search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதாள சாக்கடை பணி"

    • சாலையில் ஆழ்துளை பள்ளங்கள் உள்ளதால் சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது
    • பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    சென்னை:

    போரூரில் உள்ள துண்டலம், அடையாளம்பட்டு பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவடையவில்லை.

    இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சமீபத்தில் பெய்த மழையில் சாலையில் கடும் வெள்ளம் ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் தற்போது தனியார் ஆஸ்பத்திரியை ஒட்டியுள்ள தெருவில் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதுதொடர்பாக போரூர் பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-

    சாலையில் ஆழ்துளை பள்ளங்கள் உள்ளதால் சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் செல்கிறது. இதனால் பாதசாரிகள் கூட நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பணி தொடங்கி 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கிறது என்றார்.

    செப்டம்பர் 30-ந்தேதிக்குள் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ஒவ்வொரு பகுதியிலும் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து உள்ளூர் மக்களுக்கு தெரிவிக்குமாறு துறைகளுக்கு சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை பிறப்பித்தாலும் நடப்பு பணிகள் குறித்து தெரியாமல் இருப்பதாக போரூர் மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

    • நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் 22 வார்டுகளில் மட்டும் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணி 41 கிலோமீட்டர் தூரம் மட்டும் நடைபெற்று வருகிறது.
    • தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாகவும் மாறி பொதுமக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி நக ராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். மொத்தம் 69 கிலோமீட்டரில் 237 தெருக்கள் உள்ளன.

    இந்நிலையில் பொன்னேரி நகராட் சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2011-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.பின்னர் இடம் தேர்வு செய்வதில் குளறுபடி, நிதி ஒதுக்குவதில் காலதாமதம் காரணமாக பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த 2018 -ம் ஆண்டு பாதாள சாக்கடைதிட்டப்பணி தொடங்கப்பட்டது. இதனை இரண்டு வருடத்திற்குள் முடிக்க திட்டமிட்டு ரூ.54.78 கோடி ஒதுக்கப்பட்டது.

    ஆனால் பணி தொடங்கி 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பாதாளசாக்கடை கால்வாய் அமைக்கும் பணி இன்னும் முடியவில்லை. நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் 22 வார்டுகளில் மட்டும் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணி 41 கிலோமீட்டர் தூரம் மட்டும் நடைபெற்று வருகிறது.

    வேண்பாக்கம், பழைய பஸ் நிலையம், கள்ளுக்கடை மேடு ஆகிய 3 இடங்களில் கழிவு நீர் சேகரிப்பு தொட்டி, மற்றும் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பொன்னேரி அடுத்த பெரிய காவனம் ஆரணி ஆற்றின் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படுகிறது. என்.ஜி.ஓ. நகரில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளது. இங்குள்ள தெருக்களில் குழாய் பதிக்க ஆரம்பிக் கப்பட்ட பணிகள் ஒரு வருடமாக நடைபெற்று வருகின்றன. இதனால் தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாகவும் மாறி பொதுமக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

    ஏற்கனவே பொன்னேரி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைத்திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளனர். ஆனாலும் கடந்த 6 ஆண்டுகளாக இந்த பணி ஆமைவேகத்தில் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இதுகுறித்து பொன்னேரி நகராட்சி ஆணையர் கோபிநாத் கூறும்போது, பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 85 சதவீதம் முடிவடைந்துள்ளது. பருவ மழைக்கு முன்பு டிசம்பர் மாதம் இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமி டப்பட்டு உள்ளது. நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பைப்லைன் புதைத்த பகுதிகளில் பணிகள் முடிக்கப்பட்டு சாலைகள் போடப் பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் மீதமுள்ள பணிகளை முடித்து தரும்போது வீடுகளுக்கு கழிவு நீர் குழாய் இணைப்பு பணி தொடங்கப்படும் என்றார்.

    • பாதாள சாக்கடை பணிகள் தொடங்குவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
    • மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறும் வகையில் ஓடைகள் இருந்தாலும் பெரும்பாலானவை தூர்வரப்படாமல் மேடாகி விட்டன.

    சிவகாசி

    சிவகாசி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது. பாதாள சாக்கடை அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதுடன் ஆக்கிரமிப்புகள் அதிகம் காரணமாக தெருக்களும் ரோடுகளும் சுருங்கி விட்டன.மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறும் வகையில் ஓடைகள் இருந்தா லும் பெரும்பாலானவை தூர்வரப்படாமல் மேடாகி விட்டன. அனைத்து தெருக்களிலும் வாறுகால் அமைக்கப்பட்டிருந்தாலும் குடியிருப்புகள், சாலை கழிவு கள், தொழிற்சாலைகளின் கழிவுகளை வெளியேற்றும் அளவிற்கு போதுமானதாக இல்லை.

    மழைக்காலங்களில் சாக்கடை கழிவு நீர் தெருக்க ளில் ஓடுகிறது. இதற்காக சிவகாசியில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக 15 ஆண்டுகளுக்கு முன்பு நட வடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    சிவகாசி, திருத்தங்கல் 2 பகுதிகளுக்கும் சேர்த்து 150 கிலோ மீட்டர் தூரம் பாதாள சாக்கடை அமைக்க கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. விஸ்வ நத்தம், நாரணாபுரம், அனுப்பங்குளம், செங்கமல நாச்சியார்புரம், ஆனையூர், பள்ளபட்டி உள்ளிட்ட 9 முதல் நிலை ஊராட்சிகள் தற்போது நிர்வாகத்தில் இல்லை.

    இந்த ஊராட்சிகள் சிவகாசி மாநகராட்சியோடு இணைக்கப்படாமல் சிவகாசி யூனியன் பகுதிக்குள் உள்ளது. இந்த ஊராட்சி களை மாநகராட்சியோடு இணைத்தால் பாதாள சாக்கடை திட்டத்தின்படி 360 கிலோ மீட்டர் தூரம் அமையவேண்டி இருக்கும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து உட னடியாக சிவகாசியில் பாதாள சாக்கடை பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை கால்வாய்கள் அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், கோட்டையை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. காட்பாடி காந்திநகர், சங்கரன் பாளையம், தொரப்பாடி சத்துவாச்சாரி உள்ளிட்ட பகுதிகளில் பல மாதங்களாக பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்ற வருகிறது.

    இதனால் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். காலையில் வீட்டிலிருந்து காரில் வருபவர்கள் மீண்டும் மாலை வீட்டுக்கு செல்லும்போது பள்ளம் தோண்டப்பட்டு உள்ளதால் வாகனங்களை எங்கே நிறுத்தி விட்டு செல்வது என அவதி அடைந்து வருகின்றனர். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் குமார வேல் பாண்டியன் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டும் அவர்கள் அலட்சியமாகவே செயல்பட்டு வருகின்றனர்.

    இதேபோல் வேலூர் ஆற்காடு சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது. மெத்தனப் போக்கில் பணிகள் நடைபெற்று வருவதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயலும் போது அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்படுகிறது.

    வாகனங்கள் செல்லும்போது அதிக அளவில் புழுதி கிளம்புவதால் வீடு, கடைகளில் புழுதி படிந்து விடுகிறது. எனவே ஆற்காடு சாலையில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடியும் வரை போலீசார் கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • ஜே.சி.பி. எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது.
    • பள்ளத்தில் வேலை செய்து கொண்டிருந்த சக்திவேல் மீது மணல் சரிந்து விழுந்தது. இதில் அவர் மண்ணில் புதைந்துவிட்டார்.

    மதுரை:

    மதுரை கூடல்புதூர் அசோக்நகர் 2-வது தெரு பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் இந்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இன்று காலை பாதாள சாக்கடை திட்டப்பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஈரோட்டைச் சேர்ந்த சக்திவேல் (வயது 35) என்பவரும் பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்டார். இதற்காக ஜே.சி.பி. எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது.

    அப்போது பள்ளத்தில் வேலை செய்து கொண்டிருந்த சக்திவேல் மீது மணல் சரிந்து விழுந்தது. இதில் அவர் மண்ணில் புதைந்துவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரை மீட்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். பள்ளத்தை தண்ணீர் மூடி விட்டதால் அவரது உடலை உடனடியாக மீட்க முடியவில்லை. இதனால் மணலில் புதைந்த சக்திவேல் உயிருடன் புதைந்து பலியாகி விட்டார். அவரது உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதியம் 1 மணி வரை அவரது உடலை மீட்க முடியவில்லை. இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தோண்டிய குழிகள், முறையாக மூடப்படாமல் வெறும் மண் போட்டு மூடப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
    • இப்பணி நடைபெறும் பாதை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி வெள்ளியங்காடு 60 அடி ரோட்டில் பிரதான குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. இதற்காக தோண்டிய குழிகள், முறையாக மூடப்படாமல் வெறும் மண் போட்டு மூடப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    தற்போது இந்த குழிகளில் ஜல்லி கலவை போட்டு நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியில் தற்போது குறுக்கு வீதிகளிலிருந்து குழாய் பதித்து, கழிவுநீர் பிரதான குழாய்க்கு செல்லும் வகையில், பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்காக இப்பணி நடைபெறும் பாதை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ×