பாதாள சாக்கடை பணி - வெள்ளியங்காடு பகுதியில் வாகனங்கள் செல்ல தடை

தோண்டிய குழிகள், முறையாக மூடப்படாமல் வெறும் மண் போட்டு மூடப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.இப்பணி நடைபெறும் பாதை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி வெள்ளியங்காடு 60 அடி ரோட்டில் பிரதான குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. இதற்காக தோண்டிய குழிகள், முறையாக மூடப்படாமல் வெறும் மண் போட்டு மூடப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

தற்போது இந்த குழிகளில் ஜல்லி கலவை போட்டு நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியில் தற்போது குறுக்கு வீதிகளிலிருந்து குழாய் பதித்து, கழிவுநீர் பிரதான குழாய்க்கு செல்லும் வகையில், பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்காக இப்பணி நடைபெறும் பாதை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com