search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    இணையத்தில் லீக் ஆன மோட்டோரோலா ரேசர் 2023 வெளியீட்டு தேதி
    X

    இணையத்தில் லீக் ஆன மோட்டோரோலா ரேசர் 2023 வெளியீட்டு தேதி

    • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கிறது.
    • புதிய மோட்டோரோலா ரேசர் 2023 விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    மோட்டோரோலா நிறுவனம் புதிய ரேசர் 2023 ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. புதிய மோட்டோரோலா ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில், புதிய மோட்டோரோலா ரேசர் 2023 மாடல் டிசைன் விவரங்களை டிப்ஸ்டரான சமீபத்தில் தான் எவான் பிளாஸ் வெளியிட்டு இருந்தார்.

    தற்போது இதே டிப்ஸ்டர் புதிய ரேசர் 2023 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை தெரிவித்து இருக்கிறார். அதன்படி புதிய மோட்டோரோலா ரேசர் 2023 ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 வெளியீட்டுக்கு முன்பே அறிமுகம் செய்யப்படும் என எவான் பிளாஸ் தெரிவித்து இருக்கிறார். சாம்சங் தனது அடுத்த தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம்.

    மோட்டோரோலா "Juno Announcement Reveal + Event Activation Launch" தேதி ஜூன் 1 என தகவல் வெளியாகி உள்ளது. ஜூனே என்பது ரேசர் 2023 மாடலின் குறியீட்டு பெயர் ஆகும். வரும் மாதங்களில் புதிய ரேசர் 2023 ஸ்மார்ட்போனின் வெளியீடு நடைபெற இருக்கிறது. அறிமுக நிகழ்வுக்கு முன் புதிய ரேசர் மாடலின் அம்சங்களை படிப்படியாக அம்பலப்படுத்தும் டீசர்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

    புதிய மோட்டோரோலா ரேசர் 2023 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி இதுவரை அதிக தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 144Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இதே அம்சங்கள் ரேசர் 2022 மாடலிலும் வழங்கப்பட்டு இருப்பதால், புதிய மாடல் சிறு அப்டேட் ஆக இருக்கும் என்றே தெரிகிறது.

    ரேசர் தவிர மோட்டோரோலா நிறுவனம் மற்றொரு கிளாம்ஷெல் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாகவும் எவான் பிளாஸ் தெரிவித்து இருக்கிறார். இந்த மாடல் "வீனஸ்" எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் அம்சங்கள் மர்மமாக இருக்கும் நிலையில், இதில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என்றும் இது உண்மையான ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    டிசைனை பொருத்தவரை புதிய ஸ்மார்ட்போன் ரேசர் 2022 மாடலை போன்ற டிசைன் கொண்டிருக்கும் என்றும் இதில் 6.7 இன்ச் மடிக்கக்கூடிய OLED பேனல், பன்ச் ஹோல் டிசைன், கவர் டிஸ்ப்ளேவில் சிறு மாற்றம் செய்யப்பட்டு 3.5 இன்ச் அளவில் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட இருக்கிறது.

    Photo Courtesy: Evan Blass

    Next Story
    ×