search icon
என் மலர்tooltip icon

    கணினி

    புதிய 15 இன்ச் மேக்புக் ஏர் அறிமுகம் செய்யும் ஆப்பிள்?
    X

    புதிய 15 இன்ச் மேக்புக் ஏர் அறிமுகம் செய்யும் ஆப்பிள்?

    • ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மேக்புக் ஏர் விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • புதிய 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலில் ஆப்பிள் M3 சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய மேக்புக் ஏர் மாடலை இருவித அளவுகளில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. புதிய மாடல் 13 இன்ச் மற்றும் 15 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் என தெரிகிறது. இரு மாடல்களிலும் முற்றிலும் புதிய M3 சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    பிரபல ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மன், குறைந்தபட்சம் புதிய 13 இன்ச் மேக்புக் ஏர் மாடலில் இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கும் M3 சிப்செட் வழங்கப்படலாம் என தெரிவித்து இருக்கிறது. புதிய M3 சிப்செட் TSMC-யின் அதிநவீன 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

    13 இன்ச் போன்றே புதிய 15 இன்ச் மாடலிலும் M3 சிப்செட் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த ஆண்டு கோடை கால வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய 15 இன்ச் மாடலில் M2 சிப்செட் வழங்கப்படும் என்றும் இது விசேஷமாக இருக்கும் என மார்க் குர்மன் தெரிவித்து இருக்கிறார். டிஸ்ப்ளே பிரிவு வல்லுனரான ராஸ் யங் சமீபத்தில் வெளியிட்ட தகவல்களில் ஆப்பிள் வினியோக பிரிவு சார்பில் புதிய 15.5 இன்ச் மேக்புக் ஏர் மாடலுக்கான டிஸ்ப்ளே உற்பத்தி துவங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இதுதவிர ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களை புதிதாக மஞ்சள் நிறத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக 201 வாக்கில் வெளியிடப்பட்ட ஐபோன் 11 மற்றும் 2018 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் XR போன்ற மாடல்கள் மஞ்சள் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.

    Next Story
    ×