என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஸ்னாப்டிராகன் 695 பிராசஸருடன் புதிய போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    ஸ்னாப்டிராகன் 695 பிராசஸருடன் புதிய போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

    • போக்கோ நிறுவனத்தின் புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது.
    • புதிய போக்கோ X5 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13 வழங்கப்பட்டு இருக்கிறது.

    போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய போக்கோ X5 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய போக்கோ X5 5ஜி மாடலில் 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பன்ச் ஹோலில் 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13 ஒஎஸ் கொண்டிருக்கும் போக்கோ X5 5ஜி மாடலில் புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    போக்கோ X5 5ஜி அம்சங்கள்:

    6.67 இன்ச் FHD + 1080x2400 பிக்சல், சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 3

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619L GPU

    6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13

    ஹைப்ரிட் டூயல் சிம்

    48MP பிரைமரி கேமரா

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    13MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக்

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    போக்கோ X5 5ஜி ஸ்மார்ட்போன் ஜாகுவார் பிளாக், வைல்ட்கேட் புளூ மற்றும் சூப்பர்நோவா கிரீன் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அறிமுக சலுகையாக போக்கோ X5 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×