என் மலர்
நீங்கள் தேடியது "லாரன்சோ முசெட்டி"
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- இதில் இத்தாலியின் ஜானிக் சின்னர் மூன்றாவது சுற்றில் வெற்றி பெற்றார்.
மெல்போர்ன்:
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர், அமெரிக்காவைச் சேர்ந்த எலியட் ஸ்பிசிரி உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 4-6 என இழந்தார் சின்னர். இதில் சுதாரித்துக் கொண்ட சின்னர் அடுத்த 3 செட்களை 6-3, 6-4, 6-4 என வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் 5-வது வரிசையில் உள்ள இத்தாலியின் லாரன்சோ முசெட்டி 5-7, 6-4, 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் செக் குடியரசு வீரர் தாமஸ் மச்சாக்கை போராடி வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஏடிபி ஆடவர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது.
- ஸ்பெயின் வீரர் அல்காரஸ் முதலிடத்தில் நீடிக்கிறார்.
லண்டன்:
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஏடிபி ஆடவர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது.
அதன்படி, ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 12,050 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் 11,500 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் 5,105 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4,780 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.
இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி 4,105 புள்ளிகளுடன் 2 நிலைகள் உயர்ந்து 5ம் இடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டிமினார் 6வது இடத்தில் தொடர்கிறார். கனடா வீரர் பெலிக்ஸ் அகர் அலிஸியாமே 2 நிலை சரிந்து 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் பென் ஷெல்டன், டெய்லர் பிரிட்ஸ், கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் புப்லிக் ஆகியோர் 8,9 மற்றும் 10-வது இடத்தில் உள்ளனர்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
- 2வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் டி மினார் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
துரின்:
உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.
அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் 16-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஜிம்மி கனோர்ஸ் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்டிஸ் டி மினார் இடம்பெற்றனர்.
ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
இந்நிலையில், 2வது சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய முசெட்டி முதல் செட்டை 7-5 என வென்றார். இதற்கு பதிலடியாக அலெக்ஸ் டி மினார் 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை முசெட்டி 7-5 என வென்றார்.
- ஹெலனிக் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஏதென்ஸில் நடைபெறுகிறது.
- இதில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி அரையிறுதியில் வெற்றி பெற்றார்.
ஏதென்ஸ்:
ஹெலனிக் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கிரீசில் உள்ள ஏதென்ஸில் நடைபெறுகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய முசெட்டி 6-0, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
- இரண்டாவது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.
வியன்னா:
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இங்கிலாந்தின் ஜேக்கப் பேர்ன்லி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக விளையாடிய ஸ்வரேவ் 6-4, 1-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் செர்பியாவின் மெஜோடோவிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது;
- நான்காவது சுற்றில் இத்தாலி வீரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த 4-வது சுற்றில் முன்னணி வீரரான இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதினார்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய கனடா வீரர் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரரை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். லாரன்சோ முசெட்டி அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
- காலிறுதியில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி வெற்றி பெற்றார்.
பீஜிங்:
செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, ஜார்ஜியாவின் நிகோலஸ் பசிலாஷ்விலி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லாரன்சோ முசெட்டி 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இத்தாலி வீரர் முசெட்டி முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.
இதில் முசெட்டி முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட கேமரூன் நூரி அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இத்தாலியின் முசெட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 3-வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், போஸ்னியாவின் டாமிர் டூமுர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் முதல் இரு செட்களை 6-1, 6-3 என வென்றார். 3வது செட்டை டாமிர் 6-4 என கைப்பற்றினார். 4-வது செட்டை அல்காரஸ் 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி 4-6, 6-4, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் மரினோ நவோனேவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இத்தாலி வீரர் முசெட்டி வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் ஒன்று பிரெஞ்சு ஓபன் தொடராகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, ஜெர்மனியின் ஹான்மன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய முசெட்டி 7-5, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபே 6-4, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் ரோமன் சபியுலினை வென்றார்.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- இத்தாலி வீரர் முசெட்டி அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, பிரிட்டன் வீரர் ஜாக் டிராபர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய டிராபர் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரிட்டனின் ஜாக் டிராபர், காஸ்பர் ரூட் உடன் மோதுகிறார்.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- இத்தாலி வீரர் முசெட்டி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, கனடா வீரர் கேப்ரியல் டியல்லோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய முசெட்டி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று இரவு நடைபெறும் அரையிறுதியில் இத்தாலி வீரர் முசெட்டி, பிரிட்டனின் ஜாக் டிராபரை சந்திக்கிறார்.






