என் மலர்
புதிய கேஜெட்டுகள்

இணையத்தில் லீக் ஆன விவோ X ஃபோல்டு 2 அம்சங்கள்
- விவோ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 8 இன்ச் டிஸ்ப்ளே, இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என தகவல்.
- விவோ X ஃபோல்டு 2 மாடலின் டிஸ்ப்ளே 2K ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
விவோ நிறுவனத்தின் அடுத்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவோ X ஃபோல்டு 2 என அழைக்கப்பட இருக்கிறது. கடந்த வாரம் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி மற்றும் சார்ஜிங் விவரங்களை டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் எனும் டிப்ஸ்டர் வெளியிட்டு இருந்தது. தற்போது இதே டிப்ஸ்டர் புதிய விவோ X ஃபோல்டு 2 விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி விவோ X ஃபோல்டு 2 மாடலில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன், 2K ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 8 இன்ச் டிஸ்ப்ளே, இதன் கவர் டிஸ்ப்ளேவில் உள்புற ஸ்கிரீன், அல்ட்ராசோனிக் இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. விவோ X ஃபோல்டு 2 உலகின் முதல் முறையாக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்ட முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது.
இந்த பிராசஸருடன் 16 ஜிபி ரேம், 512 ஜிபி அல்லது 1 டிபி மெமரி வழங்கப்படுகிறது. விவோ X ஃபோல்டு 2 மாடலில் 4800 எம்ஏஹெச் டூயல் செல் பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒரிஜின் ஒஎஸ் 3.0 வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. புகைப்படங்களை எடுக்க விவோ X ஃபோல்டு 2 மாடலில் 50MP சோனி IMX866 பிரைமரி கேமரா, OIS வசதி வழங்கப்படுகிறது.
இத்துடன் 12MP சோனி IMX663 சென்சார் அல்ட்ரா வைடு மற்றும் டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. விவோ X ஃபோல்டு 2 மாடல் இந்த ஆஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் விவோ X ஃப்ளிப் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது.






