பரமத்தி அருகே வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

பரமத்தி அருகே வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்தனர்.
பரமத்தி அருகே வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளத்தூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 78), வக்கீல்.

இவர் கடந்த 9-ந் தேதி தனது தங்கையின் மகள் வீட்டு திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்று விட்டு மீண்டும் 10-ந் தேதி இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர் வீடு புகுந்து கைவரிைச காட்டி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெயராஜ் பரமத்தி போலீசில் புகார் செய்தார்.புகாரின் அடிப்படையில் பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com