search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஒப்போ ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் - சர்வேதச வெளியீட்டு தேதி அறிவிப்பு
    X

    ஒப்போ ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் - சர்வேதச வெளியீட்டு தேதி அறிவிப்பு

    • ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் சர்வதேச வெளியீடு உறுதியாகி இருக்கிறது.
    • கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஒப்போ நிறுவனம் தனது ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் சர்வேதச வெளியீடு பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் ஒப்போ இதே ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது.

    புதிய ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் ஐந்து ஆண்டுகள் ஆய்வு மற்றும் வளர்ச்சி பணிகளை அடுத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது என ஒப்போ தெரிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் டிசைன் எல்லைகளை கடக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் கிரீஸ் காணப்படாத வகையில் முற்றிலும் மேம்பட்ட அனுபவத்தை வழங்குகிறது.

    ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலில் 6.8 இன்ச் FHD+ 1080x2520 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 6.32 இன்ச் கவர் டிஸ்ப்ளே, 382x720 பிக்சல் ரெசல்யூஷன், அதிகபட்சம் 60Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 4300 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மொத்த எடை 191 கிராம் ஆகும்.

    Next Story
    ×