என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய நோக்கியா X சீரிஸ் ஸ்மார்ட்போன் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் பெற இருக்கிறது.

    பல்வேறு டீசர்களை தொடர்ந்து ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் பிப்ரவரி 20 ஆம் தேதி துவங்கும் என அறிவித்து இருக்கிறது. இதற்கான அறிவிப்பு நோக்கியா மொபைல் இந்தியா அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், மூன்று ஆண்டுகளுக்கு மாதாந்திர செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என ஹெச்எம்டி குளோபல் தெரிவித்து இருக்கிறது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிவிக்கப்பட்ட நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போன் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் மற்றும் 65 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூலம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்காக 100 சதவீத FSC சான்று மற்றும் 94 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட காகித பெட்டி பயன்படுத்தப்படுகிறது.

     

    நோக்கியா X30 5ஜி அம்சங்கள்:

    6.43 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619L GPU

    6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 12

    50MP பிரைமரி கேமரா, OIS, எல்இடி ஃபிளாஷ்

    13MP அல்ட்ரா வைடு கேமரா, கார்னிங் கொரில்லா கிளாஸ் DX+ கேமரா கிளாஸ் பாதுகாப்பு

    16MP செல்ஃபி கேமரா

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    வாட்டர் ரெசிஸ்டண்ட் IP67

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    4200 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    ஐரோப்பாவில் புதிய நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போனின் விலை 319 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 28 ஆயிரத்து 390 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய விலை இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட்டு விடும்.

    • சியோமி நிறுவனத்தின் புதிய டிவி ஸ்டிக் 4K மாடல் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
    • புதிய சியோமி டிவி ஸ்டிக் பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், டால்பி அட்மோஸ் வசதி கொண்டிருக்கிறது.

    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் சியோமி டிவி ஸ்டிக் 4K மாடலை அறிமுகம் செய்தது. இது இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்டிரீமிங் ஸ்டிக் ஆகும். புதிய சியோமி டிவி ஸ்டிக் 4K மாடலில் டால்பி விஷன், டால்பி அட்மோஸ் மற்றும் பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் உள்ளது. இத்துடன் நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ ஷாட்கட் கொண்ட Mi வாய்ஸ் ரிமோட் உடன் வழங்கப்படுகிறது.

    இவை தவிர புதிய சியோமி டிவி ஸ்டிக் 4K மாடலில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி உள்ளது. புதிய சியோமி டிவி ஸ்டிக் 4K மாடலில் குவாட் கோர் கார்டெக்ஸ் A35 பிராசஸர், ARM மாலி G31 MP2 GPU, டூயல் பேண்ட் வைபை, ஆண்ட்ராய்டு டிவி 11 மற்றும் பேட்ச்வால் ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    சியோமி டிவி ஸ்டிக் 4K அம்சங்கள்:

    HMDI மூலம் 4K வீடியோ அவுட்புட், டால்வி விஷன் சப்போர்ட்

    குவாட்கோர் கார்டெக்ஸ் A35 பிராசஸர்

    ARM மாலி G31 MP2 GPU

    2 ஜிபி ரேம்

    8 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு டிவி 11, பேட்ச்வால், க்ரோம்காஸ்ட்

    கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் ஹாட்கி, வாய்ஸ் ரிமோட்

    நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஹாட்கீ

    கூகுள் பிளே ஸ்டோர்

    HDMI, வைபை, ப்ளூடூத் 5.0

    மைக்ரோ யுஎஸ்பி பவர் போர்ட்

    வீடியோ டிகோடர்: AV1, H.264, MPEG-2, MPEG-1

    ஆடியோ: DTS HD, டால்பி அட்மோஸ்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சியோமி டிவி ஸ்டிக் 4K மாடலின் விலை இந்தியாவில் ரூ. 4 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை Mi வலைதளத்தில் பிப்ரவரி 20 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.

    • வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் புகைப்படங்களின் தரம் கம்ப்ரெஸ் செய்வதால் குறைந்துவிடுகிறது.
    • விரைவில், இந்த நிலை மாறி படங்களை அதன் ஒரிஜினல் தரத்தில் அனுப்பலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு விரைவில் புதிய வசதி வழங்கப்பட இருக்கிறது. இந்த வசதியை கொண்டு பயனர்கள் புகைப்படங்களை அதன் ஒரிஜினல் தரத்தில் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். எதிர்கால அப்டேட்களில் இதுபோன்ற வசதி வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு தளத்தில் வழங்கப்பட இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் தான், வாட்ஸ்அப் வெப் தளத்தில் இந்த வசதி வழங்கப்படுவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    மற்ற சோஷியல்-ஷேரிங் செயலிகளை எதிர்கொள்ளும் வகையில், வாட்ஸ்அப் புதிய வசதியை வழங்க இருக்கிறது. முதற்கட்டமாக இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் வெப் வெர்ஷன்களின் பீட்டா பதிப்புகளில் வழங்கப்பட இருக்கிறது. இது குறித்து WABetaInfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் புதிய வசதி தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வசதியை கொண்டு பயனர்கள் புகைப்படங்களை அதன் ஒரிஜினல் ரெசல்யூஷனில் ஷேர் செய்ய முடியும்.

    இவ்வாறு செய்வதால், புகைப்படங்களை அச்சடிக்க அனுப்பும் போதும் அதன் தரம் குறையாமல் இருக்கும். எனினும், அப்லோடு நேரத்தை குறைக்கவும், அதிக ஸ்பேஸ் எடுக்கப்படுவதை தவிர்க்கவும், தற்போது இருக்கும் கம்ப்ரெஸ்டு வெர்ஷன் தொடர்ந்து வழங்கப்படும் என கூறப்படுகிறது. செயலியின் புதிய அப்டேட்களில் இந்த வசதி வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் வழங்கப்பட இருக்கிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில், வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.23.2.11 அப்டேட்டில் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இதுதவிர வாட்ஸ்அப் நிறுவனம் ஏராளமான புதிய அம்சங்கள் மற்றும் வசதிகளை இந்த ஆண்டு வழங்க திட்டமிட்டு வருகிறது. டெலிகிராம், டிஸ்கார்டு மற்றும் சிக்னல் போன்ற போட்டி நிறுவன செயலிகளை எதிர்கொள்ளும் நோக்கில் வாட்ஸ்அப் புதிய வசதிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

    Photo Courtesy: WABetaInfo

    • கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் கூகுள் தனது பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
    • பிக்சல் 7 ப்ரோ தற்போது அதன் பயனர்களில் சிலரை அதிர்ச்சியடைய செய்து வருகிறது.

    கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்த பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அசத்தலான செயல்திறன் மற்றும் அதீத கேமரா தரம் உள்ளிட்டவை பிக்சல் 7 ப்ரோ மாடலின் மிக முக்கிய அம்சங்களாக உள்ளன. இந்த நிலையில், பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் உள்ள வால்யூம் பட்டன் தானாக உடைந்து கீழே விழுவதாக அதன் பயனர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    பிக்சல் 7 ப்ரோ பயன்படுத்துவோரில் சிலர், தங்களின் ஸ்மார்ட்போனில் இருந்த வால்யூம் பட்டன்கள் தானாக கீழே விழுவதாக தெரிவித்து வருகின்றனர். சிலர் பயன்படுத்த துவங்கிய சில வாரங்களிலும், சிலருக்கு பல்வேறு மாதங்கள் பயன்படுத்தி நிலையில், வால்யூம் பட்டன் கீழே விழுவதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ரெடிட் தளத்தில் எழுதிய பயனர் ஒருவர், நடைபயிற்சி செய்யும் போது பாக்கெட்டில் வைத்த பிக்சல் 7 ப்ரோ, சிறிது நேரம் கழித்து பாக்கெட்டில் இருந்து எடுத்த போது, அதில் வால்யூம் பட்டன் இல்லை என குறிப்பிட்டு இருக்கிறார்.

    மற்றொருவர் பிக்சல் 7 ப்ரோ வாங்கிய ஒரு வாரத்தில் அதன் வால்யூம் பட்டன் உடைந்து விட்டது என தெரிவித்து இருக்கிறார். ஆண்ட்ராய்டு செண்ட்ரல் தளத்தை சேர்ந்த நிக் சுட்ரிச் தான் பயன்படுத்தி வந்த பிக்சல் 7 ப்ரோ மாடலில் வால்யூம் பட்டன் கீழே விழும் நிலையில், இருப்பதை கண்டறிந்து இருக்கிறார். பின் இதுபற்றிய தகவலை வலைதளத்தில் எழுத, இந்த விவகாரத்தில் பலர் பாதிக்கப்பட்டு இருப்பது அம்பலமாகி இருக்கிறது.

    பயனர்களில் சிலர், இந்த பிரச்சினையை கூகுள் வாரண்டியில் சரி செய்ய மறுக்கிறது என தெரிவித்து வருகின்றனர். எனினும், சுட்ரிச் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், கூகுள் நிறுவனம் இந்த பிர்ச்சினை குறித்து விழிப்புணர்வு கொண்டிருப்பதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் கேலக்ஸி S22 அல்ட்ரா மாடலில் இருக்கும் வால்யூம் ராக்கரை விட பிக்சல் 7 ப்ரோ மாடலில் உள்ள வால்யூம் பட்டன் சற்றே உறுதியானது என கூறப்படுகிறது.

    கூகுள் பிக்சல் 7 ப்ரோ இந்திய விலை மற்றும் அம்சங்கள்:

    கூகுள் பிக்சல் 7 ப்ரோ மாடலின் 12 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 84 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அப்சிடியன், ஸ்னோ மற்றும் ஹசெல் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. 

    6.7 இன்ச் 3120x1440 பிக்சல் LTPO+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    கூகுள் டென்சார் ஜி2 பிராசஸர் மற்றும் டைட்டன் எம்2 செக்யுரிட்டி சிப்

    12 ஜிபி ரேம்

    128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13

    டூயல் சிம்

    50MP பிரைமரி கேமரா

    12MP அல்ட்ரா வைடு ஆட்டோபோக்கஸ் கேமரா

    48MP டெலிபோட்டோ கேமரா

    10.8MP செல்பி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்

    5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    30 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்

    வயர்லெஸ் சார்ஜிங்

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் காதலர் தினத்தை ஒட்டி கூடுதல் பலன்களை அறிவித்து இருக்கிறது.
    • புதிய அறிவிப்பின் கீழ் மூன்று பிரீபெயிட் சலுகைகளில் முன்பை விட கூடுதல் பலன்களை வழங்குகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் சலுகைகளில் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி காதலர் தின ஆஃபர்களை அறிவித்து இருக்கிறது. இதில் ரூ. 121 மதிப்புள்ள 12 ஜிபி கூடுதல் டேட்டா, வேலிடிட்டி மற்றும் கூப்பன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கூடுதல் பலன்கள் ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349, ரூ. 899 மற்றும் ரூ. 2 ஆயிரத்து 999 விலை சலுகைகளில் மட்டும் வழங்கப்படுகிறது.

    காதலர் தின ஆஃபர் விவரங்கள்:

    ரூ. 349, ரூ. 899 மற்றும் ரூ. 2 ஆயிரத்து 999 பிரீபெயிட் சலுகைகளில் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதல் டேட்டாவை பொருத்தவரை ரூ. 2 ஆயிரத்து 999 சலுகையில் 75 ஜிபி + 12 ஜிபி டேட்டாவும், ரூ. 899 மற்றும் ரூ. 349 சலுகைகளில் 12 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. வேலிடிட்டியை பொருத்தவரை ரூ. 2 ஆயிரத்து 999 சலுகையில் வழக்கமாக வழங்கப்படும் 365 நாட்களுடன் 23 நாட்கள் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

     

    இதர பலன்களை பொருத்தவரை மூன்று சலுகைகளுடன் மெக்டொணால்டு-இல் ரூ. 199 மற்றும் அதற்கும் அதிக விலையில் பொருட்களை வாங்கும் போது ரூ. 105 மதிப்புள்ள மெக் ஆலூ டிக்கி / சிக்கன் கேபாப் பர்கர் இலவசமாக பெறலாம்.

    இத்துடன் ஃபெர்ன் அண்டு பெட்டல்ஸ்-இல் ரூ. 799-க்கு வாங்கும் போது ரூ. 150 தள்ளுபடியும், இக்சிகோவில் விமான முன்பதிவு ரூ. 4 ஆயிரத்து 500-க்கும் அதிகமாக மேற்கொள்ளும் போது ரூ. 750 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    காதலர் தின சலுகைகள் தவிர, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது. இதற்கு பயனர்கள் ரூ. 239 அல்லது அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளில் ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும். புதிய பிரீபெயிட் சலுகை ஜியோ வலைதளம், மைஜியோ செயலி மற்றும் மூன்றாம் தரப்பு ரிசார்ஜ் செக்பாயிண்ட்களில் கிடைக்கிறது.

    • டிசிஎல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்மார்ட் டிவிக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறது.
    • புதிய டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல் 24 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ வசதி கொண்டிருக்கிறது.

    டிசிஎல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட் டிவியை S சீரிசில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டிசிஎல் S5400, S5400A, S5403A உள்ளிட்ட மாடல்கள் பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகி இருக்கின்றன. இத்துடன் பெசல்-லெஸ் டிசைன், 24 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, அதிகபட்சம் 16 ஜிபி வரையிலான மெமரி, ஆண்ட்ராய்டு டிவி இண்டர்ஃபேஸ் கொண்டுள்ளன.

    புதிய டிசிஎல் S5400 மாடலில் 32 இன்ச் FHD ஸ்கிரீன், HDR10 சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் கூகுள் டிவி இண்டர்ஃபேஸ் உள்ளது. இதை கொண்டு பயனர்கள் புதிய திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளை தங்களின் சந்தா முறை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப கண்டுகளிக்க முடியும். இத்துடன் கூகுள் வாட்ச்லிஸ்ட் கொண்டு தங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை லைப்ரரியில் சேர்த்துக் கொள்ளலாம்.

     

    இவை தவிர கூகுள் கிட்ஸ் மோட், க்ரோம்காஸ்ட் பில்ட்-இன் உள்ளிட்ட வசதிகளும் உள்ளது. டிசிஎல் S5400A மற்றும் S5403A மாடல்கள் 32 இன்ச் HD ரெடி ஸ்கிரீன் மற்றும் HDR10 சப்போர்ட் கொண்டிருக்கின்றன. இந்த மாடல்களில் ஆண்ட்ராய்டு டிவி 11 ஒஎஸ், 7 ஆயிரத்திற்கும் அதிக ஆப்ஸ்களை இயக்கும் வசதி, 7 லட்சத்திற்கும் அதிக நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கும் வசதி உள்ளன.

    இரு மாடல்களிலும் மைக்ரோ டிம்மிங் அம்சம் உள்ளது. இது டிவியின் பிரைட்னஸ் மற்றும் டார்க்னசை தானாக இயக்கிக் கொள்ளும். புதிய டிசிஎல் டிவிக்களில் ப்ளூடூத் 5.0, வைபை, HDMI x2, யுஎஸ்பி 2.-0 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கின்றன.

    டிசிஎல் S5400 மற்றும் S5400A/S5403A அம்சங்கள்:

    S5400: 32 இன்ச் FHD 1920x1080 பிக்சல், HDR10, 60Hz டிஸ்ப்ளே

    S5400A/S5403A: 32 இன்ச் HD 1366x768 பிக்சல், HDR10, 60Hz டிஸ்ப்ளே

    CPU: CA55X4 @1.1GHz (DVFS 1.45GHz), GPU: G31MP2 @550MHz

    S5400 - 1.5 ஜிபி ரேம், 16 ஜிபி ROM

    S5400A/S5403A - 1 ஜிபி ரேம், 8 ஜிபி ROM

    24 வாட் ஸ்பீக்கர் மற்றும் டால்பி ஆடியோ

    ஸ்டாண்டர்டு, டைனமிக், மியூசிக், மூவி, வாய்ஸ், கேம், ஸ்போர்ட்ஸ் சவுண்ட் மோட்கள்

    ப்ளூடூத் 5.0, 2x HDMI, RJ45, 1x USB 2.0, வைபை 2.4GHz

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    டிசிஎல் 32 இன்ச் S5400 ஸ்மார்ட் டிவி விலை ரூ. 15 ஆயிரத்து 990 என்றும் 32 இன்ச் S5400A விலை ரூ. 13 ஆயிரத்து 490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு டிவி மாடல்களும் அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ரிடெயில், பிராண்டு ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    32 இன்ச் S5403A HD டிவி விலை ரூ. 13 ஆயிரத்து 490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆஃப்லைன் ரிடெயில் மற்றும் பிராண்டு ஸ்டோர்களில் நாடு முழுக்க நடைபெறுகிறது. S5400 மற்றும் S5403A மாடல்களுக்கு 10 சதவீதம் வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    • அமேசான் வலைதளத்தில் காதலர் தினத்தை ஒட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • ஸ்மார்ட்வாட்ச், இயர்போன், டேப்லெட், என ஏராளமான பிரிவுகளில் மின்சாதனங்கலுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    காதலர் தினத்தை ஒட்டி அமேசான் வலைதளத்தில் Fab Phones Fest Sale அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏராளமான சலுகை மற்றும் தள்ளுபடிகள் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகை மற்றும் தள்ளுபடிகள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களுக்கு அதிகபட்சம் 50 சதவீதம் வரையிலான தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது.

    சலுகை விவரங்கள்:

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல் ரூ. 77 ஆயிரத்து 899 முதல் கிடைக்கிறது. இதில் அனைத்து சலுகை மற்றும் வங்கி தள்ளுபடிகள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அமேஸ்ஃபிட் GTS 2 மினி ஸ்மார்ட்வாட்ச் வங்கி தள்ளுபடி மற்றும் சலுகைகளை சேர்த்து ரூ. 4 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது. நாய்ஸ்ஃபிட் ஃபோர்ஸ் ரக்கட் மாடல் ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது.

     

    ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் வயர்டு இயர்போன்கள் பிரிவில் போட் ஏர்டோப்ஸ் 141 மாடல் ரூ. 1,099 விலையிலும், ஜெபிஎல் வேவ் 200 மாடல் ரூ. 2 ஆயிரத்து 499 விலையிலும், நாய்ஸ் பட்ஸ் VS201 V2 மாடல் ரூ. 999 விலையிலும் சென்ஹெய்சர் IE 100 ப்ரோ இன்-இயர் வயர்டு இயர்போன் ரூ. 6 ஆயிரத்து 900 விலையில் கிடைக்கிறது. சியோமி பேட் 5 மாடல் ரூ. 27 ஆயிரத்து 999 என்றும் ரியல்மி பேட் வைபை 4ஜி டேப்லெட் மாடல் ரூ. 17 ஆயிரத்து 189 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    வங்கி சலுகைகள்:

    ரூ. 4 ஆயிரத்து 999 மதிப்புள்ள பொருட்களை வாங்கும் போது எஸ்பிஐ மேக்ஸ் கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மாத தவணைகளில் பத்து சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 1000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே போன்று ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது பத்து சதவீத தள்ளுபடி அல்லது அதிகபட்சம் ரூ. 1250 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    வங்கி தள்ளுபடி மற்றும் இதர சலுகைகள் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் விலைகளில் சேர்க்கப்படுகிறது. விற்பனை ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    Source: fonearena

    • ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போனிற்கான டீசரை ஒப்போ சமீபத்தில் வெளியிட்டது.

    ஒப்போ நிறுவனம் விரைவில் தனது அடுத்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில், தற்போது லண்டனில் நடைபெறும் நிகழ்வில் ஒப்போ தனது ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இதனிடையே புதிய ஸ்மார்ட்போனிற்கான Product Ambassador-களை தேடி வருகிறது.

    இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் சோதனைக்காக இலவசமாக வழங்கப்படும். மேலும் அதனை அவர்களே வைத்துக் கொள்ளவும் செய்யலாம். இதுகுறித்த தகவலை ஒப்போ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் வெளியிட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் Product Ambassador-கள் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

     

    இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 10, ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை சமர்பிக்க முடியும். இதில் தேர்வு செய்யப்படும் Product Ambassador-களுக்கு ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் அனுப்பப்படும். பின் டெஸ்டிங் நிறைவு பெற்றதும், ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் யூனிட்டை அப்படியே வைத்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அந்த வகையில், ஃபைண்ட் N2 ஃப்ளிப் வெளியீடு விரைவில் நடைபெறுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலில் 6.8 இன்ச் FHD+ 1080x2520 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 6.32 இன்ச் கவர் டிஸ்ப்ளே, 382x720 பிக்சல் ரெசல்யூஷன், அதிகபட்சம் 60Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 4300 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மொத்த எடை 191 கிராம் ஆகும்.

    • விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய V சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய விவோ V27 ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    விவோ நிறுவனம் புதிய V27 சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட துவங்கி இருக்கிறது. புதிய டீசரில், #TheSpotlightPhone எனும் ஹாஷ்டேக் உடன் V27 ப்ரோ ஸ்மார்ட்போனின் டிசைன் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், வளைந்த ஸ்கிரீன், ரிங் எல்இடி ஃபிளாஷ் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய V27 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 8200 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், 6.78 இன்ச் FHD+ 120Hz 60 டிகிரி வளைந்த AMOLED டிஸ்ப்ளே போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    விவோ V27 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர், மாலி G610MC4 GPU, 50MP சோனி IMX766 பிரைமரி கேமரா, 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய விவோ V27 சீரிஸ் ப்ளிப்கார்ட் தளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. வரும் வாரங்களில் விவோ V27 சீரிஸ் வெளியீட்டு தேதி மற்றும் இதர விவரங்கள் வெளியாகும்.

    • ஃபயர்-போல்ட் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் வட்ட வடிவ ஸ்கிரீன் கொண்டிருக்கிறது.
    • புதிய ஸ்மார்ட்வாட்ச் IP67 தர வாட்டர் ரெடசிஸ்டண்ட், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

    ஃபயர்-போல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் குவாண்டம் லக்சரி சீரிசில் இடம்பெற்று இருக்கிறது. புதிய ஃபயர்-போல்ட் டேகர் மற்றும் ஸ்டார்டஸ்ட் மாடல்கள் ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட மாடல்களின் வரிசையில் குவாண்டம் மாடல் இணைந்து இருக்கிறது.

    புதிய ஃபயர்-போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச் வட்ட வடிவம் கொண்ட டிசைன், வட்ட வடிவ ஸ்கிரீன் உள்ளது. இதனால் ஸ்மார்ட்வாட்ச் பாரம்பரிய தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் 1.28 இன்ச் HD டிஸ்ப்ளே, 240x240 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் உயர் ரக பொருட்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டயல் மற்றும் ஸ்டிராப், உயர் ரக செராமிக் பாடி கொண்டுள்ளது. இந்த மெட்டல் ஃபிரேம் உறுதியாகவும், தரமாகவும் இருக்கிறது.

    ஃபயர்-போல்ட் குவாண்டம் மாடலில் ஏராளமான அம்சங்கள், கேமரா, நோட்டிஃபிகேஷன், வானிலை அப்டேட்கள் மற்றும் மியூசிக் வசதிகள் உள்ளன. இது IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், வாய்ஸ் அசிஸ்டண்ட், TWS கனெக்டிவிட்டி, ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 350 எம்ஏஹெச் பேட்டரி, அதிகபட்சம் 7 நாட்களுக்கு பேக்கப், ப்ளூடூத் காலிங் வசதியுடன் இரண்டு நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது.

    இத்துடன் ஹார்ட் ரேட், ஸ்லீப் சைக்கிள், ஆக்சிஜன் சைக்கிள் உள்ளிட்டவைகளை டிராக் செய்யும் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 128MB பில்-இன் மெமரி, பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் கொண்டிருக்கிறது.

    ஃபயர்-போல்ட் குவாண்டம் அம்சங்கள்:

    ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டயல் மற்றும் ஸ்டிராப், செராமிக் பாடி

    1.28 இன்ச் HD டிஸ்ப்ளே, 240x240 பிக்சல் ரெசல்யூஷன்

    ப்ளூடூத் 5.1, காலிங் வசதி

    இன்-பில்ட் ஸ்பீக்கர் மற்றும் மைக்

    128MB மெமரி

    SpO2 மாணிடரிங், ஹார்ட் ரேட் டிராகிங், ஆப்டிக்கல் ஹார்ட் ரேட், கபாசிடிவ் சென்சார்

    350 எம்ஏஹெச் பேட்டரி, மேக்னடிக் சார்ஜிங்

    IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

    ஹெல்த் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிராக்கர்

    ஸ்மார்ட் அம்சங்கள்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஃபயர்-போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச் பிளாக், பிளாக் ரெட், கிரீன் மற்றும் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஃபயர்-போல்ட் வலைதளங்களில் பிப்ரவரி 14 ஆம் தேதி துவங்குகிறது.

    • போக்கோ நிறுவனத்தின் புதிய X5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
    • புதிய போக்கோ X5 ப்ரோ 5ஜி மாடலுக்கு அசத்தலான சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது போக்கோ X5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய போக்கோ X சீரிஸ் ஸ்மார்ட்போன் ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், புதிய போக்கோ X5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று துவங்கி இருக்கிறது. போக்கோ X5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    விலை மற்றும் சலுகை விவரங்கள்:

    போக்கோ X5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 22 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக புதிய போக்கோ X5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி பெறலாம்.

    இத்துடன் ப்ளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது 5 சதவீதம் வரை கேஷ்பேக் பெறலாம். இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஏற்கனவே துவங்கி ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக நடைபெற்று வருகிறது.

    போக்கோ X5 ப்ரோ 5ஜி அம்சங்கள்:

    6.67 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 30/60/90/120Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர்

    அட்ரினோ 642L GPU

    6 ஜிபி, 8 ஜிபி ரேம்

    128 ஜிபி, 256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI14

    டூயல் சிம் ஸ்லாட்

    108MP பிரைமரி கேமரா

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    3.5mm ஆடியோ ஜாக், சூப்பர் லீனியர் ஸ்டீரியோ ஸ்பீக்கர்

    டால்பி அட்மோஸ்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி 5000 எம்ஏஹெச் பேட்டரி

    67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுவதாக தகவல்.
    • புதிய ஐபோன் 15 சீரிசில் வழங்கப்படும் யுஎஸ்பி டைப் சி கேபிள்கள் MFI சான்று பெற்றிருக்கும் என தெரிகிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிசில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஒருவழியாக ஆண்ட்ராய்டு போன்றே யுஎஸ்பி டைப் சி கேபிள் கொண்டு ஐபோன்களை சார்ஜ் செய்ய முடியும். எனினும், இந்த விஷயத்திலும் ஆப்பிள் மிக எளிய வழிமுறையை பின்பற்றாது என்றே தெரிகிறது.

    இது குறித்து சீனாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சார்ஜிங் இண்டர்பேஸ் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது MFI சான்று பெற்ற டைப் சி கேபிள்களை பயன்படுத்தும் என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் ஐபோனில் MFI சான்று பெற்ற டைப் சி கேபிள் வழங்கப்படலாம்.

    தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது அனைத்து ஐபோன்களிலும் லைட்னிங் போர்ட் பயன்படுத்தி வருகிறது. இதற்கும் MFI சான்று பெற்ற லைட்னிங் கேபிள்களை கொண்டே சார்ஜ் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். இதன் காரணமாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வழக்கமாக பயன்படுத்தப்படும் யுஎஸ்பி டைப் சி கேபிள்களை கொண்டு ஐபோன்களை சார்ஜ் செய்ய முடியாது.

    நீண்ட கால காத்திருப்புக்கு பின் ஆப்பிள் ஒருவழியாக யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இது தவிர புதிய ஐபோன் 15 சீரிசில் புதிய சிப்செட், ஆப்பிள் ஏ17 பயோனிக் வழங்கப்பட இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடலில் பெரிஸ்கோப் லென்ஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் சாலிட்-ஸ்டேட் பட்டன்கள், டைட்டானியம் பில்ட் வழங்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 14 சீரிஸ் போன்றே, புதிய ஐபோன் 15 சீரிசிலும் ப்ரோ மாடல்களில் மட்டும் டைனமிக் ஐலேண்ட் வழங்கப்பட இருக்கிறது. இதுதவிர ஐபோன் 15 மாடலில் 6.1 இன்ச் டிஸ்ப்ளே, ஐபோன் 15 பிளஸ் மாடலில் 6.7 இன்ச், டாப் எண்ட் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் முறையே 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட உள்ளன.

    இதே போன்று மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் அல்ட்ரா பிரீமியம் ஐபோனை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யும் என தெரிவித்து இருக்கிறார். ஐபோன் அல்ட்ரா அல்லது ஐபோன் 16 அல்ட்ரா பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய மாடலில் சிறப்பான கேமராக்கள், பெரிய டிஸ்ப்ளே மற்றும் போர்ட்லெஸ் டிசைன் வழங்கப்படலாம்.

    ×