search icon
என் மலர்tooltip icon

    கணினி

    40 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்கும் புதிய இயர்பட்ஸ் ரூ. 899 விலையில் அறிமுகம்
    X

    40 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்கும் புதிய இயர்பட்ஸ் ரூ. 899 விலையில் அறிமுகம்

    • விங்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 40 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.
    • இந்த இயர்பட்ஸ் ENC, கேம் மோட், டச் கண்ட்ரோல் மற்றம் IPX5 சான்று பெற்றுள்ளது.

    விங்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஃபேண்டம் 315 இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது. காதுகளில் சவுகரியத்தை ஏற்படுத்தும் டிசைன் கொண்ட பட்ஸ், நான்கு அழகிய நிறங்கள், நீண்ட பேக்கப் கொண்டிருக்கிறது. முன்னதாக ஃபேண்டம் 700 மாடல் இந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து புதிய ஃபேண்டம் 315 தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஃபேண்டம் 315 மாடல் எர்கோனோமிக் டிசைன், பிரீமியம் ஃபினிஷ் மற்றும் IPX5 ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இதில் உள்ள டச் இண்டர்ஃபேஸ் கொண்டு வால்யூம் மாற்றுவது, அழைப்புகளை மேற்கொள்வது, பாடல்களை மாற்றுவது, வாய்ஸ் அசிஸ்டண்ட் அழைப்புகள் மற்றும் கேம் மோடில் மேற்கொள்ள முடியும்.

    புதிய இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் பத்து மணி நேர பேக்கப் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் உடன் சேர்க்கும் போது 40 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கும். இத்துடன் ஸ்பீடு சின்க், ஒபன் அண்ட் ஆன் கொண்ட ப்ளூடூத் 5.3, கேம் மோட், அல்ட்ரா லோ லேடன்சி ஆடியோ, 13mm ஹை ஃபிடிலிட்டி கம்போசிட் டிரைவர்கள், ENC மைக்குகளை கொண்டுள்ளன.

    விங்ஸ் ஃபேண்டம் 315:

    எர்கோனோமிக் டிசைன்

    13mm ஹை ஃபிடிலிட்டி கம்போசிட் டிரைவர்

    போல்டு பேஸ் தொழில்நுட்பம்

    பிரத்யேக கேம் மோட்

    ENC

    டச் கண்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்டண்ட்

    ப்ளூடூத் 5.3

    40 மணி நேர பேக்கப்

    டைப் சி புல்லட் ஃபாஸ்ட் சார்ஜ் வசதி

    IPX5 வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட்

    விங்ஸ் சின்க் ஆப் சப்போர்ட்

    ஒரு வருட வாரண்டி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    விங்ஸ் ஃபேண்டம் 315 மாடல் குறுகிய காலக்கட்டத்திற்கு ரூ. 899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் கிரீன், ஆரஞ்சு, வைட் மற்றும் பிளாக் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை விங்ஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் நடைபெறுகிறது.

    Next Story
    ×