search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாட்டில்கள்"

    • ஊட்டசத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுவது.
    • காலவதி ஆகும் வரை நோயாளி களுக்கு வழங்காமல் வைத்திருந்தார்களா?

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஆர்.எம்.எஸ். காலனி அருகே குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் தமிழ்நாடு அரசு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய ங்களில் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக விநியோகித்த 200-க்கும் மேற்பட்ட அயர்ன் அன்ட் போலிக் ஆசிட் சிரப் ஐ.பி என்ற டானிக் பாட்டில்கள் ஆயிரம் பாட்டில்கள் கொட்டப்பட்டுள்ளன.

    இந்த டானிக் ஊட்டசத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுவது.

    இந்த நிலையில் அயர்ன் அன்ட போலிக் ஆசிட் சிரப் ஐ.பி டானிக் 8-ம் மாதம் காலாவதி உள்ளது.

    இதனை குப்பை கிடங்கில் கொட்டியது யார்? காலவதி ஆகும் வரை நோயாளி களுக்கு வழங்காமல் வைத்திருந்தார்களா என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    மிகவும் முக்கியமான இந்த மருந்து பொருளை காலாவதியாகும் முன்னரே வேறு அரசு மருத்துவமனைக்கு கொடுத்திருந்தால் பயன் உள்ளதாக இருந்திருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

    • ஏரிக்கரை பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை.
    • தனது வீட்டில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே வெவ்வேறு சம்பவங்களில் திருட்டுத்தனமாக பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவற்றின் விவரம் வருமாறு:-

    தஞ்சாவூர் அருகே உள்ள சின்ன புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி.

    இவரது மனைவி ராணி (வயது 44).

    இவர் அருகே உள்ள ஏரிக்கரை பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராணியை கைது செய்தனர்.

    இதேபோல் குளிச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல் (36) என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • அனைத்து வகையிலும் உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • கண்டிப்பாக பாட்டில்களில் பெட்ரோல் விற்பதில்லை என்பதில் பங்க் உரிமையாளர்கள் மிகுந்த உறுதியுடன் உள்ளனர்.

    திருப்பூர்:

    கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ., விசாரணை துவங்கியுள்ளது. அதில் பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்ட சதி வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து வகையிலும் உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் திருப்பூர் மாநகர போலீஸ் எல்லையிலும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். முக்கிய கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் கண்காணிப்பு மற்றும் சோதனை நடத்தப்படுகிறது.விடுதிகள், கூரியர் சர்வீஸ்கள், வாகன பார்க்கிங் மையங்கள் என சந்தேகப்படும் விதமாக புதிய நபர்கள் நடமாட்டம் கண்காணிக்கும் வகையில் உரிய அறிவுரைகள் அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் அசம்பாவிதங்களுக்கு திட்டமிடும் நபர்கள் முக்கியமான எரிபொருளாக பெட்ரோல் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே பெட்ரோல் பங்க்குகளில் வாகனங்கள் தவிர தனியாக பாட்டில், கேன் போன்றவற்றில் பெட்ரோல் விற்பனை செய்யக் கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.இது குறித்த அறிவிப்பு பெட்ரோல் பங்க்குளில் வைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக பாட்டில்களில் பெட்ரோல் விற்பதில்லை என்பதில் பங்க் உரிமையாளர்கள் மிகுந்த உறுதியுடன் உள்ளனர்.

    • சந்தைப்பேட்டை பகுதியில் இரவு 11 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
    • கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 123 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.

    சேலம்:

    சேலம் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் பாபு நேற்று இரவு செவ்வாய்பேட்டை அருகே உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் இரவு 11 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த டாஸ்மாக் கடை எண் 2226-ல் உள்ள பார் திறந்து இருப்பது கண்டு உடனடியாக உள்ளே சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.

    அப்போது அங்கு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 123 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். மேலும் கடையில் இருந்த 4 பேரை பிடித்து சேலம் செவ்வாய்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் ராஜிவ் நகர் பகுதியில் மது விற்றவர் போலீசார் கைது செய்தனர்.
    • இவரிடமிருந்த 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் ராஜிவ் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 35). இவர், டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும், இதனால், இப்பகுதியில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாகவும் வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து, நேற்று குடியிருப்பு பகுதியில் வைத்து மது விற்பனை செய்த சுரேந்தரை, வாழப்பாடி போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்த 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ×