என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    2K+ Foldable ஸ்கிரீன் கொண்ட டெக்னோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
    X

    2K+ Foldable ஸ்கிரீன் கொண்ட டெக்னோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

    • டெக்னோ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 7.85 இன்ச் 2K+ ஃபோல்டபில் ஸ்கிரீன் கொண்டுள்ளது.
    • இதில் 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP டெலிபோட்டோ கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.

    டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்- டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு மாடலில் 7.85 இன்ச் 2K+ ஃபோல்டபில் 10-120Hz LTPO AMOLED ஸ்கிரீன் மற்றும் 6.42 இன்ச் 1080p 120Hz-10-120Hz LTPO AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதல் ஏரோஸ்பேஸ் தர புதுமைமிக்க டிராப்-வடிவ ஹின்ஜ் மற்றும் பிரத்யேகமாக ஃபிக்சட் ஆக்சிஸ் ரோடேட் மற்றும் ஸ்லைடு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ரிவர்ஸ் ஸ்னாப் ஸ்டிரக்ச்சர் மடிக்கும் அனுபவத்தை சிரமம் அற்றதாகவும், கிரீஸ் அற்றதாகவும் மாற்றுகிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் தரம் சுமார் இரண்டு லட்சம் முறைக்கும் அதிகமாக பரிசோதனை செய்யப்பட்டதாக டெக்னோ அறிவித்துள்ளது.

    இதில் உள்ள மைக்ரோ-கர்வ்டு இரண்டாவது ஸ்கிரீன் ஸ்மார்ட்போனினை வைத்துக்கொள்ள எளிமையாக்குகிறது. இதன் பிளாக் நிறம் சருமத்திற்கு எந்தவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாத லெதர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள வைட் நிறம் மறுசுழற்சி செய்யப்பட்ட பசுமை சிலிகான் லெசர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000+ பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஹை ஒஎஸ்- ஃபோல்டு மற்றும் ஸ்ப்லிட் ஸ்கிரீன், பேரலல் விண்டோஸ் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்கிரீனுக்கு ஏற்ப ஆப்டிமைஸ் செய்யப்பட்டு இருக்கிறது.

    டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு 5ஜி அம்சங்கள்:

    7.65 இன்ச் 2296x2000 பிக்சல் 2K+ 10-120Hz LTPO AMOLED மடிக்கக்கூடிய ஸ்கிரீன்

    6.42 இன்ச் 1080x2550 ிக்சல் FHD+ 10-120Hz LTPO AMOLED வெளிப்புற டிஸ்ப்ளே

    3.2GHz ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர்

    மாலி G710 MC10 GPU

    8 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஹை ஒஎஸ் 13 ஃபோல்டு

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    13MP அல்ட்ரா வைடு கேமரா

    50MP போர்டிரெயிட் டெலிபோட்டோ கேமரா

    32MP வெளிப்புற / 16 MP உள்புற செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு 5ஜி மாடல் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 99 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் துவங்குகிறது.

    Next Story
    ×