வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்ப ட்டிருந்த நகைகளை திருடி சென்றனர்போலீசார் அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்
வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
Published on

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள சிவசக்தி நகர் (டீச்சர்ஸ் காலனி)பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 40). இவரது மனைவி சர்மிளா. விக்னேஷ் வேலை விஷயமாக பெங்களூருக்கு சென்று விட்டார். வீட்டில் ஷர்மிளா மட்டும் தனியாக இருந்தார். இவர்கள் வீட்டின் அருகே விக்னே ஷின் அப்பா ராஜேஷ் வீடு உள்ளது. இதனால் தனியாக இருந்த சர்மிளா தனது மாமா வீட்டிற்கு இரவு தூங்க சென்று விட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்ப ட்டிருந்த நகைகளை திருடி சென்று விட்டனர். இதையடுத்து இன்று காலை சர்மிளா தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் கொள்ளை யடிக்கப் பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

இது குறித்து அவரின் மாமனாரிடம் தெரிவித்தார். மேலும் இது குறித்து தனது கணவருக்கும் தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு வந்து விசாரித்த னர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனால் அந்தியூர் பகுதியில் இன்று காலை பரபரப்பு காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com