search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஒப்போவின் புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் - இலவசமாக பெறுவது எப்படி?
    X

    ஒப்போவின் புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் - இலவசமாக பெறுவது எப்படி?

    • ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போனிற்கான டீசரை ஒப்போ சமீபத்தில் வெளியிட்டது.

    ஒப்போ நிறுவனம் விரைவில் தனது அடுத்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில், தற்போது லண்டனில் நடைபெறும் நிகழ்வில் ஒப்போ தனது ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இதனிடையே புதிய ஸ்மார்ட்போனிற்கான Product Ambassador-களை தேடி வருகிறது.

    இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் சோதனைக்காக இலவசமாக வழங்கப்படும். மேலும் அதனை அவர்களே வைத்துக் கொள்ளவும் செய்யலாம். இதுகுறித்த தகவலை ஒப்போ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் வெளியிட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் Product Ambassador-கள் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 10, ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை சமர்பிக்க முடியும். இதில் தேர்வு செய்யப்படும் Product Ambassador-களுக்கு ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் அனுப்பப்படும். பின் டெஸ்டிங் நிறைவு பெற்றதும், ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் யூனிட்டை அப்படியே வைத்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அந்த வகையில், ஃபைண்ட் N2 ஃப்ளிப் வெளியீடு விரைவில் நடைபெறுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலில் 6.8 இன்ச் FHD+ 1080x2520 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 6.32 இன்ச் கவர் டிஸ்ப்ளே, 382x720 பிக்சல் ரெசல்யூஷன், அதிகபட்சம் 60Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 4300 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மொத்த எடை 191 கிராம் ஆகும்.

    Next Story
    ×