search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    மார்ச் 10-இல் இந்தியா வரும் மோட்டோ G73 5ஜி
    X

    மார்ச் 10-இல் இந்தியா வரும் மோட்டோ G73 5ஜி

    • மோட்டோரோலா நிறுவனத்தன் புதிய மோட்டோ G73 5ஜி ஸ்மார்ட்போன் டிமென்சிட்டி 930 பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • டூயல் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட மோட்டோ G73 5ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.

    மோட்டோரோலா நிருவனத்தின் மோட்டோ G73 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் இதுவரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் மீடியாடெக் டிமென்சிட்டி 930 பிராசஸருடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ G63 5ஜி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய G73 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ப்ளிப்கார்ட் தளத்தில் உள்ள லேண்டிங் பேஜ் விவரங்களின் படி புதிய மோட்டோ G73 5ஜி ஸ்மார்ட்போன் அதன் சர்வதேச வேரியண்ட் போன்றே காட்சியளிக்கிறது. இந்தியாவில் மீடியாடெக் டிமென்சிட்டி 930 பிராசஸர் உடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் இது என லேண்டிங் தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    கடந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டிமென்சிட்டி 930 பிராசஸர் எம்எம்வேவ் திறன் கொண்டுள்ளது. இது 6 நானோமீட்டர் முறையில் ஃபேப்ரிகேஷன் செய்யப்பட்ட பிராசஸர் ஆகும். இது அதிகபட்சம் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் கிளாக் வேகம் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

    ப்ளிப்கார்ட் லேண்டிங் பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா சென்சார்கள் பற்றி அதிக விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி இந்த மாடலில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 6.5 இன்ச் FHD+ LCD பேனல், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் சப்போர்ட் உள்ளது.

    Next Story
    ×