search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுவிப்பு"

    • பள்ளி மாணவர்களை மீட்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
    • மாணவர்களை திருப்பி அனுப்புவதற்கு கடத்தல்காரர்கள் பெரிய தொகையை கேட்டதாக உறவினர்கள் கூறினர்.

    வடமேற்கு மற்றும் வட-மத்திய நைஜீரியாவில் மக்களை குறிவைப்பது, கிராமங்களை கொள்ளையடிப்பது மற்றும் பணத்திற்காக வெகுஜன மக்கள் கடத்தல்களை மேற்கொள்வது வழக்கம்.

    இந்நிலையில், நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த கடத்தலில் துப்பாக்கி ஏந்தியவர்களால் கடத்தப்பட்ட 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த மார்ச் 7ம் தேதி அன்று கடுனா மாநிலத்தின் குரிகாவில் நடந்த கடத்தல் சம்பவம், கடந்த ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகும். பள்ளி மாணவர்களை மீட்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். கடத்தப்பட்ட மாணவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது.

    இதுகுறித்து கடுனா மாநில ஆளுநர் உபா சானி வெளியிட்டுள்ள அறிக்கையில்"கடத்தப்பட்ட குரிகா பள்ளி குழந்தைகள் காயமின்றி விடுவிக்கப்படுகிறார்கள். கரிஜா நகரில் இருந்து கடத்தப்பட்ட 250 மாணவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி விடுதலை செய்வதற்காக நடவடிக்கை மேற்கொண்ட நைஜீரிய அதிபருக்கு நன்றி" கூறினார்.

    மேலும், மாணவர்களை திருப்பி அனுப்புவதற்கு கடத்தல்காரர்கள் பெரிய தொகையை கேட்டதாக உறவினர்கள் கூறினர். ஆனால் ஜனாதிபதி டினுபு பணம் செலுத்த வேண்டாம் என்று பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டதாக கூறினார்.

    • பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பசும்பொன்னிற்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
    • வாகன மேற்கூரையில் பயணம் செய்ததாக உசிலம்பட்டியில் கைது செய்யப்பட்ட 18 பேர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    உசிலம்பட்டி

    பசும்பொன் முத்துரா மலிங்க தேவரின் 115-வது குரு பூஜை விழா நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தென் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு கட்டுப்பாடு களுடன் பசும்பொன்னிற்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் தேனியில் இருந்து உசிலம்பட்டி வழியாக பசும்பொன்னிற்கு செல்வ தற்காக டெம்போ வேனின் மேல் பகுதியில் நின்றவாறு வாகனத்தில் வந்தவர்களை உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நிறுத்தி வேனின் மேற்கூரையில் பயணிக்கக்கூடாது என அறிவுறுத்தினர். அப்போது அவர்கள் கீழே இறங்க முடியாது என்று கூறியதுடன், போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் தேனியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி, அருண்குமார், அஜித்குமார், பிரேம், ராஜேஷ் உள்ளிட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை நீதிபதி சத்தியராஜ் சொந்த ஜாமீனில் விடுவித்தார்.

    ×