர்கள் தங்களின் வாய்ஸ் நோட்-களை ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும். இந்த அம்சம் தற்போது ஐஒஎஸ் பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது.

    வாய்ஸ் ஸ்டேட்டஸ் அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் 23.5.77 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் பயனர்கள் வாய்ஸ் நோட்-ஐ ஸ்டேட்டஸ் ஆக வைக்க செய்கிறது. புதிய அம்சத்தை பெற ஆப் ஸ்டோரில் வாட்ஸ்அப் செயலியை தேர்வு செய்து, அப்டேட் செய்ய வேண்டும். செயலியை அப்டேட் செய்ததும் இந்த வசதி வழங்கப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.

     

    பயன்படுத்துவது எப்படி?

    - ஐபோனில் வாட்ஸ்அப் செயலியை திறக்கவும்

    - ஸ்கிரீனின் கீழ்புறம் இருக்கும் ஸ்டேட்டஸ் ஆப்ஷனை கிளிக் செய்யவும்

    - கீழ்புறத்தில் வலதுபுறமாக இருக்கும் பென்சில் ஐகானை கிளிக் செய்யவும்

    - வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் செய்ய மைக்ரோபோனை கிளிக் செய்யவும்

    - மைக்ரோபோன் ஐகானை கிளிக் செய்த படி மெசேஜை ரெக்கார்ட் செய்யவும். அதிகபட்சம் 30 நொடிகளுக்கு வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் செய்யவும்

    - மெசேஜை ரெக்கார்ட் செய்து முடித்தபின் அழுத்தி பிடித்திருக்கும் மைக்ரோபோன் ஐகானை விட்டுவிட வேண்டும்

    - ரெக்கார்ட் செய்த மெசேஜை ரிவியூ செய்த பின், அனுப்புவதற்கான ஐகானை கிளிக் செய்யவும்

    இவ்வாறு செய்தபின் உங்களின் வாய்ஸ் மெசேஜ் வாட்ஸ்அப் காண்டாக்ட்களுக்கு தெரியும்..

    ஆப் ஸ்டோரில் இருக்கும் வாட்ஸ்அப் தளத்தில் பிக்சர் இன் பிக்சர் மோட் வசதி ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய அம்சம் ஐஒஎஸ் பயனர்கள் வாட்ஸ்அப் வீடியோ காலில் இருந்தபடி பல்வேறு டாஸ்குகளை மேற்கொள்ள செய்கிறது.

    • அரசு வியாபாரங்களுக்கு எளிய நடைமுறைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
    • டிஜிட்டல் தனியுரிமை பாதுகாப்பை குடிமக்களுக்கு வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படும் செயலிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கவோ அல்லது பாதுகாப்பு பரிசோதனை செய்யவோ திட்டமிடவில்லை என அரசு தெரிவித்து இருக்கிறது. உள்நாட்டில் மின்னசாதன பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிஜிட்டல் தனியுரிமை பாதுகாப்பை குடிமக்களுக்கு வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களின் படி கைப்பேசிகள் மற்றும் ஒஎஸ் அப்டேட்கள் குறித்து ஆய்வு செய்ய சோதனை செய்ய ஆய்வகங்களை கட்டமைக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.

    இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பதில் அளித்து இருக்கிறது. அதில் அரசு வியாபாரங்களுக்கு எளிய நடைமுறைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது என்றும், 2026 ஆண்டு வாக்கில் மின்னணு உற்பத்தியில் 300 பில்லியன் டாலர்களை எட்ட இலக்கு நிர்ணயம் செய்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது.

    மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ர அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம் பாதுகாப்பு பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கை எடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என தெரிவித்து இருக்கிறார்.

    பாதுகாப்பான ஒஎஸ் அப்டேட் மற்றும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படும் செயலிகள் குறித்த தரக்கட்டுப்பாட்டு பணிகளை பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (BIS) கவனித்துக் கொள்ளும் என இதுகுறித்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    உற்பத்தியாளர்கள், இதர சந்தையை சேர்ந்த பங்குதாரர்களுடன் கூடுதலாக சந்திப்புகளை நடத்திய பின் புதிய விதிகள் விதிக்கப்பட்டு, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் இவற்றை ஒரு ஆண்டிற்குள் பின்பிற்ற வேண்டும்.

    ×