என் மலர்
தொழில்நுட்பம்
- இந்தியாவில் டுவிட்டர் புளூ சேவையின் கீழ் பயனர்களுக்கு புளூ டிக் வழங்கப்படுகிறது.
- டுவிட்டர் புளூ சேவைக்கான இந்திய விலை மாதம் ரூ. 650-இல் இருந்து துவங்குகிறது.
டுவிட்டர் நிறுவனம் இந்தியாவில் தனது டுவிட்டர் புளூ சேவையை சமீபத்தில் துவங்கியது. மேலும் டுவிட்டர் புளூ சேவைக்கான சந்தா கட்டணம் வலைதளத்திற்கு மாதம் ரூ. 650, ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் செயலிகளுக்கு மாதம் ரூ. 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
எலான் மஸ்க் அறிவித்து இருக்கும் டுவிட்டர் புளூ சேவையின் மிகமுக்கிய அம்சமாக புளூ டிக் உள்ளது. டுவிட்டர் புளூ சேவையில் கட்டணம் செலுத்தும் அனைவருக்கும் புளூ டிக் வழங்கப்பட்டு விடும். முன்னதாக இந்த புளூ டிக் டுவிட்டர் நிறுவனம் நடத்திய ஆய்வை அடுத்து வழங்கப்பட்டு வந்தது. தற்போது இது மாதிரி டுவிட்டர் ஏற்கனவே ஆய்வு செய்து வழங்கி வந்த புளூ டிக் விரைவில் நீக்கப்பட்டு விடும் என எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க்-ஐ டேக் செய்த நபர் ஒருவர், "தற்போது புளூ வெரிஃபிகேஷன் மார்க் ஜோக் ஆகி விட்டது. முன்னதாக புளூ டிக் வெரிஃபிகேஷன் பொது நபர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று யார் வேண்டுமானாலும் வெரிஃபிகேஷன் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது." என தெரிவித்து இருந்தார்.
இவரது பதிவிற்கு பதில் அளித்த எலான் மஸ்க் விரைவில், "அந்த மாதிரி வழங்கப்பட்டு இருந்த புளூ டிக் விரைவில் நீக்கப்பட்டு விடும். இதுபோன்ற புளூ டிக் கொண்டவர்கள் தான், உண்மையில் ஊழல்வாதிகள் ஆவர்," என தெரிவித்து இருக்கிறார்.
எலான் மஸ்க் அளித்த பதிலுக்கு பலர் கொந்தளிக்க ஆரம்பித்து விட்டனர். பலர், எலான் மஸ்க் எப்படி ஒருவர் ஊழல்வாதி என்பதை அறிந்து கொள்கிறார் என கேள்வி எழுப்பி இருக்கிறார். மற்றொருவர் ஏற்கனவே வழங்கப்பட்டு இருந்த புளூ டிக் நிறம் மாற்றி வேறு நிறத்தில் டிக் வழங்கலாம் என குறிப்பிட்டு இருக்கிறார்.
- டிபி விஷன் நிறுவனத்தின் புதிய பிலிப்ஸ் இயர்போன் தானாக ஆஃப் ஆகும் சென்சார்களை கொண்டுள்ளது.
- இந்த இயர்போன் பயன்படுத்துபவர்கள் உறங்கிவிட்டால், இதில் உள்ள ஆடியோ மெல்ல குறைந்து, ஆஃப் ஆகி விடும்.
டிபி விஷன் நிறுவனம் பிலிப்ஸ் N7808 இயர்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிலிப்ஸ் N7808 மாடலில் உள்ள சென்சார்கள் பயனர்களின் உறங்கும் விதத்தை டிராக் செய்து பயனர் உறங்கினால், தானாக ஆஃப் ஆகிவிடும் வசதி கொண்டுள்ளது. இது பிலிப்ஸ் பிராண்டிங்கில் வெளியாகி இருக்கும் முதல் ஸ்லீப் இயர்போன் ஆகும்.
புதிய ஸ்லீப் இயர்போன் டிபி விஷன் மற்றும் ஸ்லீப் ஆய்வாளர் கோகூன் கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பிலிப்ஸ் N7808 இயர்போனை பயன்படுத்துவோர் அப்படியே உறங்கும் பட்சத்தில் ஆடியோ சத்தம் மெல்ல குறைந்து, தானாக ஆஃப் ஆகி விடும். எனினும், இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படவில்லை. மாறாக இது ஸ்மார்ட் வைட் நாய்ஸ் வெளிப்படுத்துகிறது.

இந்த இயர்போன் பயனர்களை தூங்க செய்வதோடு, அவர்கள் உறங்கியதும் தானாக ஆஃப் ஆகும் வசதி கொண்டிருக்கிறது. உறக்கத்தின் போது ஏற்படும் இடையூறுகளுக்கு பதில் சொல்லும் வகையில் புதிய N7808 இயர்போன் அமைந்துள்ளது. இந்த ஹெட்போன்கள் தரமான நாய்ஸ் ஐசோலேஷன் வசதியை வழங்குகிறது. இந்த இயர்போன் ஏற்படுத்தும் வைட் நாய்ஸ் உறக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும் வெளிப்புற சத்தத்தை குறைக்கச் செய்கிறது.
பிலிப்ஸ் N7808 ஸ்லீப் இயர்போன் ஆடியோ அவுட்புட் பயனர் உறங்கியதும் தானாக அட்ஜஸட் ஆகிக் கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது. இந்த இயர்போனில் உள்ள மெல்லிய ஹவுசிங் இரவில் எவ்வித இடையூறும் இன்றி சவுகரியமாக அணிந்து கொள்ள உதவுகிறது. இதன் டிசைன் மற்றும் சிறிய ஆர்மேச்சர் டிரைவர்கள் இயர்போனை 6mm அளவில் இருக்க செய்துள்ளது.
சிறப்பான உறக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த இயர்போன் கோகூன் ஆப் மூலம் இணைந்து வேலை செய்யுகிறது. இந்த இயர்போனில் அக்செலோமீட்டர்கள் மற்றும் ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் மாணிட்டர் உள்ளது. டிபி விஷன் நிறுவனத்தின் பிலிப்ஸ் N7808 இயர்போன் முழு சார்ஜ் செய்தால் பத்து மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது.
அறிமுக சலுகையாக புதிய பிலிப்ஸ் N7808 ஸ்லீப் இயர்போன்களின் விலை 1,181 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 14 ஆயிரத்து 312 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன்பின் இந்த ஸ்லீப் இயர்போன் விலை 1681 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 20 ஆயிரத்து 492 என மாறிவிடும்.
- காதலர் தினத்தை ஒட்டி பிரீபெயிட் ரிசார்ஜ்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- பல்வேறு ரிசார்ஜ் சலுகைகளில் அதிகபட்சம் 5 ஜிபி வரையிலான கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் வி காதலர் தினத்தை ஒட்டி இரண்டு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. பல்வேறு ரிசார்ஜ் சலுகைகளில் வி நிறுவனம் அதிகபட்சம் 5 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்குகிறது. புதிய சலுகைகள் வி ஆப் பயன்படுத்தும் சந்தாதாரர்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. இவை பிப்ரவரி 14 ஆம் தேதி வரை வழங்கப்படும்.
சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி "Vi Love Tunes Contest" பெயரில் பரிசு திட்டம் அறிவித்து இருக்கிறது. இதில் வெற்றி பெறும் பயனர்கள் அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரையிலான பரிசு வவுச்சர்கள் வழங்கப்பட இருக்கிறது.
ரூ. 299 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட ரிசார்ஜ் சலுகைகளில் அதிகபட்சம் 5 ஜிபி வரையிலான கூடுதல் டேட்டாவை எவ்வித தயக்கமும் இன்றி வழங்கப்படுகிறது. எனினும், கூடுதல் டேட்டாவுக்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். வி ரூ. 199 முதல் ரூ. 299 வரையிலான ரிசார்ஜ்களை செய்வோருக்கு அதிகபட்சம் 2 ஜிபி வரையிலான கூடுதல் டேட்டா எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

இதற்கான வேலிடிட்டியும் 28 நாட்கள் ஆகும். அனைத்து சலுகைகளிலும் கூடுதல் டேட்டா பெறுவதற்கு பயனர்கள் இந்த சலுகைகளை வி ஆப் மூலம் ரிசார்ஜ் செய்ய வேண்டும். மேலும் இவை பிப்ரவரி 14 ஆம் தேதி வரை மட்டுமே கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
பரிசு கூப்பன் விவரங்கள்:
காதலர் தினத்தை ஒட்டி வி அறிவித்து இருக்கும் "Vi Love Tunes Contest"-இல் கலந்து கொண்டு பயனர்கள் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பரிசு கூப்பனை வெல்ல முடியும். சமூக வலைதளங்களில் நடைபெறும் #ViLoveTunes போட்டிகளில் வி பயனர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இதில் பயனர்கள் ஹங்காமா மியூசிக் காதலர் தின பிளேலிஸ்ட்-இல் மாற்றப்பட்ட வரிகள் கொண்ட பாடல்களை சரியாக கண்டுபிடிக்க வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்வோர் சரியான விடையை #ViLoveTunes எனும் ஹேஷ்டேக் பயன்படுத்தி கமெண்ட் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள கிஃப்ட் கார்ட் ஆக வெற்றி பெற முடியும்.
- நோக்கியா நிறுவனத்தின் புதிய G22 ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் யுனிசாக் பிராசஸர் கொண்டிருக்கிறது.
- இத்துடன் ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு யுஐ, IPS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.
நோக்கியா நிறுவனம் விரைவில் புதிய G சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய நோக்கியா G22 ஸ்மார்ட்போன் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. லிஸ்டிங்கின் படி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் யுனிசாக் பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய நோக்கியா G22 ஏற்கனவே அறிமுகமான நோக்கியா G21 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
கீக்பென்ச் டெஸ்டிங்கில் நோக்கியா G22 ஸ்மாரட்போன் சிங்கில் கோரில் 308 புள்ளிகளையும், மல்டி-கோர் டெஸ்டில் 1094 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. இதில் உள்ள அம்சங்களை பொருத்தவரை இது சிறப்பான குறைந்த விலை ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிகிறது.

நோக்கியா G22 அம்சங்கள்:
மைஸ்மார்ட்பிரைஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி நோக்கியா G22 ஸ்மார்ட்போன் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் டி606 பிராசஸர், மாலி G57 GPU, 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு யுஐ வழங்கப்படும் என தெரிகிறது.
ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா G21 மாடலில் 6.5 இன்ச் IPS LCD ஸ்கிரீன், வாட்டர் டிராப் நாட்ச், 90Hz ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 2MP டெப்த் கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிலும் யுனிசாக் T606 பிராசஸர், 5050 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
- ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் சர்வதேச வெளியீடு உறுதியாகி இருக்கிறது.
- கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒப்போ நிறுவனம் தனது ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் சர்வேதச வெளியீடு பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் ஒப்போ இதே ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது.
புதிய ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் ஐந்து ஆண்டுகள் ஆய்வு மற்றும் வளர்ச்சி பணிகளை அடுத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது என ஒப்போ தெரிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் டிசைன் எல்லைகளை கடக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் கிரீஸ் காணப்படாத வகையில் முற்றிலும் மேம்பட்ட அனுபவத்தை வழங்குகிறது.

ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலில் 6.8 இன்ச் FHD+ 1080x2520 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 6.32 இன்ச் கவர் டிஸ்ப்ளே, 382x720 பிக்சல் ரெசல்யூஷன், அதிகபட்சம் 60Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 4300 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மொத்த எடை 191 கிராம் ஆகும்.
- நத்திங் நிறுவன ஸ்மார்ட்போன் மற்றும் இயர்பட்ஸ் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- நத்திங் போன் (2) மாடல் பற்றிய தகவலை நத்திங் நிறுவனர் கார்ல் பெய் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.
நத்திங் நிறுவனம் தனது சாதனங்களுக்கு காதலர் தினத்தை ஒட்டி விசேஷ சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது. நத்திங் போன் (1) மற்றும் இயர் (ஸ்டிக்) உள்ளிட்ட மாடல்களுக்கு காதலர் தின சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நத்திங் போன் (1) மாடல் நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கும் ஒரே ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். இது கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இயர் (ஸ்டிக்) மாடல் நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கும் இரண்டாவது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும். இது கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

இரு சாதனங்களும் பிரத்யேக டிசைன், க்ளிஃப் இண்டர்ஃபேஸ் கொண்டிருக்கின்றன. நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் பிரத்யேக டுவிஸ்டிங் சார்ஜிங் கேஸ் உடன் வழங்கப்படுகிறது. நத்திங் போன் (1) மாடல் டிரான்ஸ்பேரண்ட் டிசைன், எல்இடி ஸ்ட்ரிப்களை கொண்டிருக்கிறது.
இத்துடன் 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் பிராசஸர், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலில் 12.6mm டைனமிக் டிரைவர்கள், க்ளியர் வாய்ஸ் தொழில்நுட்பம், மூன்று HD மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன.
காதலர் தினத்தை ஒட்டி நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் தற்போது ரூ. 6 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ. 8 ஆயிரத்து 499 ஆகும். அந்த வகையில் நத்திங் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலுக்கு ரூ. 1500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே போன்று நத்திங் போன் (1) மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மூன்று வித மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் நத்திங் போன் (1) தற்போது ரூ. 26 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிறப்பு தள்ளுபடி பிப்ரவரி 13 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
- லாவா நிறுவனம் தனது குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்தது.
- புதிய லாவா 5ஜி ஸ்மார்ட்போன் 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
லாவா நிறுவனம் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் - லாவா பிளேஸ் 5ஜி மாடலை ரூ. 9 ஆயிரத்து 999 எனும் அறிமுக விலையில் வெளியிட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ. 10 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் லாவா நிறுவனம் இன்று தனது லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது.
அதிக ரேம் தவிர ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், லாவா பிளேஸ் 5ஜி மாடலில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 3 ஜிபி விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, டெப்த் மற்றும் மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் லாவா பிளேஸ் 5ஜி மாடல் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
லாவா பிளேஸ் 5ஜி அம்சங்கள்:
6.5 இன்ச் 1600x720 பிக்சல் 2.5D வளைந்த ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
மாலி G57 MC2 GPU
4 ஜிபி / 6 ஜிபி ரேம் + 3 ஜிபி விர்ச்சுவல் ரேம்
128 ஜிபி UFS மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12
ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
டெப்த் சென்சார், மேக்ரோ கேமரா
8MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய லாவா பிளேஸ் 5ஜி 6ஜிபி ரேம் கொண்ட மாடல் கிளாஸ் புளூ மற்றும் கிளாஸ் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் அறிமுக விலை ரூ. 11 ஆயிரத்து 499 ஆகும். இந்த விலை பிப்ரவரி 15 ஆம் தேதி அமேசான் தளத்தில் நடைபெறும் முதல் விற்பனையின் போது மட்டுமே பொருந்தும். அதன் பின் இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என மாறிவிடும்.
- நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 மற்றும் ஹைப்பர்சின்க் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
- யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் கனெக்டர் கொண்டிருக்கும் நாய்ஸ் பட்ஸ் VS404 IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ், நாய்ஸ் பட்ஸ் VS404 மாடலை அறிமுகம் செய்தது. இத்துடன் "StoopidCupid" திட்டத்தின் கீழ் நாய்ஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஆடியோ சாதனங்களுக்கு அதிகபட்சம் 75 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது.
புதிய நாய்ஸ் பட்ஸ் VS404 மாடலில் 10mm டிரைவர்கள் உள்ளன. இவை ஸ்டிராங் பேஸ் மற்றும் குவாட் மைக் ENC தொழில்நுட்பம் வழங்குகிறது. இதன் மூலம் தரமாக கால் அனுபவம் பெறலாம். இத்துடன் மூன்று EQ மோட்கள்- பேஸ், கேமிங் மற்றும் நார்மல் உள்ளன. இவை தனிப்பட்ட சவுண்ட் வழங்குகின்றன. இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, ஹைப்பர்சின்க் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.
அதிகபட்சம் 50 மணி நேர பிளேடைம் கொண்டிருக்கும் நாய்ஸ் பட்ஸ் VS404 பத்து நிமிட சார்ஜிங்கில் 200 நிமிடங்கள் பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. உடற்பயிற்சி அல்லது நீரின் அருகிலும் எவ்வித தயக்கமும் இன்றி பயன்படுத்தும் வகையில், இந்த இயர்பட்ஸ் IPX5 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் கனெக்டர் வழங்கப்படுகிறது.

நாய்ஸ் பட்ஸ் VS404 அம்சங்கள்:
ட்ரூ வயர்லெஸ்
10mm டிரைவர் மற்றும் AAC சப்போர்ட்
ப்ளூடூத் 5.3, ஹைப்பர்சின்க்
குவாட் மைக் மற்றும் ENC
பில்ட்-இன் 3 EQ மோட்கள்
50 மணி நேர பிளேடைம்
யுஎஸ்பி டைப் சி சார்ஜிங்
IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட்
ஒரு வருட வாரண்டி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
நாய்ஸ் பட்ஸ் VS404 மாடல் தற்போது அறிமுக சலுகையாக ரூ. 1,299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ. 3 ஆயிரத்து 399 ஆகும். இந்த இயர்பட்ஸ் ஜெட் பிளாக், ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் ஸ்னோ வைட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் கோநாய்ஸ் வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.
- பணி நீக்க அறிவிப்பு இந்த வாரம் இறுதியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- மிகப்பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வாஷிங்டன்:
கொரோனா வைரஸ், உக்ரைன் - ரஷியா போர், கச்சா எண்ணெய் விநியோகம், அரசியல் நிலைத்தன்மை, உற்பத்தி - நுகர்வு இடையேயான வேறுபாடு உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த சில மாதங்களாக உலக பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, 2023-ம் ஆண்டில் 3-ல் 1 பங்கு உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்று ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா இந்த ஆண்டு தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு பெருநிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், இணைதள தேடிபொறி நிறுவனமான 'யாகூ' 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த பணி நீக்க அறிவிப்பு இந்த வாரம் இறுதியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதார நிலைத்தன்மையின்மை காரணமாக செலவை குறைக்க தங்கள் நிறுவனத்தின் 12 சதவிகித ஊழியர்களான 1,000 பேரை யாகூ இந்த வாரம் பணி நீக்கம் செய்ய உள்ளது. அதேபோல், இந்த ஆண்டில் வரும் மாதங்களில் மேலும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய யாகூ திட்டமிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
- ரியல்மி நிறுவனத்தின் புதிய கோகோ கோலா எடிஷன் ஸ்மார்ட்போன் பிரத்யேக கோகோ கோலா யுஐ உள்ளது.
- கோகோ கோலா எடிஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம் மேட் இமிடேஷன் மெட்டல் பிராசஸ் மூலம் கோகோ கோலா லோகோ உள்ளது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ரியல்மி 10 ப்ரோ கோகோ கோலா லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. வலைதள முன்பதிவில் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக ரியல்மி அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மேட் இமிடேஷன் மெட்டல் பிராசஸ் செய்யப்பட்ட கோகோ கோலா லோகோ, கேமராவை சுற்றி சிவப்பு நிற வளையங்கள் உள்ளன.
இந்த ஸ்மார்ட்போனில் பிரத்யேக கோகோ-கோலா யுஐ, ஐகான் பேக், டைனமிக் சார்ஜிங் எஃபெக்ட், ரிங்டோன், கோக் பபிள் நோட்டிஃபிகேஷன் டோன், கோகோ கோலா கேமரா ஃபில்ட்டர், பாட்டில் ஓபனிங் ஷட்டர் சவுண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டீலக்ஸ் பாக்ஸ் செட் மற்றும் லிமிடெட் நம்பர் கார்டு, டிஐவை ஸ்டிக்கர்கள், பாட்டில் மூடி வடிவம் கொண்ட பிரத்யேக சிம் கார்டு பின், ரியல்மியோவ் கோகோ கோலா வடிவம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ரியல்மி 10 ப்ரோ கோகோ கோலா எடிஷன் அம்சங்கள்:
6.72 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+LCD ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர்
மாலி G68 MC4 GPU
8 ஜிபி LPDDR4X ரேம்
128 ஜிபி UFS 2.2 மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஹைப்ரிட் டூயல் சிம்
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ரியல்மி யுஐ 4.0
108MP பிரைமரி கேமரா
2MP போர்டிரெயிட் கேமரா
16MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரியல்மி 10 ப்ரோ கோகோ கோலா எடிஷன் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஸ்டாண்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனை விட ரூ. 1000 விலை அதிகம் ஆகும். விற்பனை ரியல்மி, ப்ளிப்கார்ட் ஆன்லைன் வலைதளங்களிலும், ஆஃப்லைன் ஸ்டோர்களில் பிப்ரவரி 14 ஆம் தேதி துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆயிரம் யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது.
- டுவிட்டர் தளத்தில் வழங்கப்பட்டு வரும் விசேஷ டுவிட்டர் புளூ சேவை இந்திய விலை விவரங்கள் வெளியீடு.
- டுவிட்டர் புளூ சந்தாவின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்திய பயனர்கள் இனி டுவிட்டர் புளூ சந்தாவில் இணைய முடியும். முன்னதாக தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டு இருந்த டுவிட்டர் புளூ சந்தா தற்போது இந்தியாவிலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. டுவிட்டர் புளூ சந்தா பெறுவோருக்கு புளூ டிக் வழங்கப்பட்டு விடும். இந்தியாவில் டுவிட்டர் புளூ கட்டணம் வலைதளம் மற்றும் மொபைலில் மாதம் முறையே ரூ. 650 மற்றும் ரூ. 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வலைதள வெர்ஷனுக்கு வருடாந்திர அடிப்படையில் சந்தா செலுத்துவோருக்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில், பயனர்கள் டுவிட்டர் புளூ சந்தாவை வருடாந்திர அடிப்படையில் பெறும் போது ரூ. 6 ஆயிரத்து 800 மட்டுமே செலுத்தினால் போதுமானது. முன்னதாக வெரிஃபைடு டேக் பெற வாடிக்கையாளர்கள் தனியே விண்ணப்பிக்க வேண்டி இருந்தது. மேலும் இதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் வழங்கப்பட்டு இருந்த நிலையில், டுவிட்டர் புளூ சேவை தற்போது இந்தியா, பிரேசில், இந்தோனேசியா என மொத்தம் 15 நாடுகளில் வெளியிடப்பட்டு இருக்கிறது. டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்போர், தங்களின் டுவிட்களை எடிட் செய்வது, நீண்ட நேர வீடியோக்களை பதிவிடுவது, 50 சதவீதம் வரை குறைந்த விளம்பரங்களை பெறுவது, புதிய அம்சங்களை முன்கூட்டியே பெற முடியும்.
இத்துடன் டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்போரின் பதிவுகளுக்கு டுவிட்டர் முன்னுரிமை கொடுக்கும். டுவிட் செய்த முதல் 30 நிமிடங்களுக்குள் அதிகபட்சமாக ஐந்து முறை அவற்றை எடிட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
டுவிட்டர் புளூ சேவையை பெறுவது எப்படி?
பயனர்கள் டுவிட்டர் புளூ சேவையை இயக்க தங்களின் ப்ரோஃபைல் படத்தின் இடது புறத்தில் க்ளிக் செய்ய வேண்டும். இத்துடன் அதிகபட்சம் டுவிட்டர் கணக்கை துவங்கி 90 நாட்கள் கழித்தே டுவிட்டர் புளூ சேவையை பெற முடியும். டுவிட்டர் புளூ சேவைக்கு சந்தா செலுத்தி இருப்பவர்கள், தங்களின் புகைப்படம், ப்ரோஃபைல் பெயர் உள்ளிட்டவைகளை வெரிஃபைடு பேட்ஜ் வழங்கும் வரை மாற்ற வேண்டாம் என டுவிட்டர் கேட்டுக் கொண்டுள்ளது.
- ரியல்மி நிறுவனம் தனது புதிய GT 3 ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டு உள்ளது.
- புதிய ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி இந்திய சந்தையில் ரியல்மி GT 3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி ரியல்மி GT 3 இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசரை ரியல்மி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. எனினும், ரியல்மி GT 3 இந்திய வெளியீட்டு தேதி டீசரில் இடம்பெறவில்லை.
புதிய ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்த ரியல்மி GT 2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதேபோன்ற ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ரியல்மி GT நியோ 5 மாடலிலும் வழங்கப்படுகிறது. ரியல்மி GT நியோ 5 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.
தற்போது ரியல்மி வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ டீசரில் சரியான வெளியீட்டு தேதி இடம்பெறவில்லை. எனினும், இந்த சாதனம் வரும் வாரங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில் ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.
ரியல்மி GT 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
ரியல்மி நிறுவனம் சார்பில் புதிய ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் 240 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதுதவிர ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் 150 வாட் மற்றும் 240 வாட் என இருவித சார்ஜிங் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
புதிய ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ரியல்மி GT 3 தவிர ரியல்மி நிறுவனம் கோகோ கோலா எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் நாளை அறிமுகமாகிறது.






