search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை பதிவு"

    • எட்டயபுரம் பகுதிகளிலும் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • ஒரு மாதத்தில் பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் சூழல் இருந்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. 3 மாவட்டங்களிலும் இன்று காலை வரையிலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை, பாளை ஆகிய இடங்களில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக நெல்லையில் 13 மில்லி மீட்டர் பதிவாகியது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மணிமுத்தாறு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பெய்தது .

    118 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் தற்போது 116 அடி நீர் இருப்பு உள்ளது. பிரதான பாபநாசம் அணையில் 135 அடி நீர் இருப்பு இருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 148 அடியாக உள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    ஒரு சில இடங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு ஆரம்ப கட்ட நிலையிலேயே விவசாயிகள் நல் நடவு செய்தனர். இதன் காரணமாக அவை கதிர் உண்டாகும் நிலையில் உள்ளது. அவை இன்னும் ஒரு மாதத்தில் பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் சூழல் இருந்து வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை நேற்று அதிகாலையில் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. மாலை முதல் இரவு வரையிலும் கயத்தாறு மற்றும் கழுகு மலை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழையும் பெய்தது. அதிகபட்சமாக கடம்பூரில் 44 மில்லி மீட்டரும், கழுகு மலையில் 42 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    இதேபோல் திருச்செந்தூர், சாத்தான் குளம் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி பகுதிகளில் சற்று பலத்த மழை பெய்தது. கோவில்பட்டியில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. எட்டயபுரம் பகுதிகளிலும் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தென்காசி மாவட்டத்தை பொருத்தவரை சிவகிரி பகுதியில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது.

    மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    • கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்க ளாக மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்க ளாக மழை பெய்து வருகிறது. நேற்றும் பரவலாக மழை பெய்தது.

    கன மழை

    குறிப்பாக எடப்பாடி, ெபத்தநாயக்கன் பாளையத்தில் நேற்றிரவு தொடங்கிய மழை விடிய விடிய கன மழையாக பெய்தது. இதே போல தலைவாசல், சங்ககிரி, ஆத்தூர் பகுதிகளிலும் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள்மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏற்காட்டில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை சாரல் மழையாக பெய்தது . மேலும் நேற்றிரவு பனி மூட்டமும் நிலவியது. இதனால் கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவியாய் தவித்து வருகிறார்கள்.

    127.9 மி.மீ. மழை

    மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 23 மி.மீ. மழை பெய்துள்ளது. பெத்தநாயக்கன் பாளையத்தில் 18, தம்மம்பட்டி 16, தலைவாசல் 14, சங்ககிரி 13.2, ஆத்தூர் 12, சேலம் 6.1, ஏற்காடு 6, வீரகனூர் 5, கரியகோவில் 5, கெங்கவல்லி 4, ஆனைமடுவு 3, ஓமலூர் 2, காடையாம்பட்டி 0.6 மி.மீ என மாவட்டம் முழுவதும் 127.90 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. 

    • மேலும் 6 வீடுகள் இடிந்தது
    • மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதியில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. சிற்றாறு-1 அணைப்பகுதியில் நேற்று 2 மணி நேரத்துக்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 103.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருகிறது.

    கோழிப்போர்விளை, அடையாமடை, முள்ளங்கினாவிளை, குழித்துறை, களியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அணை பகுதிகளிலும் மலையோர பகுதிகளிலும் கொட்டி தீர்த்துவரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 35.55 அடியாக இருந்தது. அணைக்கு 975 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 284 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 66.40 அடியாக உள்ளது. அணைக்கு 538 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 15.15 அடியாக உள்ளது. அணைக்கு 210 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 15.25 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 9 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 37.07 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 16.40 அடியாக உள்ளது.

    தொடர் மழையின் காரணமாக மழைக்கு ஏற்கனவே 60 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மேலும் 6 வீடுகள் இடிந்துள்ளது. கல்குளம் தாலுகாவில் 4 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 2 வீடுகளும் இடிந்து விழுந்துள்ளது.

    • குளிர்ச்சியான சூழல் நிலவியது
    • விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஜனதாபுறம், செட்டியப்பனூர், நியூடவுன், கச்சேரி சாலை, கொடையாஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை பெய்தது.

    இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அதன்படி திருப்பத்தூர் சுகர் மில் பகுதியில் அதிகபட்சமாக 70 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதே போல் நாட்டறம்பள்ளியில் 62 மில்லி மீட்டர், திருப்பத்தூரில் 57.60 மில்லி மீட்டர், ஆலங்காயத்தில் 49 மில்லி மீட்டர், ஆம்பூரில் 43 மில்லி மீட்டர், ஆம்பூர் சுகர் மில் பகுதியில் 35.80 மில்லி மீட்டர், வாணியம்பாடியில் 32 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    • கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 5.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    • பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.72 அடியாக உள்ளது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தற்பொழுது சற்று மழை குறைந்துள்ளது. நாகர்கோவில், தக்கலை, குளச்சல், இரணியல், கோழிப் போர்விளை, முள்ளங்கினாவிளை, அடையாமடை பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 5.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.72 அடியாக உள்ளது. அணைக்கு 472 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 37.95 அடியாக உள்ளது. அணைக்கு 228 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்ப டுகிறது.

    • மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
    • அதிகபட்சமாக 26 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வந்ததால் வாகன ஓட்டிகள், முதியவர்கள், குழந்தைகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு புறநகர் மாவட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம். தாளவாடி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    நேற்று இரவு மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மொடக்குறிச்சியில் மாவட்டத்தில் அதிகபட்சமாக 26 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் சென்னிமலை, கொடிவேரி அணைப்பகுதி, நம்பியூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு: மொடக்குறிச்சி-26, சென்னிமலை-18, கொடிவேரி அணை-3, நம்பியூர்-2.

    • திருப்பூர் கோர்ட் வீதியில் உள்ள டி.எம்.எப் பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
    • இரண்டு மணி நேரம் பெய்த தொடர் மழையால் சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி திருப்பூரில் நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6மணி முதல் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் சாரல் மழை லேசாக பெய்து நின்றது. பின்னர் இரவு10 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் கொட்டிதீர்த்த கன மழையால் திருப்பூர் அவினாசி ரோடு, பி.என்.ரோடு, ஊத்துக்குளி ரோடு, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, மங்கலம் ரோடு, காங்கயம் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டனர். திருப்பூர் கோர்ட் வீதியில் உள்ள டி.எம்.எப் பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    அதேபோல் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒத்தக்கல் பாலம், கல்லூரி சாலையில் உள்ள பாலங்களில் மழைநீர் அதிக அளவு சென்றதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இரண்டு மணி நேரம் பெய்த தொடர் மழையால் சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. திருப்பூர் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிக்காகதோண்டப்பட்ட இடங்களில் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானார்கள்.இதேபோல் மாவட்டம் முழுவதும் விடிய விடிய பெய்த கனமழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகி ன்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு 46 மில்லி மீட்டர், அவிநாசி 37 மில்லி மீட்டர், பல்லடம் 29 மில்லி மீட்டர், ஊத்துக்குளி 11 மில்லி மீட்டர், காங்கேயம் 43 மில்லி மீட்டர், தாராபுரம் 27 மில்லி மீட்டர், மூலனூர் 11 மில்லி மீட்டர், குண்டடம் 55 மில்லி மீட்டர், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் 52 மில்லி மீட்டர், திருப்பூர் தெற்கு 68 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 504 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ×