search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rain record"

    • எட்டயபுரம் பகுதிகளிலும் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • ஒரு மாதத்தில் பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் சூழல் இருந்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. 3 மாவட்டங்களிலும் இன்று காலை வரையிலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை, பாளை ஆகிய இடங்களில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக நெல்லையில் 13 மில்லி மீட்டர் பதிவாகியது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மணிமுத்தாறு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பெய்தது .

    118 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் தற்போது 116 அடி நீர் இருப்பு உள்ளது. பிரதான பாபநாசம் அணையில் 135 அடி நீர் இருப்பு இருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 148 அடியாக உள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    ஒரு சில இடங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு ஆரம்ப கட்ட நிலையிலேயே விவசாயிகள் நல் நடவு செய்தனர். இதன் காரணமாக அவை கதிர் உண்டாகும் நிலையில் உள்ளது. அவை இன்னும் ஒரு மாதத்தில் பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் சூழல் இருந்து வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை நேற்று அதிகாலையில் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. மாலை முதல் இரவு வரையிலும் கயத்தாறு மற்றும் கழுகு மலை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழையும் பெய்தது. அதிகபட்சமாக கடம்பூரில் 44 மில்லி மீட்டரும், கழுகு மலையில் 42 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    இதேபோல் திருச்செந்தூர், சாத்தான் குளம் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி பகுதிகளில் சற்று பலத்த மழை பெய்தது. கோவில்பட்டியில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. எட்டயபுரம் பகுதிகளிலும் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தென்காசி மாவட்டத்தை பொருத்தவரை சிவகிரி பகுதியில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது.

    மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    • கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்க ளாக மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்க ளாக மழை பெய்து வருகிறது. நேற்றும் பரவலாக மழை பெய்தது.

    கன மழை

    குறிப்பாக எடப்பாடி, ெபத்தநாயக்கன் பாளையத்தில் நேற்றிரவு தொடங்கிய மழை விடிய விடிய கன மழையாக பெய்தது. இதே போல தலைவாசல், சங்ககிரி, ஆத்தூர் பகுதிகளிலும் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள்மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏற்காட்டில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை சாரல் மழையாக பெய்தது . மேலும் நேற்றிரவு பனி மூட்டமும் நிலவியது. இதனால் கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவியாய் தவித்து வருகிறார்கள்.

    127.9 மி.மீ. மழை

    மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 23 மி.மீ. மழை பெய்துள்ளது. பெத்தநாயக்கன் பாளையத்தில் 18, தம்மம்பட்டி 16, தலைவாசல் 14, சங்ககிரி 13.2, ஆத்தூர் 12, சேலம் 6.1, ஏற்காடு 6, வீரகனூர் 5, கரியகோவில் 5, கெங்கவல்லி 4, ஆனைமடுவு 3, ஓமலூர் 2, காடையாம்பட்டி 0.6 மி.மீ என மாவட்டம் முழுவதும் 127.90 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. 

    ×