search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டின்"

    • மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்ப ட்டிருந்த நகைகளை திருடி சென்றனர்
    • போலீசார் அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள சிவசக்தி நகர் (டீச்சர்ஸ் காலனி)பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 40). இவரது மனைவி சர்மிளா. விக்னேஷ் வேலை விஷயமாக பெங்களூருக்கு சென்று விட்டார். வீட்டில் ஷர்மிளா மட்டும் தனியாக இருந்தார். இவர்கள் வீட்டின் அருகே விக்னே ஷின் அப்பா ராஜேஷ் வீடு உள்ளது. இதனால் தனியாக இருந்த சர்மிளா தனது மாமா வீட்டிற்கு இரவு தூங்க சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்ப ட்டிருந்த நகைகளை திருடி சென்று விட்டனர். இதையடுத்து இன்று காலை சர்மிளா தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் கொள்ளை யடிக்கப் பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

    இது குறித்து அவரின் மாமனாரிடம் தெரிவித்தார். மேலும் இது குறித்து தனது கணவருக்கும் தகவல் தெரிவித்தார்.

    இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு வந்து விசாரித்த னர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதனால் அந்தியூர் பகுதியில் இன்று காலை பரபரப்பு காணப்பட்டது.

    • சென்னிமலை அருகே வீட்டில் இருந்த ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பணம், நகை திருட்டு.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை- ஊத்துக்குளி ரோடு புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன் (58). விவசாயி. இவரது மனைவி விஜய குமாரி. இந்த கிராமத்தில் இவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் வீடு உள்ளது. விஜயகுமாரியின் தம்பி கிருஷ்ணமூர்த்தி வீட்டை பராமரித்து வருகிறார்.

    கணவன்-மனைவி 2 பேரும் கடந்த 25 ஆண்டு களாக புதுச்சேரியில் குடியிருந்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு சில முறை மட்டும் அவர்கள் சொந்த ஊருக்கு வருவார்கள். அப்போது அவர்கள் தோட்டத்தின் வீட்டில் தங்குவது வழக்கம்.

    இந்நிலையில் அந்த வீட்டின் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜை செய்வதற்காக சென்னிமலையை சேர்ந்த சம்பந்த குருக்கள் அங்கு வந்தார். அப்போது சந்தானகிருஷ்ணனின் வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து வீட்டை பராமரித்து வரும் கிருஷ்ணமூர்த்தியிடம் தகவல் சொன்னார். இதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்த போது வீட்டின் பீரோ, உள் லாக்கர் ஆகியவை உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது.

    அப்போது வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் அரை பவுன் எடையுள்ள 3 மூக்குத்திகள் மற்றும் 10 ராசி கற்கள் ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்தது. திருட்டுப்போன பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.80 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இது குறித்து சென்னி மலை போலீசில் கிருஷ்ண மூர்த்தி புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு திருட்டு பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கோபிசெட்டிபாளையம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 4 கிராம் தங்க சங்கிலி திருட்டு.
    • இது குறித்து கடத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள உக்கரம் சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விமல் (36). இவர் புஞ்சை புளியம்பட்டியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார்.

    விமல் கடந்த 2 தினங்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றார். இந்த நிலையில் நேற்று காலை விமல் வந்து பார்த்த போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 4 கிராம் தங்க சங்கிலி திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து  கடத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புஞ்சை புளியம்பட்டியில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற கொள்ளையர்கள்.
    • சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புஞ்சை புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி தில்லை நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி. நேற்று மதியம் அந்தோணிசாமி வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.

    இதனையடுத்து அந்தோணிசாமி புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு திருட்டு நடந்தது தெரிய வந்துள்ளது.

    பின்னர் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு போனது.
    • கண்காணிப்பு காமிராவில் பதிவான கொள்ளையர் உருவத்தை வைத்து விசாரணை நடந்த வருகின்றது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சீலநாயக்கன்பட்டி சின்னுசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 33). இவர் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 18- ந் தேதி இரவு 10 மணி அளவில் தனது மனைவி சரண்யா மற்றும் குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு தர்மபுரி மாவட்டம் அரூரில் நடந்த உறவினர் வீட்டு காதுகுத்து விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார்.

    பின்னர் விழா முடிந்து மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது துணிகள், பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. பீரோவில் வைத்திருந்த ரூ.50,000 பணம், அரை பவுன் மோதிரம், 1 விவோ செல்போன் ஆகியன திருட்டு போனது தெரியவந்தது.

    யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் நோட்டமிட்டு வீடு புகுந்து செல்போன், பணம், நகைகள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து பணம் , செல்போன், நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அதில் கொள்ளையர்கள் அந்த பகுதியில் நடமாடும் காட்சி கேமரா வில் பதிவாகி உள்ளது. விரைவில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம் என போலீசார் தெரிவித்தனர். 

    பரமத்தி அருகே வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளத்தூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 78), வக்கீல்.

    இவர் கடந்த 9-ந் தேதி தனது தங்கையின் மகள் வீட்டு திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்று விட்டு மீண்டும் 10-ந் தேதி இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர் வீடு புகுந்து கைவரிைச காட்டி இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜெயராஜ் பரமத்தி போலீசில் புகார் செய்தார்.புகாரின் அடிப்படையில் பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×