search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    போக்கோ C55 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு
    X

    போக்கோ C55 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

    • போக்கோ நிறுவனம் தனது புதிய C55 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்தது.
    • கடந்த மாதம் போக்கோ C5 ஸ்மார்ட்போன் அறிமுகமான நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகமாகிறது.

    பல்வேறு டீசர்களை தொடர்ந்து போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ C55 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. பட்ஜெட் பிரிவில் விற்பனைக்கு வர இருக்கும் போக்கோ C55 இந்திய சந்தையில் பிப்ரவரி 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    கடந்த மாதம் போக்கோ C5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றி எந்த விவரமும் வெளியாகவில்லை. எனினும், புதிய போக்கோ C55 ஸ்மார்ட்போன் லெதர் போன்ற பின்புறம், டூயல் கேமரா சென்சார்கள், பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களின் படி போக்கோ C55 ஸ்மார்ட்போன் ரிபிராண்டு செய்யப்பட்ட ரெட்மி 12C மாடலாக இருக்கும் என தெரிகிறது. இதன் பின்புறம் வித்தியாசமான பேனல் இடம்பெற்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கைரேகை சென்சார், கேமரா மாட்யுலில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

    ரெட்மி 12C ஸ்மார்ட்போனில் 6.71 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI13 ஸ்கின் கொண்டிருக்கும் ரெட்மி 12C ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் அடாப்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கனெக்டிவிட்டிக்கு 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1 மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க போக்கோ C55 ஸ்மார்ட்போனில் டூயல் கேமராக்கள் வழங்கப்படுகின்றன. இவை 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா என கூறப்படுகிறது. இத்துடன் 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    Next Story
    ×