search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    விரைவில் அறிமுகமாகும் போக்கோ F5 5ஜி - இணையத்தில் வெளியான முக்கிய விவரங்கள்
    X

    விரைவில் அறிமுகமாகும் போக்கோ F5 5ஜி - இணையத்தில் வெளியான முக்கிய விவரங்கள்

    • போக்கோ நிறுவனத்தின் புதிய F5 சீரிஸ் ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • புதிய F5 சீரிசில் போக்கோ F5 5ஜி மற்றும் F5 ப்ரோ 5ஜி என இரு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது.

    போக்கோ நிறுவனம் சர்வதேச சந்தையில் போக்கோ F5 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய போக்கோ F5 சீரிசில் போக்கோ F5 5ஜி மற்றும் போக்கோ F5 ப்ரோ 5ஜி என இரு மாடல்கள் இடம்பெற்று இருக்கிறது. இரு மாடல்களும் இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

    அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பாகவே போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் FCC சான்றளிக்கும் வலைத்தளத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதில் புதிய ஸ்மார்ட்போன் தகவல்கள் இடம்பெற்று இருக்கின்றன. FCC வலைத்தள விவரங்களின் படி போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போன் 23049PCD8G எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

    சான்று பெற்று இருப்பதை அடுத்து புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். FCC வலைத்தள விவரங்களின் படி போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போன் மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் டாப் எண்ட் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. புதிய போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14, என்எஃப்சி, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத், டூயல் சிம், ஏழு 5ஜி பேண்ட்கள், IR பிளாஸ்டர் வழங்கப்படுகிறது.

    போக்கோ F5 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போன், விரைவில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ரெட்மி நோட் 12 டர்போ மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் என கூறப்படுகிறது. இதில் 6.67 இன்ச் FHD+ AMOLED பேனல், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் பிராசஸர், 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP+2MP லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×