ஃபயர்-போல்ட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

ஃபயர்-போல்ட் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் வட்ட வடிவ ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் IP67 தர வாட்டர் ரெடசிஸ்டண்ட், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
ஃபயர்-போல்ட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்
Published on

ஃபயர்-போல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் குவாண்டம் லக்சரி சீரிசில் இடம்பெற்று இருக்கிறது. புதிய ஃபயர்-போல்ட் டேகர் மற்றும் ஸ்டார்டஸ்ட் மாடல்கள் ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட மாடல்களின் வரிசையில் குவாண்டம் மாடல் இணைந்து இருக்கிறது.

புதிய ஃபயர்-போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச் வட்ட வடிவம் கொண்ட டிசைன், வட்ட வடிவ ஸ்கிரீன் உள்ளது. இதனால் ஸ்மார்ட்வாட்ச் பாரம்பரிய தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் 1.28 இன்ச் HD டிஸ்ப்ளே, 240x240 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் உயர் ரக பொருட்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டயல் மற்றும் ஸ்டிராப், உயர் ரக செராமிக் பாடி கொண்டுள்ளது. இந்த மெட்டல் ஃபிரேம் உறுதியாகவும், தரமாகவும் இருக்கிறது.

ஃபயர்-போல்ட் குவாண்டம் மாடலில் ஏராளமான அம்சங்கள், கேமரா, நோட்டிஃபிகேஷன், வானிலை அப்டேட்கள் மற்றும் மியூசிக் வசதிகள் உள்ளன. இது IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், வாய்ஸ் அசிஸ்டண்ட், TWS கனெக்டிவிட்டி, ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 350 எம்ஏஹெச் பேட்டரி, அதிகபட்சம் 7 நாட்களுக்கு பேக்கப், ப்ளூடூத் காலிங் வசதியுடன் இரண்டு நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது.

இத்துடன் ஹார்ட் ரேட், ஸ்லீப் சைக்கிள், ஆக்சிஜன் சைக்கிள் உள்ளிட்டவைகளை டிராக் செய்யும் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 128MB பில்-இன் மெமரி, பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் கொண்டிருக்கிறது.

ஃபயர்-போல்ட் குவாண்டம் அம்சங்கள்:

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டயல் மற்றும் ஸ்டிராப், செராமிக் பாடி

1.28 இன்ச் HD டிஸ்ப்ளே, 240x240 பிக்சல் ரெசல்யூஷன்

ப்ளூடூத் 5.1, காலிங் வசதி

இன்-பில்ட் ஸ்பீக்கர் மற்றும் மைக்

128MB மெமரி

SpO2 மாணிடரிங், ஹார்ட் ரேட் டிராகிங், ஆப்டிக்கல் ஹார்ட் ரேட், கபாசிடிவ் சென்சார்

350 எம்ஏஹெச் பேட்டரி, மேக்னடிக் சார்ஜிங்

IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

ஹெல்த் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிராக்கர்

ஸ்மார்ட் அம்சங்கள்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ஃபயர்-போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச் பிளாக், பிளாக் ரெட், கிரீன் மற்றும் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஃபயர்-போல்ட் வலைதளங்களில் பிப்ரவரி 14 ஆம் தேதி துவங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com