search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    விரைவில் மேம்பட்ட ரேசர் Foldable ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் மோட்டோரோலா
    X

    விரைவில் மேம்பட்ட ரேசர் Foldable ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் மோட்டோரோலா

    • மோட்டோரோலா நிறுவனம் 2023 ரேசர் ஸ்மார்ட்போன் உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்தி இருக்கிறது.
    • புதிய மோட்டோ ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் அதன் முந்தைய மாடலை விட சிறப்பானதாக இருக்கும்.

    2023 மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்படுவதை லெனோனோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்களுடன், சிறப்பாக உருவாக்கப்பட்டு இருக்கும். மோட்டோரோலா இதுபோன்ற மாடலை உருவாக்கி வருவதாக ஏற்கனவே பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது.

    அந்த வரிசையில் தற்போது இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் லீக் ஆகி இருக்கிறது. இதுதுவிர புதிய மாடல் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற விவரங்களும் வெளியாகி உள்ளது. 2023 மோட்டோரோலா ரேசர் அம்சங்கள், டிசைன், வெளியீட்டு விவரம் பற்றி லெனோவோ சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷன்களை விட சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறது.

    மற்ற சிறப்பம்சங்களை விட புதிய மாடலின் ஹின்ஜ் மற்றும் மடிக்கக்கூடிய டிசைனில் அதிகளவு மேம்படுத்தல்கள் இருக்கும் என கூறப்படுகிறது. விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால், 2022 மோட்டோரோலா ரேசர் மாடல் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்படுவது சந்தேகத்திற்குரிய விஷயம் தான் எனலாம். மேலும் 2023 ரேசர் மாடல் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலை விட சிறப்பானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய மாடலில் மற்றொரு முக்கிய அப்கிரேடு அதன் கவர் ஸ்கிரீன். 2023 ரேசர் மாடலில் 2.7 இன்ச் AMOLED பேனல் கொண்ட கவர் ஸ்கிரீன் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. ரேசர் மாடல் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் நிலையிலும், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் முன்னணியில் உள்ளது.

    Next Story
    ×