என் மலர்
நீங்கள் தேடியது "rain recorded"
- மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
- அதிகபட்சமாக 26 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வந்ததால் வாகன ஓட்டிகள், முதியவர்கள், குழந்தைகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு புறநகர் மாவட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம். தாளவாடி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
நேற்று இரவு மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மொடக்குறிச்சியில் மாவட்டத்தில் அதிகபட்சமாக 26 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதேபோல் சென்னிமலை, கொடிவேரி அணைப்பகுதி, நம்பியூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு: மொடக்குறிச்சி-26, சென்னிமலை-18, கொடிவேரி அணை-3, நம்பியூர்-2.






