search icon
என் மலர்tooltip icon

    கணினி

    அதிகபட்சம் 50 மணி நேர பிளேபேக் வழங்கும் நாய்ஸ் பட்ஸ் VS404 இந்தியாவில் அறிமுகம்
    X

    அதிகபட்சம் 50 மணி நேர பிளேபேக் வழங்கும் நாய்ஸ் பட்ஸ் VS404 இந்தியாவில் அறிமுகம்

    • நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 மற்றும் ஹைப்பர்சின்க் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
    • யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் கனெக்டர் கொண்டிருக்கும் நாய்ஸ் பட்ஸ் VS404 IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

    நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ், நாய்ஸ் பட்ஸ் VS404 மாடலை அறிமுகம் செய்தது. இத்துடன் "StoopidCupid" திட்டத்தின் கீழ் நாய்ஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஆடியோ சாதனங்களுக்கு அதிகபட்சம் 75 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது.

    புதிய நாய்ஸ் பட்ஸ் VS404 மாடலில் 10mm டிரைவர்கள் உள்ளன. இவை ஸ்டிராங் பேஸ் மற்றும் குவாட் மைக் ENC தொழில்நுட்பம் வழங்குகிறது. இதன் மூலம் தரமாக கால் அனுபவம் பெறலாம். இத்துடன் மூன்று EQ மோட்கள்- பேஸ், கேமிங் மற்றும் நார்மல் உள்ளன. இவை தனிப்பட்ட சவுண்ட் வழங்குகின்றன. இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, ஹைப்பர்சின்க் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.

    அதிகபட்சம் 50 மணி நேர பிளேடைம் கொண்டிருக்கும் நாய்ஸ் பட்ஸ் VS404 பத்து நிமிட சார்ஜிங்கில் 200 நிமிடங்கள் பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. உடற்பயிற்சி அல்லது நீரின் அருகிலும் எவ்வித தயக்கமும் இன்றி பயன்படுத்தும் வகையில், இந்த இயர்பட்ஸ் IPX5 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் கனெக்டர் வழங்கப்படுகிறது.

    நாய்ஸ் பட்ஸ் VS404 அம்சங்கள்:

    ட்ரூ வயர்லெஸ்

    10mm டிரைவர் மற்றும் AAC சப்போர்ட்

    ப்ளூடூத் 5.3, ஹைப்பர்சின்க்

    குவாட் மைக் மற்றும் ENC

    பில்ட்-இன் 3 EQ மோட்கள்

    50 மணி நேர பிளேடைம்

    யுஎஸ்பி டைப் சி சார்ஜிங்

    IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட்

    ஒரு வருட வாரண்டி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    நாய்ஸ் பட்ஸ் VS404 மாடல் தற்போது அறிமுக சலுகையாக ரூ. 1,299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ. 3 ஆயிரத்து 399 ஆகும். இந்த இயர்பட்ஸ் ஜெட் பிளாக், ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் ஸ்னோ வைட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் கோநாய்ஸ் வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×