என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    புதுவித கூலிங் வசதியுடன் அறிமுகமான ஒன்பிளஸ் 11 கான்செப்ட்
    X

    புதுவித கூலிங் வசதியுடன் அறிமுகமான ஒன்பிளஸ் 11 கான்செப்ட்

    • ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்றே புதிய ஒன்பிளஸ் 11 கான்செப்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
    • சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் புதுவித கூலிங் வசதி கொண்ட ஒன்பிளஸ் 11 கான்செப்ட் அறிமுகமாகி இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் ஆக்டிவ் கூலிங் தொழில்நுட்பம் - ஆக்டிவ் க்ரியோஃபிளக்ஸ் கொண்ட ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போனை அறிமுகம் செய்து இருக்கிறது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் புதிய கான்செப்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    ஒன்பிளஸ் 11 கான்செப்ட் மாடலில் ஆக்டிவ் க்ரியோஃபிளக்ஸ் உள்ளது. இந்த தொழில்நுட்பம் அதிகபட்சம் 2.1 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பத்தை குறைக்கும் திறன் கொண்டிருக்கிறது. கேம்பிளே-வின் போது ஃபிரேம் ரேட்களை இது 3 முதல் 4 fps வரை மேம்படுத்துகிறது. ஆக்டிவ் க்ரியோஃபிளக்ஸ் சார்ஜிங்கின் போது வெப்பநிலையை 1.6 டிகிரி வரை குறைக்கிறது. இதன் மூலம் சார்ஜிங் நேரம் 30 முதல் 45 நொடிகள் வரை குறையும்.

    ஆக்டிவ் க்ரியோஃபிளக்ஸ் தொழில்நுட்பத்தின் மத்தியில் தொழில்துறை கிரேடு செராமிக் பெய்சோஎலெக்ட்ரிக் மைக்ரோபம்ப்களை கொண்டுள்ளது. இத்துடன் பைப்லைன்கள் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ள்ள மைக்ரோபம்ப்கள் ஸ்மார்ட்போனின் எடை மற்றும் தடிமன் அளவுகளை பாதிக்காமல், வட்டப்பாதையில் லிக்விட் பாயச் செய்கிறது.

    புதிய கூலிங் தொழில்நுட்பம் தவிர ஒன்பிளஸ் நிறுவனம் 45 வாட் லிக்விட் கூலர் ஒன்றையும் அறிமுகம் செய்து இருக்கிறது. இது செமிகண்டக்டர் சார்ந்த தெர்மோ எலெக்ட்ரிக் கூலர் ஆகும். இது மேம்பட்ட கூலிங் அனுபவத்தை வழங்கும். புதுமை மிக்க செமிகண்டக்டர் வாட்டர்-கூலிங் ஆர்கிடெக்ச்சர் மூலம் ஒன்பிளஸ் 45 வாட் லிக்விட் கூலர் சாதனத்தின் வெப்பநிலையை 20 டிகிரி வரை குறைக்கும்.

    Next Story
    ×