search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத நல்லிணக்கம்"

    • 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர்
    • நாட்டில் உள்ள அனைவரும் சகோதரத்துடன் தொப்புள் கொடி உறவாய் வாழ வேண்டும் என இரு தரப்பினரும் கேட்டுக் கொண்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூரில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர். நாட்டில் அனைவரும் சகோதரத்துடன் வாழ வேண்டுமென இந்துக்களும் இஸ்லாமியர்களும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

    இந்த பழமையான கோயிலை சுமார் 7 கோடி ரூபாய் செலவில் புரணமைக்கும் பணிகளில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வந்தனர். அதன்படி கோயில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த 17-ம் தேதி முதல் வரும் 19-ம் தேதி வரை கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாகலூர் பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாய் வீட்டு சீதனமாக சீர்வரிசை பொருள்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    இதில், ஒரு லட்சம் ரூபாய் பணம், பட்டுச்சேலை, பழங்கள், இனிப்புகள், மலர் மாலைகள் உள்ளிட்ட பொருள்களை தாம்பூலத் தட்டில் எடுத்து வந்த இஸ்லாமியர்கள் அதனை கோயில் நிர்வாகத்தினரிடம் வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர். பாகலூர் பகுதியில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒற்றுமையாக இருப்பதை போல நாட்டில் உள்ள அனைவரும் சகோதரத்துடன் தொப்புள் கொடி உறவாய் வாழ வேண்டும் என இரு தரப்பினரும் கேட்டுக் கொண்டனர்.

    • நாகையில் உள்ள புதேவாலயம், கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுவிட் வழங்கி கொண்டாடினார்.
    • மீலாதுநபி பெறுவிழாவாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மீலாதுநபி பெறுவிழாவாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    அதன்படி நாகூர் நாயகன் நேசபாசறை என்ற அமைப்பை சேர்ந்த ஹாஜா சம்சுதீன் சாகிப் என்ற இஸ்லாமியர் மீலாது நபியை மத நல்லிணக்க விழாவாக கொண்டாடும் வகையில் நாகப்பட்டினம் கடற்கரை சாலையில் உள்ள புனித லூர்து அன்னை தேவாலயம், புகழ்பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம், பாப்பாகோவில் ஹாஜா சேக் அலாவுதீன் வலியுல்லா தர்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு சுவிட் கேக் வழங்கி கொண்டாடினார்.

    மீலாது நபி பெருவிழாவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி இஸ்லாமியர் ஒருவர் கேக் வழங்கி கொண்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது.

    • சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மத நல்லிணக்க மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
    • மதுரை காஜிமார் தெருவில் உள்ள ஹஸ்ரத் தாஜுதீன் மஹாலில் நடந்தது.

    மதுரை

    தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட்டத்தின் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி காஜிமார் தெருவில் உள்ள ஹஸ்ரத் தாஜுதீன் மஹாலில் நடந்தது.

    மாவட்ட துணைத் தலைவர் ரசூல் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர்கள் முகமது அலி ஜின்னா, போனி பேஸ், அபுதாகிர், அப்பாஸ் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் கோ.சந்திரசேகர் வரவேற்றார்.

    இதில் முதன்மை குரு கத்தோலிக்க உயர்மறை மாவட்டம் மதுரை அருட்தந்தை ஜெரோம், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மதுரை மாவட்ட முஸ்லீம் ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத் அலி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு மாவட்ட தலைவர் அலாவுதீன், அருட்தந்தையர் பெனடிக் பர்ண பாஸ், லாரன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பகுதி குழு செயலாளர் ஜீவா.

    கவுன்சிலர்கள் நூர்ஜகான், ஜென்னியம்மாள், பானு முபாரக் மந்திரி, சிறுபான்மை நலக்குழு மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி, பொருளாளர் ஜான்சன், ஐ.என்.டி.ஜே. மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது ஆகியோர் பேசினர்.

    • தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
    • மாவட்ட துணைத்தலைவர் லூர்து முன்னிலை வகித்தார்.

    மதுரை

    தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட்டத்தின் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி கோரிப்பாளையம்-கான்சாபுரம் மெயின்ரோடு ரம்ஜான் மினி மகாலில் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் முகமது அலி தலைமை தாங்கினார்.

    மாவட்ட துணைத்தலைவர் லூர்து முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் லாரன்ஸ் வரவேற்றார். சி.எஸ்.ஐ. பேராயர் ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் விஜயராஜன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் அலாவுதீன், அருட்தந்தை பெனடிக் பர்ணபாஸ், மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத் அலி, வடக்கு மண்டல தலைவர் சரவணா புவனே சுவரி, முகேஷ்.

    கவுன்சிலர் உமா ரவி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் கணேச மூர்த்தி, பொருளாளர் ஜான்சன், துணை செயலாளர் போனி பேஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மண்டல பொறுப்பாளர் அவ்தா காதர், தி.மு.க. வட்டச்செயலாளர் மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் இனிய அரசன் ஆகியோர் பேசினர்.

    மாவட்டக்குழு உறுப்பினர் சாகுல் அமீது நன்றி கூறினார்.

    • மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வன்முறையாளர்களுக்கு கடும் தண்டனை விதக்க வேண்டும்.
    • மாதந்தோறும் மின் கட்டண கணக்கெடுப்பு நடத்தி ஏழை, எளிய மக்களின் சிரமத்தை போக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    தேசிய தவ்ஹீத் கூட்ட மைப்பு சார்பில் ராமநாதபுரம் சந்தை திடலில் மாநிலச் செயலாளர் முஹம்மது பாரூஸ் தலைமையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் வருகிற ஜனவரி 8-ந்தேதி திருச்சியில் நடைபெற உள்ள நபிகள் நாயகம் (ஸல்) சிறப்பு மாநாடு குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் மாநில பேச்சாளர் சபீர் ரஹ்மான், இம்ரான்கான் ஆகியோர் பேசினர். தேசிய தவ்ஹித் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் நபிகள் நாயகத்தின் சிறப்பு பண்புகளை விவரித்து பேசினார். மாவட்டப் பொருளாளர் முஹம்மது கான் தீர்மானம் வாசித்தார், மாவட்ட பேச்சாளர் அப்துல் சத்தார் நன்றி கூறினார்.

    முன்னதாக தேசிய தவ்ஹித்கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநில அரசுகளின் உரிமையைப் பறித்து, கூட்டாட்சித் தத்துவத்தை நீர்த்துப் போகச் செய்து, மத்திய அரசின் அடக்குமுறைப் போக்கை நிலைநாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள என். ஐ. ஏ. என்னும் தேசிய புலனாய்வு முகமையை உடனடியாக கலைத்து விட்டு, மாநில அரசுகளின் ஒப்புதலோடு சி.பி.ஐ. மட்டுமே புலனாய்வுக்கு பயன்படுத்த வேண்டும்.

    நீண்டகால சிறைவாசி களை நன்னடத்தையின் அடிப்படையிலும், அரசின் பரிந்துரையின் அடிப்படையிலும் விடுதலை செய்யும்போது, ஒவ்வொரு முறையும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மட்டும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. மத அடிப்ப டையிலான இந்த பாரபட்சம் ஜனநாயக விதிகளுக்கு முற்றிலும் மாறானது. இத்தகைய அநீதியைக் களையும் வகையில் முஸ்லிம்கள் உள்ளிட்ட நீண்டகால சிறைவாசிகளை விரைவில் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

    கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பை டி.ஜி.பி. உத்தரவின் பேரில் கோவை காவல்துறையினர் விரைந்து எடுத்த நடவடிக்கையை பாராட்டுகிறோம். மத நல்லிணக்கத்தையும், அமைதியையும் கெடுக்கும் வன்முறை, பயங்கரவாதத்தில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உயர்ந்தபட்ச கடும் தண்டனைக்கு உட்படுத்தபட வேண்டும். அதே சமயம் இந்த வழக்கை புலன் விசாரணை செய்து வரும் என்.ஐ.ஏ. என்னும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள், இறந்துபோன ஜமேஷா முபினுக்கு பின்புலத்தில் இருந்த உண்மையான சூத்திரதாரியை நாட்டிற்கு அடையாளம் காட்டக் கூடியதாக இருக்க வேண்டும். சம்பந்தமில்லாத அப்பாவிகளை சோதனை என்ற பெயரில் வேட்டை யாடி அவர்களை குற்றவாளி களாக சித்தரிக்கும் போக்கு கூடாது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். குறிப்பாக மாதந்தோறும் மின் கட்டண கணக்கெடுப்பு நடத்தி ஏழை, எளிய மக்களின் சிரமத்தை போக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்தும் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
    • விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சி மற்றும் அமைப்பினர் பங்கேற்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சி மற்றும் அமைப்பினர் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

    தமிழகத்தில் வன்முறையை தூண்டி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகளைக் கண்டித்தும், மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும், தலித், பழங்குடியின மக்கள் மற்றும் மத சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்தும் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையம் அருகில் காந்திஜி சாலையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.சீனிவாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    இதில், ராஜகுமார் எம்.எல்.ஏ, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    • கவுன்சிலருமான அஸ்லம் தலைமையில், இஸ்லாமிய இளைஞர்கள் பூஜை பொருட்கள் வழங்கினர்.
    • அங்கு நடந்த பூஜையில் பங்கேற்று, அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்தினை தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நக ராட்சி வார்டு எண்.31 பகுதிக்குட்பட்ட சீனிவாசா காலனி பகுதியில் நகர்மன்ற உறுப்பினர் வேலுமணி தலைமையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைக்கப்பட்டது.

    நேற்று விநாயகர் சதுர்த்தி விழா நடந்ததையொட்டி காலை அந்த சிலைக்கு பூஜை செய்யப்பட்டது. இதற்கான பூஜை பொருட்களை மிலாடி நபி விழாக்குழுவினரும், நகர்மன்ற முன்னாள் கவுன்சிலருமான அஸ்லம் தலைமையில், இஸ்லாமிய இளைஞர்கள் பூஜை பொருட்கள் வழங்கினர். பின்னர் அங்கு நடந்த பூஜையில் பங்கேற்று, அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்தினை தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில், ரியாஸ், ஜாமீர், யஹ்யா, அஷ்ரப், பப்லு, ஜாபர்ஜெலீல், அப்பாஸ், முனீர், ஜுபேர், முன்னா உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். 12ஆண்டுகளாக நடை பெறும் இந்த நிகழ்ச்சியை பார்த்த இந்து மதத்தினர், இஸ்லாமியர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்ஜெ-யில் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில், நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி விநாயகருக்கு 608 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தங்கக்கவச அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதே போல், கிருஷ்ண கிரி காந்திசாலை வரசித்தி விநாயகர் கோயிலில் வெண்ணை அலங்காரத்திலும், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீர்த்த விநாயகர் கோயிலில் சிறப்பு அலங்கா ரத்திலும், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் கோயிலில் தங்கக் கவச அலங்காரத்திலும், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோயிலில் தங்கக் கவச அலங்காரத்திலும், காந்திநகர் வலம்புரி விநா யகர் கோயிலில் வெள்ளிக் கவச அலங்காரத்திலும், சேலம் சாலை ஆதிசக்தி விநா யகர் கோயிலில் வெள்ளிக் கவச அலங்காரத்திலும் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள விநாயகர் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.

    இரண்டு ஆண்டு களுக்கு பிறகு எந்த கட்டுப்பாடுகளுமின்றி பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    • நற்சிந்தனை களையும், நல்லொழு க்கத்தையும், எடுத்துச் சொல்லும் கருத்துக்களை ஏற்கும் மனப்பக்குவத்தை கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    • எல்லா விதமான கருத்து க்களையும் மாணவர்கள் அறிந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் முனைப்பு காட்டப்பட வேண்டும்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, கல்லூரி முதல்வர் ராமஜெயம் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் மற்றும் பேராசிரியர் கலந்து கொண்டனர்.

    மத நல்லிணக்கம் குறித்தும், சகிப்புத் தன்மை குறித்தும், பிற மத உணர்வுகளை மதிக்கும், நல்லெண்ணத்தை வளர்க்கும், வகையில், ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டும் நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பேசிய கல்லூரி முதல்வர் ராமஜெயம், மாணவ மாணவிகளிடையே, மதநல்லிணக்கத்தை பேணிக்காக்கும் நல் உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிற மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், இந்தியாவின் சிறப்பு ஆகிய வேற்றுமையில் ஒற்றுமை என்பதின் பெருமையை கட்டு காக்கப்படவேண்டும்.

    மேலும் நற்சிந்த னை களையும், நல்லொழு க்கத்தையும், எடுத்துச் சொல்லும் கருத்துக்களை ஏற்கும் மனப்பக்குவத்தை கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    எல்லா விதமான கருத்து க்களையும் மாணவர்கள் அறிந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் முனைப்பு காட்டப்பட வேண்டும். அன்பு அகிம்சை சகோதரத்துவம், இரக்கம், பிறருக்கு உதவுதல், துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தல், இவற்றின் அடிப்படையிலேயே அனைத்து மதங்களும் இயங்குகின்றன.

    ஏற்றத் தாழ்வையும், விருப்பு வெறுப்பு இன்றி ஏற்கும் மனப்பக்குவத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அனைவரிடத்திலும் அன்பாகவும், சகோதர உணர்வோடும் பழக வேண்டும் என பேசினார்.

    ×